அவன் இவன் : ஒரு பக்க கதை

 அவன் இவன் : ஒரு பக்க கதை 29

ஒரு வருடத்துக்கு முன் வேலைக்காக துபாய் சென்ற
செந்தில், இப்போதுதான் பத்து நாள் விடுமுறை
கிடைத்து வீட்டுக்கு வந்திருந்தான். வீடே உற்சாக
வெள்ளத்தில் நனைந்து கொண்டிருந்தது.

அன்று மாலை.
செந்தில் துபாயிலிருந்து வாங்கி வந்த விலையுயர்ந்த
உடைகளை அவன் மனைவி ராகினியும், மகன்
ஹரீஷும் ஆசையாக அணிந்துகொண்டார்கள்.

ஷாப்பிங் மாலில் விதம்விதமான விளையாட்டுகளில்
ஹரீஷ் கொட்டமடித்த பிறகு எல்லோரும் சினிமாவுக்குப்
போனார்கள்.

வீடு திரும்பும்போது அந்த உயர்தர ஹோட்டலில்
சாப்பிட அமர்ந்தார்கள். சர்வர் சாம்பார் கிண்ணத்தை
டேபிளில் வைக்கும்போது, கை தவறி ராகினியின்
புடவையில் கொஞ்சம் சிந்திவிட்டது.

அவ்வளவுதான்… ராகினி டென்ஷனாகி விட்டாள்.
‘‘ராஸ்கல்… இந்தப் புடவையோட விலை தெரியுமா?
எங்க வாங்கினதுன்னு தெரியுமா? இப்படிப்
பொறுப்பில்லாம சாம்பாரைக் கொட்டி… ச்சே, ஒழுங்கா
பரிமாறத் தெரியாதவனை எல்லாம் வேலைக்கு வச்சி
என்ன ஹோட்டல் நடத்தறாங்க? கூப்பிடுய்யா உங்க
மேனேஜரை!’’ என்று சீறினாள்.

‘‘இப்படி கை தவறுவது சகஜம். வாஷ் பண்ணா கறை
போயிடும். இதுக்குப் போய் ஏன் டென்ஷனாகி அவரைத்
திட்றே ராகி!’’ என்றான், துபாயின் நட்சத்திர
ஹோட்டலில் சர்வராக வேலை பார்க்கும் செந்தில்.

—————————
ப்ரபு பாலா
நன்றி-குங்குமம்

சுப்ரமணி – நகைச்சுவை

கல் வச்ச மாம்பழம் வேணுமாம்…!

கீழ்த்தட்டுல தண்ணியை நிக்க வச்சிட்டு
ஃபேன் போட்டுகிட்டா ஜிலுஜிலுன்னு காத்து வரும் சார்..!

தலைவரோட நாற்காலிக்கு ஏழு கால் இருகுகே…!!

உங்களோடு என்னால் ஒரு நிமிஷம் கூட சேர்ந்து வாழ முடியாது. ….

உங்களோடு என்னால் ஒரு நிமிஷம் கூட சேர்ந்து
வாழ முடியாது. தற்கொலை செஞ்சுக்கப் போறேன்…!

அந்த நிமிஷமே நானும் இறந்திடுவேன்..!

நீங்க ஏன் சாகணும்?

அதிக சந்தோஷம் அடையற செய்தி கேட்டா, எனக்கு
ஹார்ட் அட்டாக் வந்திடும்னு டாக்டர் சொல்லியிருக்கிறார்!

சி.பன்னீர்செல்வம்

——————————————————

தெற்கே இலங்கை கடல் படை தாக்குது.
வடக்கே ஆந்திரா போலீஸ் சுடுது.
கர்நாடகாவும் நமக்கு தண்ணீர் இல்லேன்னு
சொல்லி தவிக்க விடுறாங்க.
கேரளாவுல நாம் உழைப்புக்கேத்த கூலி கேட்டா
விரட்டுறாங்க…
அப்படின்னா நாம யாருங்க..?

தமிழன்டா…!

சாந்தஷீலா

—————————————————-

டாக்டர், இதய நோய்க்கு ஆபரேஷன் செய்ய வெடி
வைக்கப் போகிறாராம்…

ஏன்?

பேஷன்டோட இதயம் பாறாங்கல்லாம்…!

சி.பன்னீர்செல்வன்

————————————————–

அடிக்கடி பாகிஸ்தான் எல்லை தாண்டி வந்து
நம்பள சுடுதே..
நம்ம நாடு என்னங்க பண்ணுது..?

நம் நாடுதான் கண்டன அறிக்கை விடுதுல்ல…!

சாந்தஷீலா

————————————————-

காதலனைக் குரங்கு என்று கூறும் சுதந்திரம்..

புலியின் ஒலி கேட்ட குரங்கு எப்படித் (தன் மந்தியை விட்டுவிட்டுத்)
தான் மட்டும் தப்பி ஓடுமோ, அதுமாதிரி,
(என்னை விட்டுப் போய்விடாதே என்ற) என்னுடைய புலம்பலைக்
கேட்டதும் (தப்பி) ஓடிப்போய்விட்டாயே, என்கிறாள், காதலி
 –
காதலனைக் குரங்கு என்று கூறும் சுதந்திரம்
அந்த நாளிலும் இருந்திருக்கிறது பாருங்கள்!
என்னே நம் தமிழ்ப் பண்பாடு!
 –
மந்திக் கணவன் கல்லாக் கடுவன்
ஒண்கேழ் வயப்புலி குழுமலின் விரைந்துடன்
குன்றுயர் அடுக்கங் கொள்ளு நாடன்
சென்றனன் வாழி தோழியென்
மென்தோள் கவினும் பாயலும் கொண்டே. (274)

கிரீடம் இருக்கு, ப்ரீடம் இல்லை….!!


எனக்கு புகழ்ச்சி பிடிக்காது புலவரே…!

பரவாயில்லை மன்னா…நான் வந்தஅதற்கு சாமரம்
வீசும் பெண்களையாவது புகழ்ந்து பாடிவிட்டுச்
செல்கிறேன்…!

———————————————-

பெண் பார்க்க வந்தவங்க ஃபேஸ்புக்ல இருக்காங்கன்னு
எப்படி சொல்றே..?

போய் லெட்டர் போடுறோம்னு சொல்லாம, ஸ்டேட்டஸ்
போடுறோம்னு சொன்னாங்களே…!

—————————————————

தலைவருக்கு பேரன் மேல பாசம் அதிகம்….!

அதுக்காக பேரனன்புமிக்க தலைவர் அவர்களே’னு
சொல்லிட்டு பேச ஆரம்பிக்கணுமா…!

———————————————-

என்ன…அந்த வக்கீலுக்கு இதுதான் முதல் கேஸா..?

ஏன் கேட்கறீங்க?

கனம் கோர்ட்டார் அவர்களே…ஒல்லி பிராசிக்யூட்டர்
அவர்களே’னு வாதத்தை ஆரம்பிக்கிறாரே…!

———————————————-

அந்தப்புரத்தில் நுழைய மன்னருக்கு மகாராணியார்
தடை  விதிதுத்துள்ளாராம்…!

ஓ,,,அதான் நம் மன்னர் கிரீடர் இருக்கு, ப்ரீடம் இல்லை’னு
பன்ச் டயலாக் பேசிக்கிட்டு திரியறாரா..?

———————————————-
நன்றி: ஆனந்த விகடன்


எனக்கு புகழ்ச்சி பிடிக்காது புலவரே…!

பரவாயில்லை மன்னா…நான் வந்ததற்கு சாமரம்
வீசும் பெண்களையாவது புகழ்ந்து பாடிவிட்டுச்
செல்கிறேன்…!

———————————————-

பெண் பார்க்க வந்தவங்க ஃபேஸ்புக்ல இருக்காங்கன்னு
எப்படி சொல்றே..?

போய் லெட்டர் போடுறோம்னு சொல்லாம, ஸ்டேட்டஸ்
போடுறோம்னு சொன்னாங்களே…!

—————————————————

தலைவருக்கு பேரன் மேல பாசம் அதிகம்….!

அதுக்காக பேரனன்புமிக்க தலைவர் அவர்களே’னு
சொல்லிட்டு பேச ஆரம்பிக்கணுமா…!

———————————————-

என்ன…அந்த வக்கீலுக்கு இதுதான் முதல் கேஸா..?

ஏன் கேட்கறீங்க?

கனம் கோர்ட்டார் அவர்களே…ஒல்லி பிராசிக்யூட்டர்
அவர்களே’னு வாதத்தை ஆரம்பிக்கிறாரே…!

———————————————-

அந்தப்புரத்தில் நுழைய மன்னருக்கு மகாராணியார்
தடை  விதிதுத்துள்ளாராம்…!

ஓ,,,அதான் நம் மன்னர் கிரீடம் இருக்கு, ப்ரீடம் இல்லை’னு
பன்ச் டயலாக் பேசிக்கிட்டு திரியறாரா..?

———————————————-
நன்றி: ஆனந்த விகடன்

படம்: இணையம்

_________________

அட்வைஸ் என்பது ஆண்களின் தொப்புள் போல…!!


சுதந்திரத்துக்குப் பிறகு நள்ளிரவில் அதிகம் அறிவிக்கப்பட்டவை
பெட்ரோல் விலை உயர்வுகளே…!

ட்விட்டர் – நிசி


————————————

சில டீக்கடை பஜ்ஜிகளைப் பார்க்கும்போது, இந்தியா
எண்ணெய் வளமிக்க நாடோ?! எனச் சந்தேகம்
வருகிறது…!

>டிபி.டயரி


—————————————–

எனக்குப் பரம்பரை சித்த வைத்தியர் ஆக ஆசைதான்.
என் பாட்டன், பூட்டனார்களின் புகைப்படங்கள் இல்லை
என்பதுதான் தடையாக உள்ளது..!

>ரைட்டர் நாயோன்


—————————————

இட்லி மாவு மட்டும் எளிதாக பாக்கெட்ல கிடைக்காம
இருந்திருந்தால், பல வீட்ல காலை – இரவு உணவு
பழைய சோறுதான்.
#இங்குட்டு இட்லி, அங்குட்டு என்ன?


—————————————–

நம் குழந்தைப் பருவத்தை குழந்தைகளால் மட்டுமே
மீட்டெடுக்க முடியும்…!

>மீனம்கயல்


—————————————-

அட்வைஸ் என்பது ஆண்களின் தொப்புள் போல…எவனும்
ரசிக்க மாட்டான்..!

>தோட்டா ஜெகன்


—————————————–
ட்விட்டரில் ரசித்தவை
நன்றி: ஆனந்த விகடன்