காய்ச்சல், மூச்சுவிட சிரமம் இருந்தால்..? – இன்ப்ளூயன்சா காய்ச்சல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் இன்ப்ளூயன்சா வைரஸ் பரவல் அதிகரித்து வரும்
நிலையில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை
தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பரவி வரும்
இன்ப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் தமிழகத்திலும் பரவியுள்ளது.
நாடு முழுவதும் இந்த காய்ச்சலுக்கு 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில்
பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்கள்
இதனால் பாதிக்கப்படுகின்றனர். காய்ச்சலை தடுக்க தேவையான
நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் இன்ப்ளூயன்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு
நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பவர்களுக்கு
இன்ப்ளூயன்சாவுக்கான ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட
வேண்டும்.

காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்ட நபர்கள் 7 நாட்கள் வரை வீட்டிலேயே
தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

லேசான காய்ச்சல், அறிகுறிகள் கொண்டவர்கள், தீவிர காய்ச்சல்
அதிக இருமல் கொண்டவர்கள் என 2 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் தீவிர காய்ச்சல், மூச்சுவிட சிரமம், நெஞ்சு வலி, ரத்த அழுத்த
குறைவு உள்ளிட்ட தீவிர பாதிப்பு உள்ள சி வகையினர் உடனடியாக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆர்டிபிசிஆர் பரிசோதனை
செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல், மூச்சு விட சிரமம் இருந்தால்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

வீட்டு தனிமையில் இருப்பவர்கள் 104 மற்றும் 108 ஆகிய எண்களை
தொடர்பு கொண்டு இன்ப்ளூயன்சா காய்ச்சல் தொடர்பான
சந்தேகங்கள், ஆலோசனைகளை 24 மணி நேரமும் பெறலாம்.

மருத்துவமனை ஊழியர்கள் ப்ளூ காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்
கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள், இணை நோய் உள்ளவர்களும்
தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

65 வயதிற்கு மேற்பட்டவர்கள், 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள்
ப்ளூ தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது.

மருத்துவமனைகளில் ஆய்வகங்கள், காய்ச்சல் பிரிவில் பணிபுரிவோர்
என்95 முகக்கவசம் அணிய வேண்டும்.

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை நெறிமுறைகளில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ் வெப்துனியா

நாட்டு நடப்பு

அந்துமணி-சிந்துமணி

-முரசொலி

கைலாசா நாட்டுக்கு அங்கீகாரமா? ஐ.நா.சபை விளக்கம்

‘பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதை கட்டாயம்’ – குஜராத் மாநிலத்தில் அறிவிப்பு

 'பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதை கட்டாயம்' - எந்த மாநிலத்தில் இந்த அறிவிப்பு? 147724

குஜராத்தில் உள்ள பள்ளிகளில், 6 முதல் +2 வரையிலான வகுப்புகளின்
பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்படுவதாக அம்மாநில அரசு
அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திரபாய் படேல் தலைமையிலான
பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், குஜராத்தில் 6 முதல் 12 ஆம்
வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க
அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து குஜராத் அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த வகையில் இந்திய
கலாச்சாரம் மற்றும் அறிவியலை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க
வேண்டும்.

அந்த வகையில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத் திட்டங்களில்
பகவத் கீதை அறிமுகப்படுத்தப்படும். மாணவர்களுக்கு பகவத் கீதையின்
முக்கியத்துவம் பற்றி கூறப்படும். பின்னர், கதைகள், ஸ்லோகங்கள்,
பாடல்கள், கட்டுரைகள், விவாதங்கள், நாடகங்கள், வினாடி வினாக்கள்
போன்ற வடிவங்களில் பகவத் கீதை அறிமுகப்படுத்தப்படும்” எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி குஜராத் கல்வித்துறை மந்திரி ஜிது வகானி கூறுகையில்,
”பகவத் கீதையின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை அனைத்து
மதத்தினரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

பகவத் கீதையை அறிந்து கொள்ளவும், மாணவர்களிடையே அது
குறித்த ஆர்வத்தை வளர்க்கும் வகையிலும் பாடத் திட்டத்தில்
பகவத் கீதை அறிமுகப்படுத்தப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன், மத்தியப்பிரதேசத்தின் பொறியியல் பாடத்திட்டத்தில்
ராமாயணம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதியதலைமுறை

1000 ஆண்டு பழமையான பைரவர் சிலை கண்டெடுப்பு

தமிழ் முரசு

புலிட்சர் விருது பெற்ற தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண் பத்திரிக்கையாளர்…!

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட லண்டனைச்
சேர்ந்த பத்திரிகையாளர் மேகா ராஜகோபாலன்
உலகின் புகழ்பெற்ற புலிட்சர் விருதை பெற்றுள்ளார்.

உலகில் ஊடகத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் ஆண்டு
தோறும் புலிட்சர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.

105வது ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் தற்போது
அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவைச் சேர்ந்த பூர்வீகமாக
கொண்ட இரண்டு பத்திரிகையாளர்கள் புலிட்சர் விருது
பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவரின் ஒருவரான மேகா ராஜகோபாலன் தமிழ்நாட்டை
பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இவர் சீனாவில் சிறுபான்மை
சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு
முகாம்கள் குறித்து ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டார்.

இதற்காக சர்வதேச பிரிவிலான ஊடகவியலாளர் விருதை
மேகா ராஜகோபாலன் பெற்றுள்ளார்.

இதே போல் இந்தியாவை பூர்வீகக்குடியாக கொண்ட அமெரிக்க
பத்திரிகையாளரான நெய்ல் பேடி என்பவர் உள்ளூர்
செய்திக்கான பிரிவில் புலிட்சர் விருது பெற்றுள்ளார்.
நெய்ல் பேடி வெளியிட்ட புலனாய்வு செய்திகளுக்காக இந்த
விருது வழங்கப்பட்டுள்ளது.

குமுதம்

எச்சரிக்கை பதிவுகள்

தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!

தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு! Tamil_News_2806_2020__40096461772919

சேலம்:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் தயாரிக்கப்படும் மரச்சிற்பங்களை
அங்கீகரித்து மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ
குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது
சின்னம் புவிசார் குறியீடு எனப்படும்.

இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ,
நன்மைதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும். இவ்வாறு புவிசார்
குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற
இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முடியாது.

இந்நிலையில் சேலம் தம்மம்பட்டியில் தயாரிக்கப்படும்
மரச்சிற்பங்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
வீடு, வணிக வளாகங்களின் அழகை மெருகூட்டுவதில் சிற்பங்களுக்கு
இணை ஏதுமில்லை.

குறிப்பாக, ஒரு அறையை அல்லது அரங்கை அழகுபடுத்துவதில் மரச்
சிற்பங்களுக்கு முக்கிய இடமுண்டு. இதனால், கடவுள் சிற்பங்கள்
உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலான மரச் சிற்பங்களுக்கு
கலை பிரியர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். தமிழகத்தைப்
பொறுத்தவரை சேலம் மாவட்டம் தம்மம்பட்டி சிலை வடிவமைப்பானது
சிறப்பாக செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில் மரக்கட்டைகளில் செதுக்கப்படும் இந்து கடவுள்கள்,
புராதன நிகழ்வுகள் மற்றும் கதவு வடிவமைப்புகள் போன்றவை
நேர்த்தியாகவும், தத்துரூபமாகவும் இருப்பதால் அவை உள்நாடுகளில்
மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளான ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா
போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பிரசித்தி பெற்ற தம்மம்பட்டி மரச்சிற்பங்கள் தமிழகத்தில்
இருந்து புவிசார் குறியீடு பெரும் 36வது பொருளாகும். இதன் மூலம்
போலிகள் உருவாவது தவிர்க்கப்பட்டு உண்மையான பொருட்களை
நுகர்வோர் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தினகரன்

சாண்டாவாக சர்ப்ரைஸ் கொடுத்த ஒபாமா!- மருத்துவமனையில் துள்ளிக்குதித்த குழந்தைகள்

கிறிஸ்துமஸ் சீசன் களைக்கட்டத் தொடங்கிவிட்டது.
குறிப்பாக அமெரிக்கா அலங்காரங்களால் ஜொலிக்கிறது.
வீதிகள்தோறும் பரிசுப் பொருள்களுடன் சாண்டா கிளாஸ்கள்
வலம் வருகின்றனர். நேற்று இரவு வாஷிங்டனில் அனைவரின்
மனம் கவர்ந்த ஒரு சாண்டா வந்திருந்தார்.

அவரின் வரவு அங்கிருந்தவர்களுக்குப் பெருமகிழ்ச்சி
கொடுத்தது. ஆம், நேற்று இரவு வாஷிங்டன் குழந்தைகள்
நல மருத்துவமனைக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா
திடீர் விசிட் அடித்தார்.

தலையில் சாண்டா தொப்பி, பரிசுப் பொருள்கள் அடங்கிய
மூட்டை என கிறிஸ்துமஸ் தாத்தாவாக உருமாறி
அங்கிருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மருத்துவமனையின் ஒவ்வோர் அறையிலும் நுழைந்து
சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ்
பரிசுகளை வழங்கினார். குழந்தைகள் உற்சாகத்தில்
துள்ளிக் குதித்தனர்.

சில குழந்தைகள் சந்தோஷத்தில் அழவும் செய்தன.
ஒவ்வொரு குழந்தையையும் கட்டியணைத்து முத்தமிட்டு
தன் வாழ்த்தை தெரிவித்தார். முதலில் வெயிட்டிங் அறையில்
இருந்த நர்ஸ், மருத்துவர் உள்ளிட்டவர்களை சந்திந்துப்
பேசினார்.

மருத்துவமனை ஊழியர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டி,
`விடுமுறை நாளிலும் தன் வீட்டில் இல்லாமல் மருத்துவ
மனையில் குழந்தைகளை அக்கறையோடு பார்த்துக்
கொள்ளும் ஒவ்வொருவருக்கும் என் வாழ்த்துகள்.
உங்கள் அனைவரையும் மகிழ்விக்கவே நான் இங்கு
வந்தேன்’ என்று உரக்கப் பேசினார்.

ஒபாமா சர்ப்ரைஸ் கொடுத்ததைப் பற்றி மருத்துவமனை
நிர்வாகம் ட்விட்டரில் பகிர்ந்திருந்தது. அந்த ட்வீட்டை
ரீட்வீட் செய்த ஒபாமா `உங்கள் அனைவருக்கும்
கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். என்னை சாண்டாவாக ஏ
ற்றுக்கொண்டதற்கு நன்றி’ என்று குறிப்பிட்டார்.

கூடவே சின்னதாக நடனம் வேறு ஆடி அசத்தினார்.

ஒபாமா முன்பெல்லாம் இதுபோன்று அடிக்கடி குழந்தைகள்
இருக்கும் இடங்களுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிப்பது வழக்கம்.
`ஒபாமா தன் பழைய சேட்டைகளை தொடங்கிவிட்டார்’

என அமெரிக்க மக்கள் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.


நன்றி-விகடன்

சென்னையில் டிக்கெட் முன்பதிவு முறை மாற்றம் – திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

திருப்பதி கோயிலுக்கு செல்ல சென்னை தியாகராயநகரில் உள்ள
தேவஸ்தான அலு வலகத்தில்தான் டிக்கெட் முன் பதிவு செய்வதில்
தற்போதைய நடைமுறை, குறித்து, தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்

தரிசனத்துக்கு செல்லும் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து
வருவது பக்தர்களுக்கு வீண் அலைச் சலும், காலவிரயமும்
ஏற்படுவதாகவும் கூறப்பட்டது.

மேலும் தேவஸ்தான அலுவலகத்திலும் கூட்டம் ஏற்பட் டது.
இந்நிலையில், அந்த நடைமுறையை தளர்த்தும் பொருட்டு, ஒரு நபர்
தனது அடையாள அட்டையுடன் வந்து 5 பேருக்கு டிக்கெட் முன்பதிவு
செய்து கொள்ளலாம் என்ற புதிய முறையை உருவாக்கியுள்ளோம்.

இது முழுக்க முழுக்க பக்தர்களின் நன்மைக்கானதாகும்.
இது தொடர்பான அறிவிப்பு களையும் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்”
என்றார்.

—————————-
தினபூமி

« Older entries