ஓவியர் விவியா வாலண்டினா

சென்னையைச் சேர்ந்தவர் விவியா வாலண்டினா.

எம்எஸ் பயோ டெக்னாலாஜி படித்துவிட்டு
அமெரிக்காவில் கொஞ்ச நாள் வாசம்,
பின் தேசத்தின் மீதான நேசம் காரணமாக
திரும்ப இங்கே வந்தவர் தற்போது சென்னையில்
உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.

இவருக்கு ஓவிய கலையின் மீது அளவு கடந்த
பற்றும் பாசமும் உண்டு.
பள்ளி பருவத்திலேயே இதற்காக பல பரிசுகள்
பெற்றுள்ளார். பின்னர் தனது ஓவிய திறமையை
நிறையவே வளர்த்துக் கொண்டுள்ளார்.

ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒருவித அற்புதமான
அழகுடன் மிளிர்கிறது.
லேண்ட்ஸ்கேப் வகை ஓவியங்கள் வரைவதில் தேர்ச்சி
பெற்ற இவரின் கைவண்ணம் அது தொடர்பான அலைகள்,
கடற்கரை, பனிக்காடு போன்ற ஓவியங்களில் அழகாக
வெளிப்பட்டுள்ளது.
அதே போல கறுப்பு வெள்ளையில் சிவப்பு வண்ண
பின்னணியில் இவர் வரைந்துள்ள ஆண், பெண் ஓவியம்
ஒரு காவியம் போல பல கதை சொல்கிறது. தண்ணீரில்
அலைபாயும் பாய்மரப் படகின் ஓவியம் பார்ப்பவரின்
மனதை சந்தோஷத்தில் அலைபாய வைக்கிறது.

பசுமை நிறைந்த காட்டுக்குள் பாயும் தண்ணீர் நம்மை
ஜில்லிட வைக்கிறது. இப்படி ஒவ்வொரு ஓவியமும் ஒரு
உணர்வை நம்முள் உண்டாக்குகிறது என்றால் அது
ஓவியரின் திறமையே.

இவரது ஓவிய கண்காட்சி கடந்த ஆண்டு செப்டம்பர்
இறுதியில் சென்னை எக்மோர் மாண்டியத்
சாலையில் உள்ள ஓட்டல் அம்பாசடர் பல்லவாவில்
நடைபெற்றது

——————————————-

என்ன (எ)வண்ணமோ என் மனசுல….


ஒரு மனிதனின் உடல் ரீதியான, மனரீதியான
வளர்ச்சியில் ஓவியம் மிக முக்கியமான பங்கு
வகிக்கிறது. மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கிறது.
பயங்கர கோபம், தனிமை, மனஸ்தாபம், வாக்குவாதம்
என சகலவித மன உளைச்சல்களுக்கும் ஓவியம்
ஒரு தெரபியாக செயல்படுகிறது.
தூரிகைக் கலை ஒரு மருந்தாக செயல்படுகிறது!


இதற்கு மொழி தேவையில்லை.
உங்களுடைய எண்ணங்களை, உணர்ச்சிகளை
ஓவியம் மூலமாக வெளிப்படுத்தலாம். பெயின்டிங்,
ட்ராயிங் மட்டுமல்லாமல், ஃபோட்டோகிராஃபி, சிற்பம்
என பல்வேறு கலைத்துறைகளும் இதில் அடக்கம்.


ஆர்ட் தெரபிஸ்ட் என்பவர் ஓவிய வல்லுநரும் ஆவார்.
மனநல மருத்துவரும் கூட. அதனால் அவருக்கு மன
அழுத்தத்திற்கு என்ன, எப்படி ட்ரீட்மென்ட் அளிப்பது
தெரியும்.


ஓவியம் என்பது எண்ணங்களின் வெளிப்பாடே,
தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ள, தெரிந்து கொள்ள,
தெரிய வைக்க, டென்ஷனிலிருந்து விடுபட,
குழப்பத்திலிருந்து மீள… எனப் பல்வேறு பிரச்நைனகளில்
இருந்து மீண்டு, மகிழ்ச்சியுடன் உலா வர வேண்டும்
என்பவர்கள் தூரிகையை கையிலெடுக்கலாம்.


எனக்கு ஓவியம் வராதே என யோசிக்க வேண்டாம்.
ரவி வர்மா, எம்.எஃப் ஹுசேன், ஆதிமூலம், ம.செ.க்கு
சமமாக ஓவியம் வரைய வேண்டும் என்பது உங்கள்
இலக்கல்ல. என் ஓவியம் மூலமாக என்னை வெளிப்
படுத்துவேன் என்பதே உங்கள் நோக்கமாக இருக்க
வேண்டும்.

– லதா சேகர் – மங்கையர் மலர்
படம்: இணையத்திலிருந்து

ஆர்ட் தெரபியில் ஓவியம் வரைவது எப்படி..?ஆர்ட் தெரபியில் ஓவியம் பல்வேறு வகையான
சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல் வரைய வேண்டும்.
எப்படி என்று பார்க்கலாமா…


* மியூசிக் போட்டுவிட்டு வரையவும்.
இசைக்கு தகுந்தாற்போல் தூரிகையை ஓடவிட்டு
வரைய வேண்டும். இது ஒரு பெரிய மைண்ட்
ரிலாக்சேஷன்.

* விரல்களில் வண்ணம் பூசி பேப்பரில் சுழல விடவும்.
பிரமிக்க வைக்கும் பதிவுகள் பிறக்கும்.

* எமோஷனுக்குத் தக்கவாறு வரைவதும் ஒரு டெக்னிக்.
கோபமா, மகிழ்ச்சியா, கொந்தளிப்பா? இவை எல்லாமே
கோடுகளின் மூலமாக வெளிப்படுத்தி பேப்பரில் போட்டுத்
தாக்குங்கள்.


* உங்களுக்கு அமைதி தரும் வண்ணங்களையே
எடுங்கள்.

* ஃப்ரீயாக வரையுங்கள். இது சரி, இது தவறு என்று
எதுவுமே ஓவியத்தில் கிடையாது. அவரவர் பார்வைக்கு
அது சரியே.

* ஒரு பட்டம் செய்து அதில் உங்கள் பிரார்த்தனைகள்
ஆசைகள், அவாக்கள் எழுதி பறக்க விடுங்கள்.
செம ஜாலி.

* உங்களை நீங்கள் பாதுகாப்பாக உணரும் இடங்களை
வரையவும். வீடு, தோட்டம், மலை என எதுவும்
இருக்கலாம்.

* உங்களை வாட்டி வரும் கவலைகள் என்னென்ன?
ஒரு கொலாஜ் ஓவியமாகப் படைக்கலாம்.
பல பத்திரிகைகளிலிருந்து கட் பண்ணி கவலைகளுக்குக்
கொலாஜ் வடிவம் கொடுக்கலாம்.

* நீங்கள் பயப்படுவது எதைப் பார்த்து? அதை வரையவும்.
பயப்படமாட்டீர்கள். பிளேன் டேக் ஆஃப் பயம், பாம்பு பயம்,
லிஃப்ட், எஸ்கலேட்டர் பயம்.. என பட்டியல் தெனாலி
கமல் ரேஞ்சுக்கு நீண்டாலும் ஆர்ட் தெரபியில் தீர்வு உண்டு.
ஸோ நோ மோர் பயம்.

* நீங்கள் உங்களுக்குள் எந்த மிருகத்தை பார்க்கிறீர்கள்?
அதை வரையவும். குழந்தையாக மாறிவிடுவீர்கள்.

* ஒரு ஜன்னல் வரையவும். ஜன்னல் என்பது நாம்
வெளியே பார்ப்பது, நம்மை வெளிநபர்கள் பார்ப்பது என
செயல்படும். எதை நீங்கள் பார்க்க அனுமதிக்கிறீர்கள்,
எதை மறைக்க விரும்புகிறீர்கள். அதைத் தெளிவுபடுத்தவம்.

* கண்ணை மூடி பேப்பரில் இஷ்டத்திற்கு வரையவும்.
கண்ணை திறந்தவுடன் பிரமித்துப் போவீர்கள்.

ஆர்ட் என்பது அமைதி தரும். இது ஒரு தியானம் மாதிரி.
மனநல மருத்துவரிடம் போக தர்மசங்கடப்படுபவர்கள்
ஏராளம். ஆனால் ஓவியப் பயிற்சிக்கு தாராளமாக போகலாம்.
மன அழுத்தம், நோய், பயம், கவலை.. இதையெல்லாம்
இனி இல்லவே இல்லை.
ஒன்லி ஓவியம். ஓன்லி ரிலாக்ஸேஷன்.


தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ
என் மனசில…ன்னு பாடிக்கிட்டே தூரிகையை கையில் எடுங்க.


——————————————

– லதா சேகர் – மங்கையர் மலர்

ஓவியங்கள் –இணையத்திலிருந்து