நின்னையே ரதியென்று

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடிகண்ணம்மா
தன்னையே சசியென்று சரணம் எய்தினேன்
(
நின்னையே)

பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே
கண்ணம்மா

மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீசநீ
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
(
நின்னையே)

வரிகள்: சுப்ரமணிய பாரதியார்
படம்: கண்ணே கனியமுதே

காற்று வெளியிடைக் கண்ணம்மா

காற்று வெளியிடைக் கண்ணம்மாநின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் -அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும்நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும்பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும்இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்எனை
வேற்று நினைவின்றித் தேற்றியேஇங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
(
காற்று)

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன்துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலேஎன்றன்

வாயினிலே அமு தூறுதேகண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா ம்ம்ம்
கண்ணம்மா ம்ம்ம்கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலேஉயிர்த்
தீயினிலே வளர் சோதியேஎன்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக்
(
காற்று)

படம்: கப்பலோட்டிய தமிழன்
வரிகள்: பாரதியார்

 

காதல்

மகாகவி பாரதியார் காதலைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.
காதலினாலுயிர் வாழும் – இங்கு
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவுண்டாகும் – இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்
ஆதலினால் அவள் கையைப் – பற்றி
அற்புதம் என்றிரு கண்ணிடை ஒற்றி
வேதனை இன்றி இருந்தேன்……..


(காதற்பாட்டு, அந்திப்பொழுது –
பாரதியார் பாடல்கள்
)