எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

அந்த பெரிய நகரத்தின் முக்கியமான சாலையில்,
கடுமையான போக்குவரத்து நெரிசல். எல்லா திசையிலும்,
கார்களும், ஸ்கூட்டர்களும், பஸ்களும், மினி லாரிகளும்
தேங்கி நின்றன.

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய, ஒரு கார் காரர்,
வெளியே எட்டிப் பார்த்தார். அட்டை பெட்டியை குலுக்கியபடி,
ஒரு சிறுவன், ஒவ்வொரு வண்டி அருகே நின்று, ஏதோ
கேட்டபடி வருவதை கண்டார். அவனை கூப்பிட்டு,

‘என்ன தம்பி… ஏன் இவ்வளவு போக்குவரத்து நெரிசல்…’
என்று கேட்டார்.

‘ஒரு கட்சித் தொண்டர், தன் மேல் பெட்ரோல் ஊற்றி,
நடு ரோட்டில் கிடக்கிறார் சார்… அவர் சார்ந்த கட்சிக்கு,
5,000 ரூபாய் நிதி வேண்டுமாம். அந்த தொகை கிடைக்கா
விட்டால், கொளுத்தி சாவேன் என்கிறார்.

அவருக்காக தான், நான் கலெக் ஷன் பண்ணுகிறேன்…’
என்றான், சிறுவன்.

‘இதுவரை என்ன கிடைத்தது?’ என்று கேட்டார், கார் காரர்.

‘ஏழு தீப்பெட்டி, இரண்டு ‘சிகரெட் லைட்டர்’ சார்…’

என்று பதில் வந்தது.


வாரமலர்

Advertisements

கொலுசு சத்தம் கேட்டாதான், சாமியார் கண்ணை தொறப்பார்…!!

தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!

குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!

சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!

பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!

மாலை போட வசதியான சிலை…!

விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!

கல்யாணத்துக்கு அப்புறமா தோஷம் நீங்கிடு…!

கல்யாணத்துக்கு அப்புறமா தோஷம்
நீங்கிடும்னு சொல்றீங்க, ரொம்ப சந்தோஷம்

ஜோசியரே!

’அதான் அந்த தோஷம்’

எஸ்.பொருநைபாலு


பிளேன் தோசை…!

« Older entries