பயமுறுத்தும் கல்விக்கடன்..!

கவிஞர்புதுவைத் தமிழ்நெஞ்சன்

வளர்க்கிறோம்
தொட்டிச் செடி
வாடகை வீடு!-

———————————————–


கவிச்சுடர் கார்முகிலோன்

அரிதாரம் இல்லை
அனுதினமும் நடிப்பு
அரசியல்வாதி!

————————————————–

கவிஞர் கு.அ. தமிழ்மொழி

அழைப்பிதழில்
அன்பளிப்பு தவிர்க்கவும்
சுமை உந்தில் சீர்வரிசை.

—————————————————
கவிஞர் சாந்தா வரதராசன்

தமிழ்ப்பானையில்
சுவைப் பத்நீர்
திருக்குறள்.

—————————————————-

கவிஞர் ஆரிசன்

கரும்பலகை
நெற்றிக்கண் திறக்கிறது
அறிவு!

——————————————————-

கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி

படித்து முடித்த பின்
பயமுறுத்துகிறது
கல்விக்கடன்!

—————————————————

ஹைக்கூ பூக்கள் !-தொகுப்பிலிருந்து

என்றும் இளமையாக நிலா ! -கவிஞர் இரா .இரவி !

உடைந்தது பொம்மை
வலித்தது
குழந்தைக்கு !

———————-

என்றும்
இளமையாக
நிலா !

———————-

பறக்க மறந்தன
சிறகுகள் இருந்தும்
வாத்துக்கள் !

———————-

அறியவில்லை
கொக்கின் காத்திருப்பை
மீன்கள் !

————————

சிதைத்தப் போதும்
கட்டத் தொடங்கியது
சிலந்தி !

————————–

தரமாட்டான் அவ்வைக்கு
நெல்லிக்கனி
இன்றைய அதியமான் !

———————–

நடந்தது அடி தடி ,போலீஸ் நடத்தியது தடி அடி …!

வரிசையில் நின்றார்கள்
வழங்கப்பட்டது
வரிசை எண்

———————–

செய்யும் தொழிலே
தெய்வம்
செதுக்கினார்
வெளிப்பட்டது கடவுள் சிலை

————————


நடந்தது அடி தடி
போலீஸ் நடத்தியது
தடி அடி

—————————

அபிசேகம் கடவுளுக்கு
வேர்வையில் குளித்தார்
பூசாரி

———————–
சி.அருள் ஜோசப் ராஜ்
நன்றி- பாக்யா

வட்டமடிக்கிறது கவிதை


வேலை வெட்டி இல்லை
வெட்டி வேலை செய்தான்
தையல் கடை!

—————————

ஆற்றில் நீச்சல் பயிற்சி
அழகானது
கூழாங்கற்கள்

————————–

அமைதியான குளம்
விழுந்தது கல்
வட்டமடிக்கிறது கவிதை

————————-

காலியானது வீடு
கிடைத்தது
கள்ளச்சாவியுடன் பூட்டு

———————-

சி.அருள் ஜோசப் ராஜ்
நன்றி- பாக்யா

அழகை ரசிப்போம்

Inline image 1

மிட்டாய் விற்பவனின்
மணி சத்தத்தில்
விழித்தெழும் குழந்தை

———————

பூக்காரன் குரல்
காசின்றி கனக்கிறது
வெற்றுக்கூந்தல்

———————–

அலைகளை அசைக்காதே
அப்படியே வரட்டும்
கரையோர சிப்பிகள்

———————–

அழகை ரசிப்போம்
மழை வரட்டும்
தோகை விரித்தாடும் மயில்

—————————-

கோவில் கட்டையில்
சீட்டுக்கச்சேரி
காவலுக்கு அய்யனார்சாமி

———————————–

மு.முருகேஷ்
கொஞ்சம் ஹைகூ கொஞ்சம் புதுக்கவிதை

சிறுமியின் புத்தாடைக் கனவு

கிணறு வற்றட்டும்
ஏக்கமாய் காத்திருந்தது
கூடு கட்ட குருவி

———————-

உண்டியலில் கிடக்கும்
சில்லறைகளுடன்…
சிறுமியின் புத்தாடைக் கனவு

—————————-

கரையானுக்குக் கூட
தின்னப் பிடிப்பதில்லை
பட்டம் வாங்கிய காகிதங்கள்..!

——————————

தூக்கம் தொலைந்தது
அறுவடைமுடிந்த வயலில்
பசித்திருக்கும் குருவிகள்

——————————–

சிறுவனின் கையில்
சிறகுகள்
தரையில் பட்டாம்பூச்சி

—————————–
-மு.முருகேஷ்
கொஞ்சம் ஹைகூ கொஞ்சம் புதுக்கவிதை

வண்டு குடையாத மாம்பழம்தான்…

உடைந்து கிடக்கும்
அம்மாவின் வளையல்
கோபக்கார அம்மா

———————

இரவின் மௌனத்தை
யார் கலைத்தது
குடுகுடுப்பைக்காரன் பசி

———————

கூட்டம் முடியும் வரை
காத்திருக்கவில்லை
அணைந்நது மெழுகுவர்த்தி

———————-

வண்டு குடையாத
மாம்பழம்தான்
ஓட்டையிடாத புல்லாங்குழல்

————————–

பூவில் உட்கார
அச்சப்பட்டு தி,ரும்பும்…
பசித்த ஈ

——————————-
மு.முருகேஷ்
கொஞ்சமு ஹைகூ கொஞ்சம் கவிதை

பாம்புக்குப் பாலூற்றுபவள் …!

ரயில் கடந்த தண்டவாளத்தில்
உயிரோடு சிரிக்கிறது
புளியஞ்செடி

—————————-

தேக்கு மரம் விற்பனை
ஆணியடித்து விளம்பரம்
வேப்ப மரத்தில்

—————————

மனிதர்களைத் தின்று
செழித்து வளர்ந்திருக்கிறது
இடுகாட்டுப் புல்வெளி

————————–

விதவைகளுக்கு மணியார்டர் வர
காத்திருக்கிறார்கள்
தபால்காரர்கள்

———————————–

பாம்புக்குப் பாலூற்றுபவள்
இடுப்பில்
பசியில் அழும் குழந்தை

—————————————————————-
மு.மாறன்
இரண்டாவது சந்திப்பு – கவிதை தொகுப்பிலிருந்து

மெல்ல நகர்கிறது மரவட்டை…

வேகமாய் செல்லும் ரயிலில்
மெல்ல நகர்கிறது
மரவட்டை

————————

யாருமற்ற இடத்தில்
கையேந்தி செல்கிறான்
குருடன்

————————

கதறும் குழந்தை
சிரிக்கும் முகங்கள்
சுகப் பிரசவம்

————————–

காகங்கள்
ருசித்து தின்னும் எலி
விஷத்தால் செத்தது

————————

அடைமழை
குடை விரிக்க முடியாமல்
உள்ளே சிலந்தி வலை

—————————

மு.மாறன்
இரண்டாவது சந்திப்பு – கவிதை தொகுப்பிலிருந்து

நெரிசலில் திணறாமல் உலவும் மல்லிகை மணம்..!

தண்ணீர் லாரி விபத்து
மக்கள் ஓடோடினர்
குடங்களுடன்

————————-

கரகாட்டம் முடிந்து
தூங்கப்போனோம்
ஆடியவனைத் தவிர

————————

வீடு வந்தும் நினைவில்லை
வழியில் சந்தித்த
நண்பனின் பெயர்

————————

சாவு வீட்டில்
நடனமாடியது
ஊதுவத்திப்புகை

—————————

நெரிசல் பேருந்தில்
திணறாமல் உலவும்
மல்லிகை மணம்

—————————

மு.மாறன்
இரண்டாவது சந்திப்பு – கவிதை தொகுப்பிலிருந்து

« Older entries Newer entries »