– Albert Schweitzer
“மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல.
மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல்.
நீ செய்வதை நீ நேசித்தாயானால்,
நீ வெற்றியடைவாய்.”
“உங்கள் விதி என்னவாயிருக்கும் என்று நானறியேன்,
ஆனால் ஒன்று நானறிவேன்:
உங்களில் யார் சேவை செய்வது எப்படி என்று
விழைந்து கண்டுபிடித்துள்ளீர்களோ, அவர்கள் தான்
உண்மையில் மகிழ்ச்சியடைவீர்கள்.”
– Albert Schweitzer
“மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும் குறைந்த
ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை.”
– Albert Schweitzer
“செய்வதற்குச் சில, நேசிப்பதற்குச் சில,
மற்றும் எதிர்பார்ப்பதற்குச் சில,
இவைகளே மகிழ்ச்சியின் உன்னத அத்தியாவசியத்
தேவைகள்.”
– Allan K. Chalmers
“மகிழ்ச்சி: இதை நாம் அபூர்வமாக உணர்கிறோம்.
நான் அதை விலைக்கு வங்குவேன், யாசிப்பேன்,
திருடுவேன்
,இரத்தம் சொட்டும் நாணயங்களால் விலை கொடுப்பேன்
இந்த எல்லையற்ற நன்மைக்காக.”
– Amy Lowell
“நாமனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் குறிக்கோளுடன்
வாழ்கிறோம்; நம் வாழ்க்கைகள் எல்லாம் வேறுபட்டவை,
இருப்பினும் ஒன்றே.” – Anne Frank
“மகிழ்ச்சி தன்நிறைவு பெற்றவருக்கு உரியது.”
– Aristotle
“செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு
வருவதில்லை,
ஆனால் செயலில்லாமல் மகிழ்ச்சியில்லை.”
– Benjamin Disraeli
“நமது மனோபலத்தின் பரிபூரண உபயோகிப்பும்
நாம் வாழும் உலகைப் பரிபூரணமாய் உணர்வதும்
உண்மையிலேயே திருப்திதரும் மகிழ்ச்சியை
அளிக்கின்றன.” – Bertrand Russell
உன்னுடைய உழைப்பும் சொற்களும்
உனக்கும் பிறர்க்கும் பயனுள்ளனவாயிருக்கையில்
மகிழ்ச்சி வருகிறது.
– Buddha
தொகுத்தவர்:
Sakthivel Balasubramanian