நகம் பராமரிப்பு – டிப்ஸ்

Advertisements

தொழில் துறையில் பெருமை சேர்த்த பெண்கள்

உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து அருவருப்பாக உள்ளதா…

குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும்.

இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.

தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும.;

நன்றி:

-http://pettagum.blogspot.in/2013/12/blog-post_3191.html

50 வயதுப் பெண்கள் கவனிக்க

50 வயதுப் பெண்கள் கவனிக்க… 

 பொதுவாக 50 வயதைக் கடந்த, மாத விலக்கு நின்றுவிட்ட பெண்கள் அதிக நேரம் தூங்குவதால், அவர்களுக்கு பக்கவாதம் போன்ற வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒருநாளில் 6 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதாலோ அல்லது 9 மணி நேரம் வரை தூக்கத்தை மேற்கொள்வதாலோ மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தில் உறைதல் ஏற்பட்டு, பக்கவாதம், உணர்விழத்தல், பலவீனம், பேசுவதில் தெளிவில்லாத நிலை, ஒருங்கிணைப்பில்லாத நிலை போன்றவை ஏற்படக்கூடும் என்று வடக்கு கரோலினா பொதுசுகாதார பல்கலைக்கழக டாக்டர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

9 மணி நேரம் வரை தூங்கும் பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்பு 60 – 70 விழுக்காடு வரை உள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவோருக்கு இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவது 14 விழுக்காடு மட்டுமே என்றும் தெரிய வந்துள்ளது.

 

source:tamil.webdunia.com

Just Beautiful !

Just-beautiful…..

 

What makes me weak? My fears.

What makes me whole? My God.

 

What keeps me standing? My faith.

 

What makes me compassionate? My selflessness.

 

What makes me honest? My integrity.

 

What sustains my mind? My quest for knowledge.

What teaches me all lessons? My mistakes.

What lift’s my head high? My pride, not arrogance.

What if I can’t go on? Not an option.

What makes me victorious? My courage to climb.

What makes me competent? My confidence.

What makes me sensual? My insatiable essence.

What makes me beautiful? My everything.

What makes me a woman? My heart.

Who says I need love? I do.

 

What empowers me? My God & Me.

 

Who am I? WOMAN!

Keep this going ladies. Send this to all of the beautiful ladies in your

lives!

… & Remember we are too blessed to be stressed and too anointed,

to be Disappointed! smile, because God loves you

 

__________________

posted by -Love

Aruna

source:http://www.indusladies.com/forums/forward-messages-and-jokes/20574-

ஜீன்ஸிற்கு ஏற்ற டாப்ஸ்

தாவணியை முற்றிலுமாக மறந்து சுடிதாருக்கு வந்த பெண்கள் படிப்படியாக ஜீன்ஸ் டிசர்ட்டிற்கு மாறினர்.

 

எங்கு பார்த்தாலும் சுடிதார் கடைகளும், ஜீன்ஸ் கடைகளும் என காட்சி அளித்தன. அங்குதான் பெண்களின் கூட்டமும் இருந்தது.

 

தாவணி என்பது ஏதோ முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டும் ஒரு சிலரால் விரும்பி அணியப்படும் ஆடையாக மாறியது. பள்ளிச் சீருடை வடிவத்திலாவது தாவணிகளுக்கு உயிர் கொடுத்து வந்த பல பள்ளிகளும் தாவணியின் கழுத்துக்களை சுடிதார் கயிற்றால் இறுக்கிக் கொன்றன.

 

தற்போது தாவணி என்ற ஒரு ஆடையே வெகுவாக மறைந்து முற்றிலுமாக கிழிந்துவிட்டது.

 

 

சரி தற்போது ஜீன்ஸ் கொடி கட்டிப் பறக்கும் பல இடங்களில் அதற்கு எடுப்பாக போடப்படும் மேல் ஆடை அதாவது டாப்ஸ்கள் தான் இன்று நாம் பேசப்போகும் விஷயம்.

 

பல்வேறு வகைகளில் தற்போது டாப்ஸ்கள் கிடைக்கின்றன. முழுவதும் வேலைப்பாடு செய்யப்பட்டது, கை மற்றும் கழுத்துப் பகுதியில் மட்டும் வேலைப்பாடு செய்யப்பட்டது, சமிக்கி, மணிகள் வைத்து தைக்கப்பட்ட டாப்ஸ் என இது நீண்டு கொண்டே செல்லும்.

 

பொதுவாக ஒல்லியாக இருக்கும் பெண்கள் தங்களது உடல் அளவிற்கு ஏற்ற சிறிய டாப்ஸ்கள் அல்லது சர்ட்டுகளை தேர்ந்தெடுக்கின்றனர்.

 

பெண்களுக்கு என தற்போது பல சட்டைகள் வருகின்றன. முழுக் கை மற்றும் பாக்கெட்டுகளுடன் அவை வெகு அசத்தல். மென்மையான நிறங்களில் அதுபோன்ற சட்டைகளை எடுத்து கருப்பு, அடர்ந்த நீலம் போன்ற ஜீன்ஸ் பேன்ட்டுகளுக்கு அணியலாம்.

 

அல்லது சட்டையை விடக் கொஞ்சம் நீளம் கூடுதலாக வரும் டாப்ஸ்களும் உள்ளன. அவற்றில் பல்வேறு விதங்களில் பல விலைகளிலும் கிடைக்கின்றன.

 

எடுப்பான தோற்றம்  கொண்டவர்கள்  இது போன்ற டாப்ஸ்களை வாங்கும்போது  அதற்கேற்ற வலைப்பின்னல் ஷால்களையும் வாங்கி அணிந்து கொள்வதும் ஒரு பேஷன் ஆகி விட்டது.

 

கை நீளம், கைக் குட்டையானது அல்லது கையே இல்லாத டாப்ஸ்களில் உங்கள் தோற்றத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

 

எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்து வாங்கி உங்களுக்கேற்ற உடையை தேர்ந்தெடுங்கள்.

 

 

 

ஆடை உங்களது உடல் அளவுக்கும், உடல் நிறத்திற்கும் ஏற்றதாகவும், பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்காமலும் இருப்பது நலம்.

 

உடல் அதிக பருமன் கொண்டவர்கள்  நீண்ட டாப்ஸ்களையும், அதற்கு மேல் ஒரு ஷாலையும் அணிவது உங்களை அழகாகக் காட்டும்.

 

‌‌ல்லியான  உடல் அமைப்பைக் கொண்டர்கள் திக வேலைப்பாடு கொண்ட டாப்ஸ்களை திகம் ணியலாம்.

 

 

 

Source:tamil.webdunia.com

 

 

 

Newer entries »