உயிரில் தொடங்கும்….(குறுக்கெழுத்துப் போட்டி)

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

நன்றி: குமுதம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு முதல் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு  முதல் வெற்றி 156113

தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் இன்று இரவு டெல்லியில் தொடங்கிய முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான கெய்க்வாட், இஷான் கிஷன் தல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடினர். அதிரடியாக 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட ருதுராஜ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து இஷானுடன் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடினார். தென் ஆப்பிரிக்கா சுழற்பந்துவீச்சாளர் ஷம்சியின் ஓவரில் சிக்ஸர்களை விளாசினார். மறுபுறம் நிதானமாகவவும், அதிரடியாகவும் விளையாடிய இஷான் கிஷன் அரை சதம் விளாசி, தொடர்ந்து ஜெட் வேகத்தில் ரன்களை குவிக்க தொடங்கினர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த இஷான் கிஷன் 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் 27 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இறுதியில் ரன்களை குவிக்க தொடங்கிர். இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை சேர்த்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 31 ரன்களை விளாசி அசத்தினார்.

t 7:53

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு  முதல் வெற்றி 1654795274792

இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது தென் ஆப்பிரிக்கா அணி. துவக்க ஆட்டக்காரர்களாக குணிய்டன் டி காக் மற்றும் பவுமா ஆகியோர் களமிறங்கிய நிலையில், கேப்டன் பவுமா 8 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து புவனேஷ்வர் பந்து வீச்சில் அவுட்டானர். இதையடுத்து களமிறங்கிய டூவைன் பிரிட்டோரியஸ் அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 29 ரன்கள் குவித்தார். இதனால் அந்த அணியின் ரன் ரேட் உயர்ந்த நிலையில், ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

அதன்பிறகு 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த குயிண்டன் டி காக் நடையை கட்ட, களத்தில் துஷன் மற்றும் டேவிட் மில்லர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஒருகட்டத்தில் இந்தியாவின் பக்கம் வெற்றி திரும்பிக் கொண்டிருந்தநிலையில், 15-வது ஓவரில் இருந்து இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்ய ஆரம்பித்தனர் துஷன் மற்றும் டேவிட் மில்லர்.

இதனால் மளமளவென சிக்ஸர்களாக அடித்து ரன்கள் குவிந்தநிலையில், 17-வது ஓவரில் தென் ஆப்பிரிக்க அணியின் பக்கம் வெற்றி திரும்பியது. இறுதியில், 19.1 ஓவரிலேயே 212 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி வெற்றி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. துஷன் 75 ரன்களிலும், மில்லர் 64 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர். இதையடுத்து 1 – 5 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி முன்னிலையில் உள்ளது.

நன்றி: புதியதலைமுறை

குத்துச்சண்டை உலக சாம்பியன் வீராங்கனை நிகத் ஸரீன்

நன்றி: தினமணி – கதிர்

புதிர் விளையாட்டு

நன்றி: கோகுலம் கதிர்

விடை சொல்லுங்கள்

சதுரங்கத்தில் சாதிக்கும் சிறுமி

சதுரங்கத்தில் சாதிக்கும் சிறுமி  713415-29-05page-24-1

திருச்சியைச் சேர்ந்த 13 வயது சிறுமி விதுளா,
சதுரங்க விளையாட்டுப் போட்டியில் பல சாதனைகளைப் புரிந்து
வருகிறார். தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு
பரிசுகளை பெற்று, காமன்வெல்த் போட்டிக்கு செல்வதற்கும் தகுதி
பெற்றுள்ளார்.

அவரது பேட்டி
. “எனக்கு பிடித்த விளையாட்டு செஸ். என் அப்பா வுடன் சேர்ந்து
தினமும் விளையாட ஆரம்பித்தேன். ஒரு மாதம் தொடர் பயிற்சிக்குப்
பின்னர், ஒன்றாம் வகுப்பு முதல் போட்டிகளில் கலந்து கொள்ள
ஆரம்பித்தேன். முதல் போட்டியில் பரிசு பெற்றது எனக்கு மிகுந்த
ஊக்கத்தை அளித்தது.

அதைத் தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினேன்.
செஸ் விளையாடுவது எனது நடைமுறை பழக்க வழக்கங்களில்
ஒன்றாகி விட்டது. தினமும் மாலையில் 1 மணி நேரமாவது செஸ்
விளையாடிவிட்டு தான் தூங்குவேன்.

என் அப்பாதான் எனக்கு செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தினார்.
இப்போதுவரை எனக்கு பயிற்சி அளிப்பதும் அவர்தான். ஓய்வு
நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமையிலும் நானும், அப்பாவும் 3 மணி
நேரம் தொடர்ந்து செஸ் விளையாடுவோம்.
மற்ற நேரங்களில் இணையத்தில் விளையாடுவேன்.

வருங்காலத்தில் ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆக வேண்டும் என்று தொடர்ந்து
முயற்சித்து வருகிறேன். தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் போட்டி எங்கு
நடந்தாலும், என்னை அழைத்துச் செல்வதற்கு என் பெற்றோர் தயாராக
இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும், நடந்த போட்டிகளிலும் கலந்து
கொண்டு 250-க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றிருக்கிறேன். மாநில
மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெற்றுள்ளேன்.

தேசிய போட்டிகளுக்காக டெல்லி, குஜராத், கர்நாடகா, ஆந்திரா போன்ற
மாநிலங்களுக்கு செல்லும் போதெல்லாம், புதிய மனிதர்களிடம் பழகி,
அவர்களுடைய விளையாட்டுத் திறனை தெரிந்துகொள்ளும்போது,
இன்னும் அதிகம் சாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் என்னுள் எழும்.

2019-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற தேசிய போட்டியில் முதல் பரிசு
வென்றேன். தேசிய போட்டிகளில் வென்றதை அடுத்து, ஆசிய இளையோர்,
உலக இளையோர் மற்றும் காமன்வெல்த் சதுரங்கப் போட்டிக்குச் செல்ல
தகுதி பெற்றேன்.

உலக அளவில் பல போட்டிகளில் கலந்துகொண்டு, இந்தியாவிற்காக
சாதனை புரிய வேண்டும் என்பதே என்னுடைய கனவு. சதுரங்கப் போட்டியில்
விளையாடுவது, மூளைக்கு சுறுசுறுப்பையும், அறிவுக்கூர்மையும் அளிக்கிறது.

பள்ளி படிப்பிலும், மற்ற போட்டிகளிலும் முதல் பரிசு தான் பெறுகிறேன்”
என்கிறார் விதுளா.

தினத்தந்தி-தேவதை

8 வித்தியாசங்கள்- கண்டுபிடி

மூளைக்கு வேலை 8_dif10

ப.பி

எட்டு வித்தியாசங்கள் – கண்டு பிடி

வாராந்தரி ராணி

அந்தரத்தில் தொங்குதடி அழகான சொம்பு – விடுகதைகள்

அந்தரத்தில் தொங்குதடி அழகான சொம்பு - விடுகதைகள் EdZDXqJ

அந்தரத்தில் தொங்குதடி அழகான சொம்பு - விடுகதைகள் LnoX0AW

நன்றி-சுட்டி மயில்


ஐபிஎல் 2022 கோப்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ்!

ஐபிஎல் 2022 கோப்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ்! 229507-gt

ஐபிஎல் 2022ன் பைனல் போட்டி இன்று அஹமதாபாத்
மைதானத்தில் நடைபெற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட
இந்த போட்டியில் அமித்சா நேரில் வந்து போட்டியை கண்டு
ரசித்தார்.

மைதானம் முழுக்க ரசிகர்கள் நிறைந்து இருக்க இந்த பைனல்
போட்டி நடைபெற்றது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிக்கு
இடையே நடைபெற்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் டாஸ்
வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
ஐபிஎல் 2022 கோப்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ்! FT7p01gaAAAM--z?format=jpg&name=900x900

ராஜஸ்தான் அணிக்கு வழக்கம் போல ஓப்பனிங் சூப்பராக
அமைந்தது. ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் சிறப்பாக ஆடி ரன்கள்
சேர்த்தனர். பட்லர் 39 ரன்களுக்கு அவுட் ஆக, கேப்டன்
சஞ்சு சாம்சன் 14 ரன்களுக்கு வெளியேறினார்.

இதன் பிறகு களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள்
அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். ஐபிஎல் பைனல்
போட்டியை போல் இல்லமால் சுமாரான போட்டியாகவே இது
நகர்ந்தது.

20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்களை இழந்து
130 ரன்கள் மட்டுமே அடித்தது.

எளிதான இலக்கை எதிர்த்து ஆடிய குஜராத் நிதானமாகவே
ஆடியது. இருப்பினும் பவர் பிளேயில் 2 விக்கெட்களை இழந்து
தடுமாறியது.

விக்கெட்களை எடுத்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும்
என்ற நிலையில் ராஜஸ்தான் ஆடியது. கில், ஹர்திக் பாண்டியா
சிறப்பாக பேட்டிங் செய்ய ரன்கள் உயர்ந்தது.

18.1 ஓவரில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து கோப்பையை
வென்றது குஜராத் டைட்டன்ஸ். தனது முதல் ஐபிஎல்
போட்டியிலேயே குஜராத் அணி கோப்பையை வென்றுள்ளது.

நன்றி-ஜீ நியூஸ்

8 வித்தியாசங்கள்- கண்டுபிடி

மல்லிகை மகள்

« Older entries Newer entries »