காதல் விபத்து…! – கவிதைகள்

குறுங்கவிதைகள்
************

ஆண்டுதோறும் அதே குழியில்
மரம் நடும் விழா…
ராசியான இடம்

_________________

மரங்களை வெட்டினார்கள்
மரம் நடுவிழாவுக்கு வரும்
மந்திரிக்குப் பாதையமைக்க.

_________________

கொல்லாமை இயக்க
மாநாட்டுமேடையில் பாம்பு
கொல்லப்பட்டது கொள்கை.

_________________

ஆலயத் திருப்பணி வசூல்
அழகுற முடிக்கப்பட்டது…..
அறங்காவலரின் புது இல்லம்.

_________________

-கிரிஜா ம‌ணாளன், திருச்சிராப்ப‌ள்ளி.
Thanks:

http://www.muthukamalam.com/muthukamalam_kavithai127.htm