கை வைத்தியம்

Advertisements

முகம் சுத்தமாக இருக்க…

அஜீரணம் நீக்கும் வேப்பம்பூ

வாசகர்களின் கேள்விகள்… மருத்துவ நிபுணர்களின் பதில்கள்!

ஆரோக்கியமாக இருக்க கடைப்பிடிக்க வேண்டியவை…

ஆரோக்கியமாக இருக்க கடைப்பிடிக்க வேண்டியவை…

 • காலையிலும், இரவு உணவுக்கு முன்,
  கட்டாயம் மலம் கழிக்க வேண்டும்.
  கண்ட நேரத்தில் கழிப்பது, மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்
 • காலை, மாலை இருவேளை குளிக்கலாம். மழைக்
  காலங்களில், காலையில் குளித்தால் போதும்
 • ஊற வைத்த வெந்தயத்தை, சிறுவர்கள் – ஒரு ஸ்பூன்,
  பெரியவர்கள் – இரண்டு ஸ்பூன், வெறும் வயிற்றில் மென்று
  விழுங்க, சர்க்கரை நோயும், ரத்தக் கொதிப்பும் வராமல்
  கட்டுக்குள் இருக்கும்
 • காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்,
  தோல் நீக்கிய இஞ்சித் துண்டை சாப்பிடலாம்.
  இது, கொழுப்பை குறைக்கும், தொப்பையைக் கரைக்கும்
 • உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ண
  வேண்டும்
 • மைதா மாவில் செய்யப்பட்ட பரோட்டா, வாழ்நாளைக்
  குறைக்கும். குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்
 • ‘பிராய்லர்’ கோழிக்கறி வேண்டாம். மீன் அல்லது
  ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடலாம்.
  மது, புகை கூடாது
 • மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன், சுக்கு காபி
  சாப்பிடுவது நல்லது
 • உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன், அடுத்த திட
  உணவு கூடாது
 • பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள்,
  டார்க் சாக்லேட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை,
  பனைவெல்லம் மற்றும் சோற்றுக்கற்றாழையை சுத்தம்
  செய்து, தேன் கலந்து தினமும் சாப்பிடலாம்
 • ‘பயோட்டின் – எச்’ வைட்டமின் குறைவால், தலைமுடி
  உதிர்தல், நகம் உடைதல், தோல் நோய், எடை குறைவு,
  தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும்.
  இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை,
  வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான்
  மற்றும் மோர் தினமும் எடுத்துக் கொள்வது நல்லது
 • காலை அல்லது மாலை, ஒரு மணி நேரம் உடற்பயிற்சி
  செய்ய வேண்டும்
 • இரவு, 11:00 மணி முதல், காலை, 5:00 மணி வரை, கட்டாயம்
  உறங்க வேண்டும்
 • குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப் பிரியமா…
  வேர்க்கடலை, பேரீச்சம்பழத்தை தினமும்,
  தின்பண்டங்களாக கொடுக்கலாம். கீரையை, வாரம்
  மூன்று முறை பருப்புக் கூட்டாகவும்; கேழ்வரகை, சேமியா,
  கொழுக்கட்டை மற்றும் ரொட்டியாக, வாரம் இருமுறை
  கொடுக்கலாம். ஆப்பிள், ஆரஞ்சை விட, பப்பாளி,
  கொய்யாவில் சத்துக்கள் அதிகம். தினமும் சாப்பிடக்
  கொடுக்கலாம்
 • மனைவியின் ஆரோக்கியத்தின் மீது, அதிக அக்கறை
  கொண்டவரா… மண் சட்டியும், இரும்பு கடாயும், மரச்செக்கு
  எண்ணெய்யும் வாங்கிக் கொடுக்கலாம்.

தினமும், பேரீச்சம்பழம் சாப்பிடக் கட்டாயப்படுத்தலாம்.
கருப்பு அரிசி, கருப்பு எள், கருப்பட்டி, கருப்பு உளுந்து
மற்றும் மண் பானை தண்ணீர் குடிக்க வலியுறுத்தலாம்

 • கணவர் மீது அதிக அக்கறையுள்ள மனைவியா…
  ‘பிரிஜ்’ஜில் வைத்த குழம்பு மற்றும் மாவு வகைகளை சாப்பிட
  கொடுக்க வேண்டாம். சோம்பு, சீரகத் தண்ணீர் குடிக்கக்
  கொடுக்கலாம்.

முன்னோர் பயன்படுத்திய உணவுப் பழக்கங்களை முடிந்த
அளவிற்கு பயன்படுத்துவோம். இழந்த ஆரோக்கியத்தை
முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும்,
50 சதவீத ஆரோக்கியத்தை மீட்டெடுக்க, நம் முன்னோர்
பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நடைமுறை

வாழ்க்கையில் பயன்படுத்துவதன் மூலம் சாத்தியமாகும்.


தொகுப்பு: ஜோ.ஜெயக்குமார்
வாரமலர்

நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்!

கைக்கு எட்டும் தூரத்தில் பயன்களை வைத்துக்கொண்டு ஊரெல்லாம் அதற்கான மருந்தைத் தேடி அலைவது மனித குணம். அப்படி ஓர் அருமருந்து மல்பெர்ரி. கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு நன்கு பரிச்சயமான பழம். கிராமத்தில் ஓடியாடி விளையாடும் சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக மரத்திலிருந்து சில பழங்களைப் பறித்துச் சுவைத்துப் பார்ப்பது உண்டு.

ஆனால், பெரியவர்களோ அதன் பயன்கள், மருத்துவக் குணம் ஆகியவற்றை அறியாமல் மல்பெர்ரியை உதாசீனப்படுத்தி வருகிறோம். இதன் வகைகள், உடலுக்கு அள்ளி அள்ளித் தரும் பயன்கள் அனைத்தையும் இங்கே பார்ப்போம்…

மல்பெர்ரி

வகைகள்…

பார்ப்பதற்கு பிளாக்பெர்ரியைப்போல இருக்கும்; சுவையில் திராட்சையைப்போல தித்திக்கும். மல்பெர்ரிப் பழங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற மிதவெப்ப மண்டல நாடுகளில் விளைகின்றன.

இந்தப் பழங்கள் சிவப்பு, கறுப்பு, கருநீலம் போன்ற நிறங்களில் காணப்படும். மல்பெர்ரியின் இலைகளை பட்டுப்புழு வளர்ப்புக்குப் பயன்படுத்துகிறார்கள். இதன் இலைகளும் நிறைய மருத்துவக் குணங்களைக் கொண்டவையே!

பயன்கள்…

சத்துகள்…

மல்பெர்ரியில் அதிகளவில் ஊட்டச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, சி, இ மற்றும் கே, தயாமின், நியாசின், பீட்டா கரோட்டின் ஆகியன உள்ளன. 100 கிராம் மல்பெர்ரியில் 43 கலோரிகள், 44 சதவிகிதம் வைட்டமின் சி, 14 சதவிகிதம் இரும்புச்சத்து உள்ளன.

உடல்நலத்துக்கு உத்தரவாதம்!

இதில் ரெஸ்வெரேட்ரோல் (Resveratrol) எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது. இது இதயப் பாதுகாப்புக்கு உதவக்கூடியது. இதன் காரணமாகவே மல்பெர்ரி சீன மருத்துவத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

புற்றுக்கட்டிகளின் வளர்ச்சியைத் தடுத்து கேன்சரை குணப்படுத்தும் ஆற்றலும் மல்பெர்ரிக்கு உண்டு. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்; உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்; ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

மல்பெர்ரி

ரத்தக்கட்டி, பக்கவாதம், ரத்தச்சோகை மற்றும் இதய நோய் போன்றவற்றைத் தடுக்கும்; சீறுநீரகத்தைப் பலமாக்கும்; கல்லீரலைச் சுத்தப்படுத்தும். மல்பெர்ரியில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவனாய்டுகள் (Flavanoids) காய்ச்சல், சளி, இருமலைக் குறைக்கக்கூடியவை.

இது, அறுவைசிகிச்சையால் ஏற்படும் காயங்களையும் வீக்கங்களையும் எளிதில் ஆற்றும் தன்மைகொண்டது. கெட்ட கொழுப்பைக் குறைத்து, நரம்பு வளர்ச்சியைப் பலப்படுத்தும்; உணவு செரிமானத்துக்கு உதவி செய்யும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மல்பெர்ரி பழரசத்தைத் தொடர்ந்து பருகிவந்தால், பார்வைத்திறன் அதிகரிக்கும்; கண் எரிச்சல் குணமாகும்.

சருமத்துக்கு நல்லது!

மெலனின் உற்பத்தியைச் சீராக்கி, சருமத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் வயதான தோற்றத்தைத் தடுத்து, உடலும் முகமும் இளமையாக காட்சிதர உதவும்.

தலைமுடி காக்கும்!

தலைமுடி ஆரோக்கியமாக, நன்கு வளர உதவும். கீமோதெரப்பி சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படும் தலைமுடி இழப்பைத் தடுத்து, மீண்டும் வேரிலிருந்து முடி வளரச் செய்யும்.

இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், தலைமுடிக்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகளைக் குறைக்கலாம். இளநரையைத் தடுத்து, முடியின் நிறம் மங்காமல் வைத்துக்கொள்ளவும் மல்பெர்ரி உதவுகிறது.

மல்பெரி பழம்

பழங்களைத் தேர்ந்தெடுக்கும் விதம்

நன்கு பழுத்த பழங்களை மட்டுமே தேர்வுசெய்ய வேண்டும். வெளிறிய நிறமுள்ள பழங்களைச் சாப்பிடக் கூடாது. காற்றுப் புகாதபடி மூன்று நாள்கள் வரை பழங்களைப் பதப்படுத்தி வைத்து பயன்படுத்தலாம்.

உணவு

மல்பெர்ரிப் பழங்களைக் கொண்டு சுவையான இனிப்பு வகைகள், பாயசம், பழக்கூட்டு, பழரசம், ஜாம், ஜெல்லி, பிஸ்கட், கேக் வகைகள், ஐஸ்க்ரீம் போன்ற சுவையான உணவு வகைகளைச் செய்தும் சாப்பிடலாம். பல ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் கிடைக்கும் பலன்களை வீட்டில் இருந்தபடியே எளிதில் பெற்றுத்தரும் எளிய மல்பெர்ரியைத் தொடர்ந்து சாப்பிடுவோம்…ஆரோக்கியம் காப்போம்!

படம்: சங்கீதா

நன்றி-விகடன்

குடைமிளகாயின் மருத்துவப் பயன்கள்

குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் 
வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து 
நிறைந்துள்ளது.

குடைமிளகாயை உணவில் சேர்த்து வந்தால், 
கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
மேலும் அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான 
சக்தியை தூண்டும்.

நீரிழிவு, மற்றும் உடற்பருமன் நோய்களைக் கட்டுப்படுத்தும் 
மூலக்கூறுகள் இருப்பதாக பச்சை, மஞ்சள், மற்றும் சிகப்பு  
குடைமிளகாயில் உள்ளது.
0
மஞ்சள் குடைமிளகாய், சர்க்கரை நோய் மற்றும், 
உடற்பருமன் ஆகியவற்றுக்குக் காரணமான சுரப்பிகளை 
மஞ்சள் குடைமிளகாயில் அதிகம் கட்டுப்படுத்துகிறது.

————-

═══◄•• வசந்தம்••►═══

மைதா பிரெட் கோதுமை பிரட் – எது நல்லது?

மருந்தாகும் அருகம்புல்

தோல் நோய்களை– குணப்படுத்த கூடியதும், கண் எரிச்சல், வயிற்றுப்போக்கை சரி செய்யக்கூடியதும், புண்களை ஆற்றவல்லதுமான அருகம்புல் வயல்வெளி, புல்வெளியில் வளரக் கூடியது.

எளிதில் கிடைக்கக்கூடிய அருகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இதன் மீது நடப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது. நரம்பு நாளங்களை தூண்டக்கூடியது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். 

அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து எடுக்கவும். இந்த பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை பூசுவதால் அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, வியர்க்குரு சரியாகிறது. தோல் நோய்களுக்கு மருந்தாகும் அருகம்புல், அக்கி கொப்புளங்கள், சொரியாசிஸ்சை குணப்படுத்துகிறது. 

அருகம்புல்லை கொண்டு கண் நோய்க்கான மருந்து தயாரிக்கலாம். அருகம்புல்லை துண்டுகளாக நறுக்கி நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் வடிகட்டி ஊறல் நீரை மட்டும் எடுக்கவும். 

இதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து காலை, மாலை குடித்து வர கண் எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகும். அருகம்புல்லில் நீர் விடாமல் சாறு எடுக்கவும். இதை 2 சொட்டு விடும் போது மூக்கில் இருந்து வரும் ரத்தம் நிற்கும். 

அருகம்புல் சாறு 100 மி.லி. அளவுக்கு குடித்து வர மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும். பல்வேறு நன்மைகளை கொண்ட அருகம்புல் ரத்தத்தை சுத்தப்படுத்தி தோல் நோய்கள் வராமல் தடுக்கிறது. 

கோடை வெயிலுக்கு அருகம்புல் சாறு குடிக்கும்போது உடல் குளிர்ச்சி அடையும். வெள்ளைப்போக்கு, வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். 

அருகம்புல் சாறு 50 மி.லி. எடுக்கவும். இதனுடன் புளிப்பில்லாத கெட்டித் தயிர் சேர்க்கவும். இதை காலை, மாலை குடித்து வர வயிற்றுப்போக்கு, வெள்ளைப்போக்கு சரியாகும். அருகம்புல்லை பயன்படுத்தி உடல் சூட்டை தணிக்கக்கூடிய, குடலில் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடிய மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

அருகம்புல் சாறு, மிளகுப்பொடி, நெய்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரை டீஸ்பூன் நெய் விட்டு சூடுபடுத்தவும். இதனுடன் அருகம்புல் சாறு சேர்க்கவும். பின்னர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். 

இதனுடன் சிறிது மிளகுப் பொடி சேர்க்கவும். லேசாக கொதித்தவுடன் இறக்கி விடவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும். 

பயன்கள்: 
இது உடல் உஷ்ணத்தை குறைக்கும், வெட்டை நோய்க்கு மருந்தாகிறது. வயிற்று புண்களை ஆற்றும் சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. கை கால் வீக்கத்தை போக்குகிறது. மருந்துகளை அதிகளவில் எடுத்துக் கொள்வதாலும் வெளியில் அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படும் புண்களை அருகம்புல் சாறு ஆற்றும். எளிதில் நமக்கு கிடைக்கக்கூடிய அருகம்புல் நோயற்ற வாழ்வுக்கு சிறந்தது.

– லதா சம்பத்குமார், குடியாத்தம்.

தினகரன்

ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் அருகம்புல் சாறு

« Older entries