ஒருவன் மனது ஒன்பதடா

இசை :கே.வி.மகாதேவன்
பாடியவர் :டி.எம்.சௌந்தராஜன்
—————————

ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

ஏறும் போது எரிகின்றான்
இறங்கும் போது சிரிக்கின்றான்(2)
வாழும் நேரத்தில் வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான்
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னல சேற்றில் விழுகின்றான்(2)
பேய்போல் பணத்தை காக்கின்றான்
பெரியவர் தம்மை பழிக்கின்றான்
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா

——————————-

சிரிப்புத்தான் வருகுதையா …

படம் – கல்கியின் ‘பொன்வயல்’
இயற்றியவர்-கவியோகி சுத்தானந்த பாரதி
பாடியவர் சீர்காழி.கோ.சிவசிதம்பரம்

—————————————

சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்
சிரிப்புத்தான் வருகுதையா

எரிப்பினை வைத்துள்ளே
இனிப்பாகப் பேசியே
வெத்துக்கதையாய் வாழும்
பித்தர் கூட்டத்தைக் கண்டால் (சிரிப்புத்தான்)

பல்லையிளித்துக் காட்டும்
பகட்டுக்கு கொட்டுவார்
பசியெனும் ஏழையை
பரிவின்றித் திட்டுவார்

செல்வம் கொள்ளையடித்தே
சிறையிலே பூட்டுவார்
திருடர் மிரட்டினாலே
திறவுகோலை நீட்டுவார் (சிரிப்புத்தான்)

நாமே சகலமென்று நாடகம் ஆடுவார்
நாலுதாசரும் பின்னே…யே
நாமாவளிப் பாடுவார்
ஏமாளி அலைந்தேய்க்கும்
கோமாளிக் கூத்துக்கள்
எத்தனை எத்தனை
பித்துலகத்தில் அந்தோ
எத்தனை…எத்தனை
பித்துலகத்தில் அந்…தோ… (சிரிப்புத்தான்)

————————————–

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958

_______________________________

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம்
ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணமாகுமடி தங்கமே தங்கம் ஆமா
கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணமாகுமடி தங்கமே தங்கம்
வண்ண மணி கைகளிலே தங்கமே தங்கம்
வண்ண மணி கைகளிலே தங்கமே தங்கம் ஆமா
வளையல்களும் குலுங்குமே தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

சுத்தச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
முத்ததிலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
குத்து வெளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்
குத்து வெளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

சக்கரை இனிக்கிற சக்கரை – சினிமா பாடல்

புத்தகம் இன்றி சொல்லி தாரேன் வா உத்தரவின்றி உள்ளே வா
கட்டணம் இன்றி சொல்லி தாரேன் வா உத்தரவின்றி உள்ளே வா
நித்திரை இன்றி சொல்லி தாரேன் வா வா வா
புத்தகம் இன்றி சொல்லி தாரேன் வா உத்தரவின்றி உள்ளே வா
கட்டணம் இன்றி சொல்லி தாரேன் வா உத்தரவின்றி உள்ளே வா
நித்திரை இன்றி சொல்லி தாரேன் வா வா வா

சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
நீ அக்கரை நான் இக்கரை
நீ அக்கரை நான் இக்கரை
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை

ஹேய் ஹேய் கேள்விக்கு பதில் என்ன தெரியாது
கலங்கி நிக்கிறேன் புரியாது
நீ சொல்லு நீ சொல்லு தெரிஞ்சிக்கிறேன்
நூறு மார்க்கு இந்த பரிட்சையில் வாங்கி காட்டுறேன்
உத்தரவின்றி உள்ளே வா சக்கரை இனிக்கிற சக்கரை
உத்தரவின்றி உள்ளே வா எறும்புக்கு என்ன அக்கறை
உத்தரவின்றி உள்ளே வா சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
நீ அக்கரை நான் இக்கரை
நீ அக்கரை நான் இக்கரை
என்னை சொக்கும்படி ஏம்மா வைக்கிர

கிட்ட வந்து தட்டு நீ கேட்காதைய்யா தவிலு
அது கேட்டா தட்டும் விரலு
சின்ன நூலை தன்னோடு சேர்த்து கொள்ளும் ஊசி
அந்த சங்கதி என்ன யோசி
என்னது பண்ணுது சிங்காரி
இப்படி நிக்கிற ஹொய்யாரி
உன் இரு கண் விழி பொல்லாது
உள்ளது எப்போதும் சொல்லாது
ராத்திரி நேர பூஜை தினம் புரிந்திட
உத்தரவின்றி உள்ளே வா
பூத்திரி ஏத்தி வைத்து அதை படித்திட
உத்தரவின்றி உள்ளே வா
மன்மத ராகம் ஒன்று மனம் இசைத்திட

வா வா சக்கரை இனிக்கிர சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
நீ அக்கரை நான் இக்கரை
நீ அக்கரை நான் இக்கரை
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை

ரொம்ப ரொம்ப பாசாங்கு பண்ணாதேடா கண்ணா
நான் பாவப்பட்ட பெண்ணா
மெத்தை மீது தாவாது
தத்தை ஒன்று வாடும்
என் வித்தை காண தேடும்

தொட்டதும் பட்டதும் பூ மலரும்
முத்திட முத்திட தேன் சிந்தும்
கற்றது உன்னிடம் கையளவு
உள்ளது என்னிடம் கடலளவு
இலக்கிய மாலை நேரம் மனம் மயங்குது
உத்தரவின்றி உள்ளே வா
சுகம் என்னும் வெல்லம் பாய
மடை திறந்தது
உத்தரவின்றி உள்ளே வா
இனி ஒரு கேள்விக்கான விடை கிடைக்குது வா வா

சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
நீ அக்கரை நான் இக்கரை
நீ அக்கரை நான் இக்கரை
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை

 –
————————————————-

சட்டி சுட்டதடா கை விட்டதடா

பாடல்: சட்டி சுட்டதடா கை விட்டதடா
குரல்: டி.எம்.சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
இசை : விஸ்வனாதன்-ராமமூர்த்தி
திரைப்படம்: ஆலயமணி

==

சட்டி சுட்டதடா கை விட்டதடா (2)
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா (2)
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா

(சட்டி)

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா (2)
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா

(சட்டி)

ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா (2) – மனம்
சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா

(சட்டி)

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா (2)
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

(சட்டி)

மார்கழிப் பூவே…காணொளி

—படம் : மே மாதம்
பாடல் : மார்கழிப் பூவே
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஷோபா சந்திரசேகர்

——————————————————————

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேனீர் குடிப்பேன்
வாழ்கையின் ஒரு பாதி நான் இங்கு ரசித்தேன்
வாழ்கையின் மறு பாதி நான் என்று ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்

(வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள் இன்பம்)
(பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள் )

காவேரிக் கரையில் நடந்ததுமில்லை
கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மகள் காணும் இன்பம் நான் கானவில்லை

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்

(வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள் இன்பம்)
(பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள் இன்பம்)
(பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள் இன்பம்)

=====

புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே – கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்

பிசாசு விமர்சனம்

பிசாசு- நிரைப்படத்தில் ஒரே பாடல் என்றாலும்
கதையின் ஜீவனை சுமந்து வருகிறது ,
கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியின் அருமையான
கவிதையாய் பாடலை தந்துள்ளார்.


போகும்பாதை தூரமில்லை
வாழும்வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள்கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள்விலகும் அகஒளியில்
அன்னம் பகிர்ந்திடு
அன்னம் பகிர்ந்திடு


நதிபோகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை
வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை
ஒவ்வொரு அலையின்பின் இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே
கருணைமார்பில் சுனை கொண்டவர் யார்அன்னை பாலென்றாளே
அருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார்
இறைவன் உயிரென்றாரே
பெரும் கை ஆசியிலும்
இரு கை ஓசையிலும்
புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே

—————————————————

கண்ணன் வந்து பாடுகின்றான்…!

இரட்டை வால் குருவி
நடிகர்: மோகன்
இசை: இளையராஜா

———————————————

[latest+Radh+Krishna+wallpaper.jpg]

Hare Krishna Maha Mega Photo Gallery

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபமென்றால் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபமென்றால் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபமென்றால் காதல் சொன்னான்

கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
பாதங்கள் வண்ண பண்கள் பாடுதே
மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
தாகங்கள் இன்பக்கள்ளில் ஊருதே
காதலென்னும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. ஓஓஓஹோஓ

காதலென்னும் கூட்டுக்குள்ளே ஆசைக்குயில் கொஞ்சுதம்மா
இவள் வண்ணம் கோடி சின்னம் தேடி
மின்னும் மின்னும் போது சொந்தம் கூட??
சந்தம் பாடி சொந்தம் தேடி
சொர்க்கங்கள் மலர்ந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபமென்றால் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபமென்றால் காதல் சொன்னான்

வானத்தில் செல்ல கண்ணன் பாடுவான்
கானத்தில் சின்னப் பெண்னும் ஆடுவாள்
ஆயர்கள் மட்டும் சத்தம் போலவே
ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே

மாலை நிலாஆஆஆஆ ஆஆஆஆஆ

மாலை நிலா பூத்ததம்மா
மௌனமொழி சொல்லுதம்மா
ஒரு அந்திப்பூவில் சிந்தும் தேனை
வந்து பேசும் தென்றல் வீசும்
கண்ணன் பாடும் கண்கள் மூட
கன்னங்கள் சிவந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபமென்றால் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபமென்றால் காதல் சொன்னான்

ஊரோரம் புளியமரம் உலுப்பி விட்டா சலசலங்கும்

படம் : பருத்திவீரன் (2007)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : பாண்டி, லட்சுமி, கலா, சரோஜா
வரிகள் : சிநேகன்

———————————————–

ஊரோரம் புளியமரம் உலுப்பி விட்டா சலசலங்கும்
ஊரோரம் புளியமரம் உலுப்பி விட்டா சலசலங்கும்
நாம் பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமைய்யா
நாம் பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமைய்யா

கூடுனமே கூடுனமே கூட்டு வண்டி காளை போலே
கூடுனமே கூடுனமே கூட்டு வண்டி காளை போலே
மாட்டினமே மாட்டினமே நாரப்பய கையி மேலே
மாட்டினமே மாட்டினமே நாரப்பய கையி மேலே

நாடறிஞ்ச அழகிகளா நீங்க எங்க ஜோடி
உங்களை கட்டிக்கவா வச்சிக்கவா சொல்லிப்புடுங்கடி
கத்தரிப்பூ ரவிக்கை போட்ட சின்னப்பைங்கிளி
கத்தரிப்பூ ரவிக்கை போட்ட சின்னப்பைங்கிளி
உன்னை குவாட்டருக்கு ஊறுகாயா தொட்டுக்க வாடி
உன்னை குவாட்டருக்கு ஊறுகாயா தொட்டுக்க வாடி

ஆளில்லாத காட்டுக்குள்ளே பயலே
ரவுசு பண்ணும் சின்னத்தம்பி
நைட் எல்லாம் ஆட்டம் போட்டு
எனக்கு காலு ரெண்டும் நோகுதடா
எனக்கு காலு ரெண்டும் நோகுதடா

அடி ராவெல்லாம் ஆட்டம் போட்டு
உனக்கு காலு ரெண்டும் இப்போ நொந்தால் என்ன
இந்த பருவமுள்ள பையங்கிட்ட
நீயும் பாசாங்கம் பண்ணாதடி பண்ணாதடி

பருவமுள்ள பையங்கிட்ட
நானும் பாசாங்கம் பண்ணவில்லை
பாசாங்கம் பண்ணுரண்டு நீயும்
அறிவுக்கெட்டு பேசாதடா
நீ அறிவுக்கெட்டு பேசாதடா

அடி மாடி மேலே மாடி வெச்சு மாரளவு ஜன்னல் வெச்சு
அப்டி போடு சித்தப்பு
எட்டி எட்டி பாத்தாலுமே எரவ பொண்டாட்டி நீதான்டி
ஆஹா ஆஹா ஆஹா
அடி காதறுந்த மூளி உன்னை கட்டுவேன்டி தாலி
அடி காதறுந்த மூளி உன்னை கட்டுவேன்டி தாலி

அட இந்த பாட்டு படிக்காதடா எனக்கு வெக்கம் ஆகுதடா
ஆமா ஆமா ஆமோய்
பொசக்கெட்ட பயலே உனக்கு பொண்டாட்டியும் கேக்குதாடா

நெத்தியிலே ஆமோய்
நெத்தியிலே பொட்டு வைச்சு நீ வரணும் சேலைக்கட்டி
நெத்தியிலே பொட்டு வைச்சு நீ வரணும் சேலைக்கட்டி
மத்தியான வெயிலுக்குள்ளே ஒத்தை வெளியிலே
மத்தியான வெயிலுக்குள்ளே ஒத்தை வெளியிலே
நீ மனசு வெறுத்து போற காரணம் எனக்கும் தெரியலை
நீ மனசு வெறுத்து போற காரணம் எனக்கும் தெரியலை

கோணாங்கிரப்பு வேட்டி குதிக்கால் உயர்த்தி கட்டி
கோணாங்கிரப்பு வேட்டி குதிக்கால் உயர்த்தி கட்டி
ஆசை காட்டி மோசம் செய்யிற ஆம்பளை நீங்க
ஆசை காட்டி மோசம் செய்யிற ஆம்பளை நீங்க
உங்களை அறிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க
உங்களை அறிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க

அடி அல்லி ஆமோய்
அல்லி மயிருயர்த்தி ஆதாரமா கொண்டையிட்டு
அல்லி மயிருயர்த்தி ஆதாரமா கொண்டையிட்டு
புள்ளிமானை போல துள்ளி போகும் வழியிலே
புள்ளிமானை போல துள்ளி போகும் வழியிலே
உங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்க முடியலை
உங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்க முடியலை

போடா போடா பொடிப்பயலே புத்தி கெட்ட மடப்பயலே
போடா போடா பொடிப்பயலே புத்தி கெட்ட மடப்பயலே
ஈனங்கெட்ட சின்னப்பய என்னென்னமோ பேசுரானாம்
உனக்கும் எனக்கும் சண்டை இப்போ உடைய போகுது மண்டை
அட உனக்கும் எனக்கும் சண்டை இப்போ உடைய போகுது மண்டை

அடியே குட்டப்புள்ள அன்னக்கிளி கிட்ட வந்து சேதி கேளு
அடியே குட்டப்புள்ள அன்னக்கிளி கிட்ட வந்து சேதி கேளு
பொறுப்புடனே நாங்க இருந்தா வெறுப்பு வராது
பொறுப்புடனே நாங்க இருந்தா வெறுப்பு வராது
எங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்க விடாது
எங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்க விடாது

கண்ணுக்கு மை அழகு…

படம்: புதியமுகம்

இசை: AR ரஹ்மான்

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடியவர்: உன்னி மேனன்

வெளியான வருடம்: 1993

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு
(கண்ணுக்கு..)

இளமைக்கு நடை அழகு
முதுமைக்கு நரை அழகு
கள்வர்க்கு இரவு அழகு
காதலர்க்கு நிலவு அழகு
நிலவுக்கு கரை அழகு
பறவைக்கு சிறகு அழகு
அவ்வைக்கு கூன் அழகு
அன்னைக்கு சேய் அழகு
(கண்ணுக்கு..)

விடிகாலை விண் அழகு
விடியும் வரை பெண் அழகு
நெல்லுக்கு நாற்று அழகு
தென்னைக்கு கீற்று அழகு
ஊருக்கு ஆறு அழகு
ஊர்வலத்தில் தேர் அழகு
தமிழுக்கு ழா அழகு
தலைவிக்கு நான் அழகு
(கண்ணுக்கு..)

« Older entries Newer entries »