பறக்காத பூப்பந்து – விடுகதைகள்

1. கனியிலே சிறந்த கனி, என்றுமே திகட்டாத கனி…
 2. தூங்கும்போது வருவான்… தூக்கமெல்லாம் கலைப் பான்…
 3. தினந்தோறும் கடிக்காமல் கடிக்கும். இதனுடன் பழகப் பழக நமது தலைக்கனம் அடங்கு…
 4. கிளைகள் விட்டு வளர்ந்த மரம், கீழே மண்ணில் முளைக்காத மரம்…
 5. முரட்டுத் தோவில் முள் உடம்பு பெற்ற என்னை வெட்டித் தின்றால் விருந்துதான்….
 6. கீழே விழுந்தால் கருப்பு, வாயில் போட்டால் இனிப்பு…
 7. சின்ன மச்சான் குனிய வச்சான்…
 8. பறக்காத பூப்பந்து, பகட்டான சிறு பந்து, வாயிலே போட்டால் தேன் பந்து…
 9. பச்சையாய் விரிச்சிருக்கு, பருவம் கழிந்தால் மணிகள் குவியும்…
 விடைகள்
 1. பிள்ளைக்கனி 2. கனவு 3. சீப்பு
 4. மான் கொம்பு5. பலாப்பழம்
 6. திராட்சை 7. முள்
 8. லட்டு 9. நெல்வயல்

நன்றி-சிறுவர்மணி
 

எலும்பில்லாதவன் தான், வம்பில்லாதன் அல்ல. அது என்ன?

 நலம் பெற ஒரு நுறுக்....(விடுகதைகள்) 300px-Amerigo_vespucci_1976_nyc_aufgetakelt


1) கசப்புக்காரன் கலரில் மட்டும் பசப்புக்காரன் – அது என்ன?

2) எங்கள் ஊர் இரும்பு ஏகப்பட்ட தூரம் மிதக்கும் – அது என்ன?

3) நலம் பெற ஒரு நறுக். – அது என்ன?

4) எலும்பில்லாதவன் தான், வம்பில்லாதன் அல்ல. அது என்ன?

5) காட்டுக்குள்ளே நின்றவனைக் கூட்டுச் சேர்த்தால் சுத்தத்துக்கு 
உதவுவான் – அது என்ன?

================================
விடைகள்:

1) குன்றிமணி
2) கப்பல்
3) டாக்டர் போடும் ஊசி
4) நாக்கு
5) விளக்குமாறு

வயது என்ன..? – புதிர்

தேவலோக பேரழகி – (குறுக்கெழுத்துப் போட்டி)

சில்ட்ரன் ஜோக்- ஆறு வித்தியாசம் கண்டு பிடிங்க,,,

குறுக்கெழுத்துப் புதிர் – கோகுலம்

அமைதியான பையன், அடிக்காமல் அழுவான்

1) அமைதியான பையன், அடிக்காமல் அழுவான்
– அவன் யார்?

2) இலை இல்லை, பூ இல்லை, கொடி உண்டு – அது என்ன?

3) அதிவேகக் குதிரை, ஆடியபடி செல்லும் குதிரை
போட்ட கோட்டைத் தாண்டாமல் ஓடும் – அது என்ன?

4) எங்க அம்மா போட்ட சிக்கலை யாராலும் பிரிக்க முடியாது
-அது என்ன?

5) ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒரு பிள்ளை ஓடுவான்,
மற்றவன் நடபான் – அது என்ன?

6) உருளும் வீட்டைச் சுற்றி கருப்பு வேலி – அது என்ன?

7) இவன் வலை பின்னுவான், ஆனல் மீன் பிடிக்க
மாட்டான் – அது என்ன?

======================================
விடைகள்:
1) ஐஸ்
2) கைரேகை
3) ரயில் பெட்டி
4) இடியாப்பம்
5) கடிகார முட்கள்
6) கணை இமை
7) சிலந்தி

விரிந்தால் நான் அவனுக்குள் அடக்கம் – விடுகதைகள்


1. தலையைச் சீவினேன் தாகம் தீர்ந்தது. – அது என்ன?

2. தச்சன் செய்யாத பெட்டி தானே திறந்து மூடும் பெட்டி
-அது என்ன?

3. தேடாமல் கிடைப்பது தேடும் செல்வத்தைக் குறைப்பது. 
– அது என்ன?

4. நான் ஏறும் குதிரை, நாலு கால் குதிரை
அந்தக் குதிரைக்கு ஆயிரம் கண்கள். – அது என்ன?

5. டாக்டர் வந்தார் கோட்டைக் கழற்றினார் கேணிக்குள் 
குதித்தார் – அது என்ன?

6. தளதள மேனிக் கெம்புக்கல் தவழ்ந்து செல்லும் கெம்புக்கல்
நீரில் மிதக்கும் கெம்புக்கல் நித்திரை கெடுக்கும் கெம்புக்கல். 
– அது என்ன?

7. வளைந்த தங்கக் கம்பி வானத்திலே போட்ட கம்பி
எடுக்க வராத கம்பி எட்டிப் பிடிக்க முடியாத கம்பி. 
– அது என்ன?

8. விரிந்தால் நான் அவனுக்குள் அடக்கம்
மடக்கினால் எனக்குள் அவன் அடக்கம். – அது என்ன?

9. நீல நிறத் தோட்டத்திலே
மஞ்சள் பூ பூத்திருக்கு. – அது என்ன?

10. தண்ணீரும் மழையும் இல்லாமல் பயிர் பச்சையாய் 
இருக்கிறது
பாக்கு வெற்றிலை போடாமல் வாய் சிவப்பாய் இருக்கிறது. 
– அது என்ன?

————————————-
விடைகள்

1.இளநீர்

2.கண்

3.சோம்பல்

4.கட்டில்

5.வாழைப்பழம்

6.மூட்டைப்பூச்சி

7.மின்னல்

8.குடை

9.பௌர்ணமி நிலா

10.கிளி

தொகுத்தவர்: சுபா ஆனந்தி
http://subhaananthi.blogspot.sg/2014_12_01_archive.html

________________

வஞ்சியர் கையில் கொஞ்சி விளையாடும்–(விடுகதை)


1) மூன்று கால் உள்ளது முக்காலி அல்ல
முறுக்குப் போன்றது, தின்பண்டமும் அல்ல
முதுகிலே விழுது, அடியும் அல்ல
-அது என்ன?

—————————-

2) வட்டமாய் இருக்கும், வண்ணம் பல காட்டும்
வஞ்சியர் கையில் கொஞ்சி விளையாடும் –
அது என்ன?

——————————-

விடைகள்:

1) பின்னல்
2) வளையல்

காது போனால் ஒரு காசுக்கும் தேற மாட்டான் – விடுகதைகள்

ஒளி  கொடுக்கும் விளக்கும் அல்ல,
சூடு கொடுக்கும் நெருப்பும் அல்ல
பளபளக்கும் தங்கமும் அல்ல
– அது என்ன?

2) ஒற்றைக்கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை
– அது என்ன?

3) ஒல்லியான மனிதன், ஒரு காது மனிதன்
காது போனால் ஒரு காசுக்கும் தேற மாட்டான் –
அது என்ன?

4) ஒரு குளத்தில் ஒரே மீன், எட்டிப் பார்த்தாலும்
வேறு குளம் சொல்லாது – அது என்ன?

5) ஓட்டம் நின்றால் ஆட்டம் நின்று விடும்
அது என்ன?

6) ஓடோடி வந்தான்…எதறகாக வந்தான், அவனுக்கே
தெரியாது. ஆனால் திரும்பிப் போகிறான் – அவன் யார்?

7) ஓடுவதை விட்டு ஓய்ந்து நிற்பான், நீ உருவாய் வந்தால்
இடவும் மாட்டான். அவன் யார்?

8) ஓடிப் படர்வான் கொடியாக, ஒளி மிகத்தருவான்
முத்துமல்ல, மனைகளை அலங்கரிப்பேன் மலருமல்ல
– நான் யார்

9) ஓடாமல் ஓடும். உருண்டு புரண்டு ஓடும்.
பள்ளம் பார்த்தால் பாய்ந்து வழிந்து ஓடும் – அது என்ன?

10) பூட்டு இல்லாத பெட்டி, காசு கொடுத்து வாங்கும் பெட்டி
அது என்ன?

விடைகள்:
1) சூரியன்
2) மிளகாய்
3) ஊசி
4) நாக்கு
5) இதயத்துடிப்பு
6) கடல்
7) கொக்கு
8) மின்சாரம்
9) தண்ணீர்
10) தீப்பெட்டி

==================================
நன்றி: சுட்டி மயில் 5-2010

« Older entries