சர்க்கரை நோய் குணமாக!

-சர்க்கரை நோய் இல்லாதவர்களே குறைவு என்று
சொல்லும் வகையில் பெரிய தாக்கத்தை உருவாக்கி
உள்ளது இந்த நோய்.

நண்பர்களின், உறவினர்களின் நல விசாரிப்பிலும்
கூட இடம் பெறும் அளவிற்கு மனிதர்களை
அச்சுறுத்தும் இந்த “சர்க்கரை நோய்’ உண்மையில்
நோய் அல்ல; அது ஓர் உணர்வுதான் என்கிறார்
ராஜபாளையத்தைச் சேர்ந்த “அக்குபஞ்சர்’
மருத்துவரான கனகதுர்கா லட்சுமி. இ

வர் சர்க்கரை நோய் குணமடைய நாம் கடைப்பிடிக்க
வேண்டிய வழிமுறைகளை நம்முடன் பகிர்ந்து
கொள்கிறார்:

“”சர்க்கரை நோய் நாம் பயப்படுகிற அளவிற்கு பெரிய
நோயே இல்லை. இது முற்றிலும் குணப்படுத்தக் கூடிய
ஒன்றுதான். சர்க்கரை நோய் வர காரணம் உணவு
முறை. சரியான முறையில் நாம் உண்ணும் உணவு
செரிமானம் ஆகவில்லை என்றால் உணவு புளிப்பாக
மாறிவிடும். புளிப்புத் தன்மையாக மாறும் உணவானது
மார்புக்கும், வயிற்றுக்கும் இடையில் உள்ள பகுதியில்
கொழுப்பாகப் படிந்துவிடும். இதுதான் 98% மக்களுக்கு
நோய் ஏற்படக் காரணம்.

இந்த புளிப்புத் தன்மையானது கணையத்தை இன்சுலின்
சுரக்கவிடாமல் தடுக்கிறது. இன்சுலின் உடலுக்குத்
தேவையான அளவு சுரக்கவில்லை என்றால் உடலில்
சர்க்கரை நோய் உண்டாகும்.

மேலும் கணையம் சரியாக வேலை செய்யவில்லை
என்றால் உடலுக்கு இரத்த ஓட்டம் சரியாக நடக்காது.
இதன் காரணமாகவே சர்க்கரை நோய் வந்தவர்கள் சில
மாதங்களில் நிறம் மாறி, தோற்றப் பொலிவும் மறைந்து
உருக்குலைந்து போகிறார்கள்.

சர்க்கரை நோய் வருவதற்கு முன்பு உடல் சோர்ந்து
போகும், காரமாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றும்,
இனிப்பாகச் சாப்பிட வேண்டும் போல்இருக்கும். சாப்பிட்டு
முடித்த பிறகு சாப்பிட்ட நிறைவு இல்லாமல், பத்து
நிமிடத்திற்குள் மீண்டும் பசி எடுப்பது போன்ற உணர்வு
இருக்கும்.

சாப்பிட்டு முடித்தவுடன் தட்டை அப்படியே தள்ளி
வைத்துவிட்டு படுத்துக் கொள்வார்கள். சிலருக்கு நெஞ்சு
கரிப்பு இருக்கும். இந்த நிலையில் நாம் இதைக் கண்டறிந்து
சுதாரித்துக் கொண்டால் பரம்பரை பரம்பரையாக சர்க்கரை
நோய் இருந்திருந்தாலும் நமக்கு வராமல் தற்காத்துக்
கொள்ளலாம்.

அதுபோல மனசுக்கும், உடலுக்கும் சம்பந்தம் உண்டு.
அதனால் சர்க்கரை உள்ளவர்கள் பிரச்னை வருமோ
என்ற பயத்துடன் உணவுகளை ஒதுக்காமல் இந்த உணவு
என்னை ஒன்றும் செய்யாது என்ற நினைப்புடன் உண்ண
வேண்டும். அப்படி நினைத்தாலே நோய் நம்மை ஒன்றும்
செய்யாது.

ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தால் அவருக்கு
மருத்துவமனையில் கொடுக்கும் முதல் சிகிச்சை சர்க்கரையின்
அளவைக் கண்டறிந்து கணையத்தை வேலை செய்ய
வைப்பதுதான். இதற்காக இன்சுலினை ஊசி மூலம்
செலுத்துகிறார்கள். இப்படி இன்சுலினை அதிக அளவு எடுத்துக்
கொண்டாலும் ஆபத்துதான்.

காரணம் இன்சுலினில் இருக்கும் ஒரு வகையான கெமிக்கல்
உடலுக்கு நல்லதல்ல, அந்த கெமிக்கல் பற்றி அறிய ஓர்
உதாரணம் சொல்கிறேன். கோழிப் பண்ணைகளில் உள்ள
வெள்ளை நிற லகான் கோழிகள் சீக்கிரம் பெரிதாக எஸ்.என்.எஸ்
என்கிற கெமிக்கலை அதன் உடலில் செலுத்துவார்கள்.

இதனால் அந்த கோழி 32 வாரங்களில் உடல் பெருத்துவிடும்.
சில கோழிகள் அதன் வீரியம் தாங்காமல் வெடித்து இறந்துவிடும்.
இப்படித்தான் கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகள்
பெரும்பாலும் இறக்கும். இந்த கெமிக்கல்தான்

இன்சுலினிலும் இருக்கிறது. இப்போது புரிகிறதா?
இன்சுலின் வேண்டாம் என்று சொல்வதற்கான காரணம்.

சரியான தூக்கமின்மைகூட செரிமானக் கோளாறை
உண்டாக்கும். அதுபோன்ற நேரங்களில் தூக்கம் வருவதற்கு
கல் உப்பை சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். அப்படி
வறுத்தால் உப்பு வெடித்து லேசாக சாம்பல் நிறமாக மாறும்.
அப்படி செய்யும்போது உப்பில் உள்ள கெமிக்கல் போய்விடும்.
அதன்பிறகு அந்த உப்பைச் சிறிது எடுத்து நாக்கிற்கு கீழ்
வைத்துக் கொண்டால் தூக்கம் வந்துவிடும். இது சர்க்கரை
நோய் இல்லாதவர்களும் செய்யலாம்.

சர்க்கரை நோய் வந்துவிட்டால் சரி செய்யவே முடியாது
என்று சொல்வது உண்மையல்ல. முதலில் ஒரு விஷயத்தை
நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஒரே நாளில் யாருக்கும்
சர்க்கரை நோய் வருவதில்லை. இதனால் இன்சுலின் உதவி
இல்லாமலேயே இயற்கை முறையில் கணையத்தை வேலை
செய்ய வைக்க முடியும். இதற்காக ஒரு சில விஷயங்களைக்
கடைப்பிடித்தாலே போதுமானது. அவை:

 நாம் உண்ணும் உணவைக் குறைந்தது 20 நிமிடமாவது
மெதுவாகச் சுவைத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
நின்று கொண்டு சாப்பிடக் கூடாது.

 அடுத்து உணவு உண்ணும்போது இடையில் தண்ணீர்
அருந்தக் கூடாது. உணவும், தண்ணீரும் ஒன்றுசேர்ந்து நீண்ட
நேரம் வயிற்றில் சுற்றிக்கொண்டே இருக்கும். விரைவில்
செரிமானம் ஆகாது. இது சர்க்கரை நோய் வர மிக முக்கியமான
காரணம். சாப்பிட்டு முடித்த கால் மணி நேரமோ அல்லது
அரை மணி நேரமோ கழித்து 2 தம்ளர் வெந்நீர் மட்டும் குடித்துப்
பழக வேண்டும். முதல் இரண்டு நாள்கள் உடல் அதை ஏற்க
மறுக்கும். அதன்பிறகு பழகிவிடும்.

 அதுபோல காலை 9 மணி முதல் 11 மணிவரை
மண்ணீரல் வேலை செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதுவும்
சாப்பிடாமல், தண்ணீர்கூட குடிக்காமல் ஒரு விரதம் போன்று
இருந்தோமானால் எப்படிப்பட்ட சர்க்கரை நோயும் விரைவில்
கட்டுக்குள் வந்துவிடும்.

 அடுத்து மூளைக்கு வேலையா? உடலுக்கு வேலையா?
என்று பார்க்க வேண்டும். உடல் உழைப்பு இல்லாமல் கம்ப்யூட்டர்
முன் குளிர் அறையில் அமர்ந்து வேலை செய்பவர்கள் உடலில்
வியர்வை வரும்படி தினமும் 1 மணி நேரமாவது உழைக்க
வேண்டும்.

 வாரத்திற்கு ஒருமுறை அரை தம்ளர் இஞ்சிச்சாறு குடிக்க
வேண்டும். முழுக்க முழுக்க கால்சியம் உள்ள உணவு இஞ்சி.
இஞ்சிச்சாறு குடித்து வரும்பொழுது எலும்பு, எலும்பு
மஜ்ஜைகளுக்கு நல்ல பலம் தரும். நல்ல இரத்தத்தை உருவாக்கும்.
இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

 ஒரு பிடி காம்புடன் உள்ள கறிவேப்பிலை, ஒரு பிடி வேருடன்
உள்ள கொத்தமல்லி, ஒரு பிடி புதினா இலைகள் இம்மூன்றையும்
நன்கு அலசி மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்து 2 லிட்டர் தண்ணீரில்
இட்டு காய்ச்ச வேண்டும். இந்த தண்ணீர் 1 லிட்டராக வந்த பிறகு
ஆற வைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டு குடித்து
வரலாம்.

 நெஞ்சு கரிப்பு ஏற்பட்டால் உடனே வீட்டில் கருப்பட்டி
இருந்தால் ஒரு துண்டு எடுத்து வாயில் வைத்துக் கொண்டால்
பின்னாளில் எந்த நோயும் வராது. உடலும் ஆரோக்கியமாக
இருக்கும்.

 வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ
1 பெரிய நெல்லிக்காய், 1 பிடி கறிவேப்பிலை, சீரகம், 1 சுண்டு
விரல் அளவு இஞ்சி எடுத்து மிக்சியில் அரைத்துக் குடித்து வர
கணையம் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.

 சர்க்கரை நோயாளிகளுக்கு இட்லி ஆரோக்கியமற்ற உணவு.
காரணம் மாவு புளித்த பிறகுதான் இட்லியைச் செய்கிறோம்.
இந்த புளிப்புத் தன்மையானது கணையத்திற்கு ஏற்றது அல்ல.
ஆனால் இட்லிதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று
நினைப்பவர்கள், காரம் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள
வேண்டும். அதைவிடச் சிறந்தது, சிறு தானியங்களைத் தனித்
தனியாக முளைகட்டி அதனை நிழலில் உலர்த்தி அரைத்து
மாவாக்கி அதனுடன் உளுந்தை ஊற வைத்து அரைத்து, மிளகு,
சீரகம், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து கலந்து இட்லி
செய்து உண்ணலாம். இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது.

 உற்சாகமின்மைக் கூட சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக
பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்து மலச்சிக்கல் வராமல் பார்த்துக்
கொள்ள வேண்டும்.

இவை எல்லாமே செய்தாலும், தினமும் கட்டாயமாகக் கடைப்
பிடிக்க வேண்டிய மிக முக்கியமான மூன்று விஷயங்கள்:
உணவை தினமும் 20 நிமிடம் சாப்பிட வேண்டும், சாப்பிடும்
போது தண்ணீர் குடிக்கக் கூடாது, காலை 9-11 மணிவரை
கட்டாயமாக எதுவும் சாப்பிடக் கூடாது. இப்படி செய்து வந்தால்
நிச்சயம் சர்க்கரை நோயிலிருந்து முற்றிலுமாகக் குணமாகி
விடலாம்” என்றார்.

——————————-
-ஸ்ரீதேவி குமரேசன்.

தினமணி

அபான முத்திரைசெய்முறை..
கையில் நடு விரல் மற்றும் மோதிர விரலை
மடக்கி அந்த இரண்டு விரல்களின் நுனியை
பெரு விரல் நுனியால் தொடும் போது
அபான முத்திரை ஏற்படுகிறது.

இந்த முத்திரை உட்கார்ந்து கொண்டு செய்ய
வேண்டும். தினமும் 30 நிமிடம் இந்த முத்திரையை
செய்யலாம்.

பயன்கள்….
இந்த முத்திரையை தினமும் செய்து வந்தால்
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த முடியும்.

மூலம் மற்றும் மலச்சிக்கலைப் போக்க இந்த
முத்திரை பெருமளவு உதவுகிறது.

—-
நன்றி- மாலை மலர்

சுகர் ஸ்மார்ட்

1. சுவையில் குறையொன்றுமில்லை!

டயாபடீஸ் வரும் வரை, நான் எவ்வளவு உறுதிமிக்கவன் என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது. இப்போது எனக்கு உறுதியாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை!
– யாரோ

நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் ஆற்றலாக மாற்றப்படுகின்றன. நமது பிரதான ஆற்றல் மூலம் குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரையே. நம் உணவில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு என அனைத்துமே நம் உடலின் தேவைக்கேற்ப குளுக்கோஸ் ஆக மாற்றப்படுகிறது. இவற்றில் கார்போஹைட்ரேட் என்கிற மாவுச்சத்துதான் ரத்த சர்க்கரை விஷயத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீரிழிவுக்காரர்களுக்கு இதில் என்ன பிரச்னை?

நீரிழிவு உடலால் உணவின் மூலம் பெறப்படும் குளுக்கோஸை உடைத்து, முறைப்படி ஆற்றலாக மாற்ற முடிவதில்லை. சில நேரங்களில் இதன் திறன் குறைந்து போய், குறைவான குளுக்கோஸே ஆற்றல் ஆகிறது. எஞ்சிய குளுக்கோஸ் ரத்தத்திலேயே இருக்கிறது. அதனால்தான் நீரிழிவுக்கான மருந்துகளோடு, உணவுக்கட்டுப்பாடும் கட்டாயம் என வலியுறுத்தப்படுகிறது. உணவுக்கட்டுப்பாடு என்பது உணவின் அளவை மட்டுமல்ல… தரத்தையும் பொருத்தது.

நீரிழிவு, உணவுக்கட்டுப்பாடு என்றெல்லாம் கூறியவுடன் பலரும் ‘அய்யோ பரிதாபம்’ என்றே எண்ணுகிறார்கள். உண்மையில், நீரிழிவாளர்கள் ஆரோக்கியமானவர்கள் உண்ணுகிற அத்தனை ருசி உணவுகளையும் ஒரு கை பார்க்க முடியும். எல்லாவித உணவுக்குழுக்களில் உள்ள உணவுகளையும் தேர்ந்தெடுக்க முடியும். ஸ்மார்ட் ஆகச் செயல்பட்டு, சரியான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், சுவையில் குறையொன்றுமில்லை!

இதோ அதற்காக ஒரு கைடு…

அளவாகச் சாப்பிடுங்கள்… அதிக முறை சாப்பிடுங்கள்!ரத்தத்தில் தடாலடியாக குளுக்கோஸ் அளவு அதிகரிக்காமல் இருக்க இந்த ஸ்டைல் உதவும். 3 வேளைகளில் மூக்குப்பிடிக்க சாப்பிடாமல், 5-6 வேளைகளாகப் பிரித்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் கொஞ்சம் கொஞ்சமாக உணவு எடுத்துக்கொள்வது சிறப்பு. ஆனால், எந்த வேளை உணவையும் தள்ளிப்போடவோ, விட்டு விடவோ வேண்டாம்.

மாவுச்சத்தைக் குறைக்கலாம்!

அரிசி போன்ற கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை கூடிய வரை குறைக்கலாம். இவற்றில் அதிக சர்க்கரை உள்ளதால், ரத்த சர்க்கரையையும் விரைவில் உயர்த்தும்.

வெரைட்டி நல்லது!

முழு தானிய உணவுகள், அனுமதிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் ஆகியவை தினசரி உணவில் இடம்பெற வேண்டும். இதன் மூலமே நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெற முடியும். எந்த ஒற்றை உணவு மூலமாகவும் நமக்குத் தேவையான ஒட்டுமொத்த சத்துகளும் கிடைத்து விடாது அல்லவா? வைட்டமின், தாது (மினரல்), நார்ச்சத்து (ஃபைபர்) போன்ற அவசியமானவற்றை இந்த உணவுகளில் இருந்தே பெற முடியும். கொலஸ்ட்ராலும் கிடையாது. கொழுப்பும் குறைவு. கலோரியும் குறைவோ குறைவு!

கொழுப்பையும் குறைக்கணும்!

அதிக வாய் கொழுப்போ, அதீத உடல் கொழுப்போ… எதுவாக இருந்தாலும் வாழ்க்கைக்கு உதவாது. அதனால் மொத்த கலோரியில் 30 சதவிகித கொழுப்பையே உணவிலிருந்து பெற வேண்டும். குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த இலக்கை எளிதாக எட்டலாம்.

உப்போ சர்க்கரையோ ஒவ்வாது!

உப்பை மிகக்குறைவாகப் பயன்படுத்துங்கள். பாட்டில் பானங்கள், இனிப்புகள், கேக் வகைகள் போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை கலக்கப்பட்டிருக்கிறது. அதனால் மனதை தைரியப்படுத்திக் கொண்டு ‘நோ’ சொல்லி விடலாம். மாற்றாக அனுமதிக்கப்பட்ட பழங்களை ஆசையாகச் சாப்பிடலாம். ஆறேழு மாம்பழங்களை அலேக் செய்யும் ஆசாமிகளுக்கு இந்த விதி உதவாது!

ஸ்வீட் டேட்டா

உலகில் 7 வினாடிகளுக்கு ஒருவர் நீரிழிவு சார்ந்த பிரச்னைகளால் உயிர் இழக்கிறார்.

2. மாற்று
உணவுகள் இதோ!

தினமும் காலையில் இட்லி, மதியம் சாதம், இரவில் தோசை என்று ஒரே மாதிரி உணவு சாப்பிட்டால் போரடிக்குமில்லையா? அதிலும் நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக  இருந்தால் உங்கள் நிலைமை ரொம்பவும் பரிதாபம் ஆகிவிடும். ஏற்கெனவே பல உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்ட உங்களுக்கு, இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று ஒரு ‘மெனு கார்டு’ வேறு கொடுத்துவிட்டால், வாழ்க்கையே வெறுத்துவிடும்…

நினைத்த உணவைச் சாப்பிட முடியவில்லையே என்ற ஏக்கம் பெருகும்… மாற்று உணவு கிடைக்காதா என்று மனசு தேடும். அப்படிப்பட்டவர்களுக்காக தனது ‘சர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது’ நூலில் (சூரியன் பதிப்பகம் வெளியீடு) பயனுள்ள தகவல்களை ஆராய்ச்சிப்பூர்வமாக அளித்திருக்கிறார் டாக்டர் கு.கணேசன். படித்துப் பயன்பெறுங்கள்!

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உணவும் அளவும் முக்கியம் என்பது நாம் அறிந்ததே. அடுத்து, ஒரு உணவுக்குப் பதிலாக அதே கலோரியைத் தரக்கூடிய மாற்று உணவையும் தெரிந்துகொண்டால், நாம் விரும்பும் உணவுகளை மாற்றி மாற்றிச் சாப்பிட்டுக்கொள்ள உதவும். இதன் பலனால், ஒரே மாதிரியான உணவைச் சாப்பிட வேண்டிய நிலைமைக்கு விடுதலை கிடைக்கும். இப்போது சந்தோஷம்தானே!

இட்லிக்கு மாற்று உணவு (100 கலோரிகள்).
இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
தோசை 1, அரிசி சாதம் 150 கிராம்.
சப்பாத்தி 1, கோதுமை ரொட்டி 1 துண்டு.
பழ வகைக்கு மாற்று உணவு (50 கலோரிகள்).

இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
ஆரஞ்சு 1, ஆப்பிள் 1, பேரிக்காய் 1, நாட்டுக் கொய்யாப்பழம் 1, வாழைப்பழம் சிறியது, திராட்சை 20, தர்ப்பூசணி ஒரு துண்டு, பப்பாளி ஒரு துண்டு, மாம்பழம் 3 துண்டு, நெல்லிக்காய் 5, சப்போட்டா 1, பலாப்பழம் 3 சுளைகள்.
காய்கறிகள் சமைத்தது  30 கலோரிகளுக்கு மாற்று உணவு.
இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
கத்தரிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், பாகற்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், தக்காளி, ேகரட், முள்ளங்கி, சவ்சவ், நூல்கோல், பசலைக்கீரை, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வாழைப்பூ, புதினா.

காய்கறிகள் சமைத்தது – 60 கலோரிகளுக்கு மாற்று உணவு.
இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
அவரைக்காய், கொத்தவரங்காய்,
வெங்காயம், முருங்கைக்கீரை.
இறைச்சி வகைகள் – 80 கலோரிகளுக்கு மாற்று உணவு.
இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
மீன் 75 – 100 கிராம், கோழி இறைச்சி 75 கிராம், ஆட்டிறைச்சி 50 கிராம், ஈரல் 75 கிராம்
முட்டை 1.

பால் – 75 கலோரிகளுக்கு மாற்று உணவு.
இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
பசும்பால் – 125 மி.லி., எருமைப்பால் – 65 மி.லி., தயிர் 125 மி.லி., மோர் 600 மி.லி.
கொழுப்பு உணவுகள் –
75 கலோரிகளுக்கு மாற்று உணவு.
இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
வெண்ணெய் இரண்டரை டீஸ்பூன், நெய் 2 டீஸ்பூன், சூரியகாந்தி எண்ணெய் 2 டீஸ்பூன்.

(கட்டுப்படுவோம்… கட்டுப்படுத்–துவோம்!)

தாஸ்

நன்றி–குங்குமம்

 

நச்சுன்னு நான்கு கேள்வி

வெ. சென்னப்பன், அரூர்:
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது… ஏன்?

புதன் என்னும் கிரகம் புத்திசாலித்தனம், அறிவு கூர்மை,
சமயோஜிதம் ஆகியவற்றைக் குறிக்கும். எனவே அந்த
(புதன்) தினத்தில் இந்த கிரகத்தின் ஆதிக்கம் மிக மிக
அதிகமாக இருக்கும்.

ஆகவே இந்த குணங்கள் நம்மை ஆக்கிரமிக்கும்.
இந்நாளில் நாம் எடுக்கும் தீர்மானங்கள் நன்மையையே
தரும்.

பொன் கிடைப்பதை விட இந்த தினத்தில் நாம் எடுக்கும்
தீர்மானங்கள், வாழ் நாள் முழுவதும் நாம் பொன் வாங்க
வழிவகுக்கும் அல்லவா?

—————————————-

மாலா பழனிராஜ், கண்டிகை:
அக்கி என்ற அம்மை நோய் வந்தால் காவி கல்லை
அரைத்துப் பூச வேண்டும் என்கிறார்களே… இது சரியா
அல்லது டாக்டரிடம் காட்டி மருந்து வாங்க வேண்டுமா?

அக்கி என்பது வைரஸ் பாதிப்பால் வரக்கூடியது.
அதற்கு ஆன்டிபயாடிக் மாத்திரைகள் உள்ளன. அவற்றை
மருத்துவர் ஆலோசனைப்படி வாங்கி சாப்பிடுவது நல்லது.
வலியும் குறையும். விரைவில் நோய் முழுவதுமாக
குணமாகும்.

குழந்தையின் சருமம் மென்மையானது. அக்கியால்
பாதிக்கப்பட்ட குழந்தைக்குக் காவியைப் பூசும் போது
சீழ் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே
கண்டிப்பாகக் காவி பூசக் கூடாது.

———————————————–

என்.ராஜம், சேலம்:
இப்போதெல்லாம் பள்ளிகளில் விளையாட்டுகள்,
நீதிபோதனை, பொது அறிவு வளர்ச்சி
போன்றவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லையே
ஏன்?

மாணவர்களுக்கு பள்ளிகளில் வாழ்வில் திறன், சமூக
ஒழுக்கங்கள், தேச நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இவற்றை
கட்டாயம் கற்றுத் தரவேண்டும். இதை ஆங்கிலத்தில்
லைஃப் ஓரியண்டடு எஜூகேஷன் என்று சொல்வார்கள்.

ஒவ்வொரு பள்ளியிலும் வாரத்திற்கு இரண்டு வகுப்பு
வேளைகளை கட்டாயமாக இதற்கென ஒதுக்க வேண்டும்.
இந்த வகுப்புகளில் நேர்மையாக வாழ்வது எப்படி?
ஒப்புக் கொண்ட காரியத்தை நிறைவேற்றுவது எப்படி?
நேரம் தவறாமை, பாசத்தோடு வளர்வது எப்படி?
ஆண் – பெண் சமத்துவம், விட்டுக் கொடுப்பதால் ஏற்படும்
நன்மை, ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து சமத்துவமான
சமூகத்தை உருவாக்குவது எப்படி? என்பன போன்றவற்றை
கற்றுத் தரவேண்டும்.

ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இந்த வகுப்புகளை
நடத்துவது இல்லை. அந்த வகுப்பு நேரத்தையும் மற்றப்
பாடங்களை நடத்துவதற்கே பயன் படுகின்றார்கள்.

காரணம் மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாகக்
கொண்டு பள்ளிகள் செயல்படுவதுதான். விளையாட்டுகளில்
மாணவர்களை ஈடுபடுத்துவது இல்லை.

இதனால் 120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை
கொண்டு நம் நாட்டில் விளையாட்டுத்துறை மிகப்
பெரிய பின்னடைவைக் கண்டுவருகிறது.

மாணவர்கள் மதிப்பெண்களை கணிசமாகப் பெற்று
விடுகிறார்கள். ஆனால் வேலை, வாழ்க்கை என்று வரும்
போது பிரச்னைகளை எதிர்கொள்ள இயலாதவர்களாகி
விடுகிறார்கள். இது வேதனைக்குரிய விஷயம்.

இதனைத் தடுக்க கல்வித்துறை அதிகாரிகள் ஒவவொரு
பள்ளியிலும் ஒதுக்கப்பட்ட வகுப்பு வேளைகளில் வாழ்வியல்
கல்வி கற்றுத் தரப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ள
வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்தாத பள்ளிகள் மீது
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான்
இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

——————————————-

மதுரவல்லி, கோயமுத்தூர்:
தூக்க மாத்திரை சாப்பிடுவது அவசியம்தானா?

அவசியமே கிடையாது. இது ஒரு தீய பழக்கம்.
நோய்வாய்ப்பட்ட ஒரு சிலருக்கு சில காலம் மட்டுமே
தூக்க மாத்திரை கொடுப்பதுண்டு.

அதாவது, அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்,
ஏதேனும் அடிபட்டு வலியால் அவதிப்படுபவர்கள்,
புற்று நோயாளிகள் போன்றோருக்கு கொடுக்கப்படும்.

தூக்க மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் பக்க
விளைவுகள் அதிகம். தொடர்ந்து சாப்பிடும்போது
மாத்திரையின் வீரியம் குறைவதுடன், நாளுக்கு நாள்
அதிக மாத்திரைகளை சாப்பிட வேண்டிவரும்.

மேலும் மாத்திரை போட்டு தூங்கி எழுந்திருக்கும்
போது புத்துணர்ச்சி இருக்காது. தலை பாரமாக இருக்கும்,
முகம் சோர்வாகக் காணப்படும். சுயமாக தூங்கும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

அதற்குத் தினமும் இரவு குறிப்பிட்ட நேரத்திற்கு
தூங்கச் செல்ல வேண்டும். அதேபோல் காலையில்
குறிப்பிட்ட நேரத்திற்கு எழுந்திருக்க வேண்டும்.

படுக்கை அறை, சுத்தமாக, அமைதியான சூழ்நிலையில்
இருக்க வேண்டும். ரேடியோ, டீவி போன்ற பொழுது
போக்கு அம்சங்கள் இருக்கக் கூடாது. தூங்குவதற்கு
முன்பாக டீ, காபி போன்ற பானங்களைக் குடிக்க
கூடாது. ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வெது
வெதுப்பான பால் ஒரு கப் அருந்தலாம். கண்டிப்பாக
மது அருந்தக்கூடாது.

மாலை அரை மணி நேரம் நடை பயிற்சி செய்ய வேண்டும்.
முடிந்தால் 15 நிமிடம் தியானம் செய்வது நல்லது. தூங்கும்
முன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதும், நல்ல தூக்கத்தை வ
ரவழைக்கும்.

—————————————–

– அனிதா பத்மகுமார்
மங்கையர் மலர்

இதயத்துக்கு பலம் தரும் புடலங்காய்

சுவையான காய்கறிகளில் ஒன்றான புடலங்காயை
அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு
நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

புடலங்காயை மெல்லியதாக இருக்கும் போதே
பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய்
மிகுந்த கசப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல்
செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும்.

மேலும் புடலங்காயை கறியாக சமைத்து உண்ணும்
போது அதன் விதைகளை நீக்கி விட்டு பயன்படுத்த
வேண்டும். ஏனெனில் விதைகள் வயிற்றுக்கு
உபாதைகளை ஏற்படுத்தும்.

முற்றிய புடலங்காயோ அதன் விதைகளோ வயிற்றுப்
போக்கை உண்டாக்கக் கூடியவை. புடலங்காயில்,
புரோட்டின் 0.5 கிராமும், கொழுப்புசத்து 0.3 கிராமும்,
ஓரளவு விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன.

புடலங்காய் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது.
வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற வல்லது.
புடலங்காயில் ஆல்கலாய்ட்ஸ்(Alkalayts),
கிளைகோஸைட்ஸ்(Glycocytes),ப்ளேவனாய்ட்ஸ்
(Flavanoids) மற்றும் ஸ்டிரால்ஸ்(Steroids)
ஆகிய மருத்துவ வேதிப்பொருட்கள் மிகுந்துள்ளன.

எனவே அடிக்கடி விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும்
போது புடலங்காயை வாங்கி கொட்டைகளை நீக்கி
விட்டு கறியாக சமைத்து சாப்பிடுவதால் காய்ச்சல்
மறைந்து போகும்.

புடலங்காய் இதயத்துக்கு பலமும், நல்ல செயல்
பாட்டையும் தரக்கூடியது. அதிக உடலுழைப்பு,
பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல்
ஆகியவற்றால் இதயம் பலவீனமடைவது
இயற்கையாகும்.

இந்நிலைக்கு ஆளானோர் புடலங்காயை அடிக்கடி
உணவில் சேர்த்து கொள்வதோடு அன்றாடம் காலையில்
எழுந்து புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப்
பறித்து சுத்தம் செய்து சாறாகப் பிழிந்து வைத்துக்
கொண்டு ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம்
காலை, மாலை என இரண்டு வேளைகள் சாப்பிடுவதால்
இதயத்துடிப்பு சமநிலை பெருவதோடு இதயமும் பலம்
பெறும்.

இதய நோயாளிகள் 48 நாட்கள் சாப்பிடுவதால் நலம்
பெறுவர்.

————————————-

நன்றி
தமிழ் மருத்துவம்

விரைவில் தொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா!-

யோக முத்ரா
முதலில் பத்மாசனம் போல் அமர்ந்து,
பின் கைகளை பின்னே மடித்து, வலது கை,
இடது காலின் பெருவிரலையும், இடது கை
வலது காலின் பெருவிரலையும் தொடுமாறு
பார்த்துக் கொண்டு, மூச்சை வெளியே
விட்டவாறு குனிந்து, மூக்கு அல்லது வாயால்
தரையைத் தொடவும்.

இப்படி 30 வினாடிகள் இருக்கவும். பின் மூச்சை
உள்ளே இழுத்தவாறு எழவும்.

இப்படி தினமும் 3 முறை செய்து வர வேண்டும்.
இந்த ஆசனத்தில் ஆரம்ப காலத்தில், கைகளை
பின்புறம் கட்டியவாறு குனித்து இந்த ஆசனத்தை
செய்யலாம்.

tamil.boldsky.com

உளுத்தங் கஞ்சி

உடல் ஆரோக்கியத்துக்கு உளுந்து மிகவும் நல்லதுன்னு சொல்லுவாங்க நம்ம பெரியவங்க. எளிதாகச் செய்யப்படும் இந்த உளுத்தங் கஞ்சி மிகவும் மணமானதும் சுவையானதும் கூட. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலை உணவாகக் கொடுக்கக்கூடிய சத்தான உணவு இது.

தேவையான பொருட்கள்

தோலில்லாத வெள்ளை உளுந்து – 100 கிராம்

பச்சரிசி – 50 கிராம்

பால் -1/2 லிட்டர்

சர்க்கரை – தேவைக்கேற்ப

உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:-

பாலை நன்றாகக் காய்ச்சி ஆறவிடவும். உளுத்தம் பருப்பையும், பச்சரிசியையும் நீரில் கழுவி, குக்கரில் வைத்து நன்றாகக் குழைய வேகவைத்துக்கொள்ளவும். குக்கரைத் திறந்தபின் வெந்த பருப்பையும் அரிசியையும் கரண்டியால் நன்கு மசித்துவிட்டு, பாலை அதில் சேர்க்கவும்.தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து சிட்டிகை உப்பும் சேர்த்துக் கலந்துவிடவும். சுவையான உளுத்தங் கஞ்சி தயார்.

தேவையானா, ஏலக்காய்ப்பொடி சேர்க்கலாம். ஆனா, அப்படிச் சேர்க்கும்போது உளுந்தோட இயல்பான வாசனை இல்லாம போயிடும். உளுத்தம்பருப்புக்குப் பதிலாக பாசிப்பருப்பு சேர்த்தும் இதுபோல கஞ்சி செய்யலாம்.

ஏலக்காய் – பாட்டி வைத்தியம்

Cardamom as a Medicine - Home Remedies - Food Habits and Nutrition Guide in Tamil

வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை…

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

பாட்டி வைத்தியம்

உடல் உபாதைகள் நீங்க..

மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் சுக்கு
ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம்
தரும். ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை
அதிகம் நிறைந்துள்ளது. அதற்கு ஒரு பாத்திரத்தி 4-5
டேபிள் ஸ்பூன் சுக்கு பொடியை போட்டு, அதில் ஒரு ஜார்
 நீரை ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டி, தினமும் தேன்
சேர்த்து குடித்து வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலி
மற்றும் அங்குள்ள வீக்கம் குறைந்து, உடனடி நிவாரணம்
கிடைக்கும்.
—————————————–
வயிற்று பிரச்சனைகள்
வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டால், அதனை சரிசெய்ய,
கரும்பு ஜூஸில் சுக்கு பொடியை சேர்த்து கலந்து,
தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால்,
வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
————————————-
தலைவலி வரும் போது, அதில் இருந்து உடனடி
நிவாரணம் கிடைக்க, சுக்கு பொடியில் தண்ணீர்
சேர்த்து பேஸ்ட் செய்து, நெற்றியில் தடவ வேண்டும்.
இதேப்போல் தொண்டை வலி வந்தால்,
தொண்டையில் தடவுங்கள்.
—————————————
இருமலுக்கு சுக்கு பயன்படுத்தினால் உடனடி நிவாரணம்
கிடைக்கும் என்று பலரும் அறிந்ததே.
அதிலும் அதனைக் கொண்டு தினமும் 2-3 முறை டீ
போட்டு குடித்தால், தொல்லை தரும் இருமலில் இருந்து
உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மேலும் மூக்கு ஒழுகல் இருந்தால், அப்போது இஞ்சி டீ
செய்து, அதில் வெல்லம் சேர்த்து குடிக்க வேண்டும்.
இதனால் மூக்கு ஒழுகல் உடனே நின்றுவிடும்.
—————————————-
நெஞ்சு வலி அடிக்கடி வந்தால், இளநீரில் சுக்கு பொடி
மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து குடித்து வர உடனடி
பலன் கிடைக்கும்.
————————————–
உடல் எடையைக் குறைக்க சுக்கு மிகவும் சிறப்பான
உணவுப் பொருள்.
அதற்கு 1/2 டீஸ்பூன் சுக்கு பொடியை ஒரு கப் வெது
வெதுப்பான நீரில் கலந்து, தேன் சேர்த்து, அதனை
தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள தெர்மோஜெனிக்
 ஏஜென்ட், கொழுப்புக்களை கரைத்து, தொப்பையைக்
குறைத்து, உடல் எடையை பிட்டாக வைத்துக் கொள்ள
உதவும்.
——————————————-
சுடுநீரில் ப்ளாக் உப்பு, சுக்கு பொடி மற்றும் சிறிது
பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து குடித்தால்,
வயிற்று உப்புசம் நீங்கும்.
3-4 துளிகள் எலுமிச்சை ஜூஸில், சுக்கு பொடி மற்றும்
1/2 டீஸ்பூன் ஓமம் சேர்த்து பேஸ்ட் செய்து, நிழலில்
உலர வைக்க வேண்டும். பின் அதனை தினமும்
அதிகாலை மற்றும் மாலையில் சிறிது உப்பு சேர்த்து
உட்கொண்டு வந்தால், வயிற்று உப்புசம்,
செரிமானமின்மை போன்றவை நீங்கும்.
———————————————-
பாலில் சுக்கு பொடி மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து
குடித்து வந்தால், சிறுநீரக நோய்த்தொற்று குணமாகும்.
——————————————
நன்றி

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான உணவு அட்டவணை

குறிப்பு:

சர்க்கரை நோய் இல்லாதவர்களும் இந்த அட்டவணையைக்

கடைப்பிடிக்கலாம்.

====================================

ஜெயஶ்ரீ கோபால்
சர்க்கரை நோய் மருத்துவர்

நன்றி – விகடன்

« Older entries Newer entries »