குழந்தையைப் புரிந்து கொள்!

பாட்டு பாடும் அரிய வகை நாய்: இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு!

பாட்டு பாடும் அரிய வகை நாய்: இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு! Tamil_News_large_2605574


ஜாகார்த்தா:
இந்தோனேசியாவில் உள்ள பப்புவா நியூ கினி காடுகளில்,
பாட்டு பாடும் அரிய வகை நாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாய் என்றாலே குரைத்து ஊரைக் கூட்டும் எனக் கருதப்படும்
நிலையில், இந்த அரியவகை பாடும் நாய் கண்டறியப்
பட்டுள்ளது அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.

உலகிலேயே இந்த ரக நாய்கள் 200 தான் உள்ளன.
அவையும் உயிரியல் பூங்காக்களில் பராமரிக்கப்பட்டு
வருகின்றன. இந்நிலையில் புதிதாக பப்புவா நியூகினியில்
உள்ள காடுகளில் இந்த நாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நரிகள் போல நாய்களும் ஊளையிடும். ஆனால் அனைத்து
நாய்களும் இனிமையாக ஊளை இடாது. கேட்பதற்கு நாராசமாக
இருக்கும். ஆனால் இந்த வகை நாய் ஹைபிச்சில் ஸ்ருதி
சுத்தமாக ஊளை இடுமாம்.

இதைக் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். ‘பாடுவதற்கான
பிரத்யேக குரல்வளை மற்றும் நரம்பு மண்டலம் இந்த நாய்க்கு
உள்ளது’ என, வன விலங்கு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 1970களில் அதிக அளவில் காணப்பட்ட இந்த நாய்
கடந்த 50 வருடங்களாக முற்றிலும் அழிவை நோக்கிச் சென்றது.
பப்புவா நியூ கினி நாட்டில் கிராஸ்பக் தங்க மற்றும் செம்பு
சுரங்கத்தின் அருகே உள்ள காடுகளில் இந்த வகை நாய்கள்
இருப்பது 2016ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

பெரும்பாலும் காட்டில் வாழும் இந்த நாய்கள் ஜி.பி.எஸ்.,
உதவியுடன் எங்கு வாழ்கிறது என விஞ்ஞானிகளால் கண்டறியப்
பட்டது. தற்போது இந்த நாய் பாடும் வீடியோ யூ டியூப் உள்ளிட்ட
சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமலர்

வீட்டுக்குறிப்பு!

 • முகம் பார்க்கும் கண்ணாடியை தேயிலையால்
  துடைத்தால், அழுக்கு நீங்கி, பளபளவென்று இருக்கும்
 • ஊசியில் நுால் கோர்க்க சிரமமாக இருந்தால்,
  நுாலின் நுனியில் சோப்பை கொஞ்சம் தடவி கோர்த்தால்,
  சுலபமாக கோர்க்க முடியும்
 • துணி தைப்பதற்கு உபயோகிக்கும் ஊசியை,
  ஒரு சிறு கம்பளி துண்டில் குத்தி வைத்தால், துரு

பிடிக்காமல் இருக்கும்.

வாரமலர்

செடி கொடி பீன்ஸ்!

பீன்ஸ் மகத்துவமான தாவர வகை.
அதன் காயில் அவ்வளவு சத்துகள் அடங்கியுள்ளன.

பேப்பேசி என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.
அறிவியல் பெயர், பேசில்லஸ் வல்கரிஸ்.

செடியாகவும் வளரும்; கொடியில் விளையும் பீன்ஸ்
வகையும் உண்டு.

புதிய பீன்ஸ் குறைந்த அளவு கலோரி தரக்கூடியது.
வைட்டமின், தாது சத்துக்கள் நிறைந்தது. நார்சத்தும்
அதிகம். பெருங்குடலுக்கு நோய் எதிப்பு தன்மையைத்
தருகிறது.

ரத்ததில் கொழுப்பு அளவையும் குறைக்கும்.
புற ஊதாக்கதிர் வீச்சில் இருந்து, கண் ரெட்டினாவைக்
காக்கும்.

இரும்பு, கால்சியம், மெக்னீஷியம், மாங்கனீஷ்,
பொட்டாஷியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
இவை, உடல் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும்
அவசியமானது.

பீன்சில், பொரியல், கூட்டு செய்து சாப்பிடலாம்
கேரட், காலிபிளவர், தக்காளி போன்ற காய்கறிகளுடன்
சேர்த்து சமைக்கலாம். சீஸ், விதைகள், காளானுடன்
சேர்த்து விதவிதமாக சமைக்கலாம்.

சாலட், வெஜிடபிள் பிரியாணி, நூடுல்ஸ் உணவுகளில்,
பீன்ஸ் பிரதானமாக சேரும். ஆரோக்கியமாக வாழ,

பிரியத்துடன் சாப்பிடுவோம் பீன்ஸ்.

————————அதிமேதாவி அங்குராசு!
சிறுவர் மலர்

தர்பூசணி!

தர்பூசணி!
தென் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகம் முழுவதும்
பரவியுள்ளது தர்பூசணி. அதன் ருசியால், பலநாட்டு
மக்களின் அன்றாட உணவில் முக்கியத்துவம் பெற்று
விட்டது.

மஞ்சள், ஆரஞ்சு நிறங்களில், 1,200 ரக தர்பூசணிகள்
உள்ளன. விதையற்ற ரகங்களும் உண்டு.

ஆசிய நாடான ஜப்பானில், சதுரம், முக்கோணம் என,
ரசனைக்கு ஏற்ப பல வடிவங்களில் விளைவித்து அறுவடை
செய்கின்றனர் விவசாயிகள். அது மட்டுமல்ல; ஆசிய
நாடுகளான சீனா, ஜப்பானில், விருந்தாளிகள் கொண்டு
வரும் மதிப்புமிக்க வெகுமதிகளில் முதலிடத்தை
பிடித்துள்ளது.

பழத்தில் கனிந்த சிவப்பு பகுதியை சாப்பிட்டு, தோலை
குப்பையில் வீசி விடுகிறோம். சீனர்கள், இந்த பழத்தின்
எந்த பகுதியையும் வீணாக்குவதில்லை. வெள்ளை நிறத்தில்
கெட்டியான சதைப் பகுதியையும் பயன்படுத்துகின்றனர்.

அதைக் கொண்டு வறுவல், சட்னி, பச்சடி, ஊறுகாய் என
உணவுகளை தயாரிக்கின்றனர்.

கொழுப்பும், புரதமும் அதிகமாக உள்ள இதன் விதைகளை
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வறுத்து, ஸ்நாக்ஸ் போல்
சாப்பிடுகின்றனர். பொடியாக்கியும் உணவு வகைகளில்
சேர்க்கின்றனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்னாம் மக்கள் புத்தாண்டு
தினத்தன்று இந்த விதைகளில் செய்த பலகார உணவுகளை
தவறாமல் சாப்பிடுகின்றனர். விதையிலிருந்து எண்ணெய்
எடுத்தும் பயன்படுத்துகின்றனர்.

அதற்காக, பிரத்யேகமான தர்பூசணி ரகங்களை பயிரிடவும்
செய்கின்றனர்.

தர்பூசணியில் அதிகமாக, ‘சிட்ரூலின்’ என்ற பொருள் உள்ளது.
இது மற்ற என்சைம்களுடன் கலந்து ரசாயன மாறுதல் அடைந்து,
‘ஆர்ஜினைன்’ என்ற அமிலமாக மாறுகிறது. இது இதயத்தின்
இயங்கு திறனை மேம்படுத்துகிறது; நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கிறது.

உடல் பருமனால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு நன்மை
செய்கிறது. இதில் உள்ள, ‘லைகோபீன்’ என்ற நுண்பொருள்,
இதயத்தையும், சருமத்தையும் பாதுகாப்பதோடு, உடல்
கொழுப்பையும் கரைக்கும்.

வைட்டமின் – சி, மிகுதியாக இருப்பதால் ஆஸ்துமா போன்ற
நோய்கள் வராமல் தடுக்கிறது. ஒரு காலத்தில், குறிப்பிட்ட
பருவத்தில் மட்டுமே விளைந்தது. இப்போது, ஆண்டு முழுவதும்

கிடைக்கிறது.


அதிமேதாவி அங்குராசு!
சிறுவர் மலர்

ஒரு நிமிடத்தில் நடப்பவை…!

ஒரு நிமிஷம்

வெற்றியின் ரகசியம்

Manithatheni's activities: தினத்தந்தி இளைஞர் ...
Manithatheni's activities: தினத்தந்தி - இளைஞர் ...
Manithatheni's activities: தினத்தந்தி இளைஞர் ...

சேதி புதுசா இருக்கே..!

முள்முடி வேந்தன்!

முள்முடி வேந்தன்! Z4a0QZryT7qYuGUvwpO1+safety

பயிர்களைக் காக்க, வேலி போடும் வழக்கம்,
பழங்காலத்திலிருந்தே கடைபிடிக்கப்படுகிறது.

துவக்கத்தில் முள்செடிகளை நட்டு வளர்ப்பது வழக்கம்.
பெரிய குடியிருப்புகளை பாதுகாக்க கூட, முள்செடி
வேலி தான் இருந்தது. இரும்பு கம்பிகளால் வேலி
அமைக்கும் வழக்கம் சமீபத்தில் தான் அறிமுகமானது.

முள்கம்பி வேலி அமைக்கும் முறையை கண்டறிந்தவர்,
அமெரிக்கா, இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த
ஜோசப் கிளீட்டன். இதற்காக, 1873ல் ஓர் இயந்திரத்தை
உருவாக்கினார்.

இது, முள்கம்பி வேலியை மிகவும் மலிவாக தயாரித்தது.
அமெரிக்க கால்நடைப் பண்ணைகளுக்கு முள்கம்பி வேலி
பெருமளவு தேவைப்பட்டது. துவக்கத்தில் அதை பூர்த்தி
செய்தது இவரது தயாரிப்பு.
முதல் உலகப்போரில், இதன் தேவை அதிகமானது.

உலகம் முழுக்க, கம்பி வேலி பரந்து விரிந்திருக்கிறது.
மதில் எழுப்பும் வேலைப்பளு, செலவை குறைத்து,
எளிமையாக உதவுகிறது முள்கம்பி வேலி அமைப்பு.

———————————
– என்றென்றும் அன்புடன், அங்குராசு.
வாரமலர்

« Older entries