சுப்ரமணி – நகைச்சுவை

தினமும் சர்ச்சையா பேசித் தொலைப்பதன் காரணம்…!!

மேடையில் கூட்டம் குறைவாக இருப்பதால்…!

கட்சியை வளர்க்க எடுத்த நடவடிக்கை…!!

உல்லாச தீவுகள்’ விற்பனைக்கு…!!

ஆமை வடை மாதிரி ஆமை பூரி சார்..!!

 ஆமை வடை மாதிரி ஆமை பூரி சார்..!! GY7MlCqCQLa2zsfHc4fx+787ea80e-61ea-4771-b81c-08f71529d650

'வைத்திருப்பவர் வைத்தியல்ல’னு ஒரு வாசகத்தை நினைப்புல வச்சிக்கச் சொன்னார்!

எங்க வீட்டுக்குப் பக்கத்துல ரெண்டு சாஸ்திரிங்க
இருந்தாங்க. அண்ணன், தம்பி. ஒருத்தர் குடுமி
வைச்சிருப்பார், இன்னொருத்தர் கிராப்பு. எங்களுக்குள்ள
எப்பவுமே அவங்க பேரைப் பத்தி குழப்பம்.

ஒருத்தர் பேரு நடராஜன், இன்னொருத்தர் பேரு வைத்தி.
அதை மாத்தி மாத்திக் கூப்பிட்டு குழப்பிக்குவோம்.
குடுமி வைச்சவர் பேரு நடராஜன், அவரு தம்பி வைத்தி.

எங்கப்பா, அவங்கள ஈசியா அடையாளம் கண்டுபுடிக்க,
‘வைத்திருப்பவர் வைத்தியல்ல’னு ஒரு வாசகத்தை
நினைப்புல வச்சிக்கச் சொன்னார்.

அதாவது குடுமி வச்சிருப்பவர் வைத்தி இல்லையாம்.
அவரோட அண்ணன் கிராப்புக்கார நடராஜனாம்.
அப்புறம் எங்களுக்கு ஏன் வருது குழப்பம்!

—————————————–

எங்க அப்பா காமெடியாத்தான் பேசுவார்.
வீட்டுக்கு வர்ரவங்களுக்கு நாங்க வழிய வழிய
காப்பியோ, ஜுஸோ கொடுப்போம். வந்தவங்க
, ‘நிறைய இருக்குங்க. கொஞ்சம் குறைச்சு
குடுங்க’ம்பாங்க.

அதுக்கு எங்கப்பா, ‘அதுக்கென்ன… நீங்க
சாப்பிட்டா குறைஞ்சிரும்’பார்.

————————–

ஒரு முறை எங்கம்மா ஆசையா சப் பாத்தி செஞ்சி
பறிமாறிக்கிட்டே, ‘சாஃப்டா இருக்குங்களா?’னு
ஆர்வமா கேட்டாங்க.

எங்கப்பா, ‘அதெப்படி… சாப்புட்டா அப்புறம் எப்படி
தட்டுல இருக்கும்?’னு மடக்குனார்.

————————————-

ஒரு சமயம் என் நண்பரோட சித்தப்பா வீட்டுக்கு
வந்திருந்தார். அவரு, ‘நான் சண்முகத்தோட சித்தப்பா’ன்னு
அறிமுகப்படுத்திக்கிட்டார்.

அவரு போனவுடன் எங்கண்ணன், ‘வந்தவரு யாரு?’ன்னு
கேட்டாரு. எங்கப்பா, ‘சண்முகத்தோட சித்தப்பா’ன்னார்.
‘என்னவா இருக்கிறார்’ன்னு மறுபடியும் அண்ணன் கேக்க,
‘அதான் சொன்னாரே… சண்முகத்தோட சித்தப்பாவா
இருக்காரு’னு சொல்லி வச்சார் எங்க அப்பா.
——————————-

திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கறவங் களைப் பத்தி
நியூஸ் போடும்போது, ‘ஓடிப்போனாங்க’ன்னு பேப்பர்ல
ஏன் போடறாங்கன்னு எனக்கு ரொம்ப நாளா சந்தேகம்.

நடந்துபோனா, மத்தவங்க வந்து புடுச்சிக்கிடுவாங்களோனு
பயந்துதான் ஓடிப்போறாங்க போலனு நினைச் சுக்குவேன்.

அதிலேயும் பலபேரு வீட்டு டிரைவரோடு ஓடுனதா
படிக்கிறோம். அதுவும்கூட, டிரைவரோட இருந்தா
கார்லயே ஓடிப்போயி தப்பிக்கிறது ஈஸின்னு மனசைத்
தேத்திக்குவேன்.

———————————இறையன்பு – விகடன்

நகைச்சுவை – இறையன்பு

இன்னொரு இடத்துல, என்னோட நண்பர் ஒருத்தர்
வீடு வாடகைக்கு வேணும்னு போயிருக்கிறார்.
வீட்டுக்காரங்ககிட்ட அவரை அறி முகப்படுத்தும்போது,
‘இவரு ரொம்ப காமமானவரு’னு பலமுறை அழுத்திச்
சொல்லிருக்கிறார் அவரோட தோஸ்து.

அவரு காம் ஆனவருனு சொல்லறதுக்குத்தான்
அவரு அப்படி ‘மீன்’ பண்ணிருக்கிறாரு. வீட்டுச்
சொந்தக்காரரு அதையும் என்னதான் புரிஞ்சிக்கிட்டாரோ…
வாடகைக்கு வீடு கிடைச்சிடுச்சு!

————————————–

எனக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்கு குடலிறக்க நோய்.
பாவம், வலியில் துடிச்சிப் போயிட்டார். அப்ப அவரைப்
பாக்கவந்த ஒருத்தர்,

‘எங்கிட்ட நாட்டு மருந்து இருக்குது. ஒரு வாரம் சாப்பிட்டா
அறுவைச் சிகிச்சையே தேவையில்ல’னு மருந்து குடுத்து,
நம்பிக்கையும் குடுத்தார். இவரும் தைரியமா சாப்பிட்டார்.
ஆனா வலி அதிகமாச்சே தவிர குறையல. கடைசியில
ஆபரேஷன் நடந்தது.

ஒரு மாசம் கழிச்சு நாட்டு வைத்தியம் சொன்னவர்
வீட்டுக்கு இவர் போயிருக்கிறார். அங்க போயி காலிங் பெல்
அமுக்குனாரே பார்க்கலாம். விந்தி விந்தி வந்து கதவத்
தொறந்திருக்கிறார் நாட்டு வைத்திய ஆசாமி. என்னாச்சுன்னு
பதறிப் போயி கேட்டா, ‘போன வாரந்தான் எனக்கு குடலிறக்க
ஆபரேஷன் நடந்திச்சு’னு சொன்னாராம்.

அவரை நம்பி ஒரு வாரம் ஏதோ ஒரு மருந்தைச் சாப்பிட்டவருக்கு
எப்படி இருந்திருக்கும். நெனைச்சிப் பாருங்க.

————————————விகடன்

அவசரம் போலன்னு நினைச்சேன்!

சிரிப்பு வெடி! -  Vikatan%2F2019-05%2Ff3f809e8-3eff-413c-8ac6-f3eb0a806e81%2Fp249a


தலைமைச் செயலகத்துல சில செகரட்டரி ரூம்ல
ரெண்டு கதவு இருக்கும். ஒண்ணு வழியா வெளியே
போகலாம். இன்னொன்னு வழியா பாத்ரூமுக்குப்
போகலாம்.

டூரிஸம் செகரட்டரியா இருக்கும்போது எனக்கு
அப்படி ஒரு ரூம். பலபேரு உள்ள வருவாங்க.
பேசி முடிச்சிட்டு வெளியே போறதா நினைச்சி,
விறுவிறுனு நடந்துபோய் டாய்லெட் கதவைத்
திறந்துடுவாங்க.

அப்புறம் அசடு வழிஞ்சுகிட்டே திரும்பி வரு வாங்க.
நானும் சிரிச்சுக்கிட்டே, ‘அடடா… நீங்க போன
வேகத்தைப் பார்த்தா, உங்களுக்கு அவசரம்னு
நினைச்சேன்’னு சொல்லுவேன்.

அதுக்குப்பெறவு ‘வெளியே’
அப்ப டீன்னும், ‘டாய்லெட்’ன்னும் எழுதி ஒட்டுனோம்.
இருந்தாலும் குழப்பம் குறையல. ‘வெளியே’ போற
அவசரத்துல அதையும் ஒழுங்காப் படிக்க பலருக்கு
நேரமில்லை.

——————-இறையன்பு – விகடன்

…எறும்பு வருது!

சிரிப்பு வெடி! -  Vikatan%2F2019-05%2F42d156a8-694a-4cad-8467-a69a7d1ca669%2Fp248a

இந்த நேரத்துல மருத்துவ விஷயமா இன்னொரு
சம்பவம் ஞாபகத்துக்கு வருது. ஒருத்தரு போயி
டாக்டர்கிட்ட ‘சிறுநீர் கழிச்சா எறும்பு வருது’ன்னு
சொல்லியிருக்கார். அதைக் கேட்டு டாக்டர் பதறிப்
போயிட்டார்.

அதாவது, இவரோட சிறுநீரில் எறும்பும் கலந்து
வருதுன்னு நினைச்சிட்டார். பிறகுதான் புரிஞ்சிருக்குது
சிறுநீர் விட்ட இடத்துல எறும்புங்க வந்து மொய்க்கிறதா
சொல்லியிருக்காரு.

சர்க்கரை வியாதி இருந்தா இப்படி எறும்பு வந்து
மொய்க்குமானு அதுக்கப்புறம் டாக்டர் தடிதடியா
புத்தகம் படிக்க ஆரம்பிச்சிட்டாரு.

—————————இறையன்பு- விகடன்

« Older entries Newer entries »