அமைதியான பையன், அடிக்காமல் அழுவான்

1) அமைதியான பையன், அடிக்காமல் அழுவான்
– அவன் யார்?

2) இலை இல்லை, பூ இல்லை, கொடி உண்டு – அது என்ன?

3) அதிவேகக் குதிரை, ஆடியபடி செல்லும் குதிரை
போட்ட கோட்டைத் தாண்டாமல் ஓடும் – அது என்ன?

4) எங்க அம்மா போட்ட சிக்கலை யாராலும் பிரிக்க முடியாது
-அது என்ன?

5) ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒரு பிள்ளை ஓடுவான்,
மற்றவன் நடபான் – அது என்ன?

6) உருளும் வீட்டைச் சுற்றி கருப்பு வேலி – அது என்ன?

7) இவன் வலை பின்னுவான், ஆனல் மீன் பிடிக்க
மாட்டான் – அது என்ன?

======================================
விடைகள்:
1) ஐஸ்
2) கைரேகை
3) ரயில் பெட்டி
4) இடியாப்பம்
5) கடிகார முட்கள்
6) கணை இமை
7) சிலந்தி

விரிந்தால் நான் அவனுக்குள் அடக்கம் – விடுகதைகள்


1. தலையைச் சீவினேன் தாகம் தீர்ந்தது. – அது என்ன?

2. தச்சன் செய்யாத பெட்டி தானே திறந்து மூடும் பெட்டி
-அது என்ன?

3. தேடாமல் கிடைப்பது தேடும் செல்வத்தைக் குறைப்பது. 
– அது என்ன?

4. நான் ஏறும் குதிரை, நாலு கால் குதிரை
அந்தக் குதிரைக்கு ஆயிரம் கண்கள். – அது என்ன?

5. டாக்டர் வந்தார் கோட்டைக் கழற்றினார் கேணிக்குள் 
குதித்தார் – அது என்ன?

6. தளதள மேனிக் கெம்புக்கல் தவழ்ந்து செல்லும் கெம்புக்கல்
நீரில் மிதக்கும் கெம்புக்கல் நித்திரை கெடுக்கும் கெம்புக்கல். 
– அது என்ன?

7. வளைந்த தங்கக் கம்பி வானத்திலே போட்ட கம்பி
எடுக்க வராத கம்பி எட்டிப் பிடிக்க முடியாத கம்பி. 
– அது என்ன?

8. விரிந்தால் நான் அவனுக்குள் அடக்கம்
மடக்கினால் எனக்குள் அவன் அடக்கம். – அது என்ன?

9. நீல நிறத் தோட்டத்திலே
மஞ்சள் பூ பூத்திருக்கு. – அது என்ன?

10. தண்ணீரும் மழையும் இல்லாமல் பயிர் பச்சையாய் 
இருக்கிறது
பாக்கு வெற்றிலை போடாமல் வாய் சிவப்பாய் இருக்கிறது. 
– அது என்ன?

————————————-
விடைகள்

1.இளநீர்

2.கண்

3.சோம்பல்

4.கட்டில்

5.வாழைப்பழம்

6.மூட்டைப்பூச்சி

7.மின்னல்

8.குடை

9.பௌர்ணமி நிலா

10.கிளி

தொகுத்தவர்: சுபா ஆனந்தி
http://subhaananthi.blogspot.sg/2014_12_01_archive.html

________________

வஞ்சியர் கையில் கொஞ்சி விளையாடும்–(விடுகதை)


1) மூன்று கால் உள்ளது முக்காலி அல்ல
முறுக்குப் போன்றது, தின்பண்டமும் அல்ல
முதுகிலே விழுது, அடியும் அல்ல
-அது என்ன?

—————————-

2) வட்டமாய் இருக்கும், வண்ணம் பல காட்டும்
வஞ்சியர் கையில் கொஞ்சி விளையாடும் –
அது என்ன?

——————————-

விடைகள்:

1) பின்னல்
2) வளையல்

காது போனால் ஒரு காசுக்கும் தேற மாட்டான் – விடுகதைகள்

ஒளி  கொடுக்கும் விளக்கும் அல்ல,
சூடு கொடுக்கும் நெருப்பும் அல்ல
பளபளக்கும் தங்கமும் அல்ல
– அது என்ன?

2) ஒற்றைக்கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை
– அது என்ன?

3) ஒல்லியான மனிதன், ஒரு காது மனிதன்
காது போனால் ஒரு காசுக்கும் தேற மாட்டான் –
அது என்ன?

4) ஒரு குளத்தில் ஒரே மீன், எட்டிப் பார்த்தாலும்
வேறு குளம் சொல்லாது – அது என்ன?

5) ஓட்டம் நின்றால் ஆட்டம் நின்று விடும்
அது என்ன?

6) ஓடோடி வந்தான்…எதறகாக வந்தான், அவனுக்கே
தெரியாது. ஆனால் திரும்பிப் போகிறான் – அவன் யார்?

7) ஓடுவதை விட்டு ஓய்ந்து நிற்பான், நீ உருவாய் வந்தால்
இடவும் மாட்டான். அவன் யார்?

8) ஓடிப் படர்வான் கொடியாக, ஒளி மிகத்தருவான்
முத்துமல்ல, மனைகளை அலங்கரிப்பேன் மலருமல்ல
– நான் யார்

9) ஓடாமல் ஓடும். உருண்டு புரண்டு ஓடும்.
பள்ளம் பார்த்தால் பாய்ந்து வழிந்து ஓடும் – அது என்ன?

10) பூட்டு இல்லாத பெட்டி, காசு கொடுத்து வாங்கும் பெட்டி
அது என்ன?

விடைகள்:
1) சூரியன்
2) மிளகாய்
3) ஊசி
4) நாக்கு
5) இதயத்துடிப்பு
6) கடல்
7) கொக்கு
8) மின்சாரம்
9) தண்ணீர்
10) தீப்பெட்டி

==================================
நன்றி: சுட்டி மயில் 5-2010

கறுத்த ரோஜா மொட்டு இதழ் விரிக்கும் – விடுகதை

விடுகதைகள்…

1. மரத்திற்கு மரம் தாவுவான்; குரங்கு அல்ல
பட்டை தீட்டியிருப்பான்; சாமியார் அல்ல – அவன் யார்?

2. கறுத்த ரோஜா மொட்டு, கனத்த மேகம் கண்டு
கணத்தில் இதழ் விரித்திடும், காத்திடும் பின் சாய்ந்திடும் – அது என்ன?

3. நெஞ்சிலே ஒரு கல், வீட்டிலே ஒரு கல், வானத்திலே ஒரு கல் – அவை எவை?

4. பார்த்தவர் இருவர், எடுத்தவர் ஐவர், உண்டவரோ ஒருவர் – அவர்கள் யார்?

5. வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை
கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை
வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை – அவன் யார்?

6. ஊளையிட்டாலும் ஊரைச் சுமந்து செல்வான் – அவன் யார்?

7. கல்லிலே காய்க்கும் பூ;
காய்ந்தால் மலரும் பூ:
பூவிலே இது வெள்ளைப்பூ. – என்ன பூ?

8. எண்ணெய் இல்லை; திரியும் இல்லை
ஏற்றி வைக்க ஆளும் இல்லை
ஆனாலும் தெரியுது வெளிச்சம். – அது எது?

9. கருப்பு நிறமுடையவன்
கபடம் அதிகம் கொண்டவன்
கூவி அழைத்தால் வந்திடுவான்
கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?

10. அரிசி போல் பூ பூக்கும்.
அம்மாடி எனச் சொல்லும் காய் காய்க்கும் – அது என்ன?

=======================================

விடைகள்:

1. அணில்

2. குடை

3. விக்கல், உப்புக்கல், கறுக்கல்.

4. கண்கள், விரல்கள், நாக்கு.

5. சிலந்தி

6. தொடருந்து

7. சுண்ணாம்பு

8. சூரியன்

9. காகம்

10. மிளகாய்

*********************************************************

ஒற்றைக்கால் பந்தலில் ஊரெல்லாம் தங்கலாம் – விடுகதை

1) ஒற்றைக்கால் பந்தலில் ஊரெல்லாம் தங்கலாம் – அது என்ன?

2) முரட்டு மனிதனுக்கு முப்பத்திரண்டு பேர் காவல்- அது என்ன?

3) நடந்தால் நடக்கும் நின்றால் நிற்கும் – அது என்ன?

4) உயிரற்ற பறவை, ஊர் ஊராய் பறக்கும் – அது என்ன?

5) விறகெரியத் துணையாகும், விளக்கெரிய பகையாகும் – அது என்ன?

6) நம்மைப் போல் இருக்கும், நாம் இறந்தாலும் இறக்காது – அது என்ன?

——————–
தொகுத்தவர் கோ.கலியபெருமாள்

விடைகள்:

1) ஆலமரம்
2) நாக்கு
3) நிழல்
4) விமானம்
5) காற்று
6) புகைப்படம்

Newer entries »