அறிவியல் சொல்லும் தோராய மதிப்பீடுகள்

வெ.இறையன்பு பதில்கள்

Advertisements

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி

வெ.இறையன்பு பதில்கள்

புதிய தலைமுறை

வெ.இறையன்பு பதில்கள் – (விதி & மதி)

புதிய தலைமுறை

காந்திக்கு மட்டும் முக்கியத்துவம் ஏன்..?

வெ.இறையன்பு பதில்கள் – புதிய தலைமுறை

மாசக்கடைசி என்பது இரண்டாம் தேதியிலிருந்து தொடங்குகிறது..!!

ஆனந்த விகடன்
http://manojreuben.blogspot.in/2012/07/blog-post_19.html

சாதனையாளன் ஆக வேண்டுமா?

நான் –
சாதனையாளன்
ஆக வேண்டும்!
அதற்கு என்ன
செய்ய வேண்டும்?

சாதனையாளர்களின்
சரித்திரத்தை
முதலில் – படிக்க வேண்டும்

எந்தத் துறையில்
சாதனை புரிய
விரும்புகிறோம் – என்பதை
முடிவெடுத்து
முடிச்சுப் போட்டுக்
கொள்ள வேண்டும்!

அந்தத் துறையில்
என்னென்ன
சாதக – பாதகங்கள்
இருக்கின்றன – என்பதை
ஆராய்ந்து பார்த்து
அட்டவணை இடவேண்டும்

சாதகங்களைப்
பயன்படுத்தி,
எதிர்ப்படும் – பாதகங்களை
எப்படி முறியடித்து
முன்னேற்றம் காண்பது – என்று
சிந்திக்க வேண்டும்

சிந்தித்ததை ஒன்றிணைத்து,
செயல்படுத்தத்
திட்டமிடல் வேண்டும்
திட்டமிட்ட படி
செயலாற்றும் பொழுது,
எதிர்ப்படும்
இடர்ப்பாடுகளை
எதிர்த்து நிற்கும்
துணிவு வேண்டும்!

இடையில் வந்து
எவரேனும்
இகழ்ந்துரைப்பின்
அதைத் தாங்கும்
மனவலிமை வேண்டும்;
மறுத்துரைக்கா
பொறுமை வேண்டும்!

வெற்றி என்னும் குறிக்கோளை
விட்டு எட்டி நகராமல்
அயராத உழைப்பை
அதற்களிக்க வேண்டும்!

அப்புறம் என்ன?
வெற்றி உன்னைத் தேடிவரும்!
புகழ் மங்கை மாவையுடன்
புறப்பட்டு வருவாள்
கழுத்தில்
போட்டு உனை வரவேற்க!

பிறகு பார்!
சாதனையாளர் பட்டியலிலே
உன் பெயரும் இடம்பெற்று
ஒளிவீசிக் கொண்டிருக்கும்!

—————————
சிகார் பூங்குன்றன்
தஞ்சாவூர்
நன்றி:http://thannambikkai.org/2011/01/20/4463/

ஆன்மிகவாதிக்கும், நாத்திகவாதிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?


ஈ. ராஜ்குமார், திருச்சி-13:
ஆன்மிகவாதிக்கும், நாத்திகவாதிக்கும் உள்ள
ஒற்றுமை என்ன?

இரண்டு பேருமே “கடவுள்’ என்ற பெயரைச் சொல்லித்தான்
ஏற்கிறார்கள் அல்லது மறுக்கிறார்கள்.

“கடவுள் இல்லை; இருந்தால் காட்ட முடியுமா?’ எனக் கேட்கிறார்
நாத்திகவாதி.

“கடவுள் இருக்கிறார். அவரை உணரத்தான் முடியும்’ என்கிறார்
ஆன்மிகவாதி.

மேற்சொன்ன இரண்டு பிரிவினரின் சொல், செயல், இவற்றில்
பொது நலம் நோக்கிய நன்மை இருக்குமானால், அதனை
அனைவரும் ஏற்கத்தான் செய்வர்.

“என்னை நாத்திகனாக இருக்கவைத்த கடவுளுக்கு நன்றி’
என்கிறார் ஒரு மேல்நாட்டு அறிஞர்.

—————————————————

நன்றி – மஞ்சரி

இன்டர்நெட் வரமா? சாபமா?

எஸ்.பொருநை பாலு, திருநெல்வேலி-06:
இன்டர்நெட் வரமா? சாபமா?

தொழிற்புரட்சி, அறிவியல்புரட்சி, மின் அணுக் கண்டுபிடிப்புகள்
எனும் அத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் மிகச்
சிறந்த நன்மையும் உண்டு. சொல்ல முடியாத தீமைகளும் உண்டு.

இன்றைக்கு வெளிவரும் புலனாய்வுப் பத்திரிகைகள் குறிப்பிடும்
சைபர் கிரைம் குறித்த செய்திகள் நமக்கு மிகுந்த அச்சத்தைத்
தருகின்றன. குறிப்பாகக் குழந்தைகள், பள்ளி மாணவர்கள்,
கல்லூரி மாணவர்கள் போன்ற இளைய சமுதாயத்தினரின்
கையில் கிடைக்கும் இன்டர்நெட் என்னும் உலகத் தொடர்பு
அவர்களை நல்ல நிலைக்குக் கொண்டு செல்லுமாறு வழி
காட்ட வேண்டியது பெற்றோர்கள், ஆசிரியர்கள், நல்ல நண்பர்கள்,
ஊடகத்தார்கள், அரசாங்கம் என அனைவரது கையிலும்தான்
உள்ளது.

நான் சிறுபிள்ளையாய் இருந்த அந்த காலங்களில் வானொலி,
தொலைபேசி போன்றவற்றை எங்களைப் போன்ற சிறுவர்களைத்
தொடக்கூட அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இன்றைய
சூழ்நிலை அப்படி இல்லை.

பயணம், மருத்துவம், தகவல் தொடர்பு, பணப் பரிமாற்றம், நூலகத்
தொடர்பு, உலகத்தின் கடைசி மனிதரையும் தொடர்பு கொள்ளும்
வசதி போன்ற பயன்பாடுகள் இன்டர்நெட் மூலம் மனித குலத்திற்குக்
கிடைத்த வரங்கள். இந்த வரங்களை நல்ல முறையில் பயன்
படுத்துவது நம் பொறுப்புதான்.

——————————————————-
-நன்றி – மஞ்சரி

இலக்கியம் சோறு போடுமா?

நெய்வேலி க. தியாகராசன், குடந்தை:
இலக்கியம் சோறு போடுமா?

நல்ல கேள்வி, இலக்கியம் சோறு மட்டும் போடுமா?
என்றால் அதனையும் தாண்டி மூன்றாவது கண்ணாக நமக்கு
இலக்கியம் பயன்படும் என உணர வேண்டும்.

இரை உண்பதும், இன விருத்தி செய்வதும் உலக உயிரினங்களின்
இயற்கை.

ஆனால் மனிதன் எழுத்தால், பேச்சால், இலக்கியப் படைப்பால்
தானும் உயர்ந்து வாழ்வதோடு தன்னைச் சார்ந்தோர்களையும்
மன எழுச்சி கொள்ளத் தூண்டுகிறான்.
இத்தூண்டுதல் இல்லையெனில் மனித இனம் மறைந்து போகும்.

சிங்கமும், புலியும் ஏனைய உயிர்களும் தோன்றிய காலத்தில்
இருந்தே உணவு தேடி, வேட்டையாடித்தான் வாழ்கின்றன.
எந்த சிங்கமும் மான் பண்ணைகளையோ தன் உணவுக்கு ஏற்ற
உயிரினங்களையோ உருவாக்கிக் கொள்வதில்லை. மனிதனே
சிந்தித்துச் சிந்தித்துச் சாதனைகளைப் படைத்துள்ளான்.

இலக்கியம் என்பது உடலுக்கான உணவைத் தருவதோடு,
உயிரக்கான ஆன்மாவுக்கா வளர்ச்சியை, உயர்வைத் தருகிறது
என்பது உண்மை.

——————————————————
நன்றி-மஞ்சரி

பெரும்பாலும் ஒரு பெண் எதை விரும்புகிறாள்?


பெரும்பாலும் ஒரு பெண் எதை விரும்புகிறாள்?

மதிக்கப்படுவதை;

தனக்குள்ளிருக்கும் ஆளுமை ஆராதிக்கப்படுவதை;

நித்தம் நித்தம் நேசம் நிரூபிக்கப் படுவதை;

தன் பலவீனங்களைக் கண்டு கொள்ளாத கண்களை;

தன் பலத்தைக் கொண்டாடும் குணத்தை;

ஒலி உயராத குரலை; நான் உனக்கு மட்டும் தான்
என்னும் உயிரழுந்தும் ஸ்பரிசத்தை.

சபையில் கொடுக்கும் கௌரவம் தனிமையிலும்
கொடுக்கப்படுவதை;

தாம்பத்யம் முடிந்த தருணங்களில் ‘குளியல் அறைக்கு
முதலில் நீ போ’ என்று வழங்கப்படும் முன்னுரிமையை.


=============================

–கவிப்பேரரசு வைரமுத்துவின் பதில்கள்

« Older entries