
உங்களுக்கு தெரியுமா…
* அடிக்கடி சிரிப்பவர்கள், வாழ்க்கையில்
தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாய் வலம் வருவர்
* எதிராளி சிரிக்கும்போது, தன்னுடைய பேச்சைத் துவக்கி,
தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறன் பெற்றிருப்பர்
* போனில் சிரித்தபடியே பேசிப் பாருங்கள், உரையாடல்
நீண்டபடியே போகும்
* உங்கள் கண்களை பிரகாசிக்க செய்யும், சிரிப்பு.
ஆத்மாவுக்கு புத்துணர்வு தருவதுடன், மூளையையும் துாண்டி
விட்டு செயல்பட வைக்கும்
* ஒருவரின் சிரிப்பை, 300 அடி துாரத்தில் இருந்து உணர முடியும்
* ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும், 53 முக்கிய தசைகள்
முகத்தில் இயங்குகிறது
* சிம்பன்சி குரங்குகளுக்கு, மனிதர்கள் போல் சிரிக்கவும்,
புன்னகை செய்யவும் தெரியும்.
நீங்கள் சிரியுங்கள். குறைந்தது, 50 சதவீதத்தினராவது பதிலுக்கு
சிரிப்பர். சிரிப்பில், 19 விதம் உண்டு. இவை சமூக சூழல் மற்றும்
தனி சூழல் என, இரு வகைப்படும். சமூக சூழலில் சிரிக்கும்போது,
சில சதைகள் இயங்குகின்றன.
அதுவே தனியாக சிரிக்கும்போது, நம் முகத்தின் இருபுறமும்
உள்ள சதைகள் அனைத்தும் அசைகின்றன.
மொத்ததில், சிரிப்பது மூளைக்கு புத்துணர்வு தரும்,
ஆன்மாவுக்கு நல்லது. மன மகிழ்ச்சிக்கு, ‘டானிக்!’
புரிஞ்சுக்குங்க, செயல்படுத்துங்க!
–
————————
—ராஜி ராதா
வாரமலர்