இளையராஜாவுடன் இசையிரவு 20 | ‘மௌனமான நேரம்…’ – தனிமையோடு பேசும் கனவு கண்டு கூசும் காதல்!

கடந்த 1983-ம் ஆண்டு இயக்குநர் கே.விஸ்வநாத் இயக்கத்தில் வெளிவந்த ‘சலங்கை ஒலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களுமே இசைஞானி இளையராஜாவின் மேஸ்ட்ரோ டச் கொண்டவை.

அதிலும் குறிப்பாக, ‘மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்’ பாடல் ராஜாவின் ராஜகீதம். இந்தப் பாடலும், இளையராஜா – கவிஞர் வைரமுத்து காம்போவில் பிறந்த ஒரு கிளாசிக்கல் ஹிட் ரகம். பாடலை எஸ்பிபியுடன் இணைந்து ஜானகி அம்மா பாடியிருப்பார்.

பாடலை ஆஆஆஆஆஆஆ என்ற ஹம்மிங் உடன் ஜானகி அம்மா ஆரம்பித்து, மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம் என்று மெல்லியக் குரலில் பாடியிருப்பார். ஒரு மவுனம், நிசப்தம், அமைதி, பேரமைதி அத்தனையும் அந்த வரிகளைப் பாடும்போது பாடல் கேட்பவர்களுக்கு அழகாக கடத்தியிருப்பார்.

புதுமணத் தம்பதிகளை உள்ளனுப்பி தாழிட்டபோது உரசிக் கொண்ட அவர்களது கைப்பட்டு இறுகிப் போயின கதவுகள். அவள் வரும்பாதை என்பதையறிந்தே, தெரியாமல் அவ்வழியே செல்வது போல பாவனைக் காட்டியது அவனது கால்கள்.

அவள் கண்கண்ட மறுகணத்தில் அவனோடச் சேர்ந்தே மண்ணில் கவிழ்கிறது அவன் மனது. பதறி, சிதறியபடி பாதி வழியில் கால்கள் வேறு திசை நோக்கி நகர்ந்தாலும், அவளைப் பார்த்த இடத்திலேயே இன்னும் நின்று கொண்டிருக்கிறது அவனது கண்கள்.

இருளில் தட்டித்தடவிப் பார்பப்து போல கலை வண்ணத் தேரின் சக்கரத்தின் அச்சைப்பிடித்து ஆசுவாசப்பட்டுக் கொள்கிறது அலைபாய்ந்த மனது. நிலைநின்ற தேரின் ஓரமாய் அவனமர்ந்த நேரத்தில் வந்து சேர்ந்த அவளும் அதையேச் செய்து தோற்றுப்போகிறாள்.

அக்கணத்தில் இருவரும் பரிமாறிக் கொண்ட பார்வை பரிமாற்றத்தில், உயிர் பெற்ற கல் தேர் அவர்களைச் சுற்றி உலா வருகிறது என்பதைப் போல, பாடலின் தொடக்க இசைக்கும், பல்லவிக்கான காட்சிகளும் விரிந்திருக்கும். பாடலின் பல்லவியை,

“மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்”

தனக்கே உரிய புதுக்கவிதைப் போல் புனைந்திருப்பார்.

கவிதைப் போன்ற அமைதியைக் குலைக்க விரும்பாத இசைஞானி கிடார், கீபோர்ட், புல்லாங்குழல் போன்ற சொற்பமான கருவிகளை மட்டுமே பயன்படுத்தியிருப்பார்.

அவளது கூர்தீட்டிய பார்வையால், அதுவரை அவனறிந்திருந்த எல்லாமே தலைகீழாகிறது. கதவை திறப்பதும்கூட அவனுக்கு மறந்தப்போகிறது. செல்போன் அலைவரிசைப் போல வளைந்திருந்த அவளது மைத்தீட்டிய புருவ வளைவுகளின் வீச்சில் இறுக்கிக் கொண்ட கதவுகளைப் போலாகிறது அவன் மனது.

ஒருவழியாக கதவைத் திறந்து வீட்டினுள் செல்லும் அவர்களுடன் சேர்ந்தே பயணிக்கிறது நிழல். மாடிப்பாடிகள் மீதேறும் அவளுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்று, அவனது வரவா என்ற கண்வழி கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், அவளது நிழல் மட்டும் அங்கேயே நின்றுவிடுகிறது.

அவனது ஸ்பரிசத்தின் தகிப்புத் தலையேற, வெப்பத்தில் கொதிக்கிறது குளியலறை. உலை நெருப்பில் தணல்பட்டு உருகி கரைந்த சோப்பின் நுரையெங்கும் வீசி மணக்கிறது அவன் வாசம்.

காதல் சூழ் குளியலைறயில் அவனது நினைவுகள் முழுவதையும் மேனியெங்கும் பூசி மகிழ்கிறது அவள் மனம் என்ற வகையில் பாடலின் முதல் சரணத்துக்கு முன்வரும் இடையிசை மற்றும் முதல் சரணத்துக்கான காட்சிகள் இடம்பெற்றிருக்கும். முதல் சரணத்துக்கான வரிகளை கவிஞர் வைரமுத்து,

“இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ
குழம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
ஊதலான மார்கழி
நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி” என்று தட்டித் தூக்கியிருப்பார்.

அவன் காதலும், வாசமும் கண்மறைக்க, கைதேடிச் சென்று கண்டடைந்த குழாயிலருந்து பனிப்போலத் தூவுகிறது அவன் குறித்த விருப்பங்கள். குளிர்ந்த நீரில் கொதித்த அவளது காதல் நினைவுகளால் உடல் நனைய, மூழ்கிப்போகிறது அவள் மனது. ஈரத்தலையை காயவைக்க வந்தபோது, காதலால் கொதித்துப் பளபளக்கிறது

நிலா. காயும் நிலாச்சூட்டின் உஷ்ணத்தில் அவள் வீட்டு மாடியில் இரவில் தோன்றிய கானல்நீர் அவள் கூந்தலழகை பிரதிபலித்தது. மயங்கிப் போனவள் மனம் லயித்துக் கிடக்கையில், காற்றிலும் கமழ்ந்து நறுமணக்கிறது அவனது வாசனை. மயக்கம்போக சரிந்து சாய்ந்தவள் கண்களை மூடினாள்.

இமைகளுக்குள் ஓட்டியிருந்த அவனது முகம் மீண்டும் நினைவுக்குவர மெல்லியப் புன்னகையோடு விழித்துக் கொண்டே தூங்க முயற்சிக்கிறாள் அவள் என்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இரண்டாவது சரணத்துக்கு முன்வரும் இடையிசையும் இரண்டாவது சரணமும். இதற்கான வரிகள்,

“இவளின் மனதில் இன்னும் இரவின் மீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே, பாதம் போகுமோ
பாதை தேடியே, பாதம் போகுமோ
காதலென்ன நேசமோ
கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ” என்று எழுதப்பட்டிருக்கும்.

இந்தப் பாடல் முழுவதும் ஒரு பெண் தனக்குள் ஏற்பட்டுள்ள வெளியே சொல்ல முடியாத தவிப்புகளைக் கூறும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால், ஜானகி அம்மாவின் பாடல் முழுவதுமே ஆதிக்கம் செலுத்தியிருப்பார்.

ஆனால், இரண்டாவது சரணத்தின் கடைசி வரியைப் பாடும்போது, தனது சிக்னேச்சர் ஸ்டைல் ஸ்மைலில் ஒட்டுமொத்த பாடலையும் கொள்ளைக் கொண்டுவிடுவார் எஸ்பிபி. ராகதேவனின் தேவகானங்கள் தொடர்ந்து மவுனங்களைக் கலைக்கும்….

—குமார் துரைக்கண்ணு

நன்றி: இந்து தமிழ் திசை

சமரசம் உலாவும் இடமே

சமரசம் உலாவும் இடமே Lord-yama-1

திரைப்படம்: ரம்பையின் காதல்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: மருதகாசி
இசை: டி.ஆர். பாப்பா
ஆண்டு: 1956
———–

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர்
தீயோரென்றும் பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு
உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே அரசனும் எங்கே
ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி ஆ..ஆ..ஆ…ஆ.
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே சமரசம் உலாவும் இடமே

மீனா பொண்ணு மீனா பொண்ணு …

படம்- நாட்டாமை
இசை- சிற்பி
பாடல்- பழநிபாரதி

பாடியவர் – மனோ, சுஜாதா மோகன்


ஆண் : மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு

பெண் : ஐயா கண்ணு ஐயா கண்ணு
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு

ஆண் : கொய்யா கண்ணு என் கொய்யா கண்ணு
குளிருக்கு அணைக்கணும் ஒண்ணுக்கொண்ணு

பெண் : ஊரான் பொண்ணு நான் ஊரான் பொண்ணு
மஞ்ச தாலி கொடுத்தா மாமன் பொண்ணு

ஆண் : அடி மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு

பெண் : ஐயா கண்ணு ஐயா கண்ணு
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு (இசை)


ஆண் : செவ்வானம் தொட்டு தொட்டு
செந்தூரம் கொஞ்சம் இட்டு
செவ்வல்லி பூவில் செய்த தேகமோ

பெண் : மலையோடு தோள்கள் வாங்கி
மதயானை தேகம் வாங்கி
பொலிவான தோற்றம் உந்தன் தோற்றமோ

ஆண் : குற்றால சாரலுக்கும் கொடைகானல் தூரலுக்கும்
இல்லாத சுகம் உந்தன் வார்த்தையோ

பெண் : நாடோடி மன்னனுக்கும் ராஜராஜ சோழனுக்கும்
உண்டான வீரம் உந்தன் வீரமோ

ஆண் : உன்னை முழுசாக முத்தம் இட வேணும்

பெண் : உன்னை முழம் போட்டு அள்ளி கொள்ள வேணும்

ஆண் : என் குலை வாழையே இலை போடவா
ஏன் இன்னும் தாமதம்

அடி மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு

பெண் : ஐயா கண்ணு ஐயா கண்ணு
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு

சரணம் – 2

பெண் : மாரோடு பள்ளி கொள்ள
தோளோடு பின்னி கொள்ள
கண்ணா என் நெஞ்சு குழி காயுதே

ஆண் : உன்னை வேரோடு அள்ளி கொள்ள
காம்போடு கிள்ளி கொள்ள
கண்ணே என் கையிரண்டும் தாவுதே

பெண் : உந்தன் பூ மாலை தாங்கி கொள்ள
பொன் தாலி வாங்கி கொள்ள
இப்போது என் கழுத்து ஏங்குதே

ஆண் : உன்னை அங்கங்கே தொட்டு கொள்ள
அச்சாரம் இட்டு கொள்ள
எப்போதும் இந்த உள்ளம் ஏங்குதே

பெண் : அட மச்சானே இன்னும் என்ன பேச்சு

ஆண் : அடி மாங்கல்யம் செய்ய சொல்லி ஆச்சு

பெண் : குயில் உன் பேரையும் என் பேரையும்
ஒண்ணாக கூவிச்சு

ஆண் : அடி மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு

பெண் : ஏய்..ஐயா கண்ணு ஐயா கண்ணு
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு

ஆண் : ஏ..கொய்யா கண்ணு என் கொய்யா கண்ணு
குளிருக்கு அணைக்கணும் ஒண்ணுக்கொண்ணு

பெண் : ஊரான் பொண்ணு நான் ஊரான் பொண்ணு
மஞ்ச தாலி கொடுத்தா மாமன் பொண்ணு (இசை)

ஒரு இனிய மனது இசையை அனைத்துச்செல்லும் …

படம் – ஜானி
இசை – இளையராஜா
வரிகள்- கங்கை அமரன்

பாடியவர் – சுஜாதா


ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்

இன்பம் புது வெள்ளம்ஜீவனானது இசை நாதமென்பது…
முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசை
என்றானது
ஆஹா… எண்ணத்தின் ராகத்தின் மின்சாரங்கள்
என் உள்ளே மௌனத்தின் சங்கமங்கள்…
இணைந்தோடுது… இசை பாடுது…
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

மீட்டும் எண்ணமே… சுவையூட்டும் வண்ணமே…
மலர்ந்த கோலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே மனதின் பாவமே
ஆஹா… பருவ வயதின் கனவிலே பறந்து திரியும்
மனங்களே
கவி பாடுங்கள் உறவாடுங்கள்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்

இன்பம் புது வெள்ளம்

நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்

பாடியவர் : டி.எம். சௌந்தர்ராஜன்
வரிகள் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
திரைப்படம் : எங்கிருந்தோ வந்தாள்

நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை

நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை

என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் புரியவில்லை
வந்து பிறந்துவிட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை
அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா
அம்மா………… விவரம் புரியாதா

நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை

என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை
உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை
இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா…
இரக்கம் பிறக்காதா

நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை

கண்ணீலே நீர் எதற்கு? ஹோ காலமெல்லாம் அழுவதற்கு

திரைப்படம்: போலீஸ்காரன் மகள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

குரல்: சீர்காழி கோவிந்தராஜன், எஸ். ஜானகி


கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு? ஹோ
வஞ்சகரை மறாப்பதற்கு
கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு

இன்பமெனும் மொழியெதற்கு?
செல்வத்தில் மிதப்பவர்க்கு
துன்பமென்ற சொல்லெதற்கு?
உள்ளமென்ப துள்ளவர்க்கு
கண்ணீலே நீர் எதற்கு? ஹோய்
காலமெல்லாம் அழுவதற்கு

கையிலே வளைவெதற்கு?
காதலியை அணைப்பதற்கு
காலிலே நடையெதற்கு?
காதலித்து திரிவதற்கு

கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு

பாசமென்ற சொல்லெதற்கு?
பார்த்திருந்து துடிப்பதற்கு
ஆசை கொண்ட வாழ்வெதற்கு?
அன்றாடம் சாவதற்கு

கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு

பூவிலே தேனெதற்கு?
வண்டு வந்து சுவைப்பதற்கு
வண்டுக்கு சிறகெதற்கு?
உண்ட பின்பு பறப்பதற்கு

கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு? ஹோ
வஞ்சகரை மறாப்பதற்கு
கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு

நான் பார்த்த ரதிதேவி எங்கே

படம்: கண்ணில் தெரியும் கதைகள்
இசை: ஜி.கே.வெங்கடேஷ்
பாடியவர்: ஏ.எல்.ராகவன்
———————-

நான் பார்த்த ரதிதேவி எங்கே
நான் கேட்ட புதுப்பாடல் எங்கே
பொன்மாலை சூட நான் வந்த நேரம்
பெண்ணே நீ சிலையானதேன்
என் கண்ணே நீ கதையானதேன்
நான் பார்த்த ரதிதேவி எங்கே
நான் கேட்ட புதுப்பாடல் எங்கே

பூமலர் சேலையை நான் கொடுத்தேன்
பூவுடல் போர்த்தவா நீ நினைத்தாய்
பூமலர் சேலையை நான் கொடுத்தேன்
பூவுடல் போர்த்தவா நீ நினைத்தாய்
மூடிய உன் இமை பாடுமோ
உன் கண் என்னுடன் பேசுமோ

நான் பார்த்த ரதிதேவி எங்கே
நான் கேட்ட புதுப்பாடல் எங்கே

என்னையும் உன்னையும் ஏன் பிரித்தார்
இடையினில் கோடுகள் ஏன் கிழித்தார்
கனவுகள் புகையென ஆனதேன்
காற்றில் சேர்ந்தே போனதேன்

நான் பார்த்த ரதிதேவி எங்கே
நான் கேட்ட புதுப்பாடல் எங்கே

மரங்களும் இலைகளும் வாடுவதேன்
மலர்களும் நிறங்களை இழந்தது ஏன்
தாளமும் ராகமும் ஏங்கவே
ஜல் ஜல் ஜல் ஒலி நின்றதே

நான் பார்த்த ரதிதேவி எங்கே
நான் கேட்ட புதுப்பாடல் எங்கே
பொன்மாலை சூட நான் வந்த நேரம்
பெண்ணே நீ சிலையானதேன்
என் கண்ணே நீ கதையானதேன்

நன்றி-

http://thenkinnam.blogspot.sg/2010/06/blog-post_24.html

=

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

படம்- வண்டிக்காரன் மகன்
இசை – இளையராஜா
பாடியவர்கள் – பாலுவும் வாணிஜெயராமும்

——————————-

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

மேனகை போலொரு புன்னகை புதுப்பாட்டே
உன் மேனியின் சாரலோ ஆனந்த நீருற்றே..

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய
பழம் உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ
பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய
பழம் உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ

குடிக்க குடிக்க மனம் மிதக்க மிதக்க
தினம் வண்டாட்டம் கொண்டாட்டம் உண்டாகுமோ
ஓடை மீதாட ஓடம் நீர் வேண்டும்
உறவினில் நானாட ஒருவன் நீ வேண்டும்.

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

லா லா லா லா
ஹ் ஹா ஹா ஹா
லா லா லா லா
ஹ் ஹா ஹா ஹா

லா லா லா லா
ஹ் ஹா ஹா ஹா
லா லா லா லா
ஹ் ஹா ஹா ஹா

ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை
உல்லாச பல்லக்கில் ஊர்கோலமோஓ. ஓஒ
ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை
உல்லாச பல்லக்கில் ஊர்கோலமோ

நெருங்க நெருங்க மெல்ல ஒதுங்க ஒதுங்க
எனும் ஊடல்கள் யுவராணி ஒய்யாரமோ
மாலை விழலாமோ மஞ்சம் வரலாமோ
சேலையை தொடலாமோ கைகள் படலாமோ

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

நழுவ நழுவ என்னைத்தழுவ தழுவ வரும்
வித்தைகள் கண்ணா உன் வெள்ளோட்டமோ

மயக்கி மயக்கி பின்பு மறைத்து மறைத்து
வைத்தல் அன்பே உன் செல்வாக்கின் அடையாளமோ

காதல் விளையாட காமன்கிணையாக

காவல் தடைப்போட்டால் ஆவல் மீறாதோ

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

===================================-

வற்றாயிருப்பு சுந்தர்

http://myspb.blogspot.sg/2007_02_01_archive.html

சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ

பாடல்: சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ?
படம்: வாழ்க்கைப் படகு (ஆண்டு 1965)
கவியாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே ராமமூர்த்தி

==========================


சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

பால் மணக்கும் பருவத்திலே
உன்னைப் போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே
பித்துப் போல் படுத்திருந்தேன்
அன்னாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா
உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா
ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா
ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி
தேவன் தந்த தெய்வமொழி
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா…..
பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா…….
பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா…..
பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா…….
நன்றி கெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
நன்றி கெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்து விட்டால்
இல்லை ஒரு துன்பமடா

கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
——————————-

கண்ணே கலைமானே….

படம்:மூன்றாம் பிறை
இசை:இளையராஜா
பாடல்:கண்ணதாசன்
பாடியவர்:கே.ஜே.ஜேசுதாஸ்

————————————————–

கண்ணே கலைமானே….
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ…ஓராரிராரோ… ராரிராரோ…ஓராரிராரோ…

கண்ணே கலைமானே….
கன்னி மயிலென கண்டேன் உனை நானே


ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது


கண்ணே கலைமானே….
கன்னி மயிலென கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ…ஓராரிராரோ… ராரிராரோ…ஓராரிராரோ…



காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதானே என் சந்நிதி…


கண்ணே கலைமானே….
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ…ஓராரிராரோ… ராரிராரோ…ஓராரிராரோ…

 –

« Older entries