தமிழ்த் தாத்தா! – (சிறுவர் பாடல்)-எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்

sm16

பல சாதனைகள் செய்யலாம்! – சிறுவர் பாடல்

பல சாதனைகள் செய்யலாம்! - சிறுவர் பாடல் Sm17

இரவில் நன்கு உறங்கலாம்
இனிய கனவு காணலாம்!

காலை விரைந்து எழுந்ததும்
கடமைகளை முடிக்கலாம்!

உடற்பயிற்சி செய்யலாம்
உடலை உறுதி ஆக்கலாம்!

கடவுள் வணக்கம் செய்யலாம்
கடமையாற்றச் செல்லலாம்!

பகல் முழுதும் உழைக்கலாம்
பல சாதனைகள் செய்யலாம்!

—————————-
-இரா.ரெங்கசாமி
சிறுவர்மணி

முகக் கவசம் அணியணும்! – சிறுவர் பாடல்

முகக் கவசம் அணியணும்! - சிறுவர் பாடல் Sm16
முகக் கவசம் அணியணும்! - சிறுவர் பாடல் 3DXqR0FESAicjEdfM6Wg+52704f0a-ed8a-4d06-b018-a12ce87a1878

துஷ்யந்த் சரவணராஜ்
சிறுவர்மணி

வண்ணகுடை – சிறுவர் பாடல்

வாங்க வாங்க வாங்க
வண்ண வண்ண குடையை வாங்கிப்போங்க
பெருசுகளுக்கு அகலக்குடை
கருநிறமாய் இருக்குதுங்க!
சிறுசுகளுக்கு சின்னக்குடை
சிங்காரமாய் இருக்குதுங்க!
கைக்கு அடக்கமாய் இருக்குமுங்க
விரல் பட்டால் பெரிதாய் விரியுமுங்க!
வெயில் சூடு போக்குமுங்க
வேர்வை வராமல் காக்குமுங்க!
மழை நேரத்தில் உதுவுமுங்க – உங்க
புத்தகம் நனையாமல் காக்குமுங்க!
பிடித்த வண்ணத்தில் எடுத்திடுங்க!
வெயிலிலிலும், மழையிலும் தப்பியுங்க!

===============================
>அன்பிற்கினியான், பரமக்குடி
நன்றி: சிறுவர் தங்க மலர் (தினத்தந்தி)

உழைக்க வேண்டுமே! – சிறுவர் பாடல்

உழைக்க வேண்டுமே! - சிறுவர் பாடல் Sm14

சிட்டுக்குருவி கூடு கட்டி
முட்டை இட்டதாம்!
சிரத்தையோடு அதிலே குந்தி
அடையும் காத்ததாம்!

பட்டுமேனி குட்டி மூக்கு
குஞ்சு பொரித்ததாம்!
பாசத்தோடு அம்மா சிட்டு
அணைத்துக் கொண்டதாம்!

சிறகு முளைக்கா சிட்டுக் குஞ்சும்
கூட்டில் இருந்ததாம்!
சென்று இரையைத் தேடி வந்தே
அம்மா கொடுத்ததாம்!

சிறகு முளைத்த குஞ்சு சும்மா
குந்தி இல்லையாம்!
சிறகை விரித்து இரையைத் தேடிப்
பறந்து சென்றதாம்!

தம்பி,தங்கை, பெற்றோர் உங்களைப்
பேணி வளர்க்கவே
தாளா நிலையிலும் ஓயாது உழைப்பை
நினைவில் கொள்ளணும்!

நனகு வளர்ந்து உரிய வயதை
அடையப்பெற்றதும்
நாளும் சென்றே உழைத்துப்
பொருளைத் தேட வேண்டுமே!

—————————————
-புலேந்திரன்
நன்றி-சிறுவர்மணி

கொய்யா…ஓ…கொய்யா!

கொய்யா...ஓ...கொய்யா! Sm1310
கொய்யா...ஓ...கொய்யா! 0c076211

-எஸ்.மாரியப்பன்
நன்றி-சிறுவர் மணி

சிறிய விதை பெரிய மரம் – சிறுவர் பாடல்

சிறிய விதை பெரிய மரம் - சிறுவர் பாடல் 9d360510
சிறிய விதை பெரிய மரம் - சிறுவர் பாடல் 1356da10

கவிதை கற்போம் – கவிதைத் தொகுப்பிலிருந்து

சின்னக்குருவி சிறிய வீடு – சிறுவர் பாடல்

குண்டுப் புறா!- சிறுவர் பாடல்

குட்டி மூக்குக் குண்டுப் புறாவின்
கூட்டம் பாருங்க! – அது
தத்தித் தத்தித் தரையில் இரையைக
கொத்துது பாருங்க!

சாம்பல் நிறத்துக் கழுத்தை அசைத்து
சுழன்று பார்க்குது!- அது
ஆம்பல் விரலின் அழுகுக் காலால்
அசைந்து நடக்குது!

கடுகு போன்ற கண்ணைச்சுழற்றி
பக்கம் பார்க்குது!- அது
படபவென்று பட்டுச் சிறகால்
பறந்து போகுது!

அந்தக் கால அரசருக்காக
இந்தப் புறாதான் – தினம்
பாய்ந்து வானில் செய்தி சேர்க்கப்

பறந்து சென்றதே!


-எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
சிறுவர்மணி

ரோஜா பூ – சிறுவர் பாடல்

அழகாய் இருக்குது ரோஜாபூ!
அருகே வந்து பாருங்கள்!
பழுத்தபழம் போல் தெரிகிறது
பார்த்து மகிழ வாருங்கள்!

பட்டுப்போல இருக்கிறது!
பறிக்க ஆசை துடிக்கிறது!
‘எட்டி நின்றே பார்’ என்று

யாரோ சொல்லக் கேட்கிளது!


-வளர்கவி
-சிறுவர்மணி

« Older entries Newer entries »