-நம் தோழி
பல்லைக் காக்கும் படலம்!
பிப்ரவரி 6, 2020 இல் 5:57 பிப (Uncategorized)
Tags: பொதுவாவை

ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்,
பற்கள் சொத்தையாவதை தடுக்க புதிய முறையை
உருவாக்கியுள்ளனர்.
பற்களின் மேலுள்ள இயற்கையான, ‘எனாமல்’ சிதைந்து
விட்டால், மீண்டும் உருவாகாது. செயற்கை இனிப்புகள்,
பல்லிடுக்கு உணவுத் துணுக்குகளால் வளரும் கிருமிகள்
எனாமலை பதம் பார்ப்பதால், பற்கள் சொத்தையாகின்றன.
நம் வாயில் ஊறும் எச்சிலில் உள்ள பல வேதிப் பொருட்கள்
பல் சொத்தையை தடுக்க வல்லவை. இருந்தாலும், அதையும்
மீறி, பாக்டீரியாக்களால் எனாமலை அரித்துவிட முடிகிறது.
எனவே, எச்சிலில் உள்ள, ‘எச்., 5’ என்ற பெப்டைடுகளை
மட்டும் எடுத்து, அதனுடன், பாஸ்போசெரீன் என்ற வேதிப்
பொருளை கலந்து, அசல் பற்களின் மேல் பூசி ஆராய்ந்தனர்,
ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள்.
அப்போது, அந்தக் கலவையால் பல் எனாமல் சிதைவதை
தடுக்க முடியாவிட்டாலும், பல்லின் மேல் பாக்டீரியா படலம்
உருவாவதை தடுத்து, பாக்டீரியாக்களை கொன்றன.
இதனால், எச்., 5 மற்றும் பாஸ்போசெரீன் கலவையை
ஜெல் வடிவில் தயாரித்து பல் துலக்கிய பின், அதை
பற்களின் மேல் படரும்படி செய்தால், பல் சொத்தை
உருவாகாமல், எனாமலுக்கு அரணாக இருக்கும் என,
ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
தினமலர்
பறவைகளை விரட்டும் லேசர் கதிர்!
செப்ரெம்பர் 16, 2019 இல் 7:34 பிப (Uncategorized)
Tags: பொதுவாவை

மக்காச்சோளம் போன்று உயர்ந்து வளர்ந்து கதிர்
விடும் பயிர்கள் என்றால், பறவைகளுக்கு படு குஷி.
ஆனால், அவற்றை விளைவிக்கும் விவசாயிகளுக்கு
பறவைகள் பெரிய தலைவலி.
இதற்கு தான் பல நுாற்றாண்டுகளாக சோளக் காட்டு
பொம்மை போன்றவை பறவைகளை விரட்ட பயன்
பட்டன. இருந்தாலும், பறவைகள் இது போன்ற
பொம்மைகள் ஆபத்தில்லாதவை என்பதை கண்டு
பிடித்து, தைரியமாக பயிர்களை சூரையாடுகின்றன.
பறவைகளை பொருத்து, பயிர்களை பொருத்து,
14 முதல், 75 சதவீதம் வரை சேதாரம் ஏற்படுவதாக
விஞ்ஞானிகள் மதிப்பிட்டுஉள்ளனர். இவ்வளவு
சேதத்தை குறைக்க, அமெரிக்காவிலுள்ள ரோட்
ஐலண்ட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், லேசர்
கதிர்களை பயன்படுத்த முடியும் என, கண்டறிந்து
உள்ளனர்.
பயிரின் மேல்மட்ட உயரத்திற்கு கம்பங்களை நட்டு,
அதில் லேசர் கருவியை பொருத்தி வைத்தனர்
விஞ்ஞானிகள். கம்பத்தில் லேசர் சாதனம், கலங்கரை
விளக்கம் போல சுழன்றபடியே இருக்கும். அதிலிருந்து
வெளிவரும் லேசர் துடிப்புகள், 600 அடி வரை வீரியமாக
வீசக் கூடியவை.
பறவைகள் தானியத்தை கொத்த வந்தால், சட்டென்று
லேசர் கதிரைப் பார்த்ததும் மிரண்டு, வேறு பக்கம்
வேகமாக பறந்து போய்விடுகின்றன.இதில் பயன்படுவது,
ஆபத்தில்லாத பச்சை நிற, எல்.இ.டி., லேசர்தான் என்பதால்,
சூரிய மின்சாரமே இக்கருவிக்கு போதுமானது.
ஏற்கனவே, அமெரிக்காவில் சோளக் கருது விளைவிக்கும்
விவசாயிகள், இக்கருவியை வாங்கி பொருத்த ஆரம்பித்து
விட்டனர்.
தினமலர்
சைவ தாவரப் பால்!
ஜூலை 31, 2019 இல் 6:39 முப (Uncategorized)
Tags: பொதுவாவை

மேற்குலகில் வயதான, ஆனால் வசதியானவர்கள் அதிகம்.
இவர்களுக்கு, வயது ஆக ஆக, பால் அருந்துவதில்
ஒவ்வாமை ஏற்படுகிறது.
தவிர, பாலில் இருக்கும் லாக்டோஸ், கொலஸ்ட்ரால்,
குளூட்டென் போன்றவை, பெரியவர்களுக்கு செரிமானம்
ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இவர்களுக்கென, தாவரங்களிலிலிருந்து எடுக்கப்படும்
புரதம் உள்ளிட்ட சத்துக்களை வைத்து, ‘சைவ’ப் பாலை
தயாரித்துள்ளனர், ‘பெரின்னியல்’ நிறுவனத்தின்
ஆராய்ச்சியாளர்கள்.
பாதாம், பட்டாணி, அரிசி மற்றும் சோயா ஆகிவற்றின்
புரதங்களை வைத்து, 2 சதவீத சத்துக்களைக் கொண்ட
பாக்கெட் பாலின் தோற்றம், ருசி, மணம் ஆகியவை
வரும் விதத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது பெரின்னியலின்
சத்து பானம்.
இதை பாலுக்கு மாற்றாக, 50க்கும் மேற்பட்ட வயதினர்
தினமும் பருகலாம் என்கின்றனர், பெரின்னியலின்
விஞ்ஞானிகள்.
மேலும், பெரின்னியலில் முதியோரின் ஜீரண சக்தி,
மூளைத் திறன், இதய நலன் ஆகியவற்றுக்கு உதவும்
சத்துக்களையும் சேர்த்திருப்பதால், பெரின்னியலின்
சைவத் தாவரப் பாலை, ஓய்வுக் காலத்தை ஆரோக்கியமாக,
சுறுசுறுப்பாக கழிக்க விரும்பும் பெரியவர்கள் வரவேற்பர்
என, விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
–
———————————–
தினமலர்
கடல் நீருக்குள் ராணுவ டாங்கிகள்: மெய்சிலிர்க்க வைக்கும் அருங்காட்சியகம்!
ஜூலை 27, 2019 இல் 5:42 பிப (Uncategorized)
Tags: பொதுவாவை

ஆக்குபா கடற்கரையில் அமைந்துள்ள முதலாவது நீருக்குள்
இருக்கும் ராணுவ அருங்காட்சியகத்தை ஜோர்டான்
திறந்துள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற இந்த திறப்பு விழாவில், டாங்கிகள்,
படை துருப்புகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும்
ஒரு ஹெலிகாப்டர் உள்பட நீரில் மூழ்கிய பல ராணுவ
வாகனங்களை ஜோர்டான் அரசு இந்த அருங்காட்சியகத்தில்
இடம்பெற செய்துள்ளது.
செங்கடலில் உள்ள பவள பாறைகளில் போர் புரிவது போன்ற
வடிவமைப்பில் இந்த வாகனங்கள் உள்ளன. இங்கு சுற்றுலா
வருவோருக்கு புதுவித அருங்காட்சியக அனுபவத்தை இந்த
காட்சிப்படுத்தல் வழங்குகிறது என்று உள்ளூர் அதிகாரிகள்
கூறினர்.
விளையாட்டு, சுற்றுச்சூழல் மற்றும் கண்காட்சி பொருட்களை
இதில் சேர்க்க போவதாக ஆக்குபா சிறப்பு பொருளாதார
மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.
–
—————————-
வெப்துனியா
நிழல் காந்தியின் நிஜ முகவரி
ஜூலை 23, 2019 இல் 9:14 முப (Uncategorized)
Tags: பொதுவாவை

காந்தியாகத் திரைப்படங்களில் நடிப்பவர் மட்டுமல்ல
காந்தி நெறிகளைப் பின்பற்றி வாழ்பவர் கனகராஜ்.
இது தவிர மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர் என பல
முகங்களுக்குச் சொந்தக்காரர்.
நிஜ வாழ்க்கையில் யார் இந்த கனகராஜ்?
அவரிடம் கேட்டோம்:
“நான் மதுரை அருகேயுள்ள அருப்புக்கோட்டை பகுதியைச்
சேர்ந்தவன். பொம்மக்கோட்டை என்ற கிராமம் தான் பிறந்து
வளர்ந்த ஊர். 3 வயதில் புத்தர் வேடமிட்டு நடித்தது தான்
மேடையேறிய முதல் அனுபவம்.
பள்ளியில் படிக்கும் போதே நாடகங்களில் நடித்த அனுபவம்
உண்டு. பள்ளிப்படிப்பை முடித்ததும், மதுரை அமெரிக்கன்
கல்லூரியில் பி.எஸ்சி படித்தேன். விடுதியில் தங்கி படித்தேன்.
அதனால் ஆண்டுதோறும் விடுதி நாள் வந்தால், மாணவர்கள்
சேர்ந்து நாடகம் தயாரித்து நடிப்போம்.
அப்போது கல்லூரியில் ஆண்டு விழா வந்தது. அதில்
பங்கேற்பதற்கு வாய்ப்புக் கேட்டேன். இல்லை என்று சொல்லி
விட்டார்கள். எனது நண்பர்களிடம் வந்து சொன்னேன்.
“உனக்கே வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்களா?
கவலைப்படாதே நாமே ஒரு நாடகம் போடலாம்’ என்றார்கள்.
1966-ஆம் ஆண்டு கலைஞரின் தாக்கம் அதிகம். கலைஞர்
எழுதிய “நச்சுக்கோப்பை’ நாடகத்தைப் போடுவது என முடிவு
செய்தோம். அதில் அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும்
நபர்கள் சரியாக இருந்தார்கள்.
சாந்தா என்ற பெண் கதாபாத்திரத்துக்கு மட்டும் ஆள் இல்லை.
உடனே என்னை பெண் வேடமிட்டு நடிக்கச் சொன்னார்கள்.
சரி, என்று நடித்தேன். அனைத்து தரப்பில் இருந்தும்
பாராட்டுகள் குவிந்தன. பேராசிரியர்களே என்னுடன் போட்டோ
எடுக்க போட்டி போட்டனர்.
அதனைத் தொடர்ந்து கண்ணதாசன் தலைமையேற்ற
நாடகத்திலும் பெண் வேடத்தில் நடித்தேன். அவரும் என்னைப்
பாராட்டினார்.
படிப்பை முடித்ததும் சினிமாவில் இயக்குநராகவோ,
கவிஞராகவோ ஆக வேண்டும் என்று ஆசைபட்டேன்.
நடிகராக ஆர்வமில்லை. ஆனால் வாழ்வாதாரம் வேண்டுமே.
சென்னைக்கு வந்தேன். மருத்துவ பிரதிநிதியாக
பணியாற்றினேன்.
ஆங்கிலம் சரளமாக பேச கற்றுக் கொண்டேன். இயக்குநர்
ஒருவரின் நட்பு கிடைத்தது. 10 ஆண்டுகள் மருத்துவ பிரநிதியாக
பணியாற்றிய என்னை வேறு இடத்திற்கு மாறுதல் செய்வது
என முடிவு எடுத்தார்கள்.
வேலையை விட்டுவிட்டேன். “ஹிக்கின்பாதம்ஸ்’ நிறுவனத்தில்
பணியாற்றினேன். ஆனால் சினிமாவிற்குள் நுழைந்து விட
வேண்டும் என்ற முயற்சி ஒருபுறம் தொடர்ந்து கொண்டே
இருந்தது.


அப்போது பிரபலமான செய்தி வாசிப்பாளரான
ஷோபனா ரவியின் மாமனார் பேராசிரியர் விஸ்வம்,
வீடியோ நாடகம் எடுத்தார். அதில் நடித்தேன். மேலும்
ரகு என்பவர் ஆண்டு தோறும் நாரத கான சபாவில்
நாடக விழா நடத்துவார்.
அதில், காசி நாத சாஸ்திரி வேடம் கொடுத்து நடிக்கச்
சொன்னார். இதற்கிடையே என்னோடு நட்பாக இருந்த
இயக்குநர் மரணமடைந்துவிட்டார். கவிஞர்
கண்ணதாசனும் இறந்துவிட்டார். எப்படியும் கவிஞர்
ஆகிவிட வேண்டும் என்ற ஆசை உண்டானது. ஆனால்,
இன்று வரை கவிஞர் ஆகும் வாய்ப்புக் கிட்டவில்லை.
ஆனால் நடிப்பதற்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்புகள்
கிடைத்தன.
ராடான் நிறுவனம் தயாரித்த “சித்தி’, “சின்னப் பாப்பா,
பெரியபாப்பா’ தொடர்களில் நடித்தேன். அதனைத்
தொடர்ந்து நண்பர் ஒருவர் ரமணா கம்யூனிகேசன்ஸ்
நிறுவனத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.
என்னைப் பார்த்த இயக்குநர் பாலகிருஷ்ணன் “நீங்கள்
காந்தி வேடத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பீர்கள்’
என்றார். அவர் இயக்கிய காமராஜர் படத்தில் என்னை
காந்தியாக நடிக்க வைத்தார். அடுத்து “முதல்வர் மகாத்மா’
படம் எடுத்தார். இதில் அனுபம்கேர் உடன் நடிக்கும்
வாய்ப்புக் கிடைத்தது.
காந்தியாக நடிக்க ஆரம்பித்த பிறகு காந்தி பற்றித் தெரிந்து
கொள்ளும்படி, இயக்குநர் பாலகிருஷ்ணன் சொன்னார்.
அதனால் காந்தி பற்றிப் படிக்க ஆரம்பித்தேன். அவருடைய
வாழ்க்கை, கொள்கை பற்றி முழுமையாகத் தெரிந்து
கொண்டேன். இன்றும் உலகம் ஏராளமானப் பிரச்னைகளில்
சிக்கி கிடக்கிறது. இதற்கு காந்திய வழியில் நிச்சயம் தீர்வு
காண முடியும்.
தற்போது நண்பர்களோடு இணைந்து “உன்னத இந்தியா
இயக்கத்தை’ ஆரம்பித்துள்ளோம். அப்துல்கலாமும், காந்தியும்
சொன்ன விஷயங்களை மக்களுக்குப் பயன்படும்படி செய்ய
வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்.
தூய்மை இந்தியா, பசுமை இந்தியா, ஆரோக்கிய இந்தியா,
வளமான இந்தியா, அமைதி இந்தியா உருவாக முயற்சி
எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்த அமைப்பை நடத்துவற்கு யாரிடமும் நன்கொடை
கேட்பதில்லை. அடுக்குமாடி குடியிருப்பு, பள்ளிகளில்
கிடைக்கும் பயன்படுத்த முடியாத பொருட்களை மறு சுழற்சி
செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இந்த
அமைப்பு செயல்பட்டு வருகிறது.
என்னுடைய அப்பா ஆசிரியர். அம்மா இல்லத்தரசி. எங்கள்
ஊரில் சுதந்திர போராட்ட வீரர்கள் அதிகம். நாட்டு பற்றுள்ள
மண். என்னுடைய அம்மா நிறையப் புத்தகங்கள் படிப்பார்.
அப்போது சொல்வார் “என்னுடைய குழந்தைகள் பெரிய
பணக்காரனாக வரணும்னு ஆசைப்படல. காந்தி மாதிரி
விவேகானந்தர் மாதிரி வரணும்’ என்பார்.
அவருடைய ஆசையை நான் நிறைவேற்றி இருக்கிறேன்
என நினைக்கிறேன் என்று சொல்லும், கனகராஜின்
கண்களில் நீர் கோர்க்கிறது.
நான் அதிகம் பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால், நல்ல
மனங்களில் இடம் பிடித்து இருக்கிறேன். இதுவே காந்தி
தந்த பரிசு என்கிறார் “நிழல் காந்தி’யான கனகராஜ்!
–
————————
– வனராஜன்
நன்றி- தினமணி
பொது அறிவு தகவல்கள்
திசெம்பர் 28, 2014 இல் 8:18 முப (Uncategorized)
Tags: பொதுவாவை
–
செல்லப் பிராணிகளுடன் அதிக நேரம் சேர்ந்து
உறங்கும் பழக்கம் உள்ள குழந்தைகள், தன்னம்பிக்கை
குறையோடு வளர்வதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
காரணம், எப்போதும் ஒரு துணையுடனே இருப்பதாலும்
தனிமையில் இருக்க நேர்ந்தால் பயம் ஏற்படுகின்றதாம்..!
–
——————————————–
–
ரோமப் பேரரசின் பஞ்சாங்கப்படி, இரண்டாவது மாதமாக
இருந்த ஏப்ரல், ஜூலியஸ் சீஸர் காலத்தில் புதிய
பஞ்சாங்கத்தைக் கணித்த போது, நான்காவது மாதமாக
மாற்றப்படது.
–
——————————————
–
சிங்கபூர் தபால் நிலையங்களில் முத்திரை பதிக்கும்போது
am, pm என்று தபாலில் முத்திரை இடும் நேரத்தையும்
குறிப்பிடுவார்கள்
–
——————————————
–
பட்டின் பாரம்பரியம் – கே.நந்தினி
நவம்பர் 1, 2014 இல் 7:17 முப (Uncategorized)
Tags: பொதுவாவை