சாப்பிடு கண்ணு…அப்பதான் உடம்புல பலம் வரும்…!!

Advertisements

ஹெல்மெட் – பார்த்து அணிதல் நலம்…!

கலப்படத்தை மட்டும் கடையில் பண்ணாதே…!


வாரியார் ஒரு கடையைத் திறந்து வைத்தார்.

கடைக்காரர் கேட்டார்:
நான் எந்த சாமி படத்தை வைக்கலாம்..?

வாரியார்:
எந்த படத்தையும் வைக்கலாம், கலப்படத்தை
மட்டும் கடையில் பண்ணாதே…!

——————–வெண்டைக்காயை லேடீஸ் ஃபிங்கர்னு சொன்னா
தலைவர் ஒத்துக்க மாட்டேங்கிறாரு..!

ஏன் அப்படி?

வெண்டைக்காயில் நெயில் பாலீஷ் இல்லையாம்..!

என்.உஷாதேவி

————————————————

பூக்கடை வைக்க கோயில் வாசல்ல சரியான இடம்
கிடைக்கலை, என்ன செய்யலாம்?

அந்த ஆஸ்பத்திரி வாசல்ல கடை போட்டால் பூமாலை
விற்பனை அமோகமாக இருக்கும்!

வி.வெங்கட்ராமன்

——————————————-

டாக்டர், நீங்க முதலுதவி பண்ணுவீங்களா?

கண்டிப்பா…அதுக்குத்தானே நாங்க இருக்கோம்..!

சந்தோஷம் டாக்டர், சொந்தமா ஒரு தொழில்
தொடங்கப் போறேன், அதுக்கு கொஞ்சம் ‘முதல்’
உதவி செஞ்சீங்கன்னா நல்லா இருக்கும்..!

எம்.லலிதா

———————————————–

இரண்டு போன் இருந்தால் சௌகரியம்தான்…!!பெரும்பாலும் இரண்டு போன் வச்சிருக்கிறது,
ஒரு போனை தெரியாம எங்கேயாவது வச்சுட்டா
கால் பண்ணி கண்டு பிடிக்கிறதுக்கே பெரிய
அளவுல உதவுது


குமரேஷ் சுப்ரமணியம்

———————————————–


டைலர் கிட்ட தைக்கக் கொடுத்த துணியும்
இரவலா கொடுத்த புக்கும் ஒண்ணுதான்…அத்தனை
சீக்கிரம் திரும்பி வர்றதில்ல!

சுமிதா ரமேஷ்

————————————————

ஸ்கில் இந்தியாவே…புல்லட் ரயில் நாயகரே….
இதெல்லாம் மோடியை வரவேற்று பா.ஜ.கவினர்
சென்னையில் வைத்திருந்த வாசகங்கள்

# திராவிடக் கட்சிகளின் பேனர்களோடு
போட்டியிட இன்னும் ரொம்ப டெவலப் ஆகணும்!

மனுஷ்யபுத்திரன்

புருஷன் லட்சணம்


உங்கள் கணவரை ஒரு ரூமில் வைத்து பூட்டுங்கள்
அதே போல உங்கள் செல்ல நாயையும் வேறொரு
ரூமில் வைத்து பூட்டுங்கள்.

இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து
ரூம் கதவைத் திறந்து பாருங்கள்…

நாய் உங்களின் வருகைக்காக ஆவலுடன் காத்திருப்பதை
கண்டு மகிழ்வீர்கள்.

ஆனால் உங்கள் கணவரோ,
ஆனந்தமாக தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு
எரிச்சலும் கோபமும்தான் உங்களுக்கு வரும்,…!!

——————-எந்த கட்சியிலும் சேராம மக்களுக்கு நல்லது செய்ய முடியும்..!! –

குட்டிச்சுவர் சிந்தனைகள் – ஆல்தோட்ட பூபதி