ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது இதை கவனிக்கவும்! – சமையல் டிப்ஸ்

போளி தட்டும் போது வாழை இலையின் பின் பக்கமாகத்
தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும்.

கொதிக்கும் பாலை உடனே உறை ஊற்ற வேண்டுமாயின்
ஒரு துண்டு வாழைப்பட்டையை நறுக்கிப் போட்டு மோர்
ஊற்ற வேண்டும்.

தீய்ந்தப் பாலில் சூடு ஆறும் முன்னர் மிளகைத் தட்டிப்
போட்டால் பாலின் ருசி மாறாமல் இருக்கும்.

கேக் அல்லது பிஸ்கட் செய்து முடித்தபின் ஓவன் சூடாகவே
இருக்கும். பழைய பிஸ்கட், முறுக்கு போன்றவற்றை உள்ளே
வைத்தால் புதிது போன்று மொரமொரப்பாக இருக்கும்.

ரசத்திற்கு தாளிக்கும் பொழுது சிறிது நெய்யில் கடுகுடன்
நான்கைந்து முழு மிளகையும் சேர்த்துத் தாளித்தால் ரசம்

மணக்கும்.

———————–

மகிழம்பூ அச்சில் முறுக்கு செய்யும் போது தேங்காய்ப்
பாலில் சிறிது சர்க்கரையைக் கலந்து பிசைந்தால்

முறுக்கு அதிகச் சுவையுடன் இருக்கும்.

புட்டு மிருதுவாக இருக்க மூன்றில் ஒருபாகம் புழுங்கல்
அரிசியையும், இரண்டு பாகம் பச்சை அரிசியையும்

மாவாக்கி தயார் செய்ய வேண்டும்.

உளுந்து வடை மாவு நெகிழ்ந்து விட்டால் ஒரு பிடி மெது
அவலைக் கலந்து தட்டினால் தட்ட இலகுவாகவும்

வடையின் மிருதுத்தன்மை குறையாமலும் இருக்கும்.

ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது, பச்சரிசியை
ஊற வைத்து அதனுடன் ஒரு மூடி தேங்காய்த் துருவல்,
ஒரு கரண்டி பழைய சாதம் முதலியவற்றையும் போட்டு
அரைத்தால் ஆப்பம் வாசனையாகவும், மிருதுவாகவும்

இருக்கும்.

வெண்டைக்காய், சேப்பங்கிழங்கு இவற்றை வதக்கும்
போது கொஞ்சம் கடலை மாவைத் தூவி வதக்கினால்
பொரியல் கொழகொழவென்று சேராமல் சிவந்து
மொறு மொறுவென்று இருக்கும்; எண்ணெய்யும் அதிகம்

தேவைப்படாது.

தேங்காய்ச் சட்னி தயார் செய்யும் போது
புளி சேர்ப்பதற்கு பதிலாக எலுமிச்சம் சாறை பிழிந்து
விடுங்கள். சட்னி சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக

இருக்கும்.

குழம்பு, பொரியல் செய்வதற்கு தக்காளியை நறுக்கும்
போது மிகவும் பொடியாக நறுக்கி சமைத்தால் விரைவில்

வெந்துவிடும்.


தினமணி

Advertisements

சத்து மாவு புட்டு

ஓவியம் – கவிதை

சத்தான சிறுதானிய சாமைப் பணியாரம்

ஆட்டுக்கறி முட்டை கூட்டு

டிப்ஸ….டிப்ஸ்

பொங்கல் கூட்டு!

தேவையான பொருட்கள்:

உருளைக் கிழங்கு – 1
அவரைக்காய் – 6
கத்தரிக்காய் – 2
வாழைக்காய் – 1
சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 1
மிளகாய் வற்றல் – 4
கடலைப் பருப்பு – 50 கிராம்
பச்சை மொச்சை – 50 கிராம்
பரங்கிக்காய் – சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் துாள் – 1 சிட்டிகை
மல்லி பொடி – 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 2 மேஜைகரண்டி
கடலைப் பருப்பு – 1 தேக்கரண்டி
மிளகு – சிறிதளவு
சீரகம் – 1 தேக்கரண்டி
எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு

– தேவையான அளவு.

செய்முறை:

துவரம் பருப்பை, மஞ்சள் துாள், உப்பு சேர்த்து வேக விட்டு,
குழைத்து வைக்கவும். காய்ககளை நறுக்கி, கடலைப்
பருப்புடன், உப்பு, மஞ்சள் துாள் சேர்த்து வேக விடவும்.

காய்கறி குழைந்து விட கூடாது; நெத்தாக வெந்து இருக்க
வேண்டும். துருவிய தேங்காயுடன் சிறிது நீர் சேர்த்து,
விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில், சிறிது எண்ணெய் விட்டு, தாளித்து, வெந்த
காய்கறி கலவையுடன் அரைத்த விழுதையும் சேர்த்துக்
கிளறி, குழைந்த பருப்பையும் சேர்க்கவும்.

ஒரு கொதி வந்ததும், அடுப்பை நிறுத்தவும்.

ஒன்பது வகை காய்களுக்கு பதில், 11 வகை, 21 வகை என,
ஒற்றை படையில் கலவை சேர்த்தும்,
இந்த வகை பொங்கல் கூட்டு தயார் செய்யலாம்.

மிகவும் ருசியானது; சத்தானதும் கூட!


சிறுவர் மலர்

கேரட் சாதம்

தேவையான பொருட்கள்

🥕கேரட் கால் கிலோ

🥕பாஸ்மதி ரைஸ்அரை கிலோ

🥕பட்டை1

🥕கிராம்பு2

🥕ஏலக்காய்1

🥕புதினாஒரு கைப்பிடி

🥕பாதாம்4

🥕முந்திரி4

🥕காய்ந்த மிளகாய்3

🥕நெய்ஒரு டீஸ்பூன்

🥕கடுகுஒரு டீஸ்பூன்

🥕எண்ணெய்தேவைக்கேற்ப

🥕மல்லித்தழைஒரு கைப்பிடி

🥕உப்புதேவைக்கேற்ப

🥕தண்ணீர்தேவைக்கேற்ப

🍴செய்முறை

 🍲 முந்திரி, பாதாமை லேசாக வறுத்துக் கொள்ளவும்.

🍲  பின்னர; ஒரு டீஸ்பூன் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காயை வறுக்கவும். கடைசியில் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.

  🍲வறுத்த மசாலா பொருட்களை மிக்ஸியில் அரைக்கவும். அதனுடன், முந்திரி, பாதாமையும் சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ளவும்.

 🍲 பாஸ்மதி அரிசியை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

  🍲பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு சேர்த்து பொhpந்ததும் புதினாவை போட்டு வதக்கி, பிறகு ஊற வைத்த அரிசியைப் போட்டு லேசாக வறுக்கவும்.

  🍲கேரட்டை மிக்ஸியில் அரைத்து சாறெடுக்கவும். இந்த சாறை வறுத்த அரிசியில் விடவும். அரிசி மூழ்கும் அளவுக்கு சாறு இருந்தால் போதும், அதற்கேற்ப சாறெடுக்கவும்.

  🍲பிறகு உப்பு சேர்த்து, பொடித்து வைத்துள்ளவற்றை போட்டு நன்றாக கலக்கி, குக்கரை மூடி விடவும்.

 🍲 ஒரு விசில் வந்ததும் இறக்கி, மேலே மல்லித்தலை தூவினால் கேரட் சாதம் ரெடி.

•┈┈•❀ 🌈வானவில்🌈❀•┈┈•

கோவக்காய் சட்னி

தேவையான பொருட்கள்

🥗கோவக்காய் கால் கிலோ

🥗வெங்காயம்5

🥗பூண்டு பல்4

🥗காய்ந்த மிளகாய் 4

🥗பச்சை மிளகாய்3

🥗தனியா1 டேபிள் ஸ்பூன்

🥗வெந்தயம் 1 டீஸ்பூன்

🥗புளி எலுமிச்சை அளவு

🥗உப்பு தேவைக்கேற்ப

🥗எண்ணெய் தேவைக்கேற்ப

🥗கடுகு அரை டீஸ்பூன்

🍴செய்முறை

 🍲 வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ள வேண்டும்.

  🍲கோவக்காயை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும் நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீள் வாக்கில் நன்றாக நறுக்கி கொள்ளவும்.

  🍲ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கோவக்காய், வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், வெந்தயம், முழு தனியா மற்றும் புளி எல்லாம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

  🍲பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

 🍲 கோவக்காயை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும் நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீள் வாக்கில் நன்றாக நறுக்கி கொள்ளவும்.

  🍲கடுகு கறிவேப்பில்லை தாளித்து சேர்க்கவும். சுவையான கோவக்காய் சட்னி தயார்.

🍲இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இட்லி, தோசைக்கு இது பொருத்தமாக இருக்கும். சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

•┈┈•❀ 🌈வானவில்🌈❀•┈┈•

மசாலா வடை குழம்பு

🌮🍜

🍱தேவையான பொருட்கள்

🥙மசாலா வடை 10

🥙வெங்காயம்1 (பொடியாக நறுக்கியது)

🥙பச்சை மிளகாய்2

🥙மல்லி தூள் அரை டேபிள் ஸ்பூன்

🥙மிளகாய் தூள் அரை டேபிள் ஸ்பூன்

🥙மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்

🥙துருவிய தேங்காய் அரை கப்

🥙சோம்பு அரை டீஸ்பூன்

🥙முந்திரி 5

🥙இஞ்சி அரை டீஸ்பூன்

🥙கிராம்பு 2

🥙மிளகு கால் டீஸ்பூன்

🥙கறிவேப்பிலை 1 கொத்து

🥙உப்பு தேவைக்கேற்ப

🥙எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை

  🍲முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு மற்றும் முந்திரியை சேர்த்து வறுக்க வேண்டும்.

 🍲 பின்னர் அதில் தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி, பின் இஞ்சி சேர்த்து வதக்கி இறக்கி, ஆற வைக்க வேண்டும்.

 🍲 பிறகு அதனை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

🍲  பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, கிராம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி விட வேண்டும்.

  🍲அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

 🍲 அடுத்து அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மசாலா வடைகளைப் போட்டு, குழம்பில் வடை நன்கு ஊறியதும், அதனை இறக்கவும்.

✶⊶⊷⊶⊷💞வசந்தம்💞⊶⊷⊶⊷✶

« Older entries