பொது அறிவு

மனித உடலின் உறுப்புகள்

பொது அறிவு தகவல் – மங்கையர் மலர்

ஆஹா தகவல் – மங்கையர் மலர்

மலைப்பாம்பு

குவாலியர் மண்பாண்டங்கள் & தஞ்சாவூர் தட்டு

அரபிக் கடலின் அரசி

அரபிக் கடலின் அரசி என்று அழைக்கப்படுவது – கொச்சின்

இந்தியாவின் கோவில் நகரம் – புவனேஸ்வர்

இந்தியாவின் பாறை நகரம் – சண்டிகார்

இந்தியாவின் அரண்மனை நகரம் – கொல்கத்தா

தீப்பெட்டியைக் கண்டு பிடித்தவர் – ஹான்வாக்கர்

இன்டர்நெட்டை பாதித்த முதல் வைரஸ் ‘ல்வ பக்கிஸ்’ – (5-5-2000)

-ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படும் பதக்கங்களை
வடிவமைத்தவர் – எலினா ஒட்ஸ்சி

இந்தியாவில் குடும்ப நல ஓய்வூதியம் நடைமுறைக்கு
வந்த ஆண்டு – 1971

இந்தியாவின் முதல் பீரங்கியின் பெயர் – விஜயந்தா

• கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

• கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் டிசம்பர் 25ஆம் தேதி என்று கி.பி.350-இல் தான் ஆரம்பிக்கப்பட்டது.

• கிறிஸ்துமஸ் வாழ்த்தை தபால் தலையாக வெளியிட்ட முதல் நாடு கனடா.

• கிறிஸ்துமஸ் தாத்தாவின் படத்தை முதன்முதலாக வரைந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் நாஸ்ட் என்பவர்.

• 1880ஆம் ஆண்டு வரை அமெரிக்காவிலும் 1992ஆம் ஆண்டு வரை ரஷ்யாவிலும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு அரசு விடுமுறை கிடையாது.

• முதல் கிறிஸ்துமஸ் குடிலை 1722ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பிரான்ஸ் அரசிதான் அமைத்தார்.

• பிரேசில் நாட்டில் கிறிஸ்துமஸ் தாத்தாவை பாப்பா நோயல் என்றும் பிரான்ஸ் நாட்டில் பியர்நோயல் என்றும் இங்கிலாந்தில் பாதர் கிறிஸ்துமஸ் என்றும் அழைக்கிறார்கள்.

• கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை 1843ஆம் ஆண்டு சர்ஹென்றி கோல் என்பவரால் முதன்முதலில் அனுப்பப்பட்டது.

• 1929ஆம் ஆண்டு எட்டாம் எட்வர்ட் மன்னருக்கு அளிக்கப்பட்ட வாழ்த்து அட்டைதான் உலகிலேயே மிகச்சிறியது.

• இங்கிலாந்து விமானப் படையினர் அமெரிக்க விமானப் படையினருக்கு அனுப்பிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைதான் உலகிலேயே மிகப் பெரியது.

• இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவிற்கு கிறிஸ்துமஸ் தீவு என்று பெயர். வில்லியம் மைனர் என்ற பிரிட்டிஷ் மாலுமி 1643ஆம் ஆண்டு இத்தீவை கண்டுபிடித்தமையால் இப்பெயர் .

• அமெரிக்காவில் ராக்பெல்லர் சென்டரின்முன் 1933ஆம் ஆண்டு முதல் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு வருகிறது.

• உலகிலேயே கிறிஸ்துமஸின்போது கிறிஸ்துமஸ் மரம் வைப்பது முதன்முதலில் ஜெர்மனியில் 15ஆம் நூற்றாண்டிலேயே மரம் நடுவது பழக்கத்தில் இருந்துள்ளது.

• கிறிஸ்துமஸ் நாள் டிசம்பர் 25 என கி.பி.154ஆம் ஆண்டில்தான் போப் ஆண்டவர் ஜீலியசால் முதன்முதலாக அறிவித்தது.

• “கிறிஸ்து+மாஸ்’ என்ற சொல்லில் இருந்தே கிறிஸ்துமஸ் என்ற சொல் பிறந்தது. இதற்கு “கிறிஸ்துவின் ஆராதனை’ என்று பொருள்.

-வசந்தா மாரிமுத்து, சென்னை.

ராஜகனி என்று அழைக்கப்படும் கனி எது? – பொது அறிவு


]b]1) சூரியக் குடும்பத்தின் பத்தாவது புதிய கோள்
பெயர் என்ன?

2) மனிதனுக்கு எத்தனை ஜோடி விலா எலும்புகள்
உள்ளன?

3) இந்தியாவில் மொத்தம் எத்தனை மொழிகள்
உள்ளன?

4) உலகின் சர்க்கரைக் கிண்ணம் என்றழைப்படும்
நாடு எது?

5) தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் யார்?

6) அரண்மனை நகரம் என்றழைக்கப்படுவது எது?

7) குதிரைகளைப் பற்றிய படிப்பிற்குப் பெயர் என்ன?

8) டால்பின் மூக்கு என்றழைக்கப்படும் இந்தியத் துறைமுகம் எது?

9) ராஜகனி என்று அழைக்கப்படும் கனி எது?

10) அக்பர் வெளியிட்ட தங்க நாணயத்தின் பெயர் என்ன?

————————————-

விடைகள்
1- செட்னா
2- 12 ஜோடிகள்
3- 1652 மொழிகள்
4- கியூபா
5- ஜோதி வெங்கடாசலம்
6- கொல்கத்தா
7- ஹிப்பாலஜி
8- விசாகபட்டினம்
9- எலுமிச்சம்பழம்
10- மொஹர்

அதிகாலையில் கண் விழிக்க..வார நாட்களில் நாம் அன்றாடப் பணிகளை முடித்து விட்டு இரவு படுக்கைக்குப் போகும் போது ஒவ்வொருவரும் நினைப்பது அதிகாலை விரைவாக எழுந்து அடுத்த நாளை நன்றாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான்.

இன்று போல லேட்டாக எழுந்து அவசர அவசரமாக வேலைகளை செய்து அலுவலகத்துக்கும் தாமதமாக சென்று சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று தான் ஒவ்வொரு நாள் இரவிலும் பலரும் எடுக்கும் தீர்மானமாகும்.

ஆனால், விடியும் போது அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் எப்போதும் போல அடித்த அலாரத்தை அணைத்துவிட்டு போர்வைக்குள் புகுந்து கொள்ளும் பலருக்கும் எழும் கேள்வி… சே அதிகாலையில் கண் விழிக்க என்னதான் செய்ய வேண்டும் என்பதுதான்.

அப்படி மண்டை பிய்த்துக் கொள்பவர்களுக்கு, நமக்குத் தெரிந்த சில விஷயங்களைச் சொல்லலாமே என்றுதான்..

மூளைக்குச் சொல்லுங்கள்

நாம் அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும் என்று நாம் எடுத்த திடமான தீர்மானத்தை நமது மூளையிடம் சொல்ல வேண்டும். ஏன் என்றால், நமது மூளையை விட உலகில் வேறொரு அலாரமே இல்லை என்பதுதான். நமது மூளையிடம் இதனைக் கூறிவிட்டால் அது உரிய நேரத்தில் ஹார்மோன்களை சுரந்து அலாரம் அடிக்கும் முன்பே நம்மை அடித்து எழுப்பி விடும் என்பதுதான்.

அதாவது, குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திரிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தோடு படுப்பவர்களுக்கு அந்த நேரத்துக்கு முன்பாகவே ஹார்மோன்கள் சுரந்து உடலுக்கு ஒரு வித அழுத்தத்தைக் கொடுத்து எழுப்புகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே போல, எந்த நிர்பந்தமும் இல்லாமல் படுக்கைக்குப் போகும் நபர்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பதே இல்லையாம்.

சூரிய ஒளியும் எழுப்பும்

உங்கள் படுக்கை அறை, சூரிய ஒளி ஊடுருவும் வகையில் அமைக்கப்பட்டால் விடிந்ததுமே நீங்கள் எழுந்திரிக்க முடியும். அதாவது, காலையில் விடிந்ததும் சூரியன் உதயமாகும் போது அதன் ஒளி அல்லது விடியும் போது அந்த வெளிச்சம் உங்கள் அறைக்குள் வந்தால், உங்களது உறக்கம் கலைந்து உங்களால் எளிதாக எழும்ப முடியும். அதற்கும் மனித உடலில் சுரக்கும் ஹார்மோன் தான் காரணம்.

அப்போ அப்போ மாத்திக்காதீங்க..


தினமும் ஒரே நாளில் எழுவதை வழக்கமாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்காக 10 மணி அலுவலகத்துக்கு 8 மணிக்குத்தான் எழுந்திருப்பேன் என்று தினமும் ஒரே நேரத்தில் எழுந்தால் அது வேலைக்கு ஆகாது. எனவே, தினமும் காலை 6 மணிக்கு எழுந்திரிக்கும் பழக்கத்தைக் கைக்கொண்டால் உங்களுக்கு எந்த அலாரமும் தேவைப்படாது. உங்கள் உடல் இயக்கமே 6 மணிக்கு உங்களை எழுப்பிவிடும். அதே சமயம் வார இறுதி நாளில் கும்பகர்ணனோடு போட்டி போடுவதால் இந்த உடல் இயக்கம் பாதிக்கப்படும். மீண்டும் நீங்கள் உங்கள் அலாரத்தை தூசி தட்டி பேட்டரி போட வேண்டி இருக்கும்.
[b]
அலாரத்தின் ஒலியும் அவசிய
ம்[/b]

எந்த ப்ராக்டீசும் எனக்கு ஒத்தே வராதுங்க.. அலாரம்தான் ஒரே வழி என்று சொல்வகர்களுக்கு ஒரு டிப்ஸ். பொதுவாகவே அலாரத்தின் ஒலி மிகவும் முக்கியம். உறங்கிக் கொண்டிருப்பவர்களை மெதுவாக தட்டி எழுப்பும் வகையில்தான் இந்த அலாரத்தின் ஒலி இருக்க வேண்டுமே தவிர, பட்டாசு வெடிப்பதை போல இருக்கக் கூடாது.

மேலும், அலாரத்தின் ஒலியைக் கேட்டு மெதுவாக எழுந்து அதனை அணைக்கும் போது உறக்கம் கலைவதுதான் நல்ல வழியாம். நம்ம செல்போன்ல வைத்திருக்கும் அய்யோ அம்மான்னு கத்துற ரிங்க் டோன்லாம் வச்சா தூக்கம் சரியா கலையாதாம். இப்போ தெரியுதா.. நாம ஏன் பாத்ரூம்ல பல் தேய்க்கும் போதும் தூங்கி வழியிறோம்னு…

எழுந்து ஓட வேண்டாம்

தூங்கி எழுந்ததுமே அலறி அடித்துக் கொண்டு வேலைகளை செய்ய ஓடக் கூடாது. உடல் உறக்கத்தில் இருக்கும் போது நமது ரத்த ஓட்டத்தின் வேகம் மாறுபடும். எனவே எழுந்து சில நிமிடங்கள் உட்கார்ந்து நிதானம் அடைந்தபிறகு எழுந்து செல்லலாம். அப்படி உட்கார்ந்தால் சாமியாடியே மீண்டும் கட்டிலுக்கு போய் விடுவேன். அப்புறம் என்னை எழுப்ப யாராலும் முடியாதுன்னு சொல்லுறவங்க இத செஞ்சிப் பார்க்க வேண்டாம்.

காற்றோட்டமாக உறங்கினால்..


இரவில் காற்றோட்டமான இடத்தில் உறங்கினால் காலையில் விரைவாக எழுந்திரிக்க முடியும். இல்லை என்றால், இரவு முழுவதும் சரியான உறக்கம் இல்லாமல் அவதிப்பட்டால் காலையில் கண்விழிக்க இயலாமல் அவதிப்படுவோம்.

எனவே, காலையில் வழக்கமாக எழுந்திரிக்கும் நேரத்தை விட முன்கூட்டியே எழுந்து, அன்றாடப் பணிகளை அழகாக செய்துவிட்டு பள்ளி, கல்லூரி, வேலைக்கு விரைவாக செல்ல வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் மேற்கண்ட ஏதேனும் ஒன்றை முயற்சித்துப் பாருங்கள்.

—————————————–
நன்றி: மகளிர் மணி

« Older entries Newer entries »