-வாராந்தரி ராணி
கால் வலிக்காதா…!
மே 30, 2022 இல் 8:39 பிப (Uncategorized)
Tags: நகைசுவை
மனைவியிடமிருந்து தப்பிக்க தற்காப்புக் கலை!
திசெம்பர் 2, 2021 இல் 5:05 பிப (Uncategorized)
Tags: நகைசுவை
வாரமலர்
ஒரு தலை ராக’த்தை மாற்றிய ‘மௌன ராகம்’!
ஒக்ரோபர் 4, 2021 இல் 3:22 பிப (Uncategorized)
Tags: நகைசுவை

எங்கள் கல்லூரியில், வகுப்புத் தலைவியை ஒவ்வொரு வருடமும்,
அந்த வகுப்பிலுள்ள மாணவியர் அனைவரும் சேர்ந்து
தேர்ந்தெடுப்போம். முதல் இரண்டு வருடங்களும் போட்டியின்றி
என் தோழி கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டாள்.
மூன்றாவது வருடத்தில் வகுப்பில் இரண்டு கோஷ்டிகள்
உருவாகிவிட, கனிமொழிக்கு எதிராக ஆனந்தி என்ற மாணவி
எதிர்கோஷ்டியின் சார்பாக போட்டியிட்டாள்.
கேன்வாஸ் நடந்தது. எதிர் கோஷ்டியில் ஒரு மாணவி,
“ரெண்டு வருஷம் கனிமொழி தலைவியா இருந்துட்டா. மூணாவது
வருஷம் வேறு ஒருவரைத் தேர்ந்தெடுத்தாதான் என்ன?” என்றாள்.
உடனே நான், ” ‘ஒரு தலை ராகம்’ படம் நல்லா இருந்ததுனு நாம
திரும்ப திரும்ப அதை மூணு தடவை பார்க்கலையா? அதுபோல
கனிமொழியை மூணாவது தடவையும் தலைவியாகத்
தேர்ந்தெடுத்தா என்ன?” என்றேன்.
அதற்கு அவள், ” ‘மௌன ராகம்’ படம் பார்த்தபின்தானே நமக்கு
அந்தப் படத்தோட அருமை புரிஞ்சது. திரும்பத் திரும்ப ‘ஒருதலை
ராகத்தை’யே பார்த்தா, ‘மௌனராகத்’தோட’ அருமையை எப்படித்
தெரிஞ்சுக்கறது? இப்போ ஆனந்தியைத் தேர்ந்தெடுத்தாதானே,
அவளோட பெருமைகளையும் புரிஞ்சுக்க முடியும்!” என்று
போட்டாளே ஒரு போடு! அனைவரும் அசந்துவிட்டோம்.
பிறகென்ன… ஆனந்திதான் மூன்றாவது வருடத்தின் வகுப்புத் தலைவி!
- பிச்சைமணி ரெங்கன், மதுரை
நன்றி-அவள் விகடன்
அது என்ன புதுசா காக்கா வெடி?’’
ஒக்ரோபர் 26, 2019 இல் 10:13 பிப (Uncategorized)
Tags: நகைசுவை
45‘

‘ஒவ்வொரு வருஷமும் இந்தக் கடையிலதான் தீபாவளிக்கு பசங்களுக்கு வெடி வாங்கிக் கொடுப்பேன்… எந்த அசம்பாவிதமும் நடந்தது இல்லை!’’
‘‘அவ்வளவு நம்பிக்கையான கடையா..?’’
‘‘நீங்க வேற… ஒரு வெடியும் இதுவரை வெடிச்சது இல்லை!’’
– எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.
‘‘உங்க வீட்டுல தினமும் பட்டாசு சத்தம் கேட்குதே… ஏன்?’’
‘‘தினமும் நடக்கற மாமியார் – மருமகள் சண்டையில, ஜெயிக்கற சைடு பட்டாசு வெடிப்பாங்க!’’
– எஸ்.ராமன், சென்னை-17.
‘‘இந்த தீபாவளிக்கு உங்க மனைவியை பட்டுப் புடவை எடுக்க விடாம தடுத்திட்டீங்களா… எப்படி?’’
‘‘அவகிட்ட, ‘கரன்ட் இருக்கும்போது ஜவுளிக்கடைக்குப் போ’ன்னு சொல்லியிருந்தேன்!’’
– எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.
‘‘குருவி வெடின்னு கேள்விப்பட்டிருக்கேன்… அது என்ன புதுசா காக்கா வெடி?’’
‘‘கடைக்காரரை காக்கா பிடிச்சு, ஓசியில வாங்கின வெடி!’’
– வி.சாரதி டேச்சு, சென்னை-5.
‘‘தலைதீபாவளிக்கு என்ன கேட்டாலும் தர்றேன்னு மாப்பிள்ளைகிட்ட சொன்னது தப்பா போச்சு…’’
‘‘ஏன்?’’
‘‘இப்ப என்னோட ரெண்டாவது பெண்ணைக் கேட்கிறாரு..!’’
– வி.சாரதி டேச்சு, சென்னை-5.
‘‘தீபாவளி அன்னைக்குத்தான் தலைவர் வீட்டுல நிம்மதியா இருப்பாரா… ஏன் அப்படி?’’
‘‘அவரோட மனைவி எவ்வளவு கத்தி திட்டினாலும், வெடிச் சத்தத்துல அவர் காதுல விழாதே!’’
– எஸ்.ராமன், சென்னை-17.
ஸ்பீக்கரு…
‘‘இந்த தீபாவளிக்கு தலைவர் அவர்கள் நடிப்பில், மிகப் பிரமாண்டமான பொதுக்கூட்டம் கடற்கரையில்… விரைவில் எதிர்பாருங்கள்!’’
– பெ.பாண்டியன், காரைக்குடி.