மலை விழுங்கும் மகாதேவன்கள் – கவிதை

நன்றி- ;கவிமாடம்;

நிலா.ச.விஜயலட்சுமி கீற்றுக் கவிதை

தூரத்து உறவுகள் – கவிதை

நன்றி: கல்விச் சுடர்

வாருங்கள் செல்வங்களே – கவிதை

நன்றி: கல்விச்சுடர்

எப்படி எழுதுவேன் உனக்கொரு காதல் கடிதம் – கவிதை

 

எரிபந்து எழுதுகோலோடு…கவிதை

 எரிபந்து எழுதுகோலோடு...கவிதை E_1662725987
பாரதி – நீ
முண்டாசை இறுக்கி
மீசையை முறுக்கி
எழுதுகோல் திறந்து
எழுதியபோது
தமிழ் உலகம் அனல் மூண்டது
கவிதை முற்றம் கனல் பூண்டது!

நீ அக்னி குஞ்சொன்றை கண்டு
பொந்திடை வைத்தபோதே
அன்னியருக்கெதிராய்
பொங்கி எழுந்தது நாடு!

உன் வார்த்தைகளில் இருந்த
விடுதலை நெருப்பை
கிழக்கிந்திய கம்பெனிகளின்
அதிகாரப் புயலால்
அணைக்க முடியவில்லை!

உன் எழுத்துக்களில் இருந்த
கதிர்வீச்சை பொறுக்க முடியாமல்
மாந்தர் தம்மை இழிவு செய்த
மடமைகள் கொளுத்தப்பட்டது!

நீ
வயிற்றுக்காக பாடியதும் இல்லை
வாழ்க்கைக்காக ஓடியதும் இல்லை – நீ
நாட்டுக்காக பாடியதாலே – உன்
பாட்டுக்கு பெருமை!

நீ பற்ற வைத்த தீயில் தான்
தமிழ் அடுப்புகளில்
இன்றும் சமையல் நடக்கிறது!
எட்டயபுரத்தை எட்டிப் பார்க்காமல்
எந்தக் கவிஞனும்
எழுதுகோல் பிடித்ததில்லை!

ஆனால்
உன் கண்களில் தெரிந்த
புரட்சிக்கனல் – இன்று
யாருடைய பார்வையிலும்
இருப்பதாக தெரியவில்லை!

தமிழன் தன் குழந்தைக்கு
தமிழ் தெரியாது என்று
சொல்லிக் கொள்வதில்
பெருமைப்பட்டுக் கொள்கிறான்!

பாலியல் தொல்லைகளும்
லஞ்ச லாவண்யங்களும்
பெருக்கெடுத்து ஓடுவதால்
தேசம் எனும் தேர்
நகர முடியாமல் தவிக்கிறது!

இவர்களுக்கெல்லாம்
சவுக்கடி கொடுக்க
எரிபந்து எழுதுகோலோடு
இன்னும் பல பாரதிகள்
பிறந்து வரட்டும்!

–என். ஆசைத்தம்பி,
ஆவடி, சென்னை.
நன்றி-வாரமலர்

விடியல் எப்போது …(கவிதை)

நன்றி- தங்கமங்கை

புன்னகை – கவிதை

நன்றி- தங்கமங்கை

தேர் – கவிதை

அணையா ஞான தீபம்!

அணையா ஞான தீபம்! E_1662103278

‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’
எனும் மந்திர மொழியின்
மறைபொருள் நீ!

அன்பு, அரவணைப்பு, அறிவுரை
அத்தனையும் அளவின்றி தந்து
தகைசால் தலைமுறையை செதுக்கும்
ஒப்பற்ற ஓர் அறிவுலக சிற்பி நீ!

மாணாக்கர் யாவரும் கல்வியால்
வருங்காலத்தில் வாகைச் சூடிட
என்றும் வழிக்காட்டி நிற்கும்
அரிய கலங்கரை விளக்கம் நீ!

கடமையை கண்ணென கருதி
எழுத்தையும், எண்ணையும்
எந்நாளும் அளித்திடும்
அதிசய அறிவூற்று நீ!

உன் அனுதின உழைப்பால்
மாணாக்கரை உயர வைத்து
உவகையுடன் உயர்ந்து பார்க்கும்
உயர்ந்த உள்ளம் நீ!

தவறுகளை திருத்தி
தன்னம்பிக்கை ஊட்டி
தரணியாள தகுதிப்படுத்திடும்
தன்னிகரில்லா தலைவன் நீ!

கிண்டல், ஏச்சும் பேச்சும்
எது வந்து தாக்கினாலும்
‘பொறுமை’ கேடயத்தால்
தகர்த்தெறியும் தீரன் நீ!

உன்னத லட்சியங்களை
உள்ளத்தில் நிறுத்த செய்து
ஊர் மெச்சும் அளவிற்கு
உயர செய்யும் உத்தமன் நீ!

அனைத்து குழந்தைகளையும்
நல்ல மனிதராக வடிவமைக்கும்
இப்பூவுலகத்து பிரம்மா நீ!

பாதகமில்லா போதனையை
நாளும் தந்து
அறிவொளி ஏற்றுகிற
அணையா ஞான தீபம் நீ!

பெ. ஜெயக்குமார், சிவகாசி.
நன்றி: வாரமலர்


« Older entries Newer entries »