குறிப்பிட்ட வயதிற்கு மேல் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டுமா…

நன்றி: டாக்டர் அருண்குமார்- விகடன்

கண்களில் ஏற்படும் அழுத்தம் கவனத்துக்குரியது

சிறிது சிறிதாக அதிகரிக்கும் கண் அழுத்தம் பார்வை
இழப்பைக் கூட உண்டாக்கலாம்.

மனஅழுத்தம், ரத்த அழுத்தம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால், கண்களிலும் அழுத்தம் ஏற்படும் என்பதை
பலரும் அறிந்திருக்க மாட்டோம்.

கண்களில் ‘அக்வஸ் ஹூமர்’ என்ற திரவம் இருக்கும்.
இது கண்களில் உள்ள ‘லென்ஸ்’களுக்குத் தேவையான
ஊட்டச்சத்தை வழங்குவதுடன், கண்களில் உண்டாகும்
அழுத்தத்தை சீராக பராமரிக்கவும் உதவும்.

இந்த திரவமானது கண்களில் இருந்து தானாக வெளியேறும்.
பின்பு மீண்டும் புதிதாக உற்பத்தியாகும். சில நேரங்களில்
‘அக்வஸ் ஹூமர்’ திரவம் கண்ணில் நீராக தேங்கி நிற்கும்.

அவ்வாறு தேங்கும்போது, பார்வை நரம்பை பாதித்து,
கண்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். சிறிது
சிறிதாக இந்த அழுத்தம் அதிகரித்து பார்வை இழப்பைக்
கூட உண்டாக்கலாம்.

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நோய்களின்
பட்டியலில் இதுவும் ஒன்று. காரணங்கள்: பரம்பரை,
கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வயது முதிர்ச்சி, ரத்த
ஓட்டத்தைப் பாதிக்கக்கூடிய நோய்களான ஒற்றைத்
தலைவலி, குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை
நோய் போன்ற பிரச்சினைகள் இருப்பது, கண்ணில்
அடிபடுதல் மற்றும் ஸ்டிராய்டு மருந்துகள் அடிக்கடி
சாப்பிடுவது போன்ற காரணங்களால் கண்களில் அழுத்தம்
அதிகரிக்கும்.

பார்வையில் மாற்றம் ஏற்படுதல், அடிக்கடி கண்ணாடி
மாற்றும் நிலை, பக்கவாட்டுப் பார்வையில் கோளாறு,
வண்ண ஒளி வட்டம் தெரிதல்.

சிகிச்சை:
40 வயதை கடந்தவர்கள் வருடம் ஒரு முறை கண்பார்வை பரிசோதனை
செய்வதன் மூலம், கண்ணில் ஏற்படும் அழுத்தப் பி
ரச்சினையைக் கண்டறிய முடியும்.
10 முதல் 21 எம்.எம் எச்.ஜி வரை கண்ணில் சராசரியாக
அழுத்தம் இருக்கலாம். அதற்கு மேல் செல்லும்போது
கட்டாயம் கண் அழுத்தப் பரிசோதனை மேற்கொள்ள
வேண்டும்.

கண்களில் தேங்கும் திரவத்தின் உற்பத்தியை குறைப்பது
அல்லது வெளியேற்றுவதன் மூலம், கண் அழுத்தத்தைக்
குறைக்க முடியும்.

இதற்கென சிறப்பு ‘கிளாக்கோமா கண் சொட்டு மருந்து
சிகிச்சை’ மேற்கொள்ளப்படும். கண் மருத்துவரின்
அறிவுரைப்படி, தினமும் இந்த சொட்டு மருந்து சிகிச்சையை
மேற்கொள்ளலாம்.

வராமல் தடுக்க:

* வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கே, துத்தநாகம்,
செம்பு, செலினியம் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த
சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
* தினசரி கண்களுக்கான பயிற்சிகள் செய்யலாம்.
* காபின் நிறைந்த பானங்கள், கார்பனேற்றம் செய்யப்பட்ட
பானங்கள் பருகுவதைத் தவிர்க்க வேண்டும்.
* மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிடுவதன்
மூலம் கண்களில் அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

நன்றி: தினத்தந்தி (தேவதை)

தசைபிடிப்பை_சரி செய்வதற்கான வழிகள்!

பதிவிட்டவர்: Senthilnathan P (தமிழ் கோரா)

தினம் ஒரு மூலிகை – பாவட்டை

30 வயது பெண்ணா…நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்

நன்றி: குங்குமம் டாக்டர்

வாக்கிங் போனால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது எந்த அளவுக்கு உண்மை..

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு
மிக அதிகமாக இருக்கும். நடக்கும்போது அந்தச்
சர்க்கரையானது தசைகளுக்குள் சென்று, தசைகளால் அது
பயன்படுத்தப்பட்டு விடும். அதனால் ரத்தச் சர்க்கரை அளவு
குறையும்.

அதன் காரணமாகவே நீரிழிவு உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி
முக்கியம் என்பது அறிவுறுத்தப்படுகிறது.

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் தினமும் குறைந்தது 5 ஆயிரம்
அடிகள் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.
இன்றைக்கு உள்ள தொழில்நுட்ப வசதிகளின் காரணத்தால்
எத்தனை அடிகள் நடக்கிறோம் என்பதைக் கணக்கிடுவது
மிகவும் சுலபம்.

உடல் பருமனாக இருப்பவர்கள் 5 ஆயிரம் அடிகளை நடக்க
ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம். அதுவே
ஒல்லியான ஒருவர் அதை அரை மணி நேரத்தில் நடந்து
முடித்துவிடுவார். எனவே 5 ஆயிரம் அடிகள் என்பது
பொதுவாகச் சொல்லப்படுகிற அறிவுரை. அதைத் தாண்டி
தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும்
என்பதுதான் முக்கியம்.

நடைப்பயிற்சி என்றில்லை, மாடிப்படிகளில் ஏறி, இறங்குவது
கூட நீரிழிவு உள்ளவர்களுக்கு நல்ல பயிற்சிதான். வாக்கிங்கோ,
மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதோ, மலையேற்றமோ….
நீரிழிவு பாதிப்புள்ளவர்களுக்கு ஏதேனும் ஓர் உடற்பயிற்சி
முக்கியம் என்பதுதான் இதன் அர்த்தம்.

வாய்ப்பு உள்ளவர்கள் ஜிம்முக்கு சென்றும் வொர்க் அவுட்
செய்யலாம்.


நீரிழிவு மருத்துவர் டி. பழனியப்பன்
நன்றி: விகடன்

கண்களுக்கு பலன் தரும் காரட்

கள் உப்பு சேர்க்காமல் எடுக்கவும்.

நன்றி: சென்னை தமிழ் முரசு

தினம் ஒரு மூலிகை – நீர்முள்ளி

நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் பூசணி விதை

-தினத்தந்தி

படம்-இணையம்

குளிர் காலத்தில் எடை குறைக்க உதவும் 3 காய்கறிகள்!

குளிர்காலத்தில் நம் உடலை கதகதப்புடன் வைத்துக் கொள்ளும் அதே நேரத்தில் தேவையான ஊட்டச்சத்துகளையும் அதற்கு அளிக்க வேண்டும். அதற்கு ஏற்ற 3 வகை காய்கறிகள் குறித்துப் பார்ப்போம். குறிப்பாக இந்த காய்கறிகள் குளிர் காலங்களில் நமக்கு அதிக பலன் கொடுக்கும்.

1.கேரட்

இந்த காய்கறியில் விட்டமின் ஏ, பி, பி2, பி3, சி, டி, இ மற்றும் கே சத்துகள் உள்ளன. இதன் மூலம் நல்ல கண் பார்வை தெரியும். வயதாவதையும் கேரட் தடுக்கும். இதய நோய்களைத் தடுத்து, முடி வளர்ச்சியிலும் உதவும். கேரட் உடலை சுத்திகரித்து குடலை சுத்தப்படுத்தும். கேரட்டை சாண்டுவிச், சாலட் போன்றவற்றில் அதிகம் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடையைக் குறைக்கலாம்.

2.சக்கரவல்லிக் கிழங்கு

உருளைக் கிழங்கிற்கு பதிலாக சக்கரவல்லிக் கிழங்கு நல்ல மாற்று. குளிர் காலத்தில் அதிகம் கிடைக்கும் கிழங்கு வகை இது. இதில் அதிக நார்ச்சத்து, பீடா- கரோடீன், விட்டமின் ஏ, பி6 மற்றும் சி விட்டிமின்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த கிழங்கு மலச் சிக்கலைப் போக்கி, சலி பிடிப்பதிலிருந்து உடலைப் பாதுகாக்கும். சக்கரவல்லிக் கிழங்கை அவித்துச் சாப்பிட்டால் அதிக பலன் தரும்.

3.பீட் ரூட்

இந்த காய்கறியை எப்போதும் அதிகம் சாப்பிட வேண்டும். குளிர் காலங்களில் மிக அதிகமாக பீட் ரூட்டை உட்கொள்ள வேண்டும். பீட் ரூட்டில் இரும்புச் சத்து, விட்டமின் ஏ, பி6 மற்றும் சி விட்டமின்கள் இருக்கும். கால்சியம், மாக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் மினரல்களும் பீட் ரூட்டில் அதிகம். உடலில் உள்ள கெட்ட கசிவுகளை நீக்குவதில் பீட் ரூட் நன்கு செயலாற்றும். இவை இல்லாமல் வெள்ளை இரத்த செல்களையும் அதிகமாக்கும் பீட் ரூட்.

-படித்ததில் பிடித்தது

« Older entries Newer entries »