யுவன் சங்கர் ராஜா இயக்குகிறார்; இளையராஜா வாழ்க்கை படமாகிறது

யுவன் சங்கர் ராஜா இயக்குகிறார்; இளையராஜா வாழ்க்கை படமாகிறது 202001140200095170_Directed-by-Yuvan-Shankar-Raja-Ilayaraja-becomes-a-life_SECVPF

பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,
முன்னாள் முதல்-மந்திரிகள் என்.டி.ராமாராவ், ராஜசேகர ரெட்டி,
நடிகர் சஞ்சய்தத், நடிகை சாவித்திரி, கிரிக்கெட் வீரர்கள்
சச்சின் தெண்டுல்கர், தோனி, குத்துச்சண்டை வீராங்கனை
மேரிகோம் உள்ளிட்ட பலரது வாழ்க்கை படங்கள் வந்துள்ளன.

தற்போது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையும்
தலைவி, த அயன் லேடி ஆகிய பெயர்களில் படமாகிறது.

இந்த வரிசையில் இசை துறையில் சாதனை படைத்த இளையராஜா
வாழ்க்கையும் படமாக உள்ளது. இந்த படத்தை அவரது மகனும்,
இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இயக்க இருப்பதாக
கூறப்படுகிறது.

இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது
கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் பெயர் அடிபடுகிறது.
படத்துக்கு ‘ராஜா த ஜர்னி’ என்ற பெயர் வைக்கப்பட உள்ளது.

இளையராஜா 1976-ல் அன்னக்கிளி படத்துக்கு இசையமைத்து
திரை உலகில் அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற
மச்சானை பாத்தீங்களா, அன்னக்கிளி உன்னைத்தேடுதே
பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து தமிழகத்தையே
திரும்பி பார்க்க வைத்தது.

அதன்பிறகு படங்கள் குவிந்தன. தமிழ், தெலுங்கு, இந்தி
உள்ளிட்ட மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு
இசையமைத்துள்ளார். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள்
இளையராஜா இசையில் வந்துள்ளன.

பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் பெற்றுள்ளார்.
பல தேசிய விருதுகளும் வாங்கி இருக்கிறார்.

தினத்தந்தி

வனவிலங்கு ஆராய்ச்சியில் மாளவிகா மோகனன்

வனவிலங்கு ஆராய்ச்சியில் மாளவிகா மோகனன் Sk8

ரஜினி நடித்த “பேட்ட’ படத்தில் நடித்த மாளவிகா மோகனன்
தற்போது விஜய் ஜோடி யாக “மாஸ்டர்’ படத்தில் நடிக்கிறார்.

மாளவிகாவின் நடிப்பை இனிமேல்தான் முழுமையாகப்
பார்க்க போகிறோம் என்றாலும் அவரது அழகான தோற்றம்
ரசிகர்களை வசீகரித்திருக்கிறது.

நடிப்பு தவிர மாளவிகா மோகனன் புதிய திறமை வளர்த்துக்
கொண்டிருக்கிறார். காட்டுப் பகுதிகளுக்குள் சென்று
வனவிலங்குகளைப் பிரத்யேகமாகப் புகைப்படம் எடுப்பதில்
ஆர்வம் காட்டி வருகிறார்.

“வனவிலங்குகளைக் காட்டுப் பகுதிகளுக்கே சென்று
புகைப்படம் எடுப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம்.
இந்தியா முழுவதும் பல்வேறு அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள்
சென்று சிங்கம், யானை உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப்
புகைப்படம் எடுத்திருக்கிறேன்.

அவற்றின் வாழ்வியலை நேரில் ஆராய்ந்திருக்கிறேன்.
குறிப்பாக வயநாடு, கபிணி, மாசினங்குடி காட்டுப் பகுதிகள்
மறக்க முடியாதவை. காட்டுப்பகுதிக்குள் சென்று தனியாக
சிங்கத்தின் முன்னால் நின்று அவற்றைப் படமாக்குவது என்பது
த்ரில்லான அனுபவம்’ என்றார் மாளவிகா மோகனன்.

தினமணி

அடவி… (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்!

அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Sk12

வாழ்க்கையின் எந்தப் பக்கத்தைத் திறந்து பார்த்தாலும்
அதில் ஆச்சரியங்கள் நிறைந்து கிடக்கிறது. அப்படித்தான்
இது. பெரிய திட்டமிடல் இருந்தது. ஈரமான மனசுகள் நாம்
எதிர்பார்க்காத இடங்களில் இருக்கிறது.

எங்கே கிரிமினல்கள் உருவாகி வருகிறார்கள் என்று
தேடினால், உங்களுக்குக் கிடைப்பது
எதிர்பாராத திருப்பங்கள். உங்களின் சந்தோஷத்திற்கும்,
நிறைந்த எதிர்பார்ப்பிற்கும் நிச்சயம் கேரண்டி.

முழுப் படத்தையும் கையில் வைத்துக் கொண்டுதான்
நம்பிக்கையோடு பேசுறேன். நானே ரசிக மனப்பான்மையால்
பார்த்து ரசித்துதான் சொல்கிறேன். ஆர்வமாகப் பேசத்
தொடங்குகிறார் ரமேஷ் ஜி. “ஆழ்வார்’, “நாளை‘, “கிங்’
உள்ளிட்ட படங்களின் மூலம் ஒளிப்பதிவில் கவனம் ஈர்த்தவர்.
சிறிது இடைவெளிக்குப் பின் மீண்டும் இயக்குநராகக் களம்
இறங்குகிறார்.

அடவி… தலைப்பே கவனம் ஈர்க்கிறது….

அடவி என்றால் அடர்ந்த காடு எனப் பொருள்.
காடுகளைப் பாதுகாப்போம் என்பதுதான் இந்தக் கதையின்
ஆதாரம். 70-களில் இந்தியா முழுமையும் “சிக்கோ மூவ்மெண்ட்’
என்று ஒரு முயற்சி நடந்தது. மலைவாழ் மக்களைக் காடுகளை
விட்டு வெளியேற்றும் முயற்சி அது. பெண்கள் மரங்களைக்
கட்டிப்பிடித்து வனங்களை விட்டு வெளியேற மறுத்த காட்சிகள்
அப்போது பத்திரிகைகளில் வெளிவந்தன. அந்தப் போராட்டம்
இந்தியா முழுமையும் பரவி நீண்டது. அது போன்று இப்போதும்
பல போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அப்படி ஆங்காங்கே நடக்கிற சம்பவங்களின் சிறு துளிதான் இது.
இங்கே தமிழகத்தில் வாழுகிற பழங்குடி இன மக்களும், அங்கே
சொகுசு ரிசார்ட்டுகளைக் கட்ட வருகிற ஒரு குழுவுக்குமான
சம்பவங்களாக அதைத் தொகுத்து பின்னி வந்திருக்கிறேன்.
காதல் இங்கே முக்கியப் பங்கு வகுக்கிறது.

எப்படி உருவானது….

இந்தக் கதை அப்படியே மனதில் இருக்கிற சித்திரம்.
விளைநிலத்தைக் கூறு போட்டு விற்றுக் இருக்கிறோம்.
மலையைக் குடைந்து எம் சாண்ட் ஆக்கி கட்டடம்
கட்டுகிறோம். விவசாயிகள் எல்லாம் சென்னை பக்கம்
வந்து ஏ.டி.எம்., பங்களா, ஐ.டி. வாசலில் செக்யூரிட்டியாக
நின்று கொண்டு இருக்கிறார்கள்.

இப்படிப் பல விஷயங்கள் கதைக்குள் என்னை இழுத்துப்
போனது.

சோறு இல்லை என்பதுதான் எதிர்காலக் குரலாக இருக்கப்
போகிறது. தொழில்புரட்சி பசியைப் போக்காது.
விஞ்ஞானத்திற்கு அரிசியை மந்திரம் மாதிரி உருவாக்கத்
தெரியாது. பழங்குடி இன மக்களின் குரலை பதிவு
செய்திருக்கிறேன். இது நம் மண்ணின் கதை. நம் பூர்வீக
மக்களின் சரிதம். இது வேறு மாதிரி இருக்கும்.

எந்த மாதிரியான கையாளுகை கதையில் இருக்கும்….

தண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் குடிப்போம் என்று
நினைத்துக் கூடப் பார்த்தது கிடையாது. ஆனால், நாளை
காற்றுக்கும் காசு கொடுத்து வாங்கி சுவாசிக்க வேண்டிய
நிலை வரும்.

நடப்பவற்றைப் பார்த்தால், அதற்கான அறிகுறிகள்
தெரிகின்றன. மீத்தேன் தொடங்கி இப்போது பரபரப்பாகப்
பேசுகிற 8 வழி பசுமைவழிச்சாலை வரைக்குமான
போராட்டங்களும், உணர்வுகளும் இதில் உண்டு.

இயற்கைக்கும், அது தருகிற செல்வத்திற்கும் அங்கே
இருக்கிற மக்கள் அமோகமாக இருக்க வேண்டும்.
ஆனால், நிலைமை என்ன? இயற்கை அழிந்துகொண்டு
இருக்கிறது.

அதனால் இழப்பு, நமக்குத்தானே தவிர இயற்கைக்கு
இல்லையென்று யாருக்கும் தெரியவில்லை. மலை மக்களின்
குரல் இதிலே பதிவாகியுள்ளது. சொல்லப்போனால் இதில்
என் குரலும், உங்களின் குரலும் அடங்கியிருக்கிறது.

எந்த விதத்திலும் உரிமையை மீட்டெடுக்க வேண்டும்
என்பதுதான் பிரதானப் பகுதி. மலை மக்களிடம் மிச்சம்
இருப்பவை வாழ்வின் மீதான தீராத நம்பிக்கையும்,
நம் மண்ணின் சொற்களும்தான். ஏதோ ஒரு நாளில் தமது
சொந்த மண்ணில் இருந்து வெளியேறும் அல்லது
விரட்டப்படும் கணங்கள் செத்துப் போகிற வரைக்கும்
மறக்குமா என்ன….?

சுற்றுலா வளர்ச்சி என்பது இங்கே இன்றியாமையாத
விஷயமாகவும் மாறி வருகிறது…

அது தவறில்லை. ஆனால், எல்லாவற்றுக்கும் விலை வைக்க
ஆரம்பித்ததால்தான் மனிதம் மட்டும் மலிவாகி விட்டது.
இதோ மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக, எத்தனை
தமிழ் கிராமங்களின் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறோம்.

பணம் வாழ்க்கையில் இரண்டாம் பட்சம் ஆகி விட்டால்,
உலகத்தில் நம் வாழ்க்கையில் பாதிப் பிரச்னைகள் இல்லாமல்
போய் விடும். இன்னும் நிறைய நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள்.

நல்ல தலைவர்கள், ஆன்மிகவாதிகள், அதிகாரிகள்
கிடைப்பார்கள். சரிபாதி குற்றங்கள் தொலைந்து விடும்.
தேவைக்குத்தான் பணமே தவிர, ஆசைக்குப் பணம் இல்லை.
பசி, வலி… இந்த இரண்டையும் ஜெயிக்கத் தெரிந்து விட்டால்
வாழ்க்கையை ஜெயித்து விடலாம்.

வயிற்று பசிக்குச் சாப்பிடத்தான், நமக்குப் பணம் தேவை
ஆனால், நாக்கு ருசிக்காகச் சாப்பிட ஆரம்பிக்கும்போது,
பணத்தின் மீது நமக்கு வெறியாகிறது. இலக்குகள்,
லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின்
வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன்
உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான்
கொடுத்து வைத்தவர்கள். அவர்களை விட்டு விடுங்கள்
என்பதைத் தவிர வேறு என்ன சொல்லி விட முடியும்.

ஒளிப்பதிவு, இயக்கம் இரண்டுமே பெரும் பொறுப்பு… எப்படி
சமாளித்தீர்கள்?

பெரிய திட்டமிடல்கள் இருந்தன. சமூகம் சார்ந்த படம் எப்படி
இருக்க வேண்டுமோ, அப்படியே கொண்டு வந்திருக்கிறேன்.
பருவம் தப்பிய மழை. எல்லாமும் மாறி விட்டது. இதோ இன்னும்
சென்னைக்கு சரி வர மழை இல்லை.

இயற்கையின் சமநிலைக்கே எதிரான இயற்கையின்
வியூகங்கள் வந்து விட்டன. இதையெல்லாம் ஆராய்ந்து கதை
எழுதினேன். அங்கே ஒரு காதல், கலாசாரம், பண்பாடு என்று
கதை தனக்குத் தேவையான எல்லாவற்றையும் எடுத்துக்
கொண்டது. வினோத் கிஷன், “அம்மு’ அபிராமி என பக்க பலம்
கொண்ட நடிகர்கள் துணைக்கு வந்தார்கள். தயாரிப்பாளர்
உள்ளிட்ட எல்லோருக்கும் நன்றிகள்..

——————————-
By -ஜி.அசோக்
தினமணி


முறுக்கு மீசை… முரட்டுப் பார்வை! அசரடிக்கிறார் வால்டர் சிபி

முறுக்கு மீசை... முரட்டுப் பார்வை! அசரடிக்கிறார் வால்டர் சிபி 28

கம்பீரமாக இருக்கிறார் சிபி. முறுக்கு மீசை சுமக்கும் உதடு.
‘ஜிம்’ உபய ‘கும்’ உடம்பு. அழுத்தமாக கை கொடுக்கிறார்.
சுருட்டிவிட்ட அரைக்கை சட்டையில் எகிறித் திமிறுகிறது ஏற்றி
வைத்த ஆர்ம்ஸ்.

மிரட்டல் லுக்கில் புன்னகைக்கிறார் சிபி. ‘‘வெரி ஹேப்பி!
‘வால்டர்’ என் கேரியரில் நல்ல படமாக இருக்கும்னு தோணுது.
‘நாய்கள் ஜாக்கிரதை’க்குப் பிறகு கொஞ்சம் கவனமாகவே
வருது என் படங்கள்.

‘ஜாக்ஸன் துரை’, ‘சத்யா’ நல்ல பெயரெடுத்து வசூலையும்
பார்த்தது. ‘வால்டர் வெற்றிவேல்’ படம் 1993ல் வரும்போது
அப்பாவுக்கு அது பெரிய வெற்றிப்படம். அந்த வருஷத்தில்
அதுதான் வசூலை அள்ளிக் குவித்த ரெக்கார்ட்.

‘வால்டர்’னு பெயர் கேட்டதும் அப்பாவிற்கு நியாயம் ப
ண்ணனும்னு சின்ன பயம். ஆனால், அவ்வளவு களை கட்டியது
கதை. அப்படியே உள்ளே போய் மூட் செட் பண்ணிட்டு அதிலேயே
இருந்திட்டேன்…’’ சிதறடிக்கிற புல்லட் பார்வை பார்த்துப் பேச
ஆரம்பிக்கிறார்.

டிரைலரே அசத்தலாக இருக்கு…முதன் முறையாக என்னோட கெட்
அப் மக்களுக்குப் பிடிச்சு இணையதளத்தில் ட்ரண்டிங்கில் ரொம்ப
நேரம் தாக்குப் பிடிச்சது ரொம்ப சந்தோசம்.

போலீஸ் படம், ஆக்‌ஷன் த்ரில்லர்னு இதை ஒரு வரியில் சொல்லிட
முடியாது. ரொம்பப் புதுசா கதறடிக்கிற ஆக்‌ஷனுக்குள்ளே நிறைய
உணர்வு பூர்வமான விஷயங்களையும் வெச்சிருக்கார் டைரக்டர்
அன்பு

முறுக்கு மீசை... முரட்டுப் பார்வை! அசரடிக்கிறார் வால்டர் சிபி 28a

எனக்கும், அன்புக்கும் என்ன ஐடியான்னா… டெக்னிக்கலாவும்,
ஸ்கிரிப்ட் ஸ்டைல்லேயும் அடுத்த கட்டத்திற்குப் போகிற மாதிரி
ஒரு படம் பண்ணணும்கிறதுதான். ‘வால்டர்’ அப்படி வந்திருக்கு.

ஒரு போலீஸ் ஆபீஸரை சுற்றி நடக்கிற கதைதான். கும்பகோணம்
மாதிரி இடத்தில் நடக்கிற கதை. ஆனால் இதுவரைக்கும் பார்க்காத
கலர்ல படம் இருக்கும். அப்பாவுக்கு ‘வால்டர் வெற்றிவேல்’,
சூர்யாவுக்கு ‘காக்க காக்க’, விக்ரமுக்கு ‘சாமி’ மாதிரி எனக்கு
ஒரு நல்ல அடையாளமும், வெற்றியும் கொடுக்கும்னு நிச்சயமாக
நம்புகிறேன்.

என்ன ஆச்சரியம்னா ‘வால்டர் வெற்றிவேல்’ பண்ணும்போது
அப்பாவுக்கு 38 வயது. நான் 37 வயதில் இந்தப் படம் பண்றேன்.
எனக்கு டைம் முக்கியமில்லை… இனிமேல் ஒவ்வொண்ணும்
பெஸ்ட்டா வரணும்னு நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரைக்கும் நல்ல டைரக்டரும் நல்ல நடிகனும்
மனப்பூர்வமாக இணைந்து கை கொடுக்கும் போதுதான் மேஜிக்
நடக்கும். பக்காவான கதை. பக்கபலமாக புரொடியூசர் பிரபு திலக்.
திலகவதி ஐபிஎஸ் அவர்களின் மகன்.

ஒரு போலீஸ் அதிகாரியின் செயல்பாடுகள் எப்படியிருக்கும்,
செயல்முறைகள், அவர்கள் எப்படி பொது வெளியில்
நடந்துக்கணும்னு இருக்கிற விதிமுறைகளை எல்லாம் சில போலீஸ்
அதிகாரிகள் கிட்டே தெரிஞ்சிக்க வைச்சார்.

அது ரொம்ப உபயோகமாக இருந்தது. படத்திற்கு என்ன கேட்டாலும்,
அதன் மதிப்பு கெடாமல் செய்து கொடுப்பார்.

எக்கச்சக்க போலீஸ் படங்கள் வந்திருக்கு… இது என்ன வகை?

இது வேற கதை. வேற கலர். நீங்க சொன்ன ஒவ்வொருத்தரும்
அவங்களுக்குரிய நடிப்பை அதில் வைச்சாங்க. காதல், ஆக்‌ஷன்,
எமோஷன், த்ரில்னு எல்லாமே ‘வால்டரில் இருக்கு. போலீஸ்
கதையா 100 படம் பார்த்திருப்பீங்கதான். ‘வால்டர்’
ட்ரீட்மென்ட்டில் பின்னி எடுக்கிற கதை.

தீப்பிடிக்கிற ரகத்தில் திரைக்கதையிருக்கு. நான் உறுதியாக
நினைக்கிற ஒரு விஷயம், உழைப்பு மட்டும்தான் நம்மகிட்டே
இருக்கு. படம் நல்லாயிருந்து பார்க்கிறவங்க மனசுக்கும் பொருந்தி
இருந்தால் ஓடும்.

எல்லாமே டைரக்டர் கொடுக்கிற விதமும், நடிகர்கள் நாங்க
நடிக்கிற விதமும்தான். அந்தக் கோர்வைதான். இதில் தீவிர
உடற்பயிற்சியில் உடம்பை உருமாற்றினேன்.

ஹீரோயின் ஷெரின்…நல்ல ஆர்டிஸ்ட் என்ன தேவையோ அதை
சிறப்பாக கொடுத்திருக்காங்க. சந்தானத்தோட ‘டகால்டி’யில்
கூட அவங்கதான் ஹீரோயின்.

முறுக்கு மீசை... முரட்டுப் பார்வை! அசரடிக்கிறார் வால்டர் சிபி 28b

அவங்களுக்கு இதில் ரொம்ப நல்ல ரோல். ஷூட்டிங்கிற்கு வந்தோம்,
நிறைவாக நடிச்சுக் கொடுத்திட்டுப் போனோம்னு இருக்காங்க.
நிச்சயம் அவங்களும் ஒரு பெரிய ரவுண்ட் வருவாங்கன்னு
தோணுது.

நட்டி, சமுத்திரக்கனி இரண்டு பேருக்கும் செம ரோல்கள் இருக்கு.
ராசாமதிதான் கேமரா. மியூசிக்கிற்கு தர்ம பிரகாஷ் என்பவரை
அறிமுகம் செய்திருக்கோம். அவர் புதுசுங்கிற தினுசில் இல்லாமல்
மெனக்கெட்டு ம்யூசிக் செய்திருக்கார்.

படத்திற்கு தேவையான நியாயமான இடங்களில் பாடல்கள்
அமைஞ்சிருக்கு.

இப்ப என் கேரியர் நல்ல நிலையில் இருக்கு. அப்பா இன்னிக்கும்
சரியான திட்டமிட்டு பிஸியாக தன்னை வச்சிருக்கார். சின்ன
வேடம்னு ஆரம்பிச்சு, ஹீரோவாகி, ஒரு கட்டத்திற்குப் பிறகு
‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘பெரியார்’னு திசை திரும்பி,
இப்ப நல்ல கேரக்டர் ஆர்டிஸ்ட்னு நிக்கிறார்.

ஒண்ணும் அவசரமில்லை, அவருடைய அனுபவம் கைக்குள்
வரும்போது எல்லாம் சரியாக இருக்கும்னு நம்புறேன்.

அடுத்து தனஞ்செயன் சார் தயாரிப்பில் ‘கபடதாரி’,
இயக்குநர் ‘மதுபானக்கடை’ கமலக்கண்ணன் டைரக்‌ஷனில்
‘வட்டம்’னு ஜாலியா, ரசனையாக ஒரு படம் இருக்கு. ‘ரங்கா’,
அப்புறம் ‘மாயோன்’னு ஒரு ஃபேன்டஸி படம்னு அடுத்தடுத்து
வருது.

‘வால்டரில்’ ஒரு நல்ல போலீஸ்காரனின் அருமையான
சூழலைக் காட்டியிருக்கோம். மக்கள் பார்த்திட்டு சொல்லணும்.
அந்த நாளுக்காக காத்திருக்கோம்!

—————————-
நா.கதிர்வேலன்
குங்குமம்

ஒரே நாளில் வெளியாகும் சந்தானத்தின் 2 படங்கள்

    ஒரே நாளில் வெளியாகும் சந்தானத்தின் 2 படங்கள் 202001130917253362_santhanam-2-films-releasing-same-day_SECVPF

காமெடி நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக
வலம் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும்
2 படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சந்தானம்
தற்போது ஹீரோவாக நடித்து வலம் வருகிறார்.
சமீபத்தில் வெளியான ‘ஏ1’ திரைப்படம் ரசிகர்களை
கவர்ந்து வெற்றிகரமாக ஓடியது. தற்போது

இவரது நடிப்பில் ‘டகால்டி’ திரைப்படம் உருவாகியுள்ளது.

விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்திற்கு
ஜோடியாக ரித்திகா சென் நடித்துள்ளார். யோகிபாபு,
ராதாரவி, சந்தான பாரதி, மனோபாலா உள்ளிட்ட பலர்
இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் வருகிற ஜனவரி
31ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர்
அறிவித்துள்ளனர்.

டகால்டி – சர்வர் சுந்தரம்

அதே தினத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி நீண்ட காலமாக
வெளியாகமல் இருந்த ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படமும்
வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் பால்கி
இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி
சாண்டில்யா நடித்திருக்கிறார்.

பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன்,
ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பாட், மாயா
சுந்தரகிருஷ்ணன், பூனம் ஷா, பிரியங்கா ஷா உள்ளிட்ட

பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


மாலைமலர்

ரஜினியின் ’நெற்றிக்கண்’படத்தை ரீமேக் செய்ய ஆசை – தனுஷ்

ரஜினியின் ’நெற்றிக்கண்’படத்தை ரீமேக் செய்ய ஆசை - தனுஷ் 202001121851586448_Dhanush-want-to-remake-rajinis-netrikann_SECVPF

துள்ளுவதோ இளமை படம் மூலம் திரையுலகில் அறிமுகமான
தனுஷ், அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி
நடிகராக வலம் வந்தார்.

இவர் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்திற்காக
தேசிய விருது வென்றார். இவர் கோலிவுட் படங்களில்
மட்டுமல்லாது, பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம்
நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடித்துள்ள
பட்டாஸ் திரைப்படம் வருகிற 15-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் சமீபத்திய பேட்டியில்,
30 வருடங்களுக்கு முன்பு ரஜினி நடித்த படத்தை ரீமேக்
செய்ய ஆசை என தெரிவித்துள்ளார்.

ரஜினி நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்த நெற்றிக்கண்
படத்தினை தான் ரீமேக் செய்ய தனுசுக்கு ஆசையாம்.
நெகடிவ் வேடத்தில் நடித்தால் மக்கள் வெறுப்பார்கள்,
ஆனால் ரஜினியின் இந்த பிளேபாய் ரோலை அனைவரும்
ரசித்தார்கள் என கூறியுள்ளார்.

———————————
மாலைமலர்

யோசிப்பதற்குள் எல்லாம் நடந்துவிட்டது: ஆசிட் வீச்சுத் தாக்குதலை நினைவுகூர்ந்த கங்கனா சகோதரி

யோசிப்பதற்குள் எல்லாம் நடந்துவிட்டது: ஆசிட் வீச்சுத் தாக்குதலை நினைவுகூர்ந்த கங்கனா சகோதரி Kangana_Ranaut_sister_Rangoli_Chandel


தன் மீதான ஆசிட் வீச்சுத் தாக்குதல் சம்பவத்தை
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சகோதரி
சுட்டுரையில் நினைவகூர்ந்துள்ளார்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாகியுள்ள
திரைப்படம் சபாக். ஆசிட் வீச்சு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட
லட்சுமி அகா்வால் என்ற பெண் அளித்த தகவலின் அடிப்படையில்
இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது .
இந்த திரைப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டாா் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

யோசிப்பதற்குள் எல்லாம் நடந்துவிட்டது: ஆசிட் வீச்சுத் தாக்குதலை நினைவுகூர்ந்த கங்கனா சகோதரி Kangana_Ranaut_sister_Rangoli_Chandel_1

இந்நிலையில், தேசிய விருது பெற்ற முன்னணி பாலிவுட்
நடிகை கங்கனா ரனாவத் சகோதரி ரங்கோலி சந்தல்,
தன் மீதான ஆசிட் வீச்சுத் தாக்குதல் சம்பவத்தை நினைவு
கூர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரையில்
பதிவிட்டதாவது,

என் மீது ஆசிட் வீசிய நபரின் பெயர் அவினாஷ் ஷர்மா,
நான் படித்த அதே கல்லூரியில் படித்தவர். நாங்கள்
இருவரும் ஒரே நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

ஒருநாள் அவினாஷ் என்னிடம் காதலைத் தெரிவித்தார்.
ஆனால் எனக்கு அவர் மீது காதல் ஏற்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அவினாஷ், ஒருநாள் என்னை
எதாவது செய்யப்போவதாக சக நண்பர்களிடம்
தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், விமானப்படை அதிகாரியுடன் எனக்கு
திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இது அவினாஷுக்குப்
பிடிக்கவில்லை. என் மீது ஆசிட் வீசுவதாக மிரட்டினார்.
ஆனால், அவரது மிரட்டலை நான் பெரிதாக எடுத்துக்
கொள்ளவில்லை. மேலும் எனது பெற்றோர்களிடம்
இதுகுறித்து தெரிவிக்காததும், போலீஸில் புகார்
அளிக்காததும் தான் நான் என் வாழ்நாளில் செய்த
மிகப்பெரிய தவறு.

4 தோழிகளுடன் ஒரு விடுதியில் தங்கியிருந்த சமயம்,
என்னைத் தேடி ஒருவர் வந்திருப்பதாகக் கூறி என்
தோழி விஜயா, அறையின் கதவைத் திறந்தார்.
ஒரே நொடிதான், தன்னிடம் வைத்திருந்த ஆசிட்டை
என் மது வீசினான், யோசிப்பதற்குள் எல்லாம் நடந்து
முடிந்துவிட்டது என்று தெரிவித்தார்.

தினமணி

படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத நயன்தாரா

இந்த வார சினிமா செய்திகள் 202001071341322688_Netizens-troll-nayanthara_SECVPF


தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நயன்தாரா. இவர் கடந்த ஆண்டு சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்மா ரெட்டி’, விஜய்யுடன் ‘பிகில்’, அஜித்துடன் ‘விஸ்வாசம்‘, தனி கதாநாயகியாக ‘ஐரா’, சிவகார்த்திகேயனுடன் ‘மிஸ்டர்.லோக்கல்’ ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் எந்த படத்தின் நிகழ்ச்சியிலும் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை.

சீரஞ்சிவி நடித்த ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையாக மாறியது. கோடிகளில் சம்பளம் வாங்குபவர் விளம்பர நிகழ்ச்சிகளில் எப்படி கலந்து கொள்ளாமல் இருக்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், எதற்குமே நயன்தாராவோ படக்குழுவினரோ பதில் அளிக்கவில்லை.

ஆனால் நயன்தாரா விருது நிகழ்ச்சிகள் என்று வரும்போது, அதை மறுக்காமல் வாங்குவதற்கு கலந்து கொள்கிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் படங்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதவர், எப்படி விருது நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொள்ளலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

நயன்தாரா பட விழாக்களை புறக்கணிப்பது சமூகவலைதளங்களில் விவாதமாக மாறி இருக்கிறது. பேட்டிகள், சமூக வலைதளம் என அனைத்திலும் இருந்து ஒதுங்கியிருக்கும் நயன்தாரா இந்த கேள்விக்கும் பதில் அளிக்க மாட்டார் என்கிறார்கள். இந்த ஆண்டு அவர் நடிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தின் விழாவில் கலந்து கொள்வார் என்று திரையுலகினர் கருதுகிறார்கள். ஏனென்றால், மிலந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் என்பது தான் இதற்கு காரணம்.

மாலைமலர்

தொலை தூரத்தில் வெளிச்சம் நீ..பூர்ணாவின் அட்டகாச ஆல்பம்

9

தொலை தூரத்தில் வெளிச்சம் நீ..பூர்ணாவின் அட்டகாச ஆல்பம் 157865072634732

தமிழ் சினிமாவில் குறைவான படங்கள் நடித்தாலும்,
அதிக ரசிகர்களை வைத்துள்ள நடிகை பூர்ணாவின்
அழகிய புகைப்படங்கள் இதோ…

தொலை தூரத்தில் வெளிச்சம் நீ..பூர்ணாவின் அட்டகாச ஆல்பம் 1578650796552


தொலை தூரத்தில் வெளிச்சம் நீ..பூர்ணாவின் அட்டகாச ஆல்பம் 1578650031688


தொலை தூரத்தில் வெளிச்சம் நீ..பூர்ணாவின் அட்டகாச ஆல்பம் 1578650045964

சிம்ரன், திரிஷா இருவரின் கலவை தான் பிரியா பவானி சங்கர்: நடிகர் புகழாரம்!

சிம்ரன், திரிஷா இருவரின் கலவை தான் பிரியா பவானி சங்கர்: நடிகர் புகழாரம்! Text_priya11578744965

நடிகைகள் சிம்ரன், திரிஷா இருவரின் கலவை தான்
பிரியா பவானி சங்கர் என்று இயக்குநரும் நடிகருமான்
எஸ்.ஜே.சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார்.

இருக்கு ஆனா இல்ல என்ற ஒற்றைவரி வசனத்தில் தமிழ்
திரையுலகையே கலக்கியவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.

விஜய், அஜித் உள்ளிட்டவர்களை வைத்து ஹிட்டான படங்களை
இயக்கி, முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்துவரும்
இவர், ஹீரோ, வில்லன் உள்ளிட்ட கேரக்டர்களிலும் நடிப்பை
வெளிப்படுத்தி கெத்துக்காட்டி வருகிறார்.

அதனடிப்படையில், இவர் நடிப்பில் சமீபத்தில்
வெளியான மான்ஸ்டர் படம் அனைவரையும் கவர்ந்து.
இதையடுத்து, மான்ஸ்டர் பட நாயகி பிரியா
பவானி சங்கர் உடன் பொம்பை என்ற பத்தில் எஸ்.ஜே.சூர்யா
தற்போது நடித்து வருகிறார்.

இயக்குநர் ராதா மோகன் இயக்கும் இந்த படம் குறித்து தனது
ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எஸ்.ஜே.சூர்யா,
முன்னணி நடிகைகளான சிம்ரன், திரிஷாவை போல்
தற்போதும் ஒரு ஹீரோயின் உள்ளார் என்று பிரியா பவானி
சங்கருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் இது பிரியா பவானி சங்கர் அல்ல நடிகை
சிம்ரன் கொஞ்சம், நடிகை திரிஷா கொஞ்சம் என்று பதிவிட்டுள்ளார்.

குமுதம் (-சினிமா)

« Older entries Newer entries »