இறந்தகாலத்தில் நிகழ்காலம் – ஹைகூ

Advertisements

தன் எதிர்காலம் அறியாத பல்லி ! – கவிஞர் இரா .இரவி !

தன் எதிர்காலம் அறியாமல்
கதவிடுக்கில் மரித்தது
பல்லி !

————————

இல்லாத போதும்
வாழ்கின்றார் போதனையில்
புத்தர் !

————————

மகன் கெட்டுப் போனாலும்
மற்றவரிடம் விட்டுத் தராத
அம்மா !

—————————

நேற்று தண்ணீர் இல்லை
இன்றும் மணலும் இல்லை
பெயரோ ஆறு ?

————————–

தரணியில் குறைத்தது
தமிழகத்தின் மதிப்பை
வாக்களிக்கப் பணம் !

——————–

இருக்கட்டும் பற்று
வேண்டாம் வெறி
நடிகர் மீது !

———————

மனைவிக்குப் பயம்..!


இனிமையும் கடுமையும்

இனிமையாகப் பாடுபவன்
கழுதையாய் கத்தினான்
கூலி கேட்டு

———————

சுத்த பயம்

காது குடைய சோம்பல் பட்டவன்
வீட்டையே சுத்தம் செய்தான்
மனைவிக்குப் பயம்

————————

வாழ்த்துப் புதுமை

கல்யாணத்துக்குச் சென்றவன்
வாழ்த்திவிட்டு வந்தான்
புதுச்செருப்பு விட்டவனை!

———————

நிஜமும் நிழலும்

பிள்ளையில்லாதவளைப் பார்த்து
குழந்தை சிரித்தது
காலண்டரில்

————————-

இயற்கையின் விதி

பறவைக்குத் தெரியுமோ,
பசுமைப் புரட்சி
எச்சத்தில் விதை!

————————-

மகிழ்ச்சி

கழிவறைக்குச் சென்றவனுக்கு
வெளியில் வர மனமில்லை
கும்மென்ற நறுமணம்!

—————————
–டி.என்.இமாஜான்

ஹைகூ கவிஞருக்கு மிக நீளமாக கடிதம்…!

துணி சுமந்த கழுதை…

தொழில் சுத்தம்..!
கெட்டவனாய் இருந்தவனுக்கு
நல்ல பேர் கிடைத்தது
சினிமாவில் வில்லன்..!
—————————————————
சகிக்கவில்லை..!
துணி சுமந்த கழுதை
கொடூரமாகக் கத்தியது
அழுக்குத்துணி நாற்றம்
—————————————————–
இயல்பு
சைவம் சாப்பிட்டவன்
கோபமாய் கத்தினான்
மிருகம் போல்..!
—————————————————-
சகிப்புத் தன்மை
‘சாப்பாடு தயார்’
பலகையை நிறுத்தியவன்
பசியோடிருந்தான்..!
============================
–டி.என்.இமாஜான்

சிரிப்பே சிறப்பு’ என்றவர் சிரிக்காமலே வேலை செய்தார்…!

பொறுமை
சைவம் சாப்பிடும் ஓவியர்
அவருப்போடு வரைந்தார்
மீன் படம்
———————————————–
பதிலுக்குப் பதில்
பொய்யான கூந்தல்
புதுசாய் சூடினாள்
வாசமில்லா மலர்..!
————————————————
குரைப்பு
பக்கத்து வீட்டக்காரர்கள் சண்டை
சந்தோஷமாய் இருந்தன
இருவர் வீட்டு நாய்களும்
——————————————————
இளமை
இளமையில் கல்’ என்பதை
படிக்காமலேயே பிடித்துக்கொண்டார்
மாணிக்க கல்வியாபாரி
————————————————————-
சிரிப்பு
சிரிப்பே சிறப்பு’ என்றவர்
சிரிக்காமலே வேலை செய்தார்
நகைச்சுவை எழுத்தாளர்
===================================
–டி.என்.இமாஜன்
நகைச்சுவையான நறுக்குக் கவிதை

பொய் சொல்ல தெரியாததால்…!

சரியான கருத்துகள் பிழையுடன் வெளியானது…!முன்னேற்றம்


ஊரைவிட்டு ஓடிப்போனவன்
ஊருக்குத் திரும்பி வந்தான்
மாவட்ட ஆட்சியராக!

————————

கால மாற்றம்


தெருவில் வசித்தவன்
வாங்கினான் வீடு
விற்றவன் தெருவில்..!

———————

ஒழுங்கின்மை


படத்தின் கதாநாயகன்
வில்லனாக ஆகிவிட்டார்
கால்ஷீட், சொதப்பல்!

———————

செயல் பிழை


சரியான கருத்துகள்
பிழையுடன் வெளியானது
பொன்மொழிப் புத்தகம்!

——————–

கள்ளத்தனம்


பணம் வைத்திருந்தவன்
செலவுக்குப் பயந்தான்
கள்ளநோடு..!

================
>டி.என்.இமாஜான்
(நகைச்சுவையான நறுக்கு கவிதைகள் – நூலிலிருந்து)

ஏலம் போடுபவன் ஹைகூ சொல்கிறான்…
நிலவைக் காட்டி
சோறு ஊட்டியிருப்பாளா அம்மா
ஆர்ம்ஸ்டிராங்கிற்கு

——————————-

ஏலம் போடுபவன்
ஹைக்கூ சொல்கிறான்
ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம்


—————————-

நிலவொளியில் மயானம்
அமைதியாய் வெட்டியான்
எங்கோ உதிர்ந்து கொண்டிருக்கிறது ஒரு பூ


——————————–
–என்.லிங்குசாமி
நன்றி: ஆனந்த விகடன்
புகைப்படம்: இணையம்

யார் சொல்வது நிறைகுடம் தளும்பாது என்று..!

நீ நடந்து வருதைப் பார்த்த பின்பும்
யார் சொல்வது
நிறைகுடம் தளும்பாது என்று..!


—————————–
என்.லிங்குசாமி
நன்றி: ஆனந்த விகடன்
புகைப்படம்: இணையம்

« Older entries