பொன்னியின் செல்வன் பட பாடல் -அலைகடல் – பூங்குழலியின் ஆழ்மன ஆலாபனை

நன்றி: இந்து தமிழ் திசை

பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு

இன்னிசை பாடி வரும்…

படம்-துள்ளாத மனமும் துள்ளும்
வரிகள்- வைரமுத்து
குரல்- உன்னிகிருஷ்ணன்
இசை- எஸ்.ஏ.ராஜ்குமார்

————————————-
இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை ..
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ..
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ..
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதிலேயே ..
இந்த வாழ்கயே ஒரு தேடல் தான் ..
அதை தேடி தேடி தேடும் மனசு தொலைகிறதே ..

கண் இல்லை என்றாலோ நிறம் பார்க்கமுடியாது ..
நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்க முடியாது ..
குயில் இசை போதுமே அட குயில் முகம் தேவையா ?
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா ?
கண்ணில் காட்சி தோன்றி விட்டால் கற்பனை தீர்ந்துவிடும் ..
கண்ணில் தோன்ற காட்சி என்றால் கற்பனை வளந்து விடும் ..
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே ..

இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை ..
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ..

தொழிற்சாலை ரோபோக்கள்

-தினமணி கதிர்

ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?

at 21:02

ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன? Mn2QuhD

ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன? E3mQINv

ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன? I1ePSsJ


சுமைதாங்கி சாய்ந்தால்…

படம்- தங்கப் பதக்கம் (1974)
பாடல்- கண்ணதாசன்
இசை- எம்.எஸ்.விஷ்வநாதன்
பாடியவர்- டி.எம்.சௌந்தரராஜன்

——————————–

சுமைதாங்கி சாய்ந்தால்
சுமை என்ன ஆகும்
மணி தீபம் ஓய்ந்தால்
ஒளி எங்கு போகும்

சுமைதாங்கி சாய்ந்தால்
சுமை என்ன ஆகும்
மணி தீபம் ஓய்ந்தால்
ஒளி எங்கு போகும்

சிரித்தாலும் போதும்
தெய்வங்கள் கூடும்
சிரித்தாலும் போதும்
தெய்வங்கள் கூடும்
சிலை போல சாய்ந்தால்
தலை எங்கு போகும்

குல மங்கை கூந்தல்
கலைந்தாடலாமா
மலர் சூடு கண்ணே
மணவாளன் முன்னே
சுமைதாங்கி சாய்ந்தால்
சுமை என்ன ஆகும்
மணி தீபம் ஓய்ந்தால்
ஒளி எங்கு போகும்

மண மாலை கொண்ட
மதுரை மீனாட்சி
மண மாலை கொண்ட
மதுரை மீனாட்சி
நடமாட வேண்டும்
நான் தேடும் காட்சி

அலமேலு மங்கை
துணை உண்டு கண்ணே
அலங்கார மஞ்சள்
நிறம் காக்கும் உன்னை

சுமைதாங்கி சாய்ந்தால்
சுமை என்ன ஆகும்
மணி தீபம் ஓய்ந்தால்
ஒளி எங்கு போகும்

சுமைதாங்கி -(கவிதை) -மகேஸ்வரி பெரியசாமி

எனதன்பு தோழியே……!
வார்த்தைகள் வசப்படவில்லை,
உன் வாட்டத்தைப் போக்கிட……
சோதனைகளை நீ பட்டியலிட,
வேதனைகளில் விக்கித்து நிற்குது மனம்….

எண்ணங்களில் ஊடுருவும் ஆறுதல் மொழிகள்,
எடுத்தியம்புமுன் வழுக்குகின்றன உன் கண்ணீரில்….
ஆயிரமாயிரம் ஆறுதல் வார்த்தைகள் அடுக்கடுக்காய்
வரிசையில் நின்றாலும் வசமிழந்து தான் போகின்றன
உன் மௌனமான கதறல்களின் சிதறல்களில்….

தோள் சாய்ந்திடு தோழி…..
ஆனமட்டும் அழுது தீர்த்திடு….
என் அணைப்பினில் அடங்கிடு….
உன் சோகங்களை இறக்கிடு…
சுமைதாங்கியாய் நானிருக்கேன்….
பாசத்துடன் நீளும் கரங்களை,
இறுகப் பற்றிக் கொள்….. உன்
அனைத்து துயரங்களையும் என்
தோள் மீது ஏற்றி உன்னை விடுவிக்கின்றேன்
இந்தத் துன்பச்சிறையினில் இருந்து…………!

– : மகேஸ்வரி பெரியசாமி
நன்றி: எழுத்து.காம்

தத்தி தத்தி நடந்து வரும் தங்கப் பாப்பா

படம்- பொம்மை (1964)
பாடல்- வி.லட்சுமணன்
இசை- எஸ்.பாலசந்தர்
பாடியவர்- எல்.ஆர்.ஈஸ்வரி

தத்தி தத்தி
தத்தி தத்தி தத்தி தத்தி
தத்தி தத்தி
தத்தி தத்தி தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா

இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று
வந்த பாப்பா
உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன்
காட்டு பாப்பா

தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா

இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று
வந்த பாப்பா
உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன்
காட்டு பாப்பா

கையை வீசி கடைக்கு போகலாம்
சின்ன பாப்பா
கம்மல் வாங்கி காதில் மாட்டலாம்
செல்ல பாப்பா

கையை வீசி கடைக்கு போகலாம்
சின்ன பாப்பா
கம்மல் வாங்கி காதில் மாட்டலாம்
செல்ல பாப்பா

சொக்காய் வாங்கி சொகுசாய் போடலாம்
சின்ன பாப்பா
மிட்டாய் வாங்கி மெதுவாய் தின்னலாம்
செல்ல பாப்பாஆ..

தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா

நீ இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று
வந்த பாப்பா
உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன்
காட்டு பாப்பா

காக்காகிட்டே மை கிடைக்கும்
கண்ணுக்கு போடலாம்
குருவிக்கிட்டே பூ கிடைக்கும்
கொண்டைக்கு சூடலாம்

காக்காகிட்டே மை கிடைக்கும்
கண்ணுக்கு போடலாம்
குருவிக்கிட்டே பூ கிடைக்கும்
கொண்டைக்கு சூடலாம்

பசுவுகிட்டே பால் கிடைக்கும்
பசியை போக்கலாம்
கிளியின் கிட்டே பழம் கிடைக்கும்
ருசித்து தின்னலாம்

ஆசையோடு வாய் திறந்து
பேசு பாப்பா
அழகாக கைக்கொட்டி
ஆடு பாப்பா

சிப்பாய் போல நடந்து காட்டு
சின்ன பாப்பா
அப்பா அம்மா எனக்கு தந்த
ஜப்பான் பாப்பா

தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா

இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று
வந்த பாப்பா
உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன்
காட்டு பாப்பா

தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா

இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று
வந்த பாப்பா
உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன்
காட்டு பாப்பா

காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு

படம்: சேரன் பாண்டியன்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
வரிகள்: சௌந்தர்யன்


காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா

வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா
உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே
உங்கள் கடிதம் வந்ததால்
இன்பம் எங்கும் பொங்குதே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்திடும் இனிய சீதனம்

காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே

உயிரின் உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய் அறிந்தேன் தொடர்ந்தேன்
வானும் நிலவும் போலவே
மலரும் மணமும் போலவே
கடலும் அலையும் போலவே
என்றும் வாழவேண்டுமே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
(காதல்..)

பயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில்
உனது பெயர் தான் அதிகம் எனக்கு
வானம் கையில் எட்டினால்
அங்கும் உன்னை எழுதுவேன்
நிலவை கொண்டு வந்துதான்
பெயரில் வர்ணம் தீட்டுவேன்
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்…

ஒரு ஜீவன் அழைத்தது …!

படம்- கீதாஞ்சலி 1985
பாடல்-வாலி
இசை- இளையராஜா
பாடியவர்- இளையராஜா & கே.எஸ்.சித்ரா

———————

ஒரு ஜீவன்
அழைத்தது ஒரு ஜீவன்
துடித்தது இனி எனக்காக
அழவேண்டாம் இங்கு
கண்ணீரும் விழவேண்டாம்
உன்னையே எண்ணியே
வாழ்கிறேன்

முல்லைப்பூ
போலே உள்ளம் வைத்தாய்
முள்ளை உள்ளே
வைத்தாய் ஹோ

என்னைக்கேளாமல்
கன்னம் வைத்தாய் நெஞ்சில்
கன்னம் வைத்தாய் ஹோ

நீ இல்லை
என்றால் என் வானில்
என்றும் பகல் என்று
ஒன்று கிடையாது

அன்பே நம்
வாழ்வில் பிாிவென்பதில்லை
ஆகாயம் ரெண்டாய் உடையாது

இன்று காதல்
பிறந்தநாள் என் வாழ்வில்
சிறந்த நாள்
மணமாலை
சூடும் நாள் பார்க்கவே
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது

உன்னை நான்
கண்ட நேரம் நெஞ்சில்
மின்னல் உண்டானது

என்னை நீ கண்ட
நேரம் எந்தன் நெஞ்சம்
துண்டானது

காணாத அன்பை
நான் இன்று கண்டேன்
காயங்கள் எல்லாம் பூவாக

காமங்கள் ஒன்றே
என் காதல் அல்ல கண்டேனே
உன்னை தாயாக

மழை மேகம்
பொழியுமா நிழல் தந்து
விலகுமா

இனி மேலும்
என்ன சந்தேகமா

ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது

இனி எனக்காக
அழவேண்டாம்
லல லா லா
இங்கு கண்ணீரும்
விழவேண்டாம்
லல லா லா
உன்னையே எண்ணியே
வாழ்கிறேன்

உன்னையே
எண்ணியே வாழ்கிறேன்

« Older entries