நிகழ்ச்சி – ஒரு பக்க கதை

இரவு நேரம்…

பளபளக்கும் பட்டுப்புடவை, கழுத்து, கை,
காதெல்லாம் சரம்சரமாக தங்க நகைகளோடு
நடுரோட்டில் நடந்து போனாள் அந்த இளம்
பெண்.

தூரத்தில் ஊர்ந்து கொண்டிருந்த காரினுள்
இருந்த கேமரா அவளையே கண்காணித்துக்
கொண்டிருந்தது. இரவில் நகரின் ஒதுக்குப்
புறத்தில் இவ்வளவு நகைகளுடன் ஒரு
இளம்பெண் நடந்து போனால் என்ன நடக்கும்
என்பதைக் கண்டறிய ஏபிசி சேனலின்
கிரியேட்டிவ் டீம் தயாரிக்கும் வித்தியாசமான
நிகழ்ச்சி அது.

அவ்வப்போது எதிர்ப்பட்ட சிலர் அவளை
விசித்திரமாய் பார்த்தபடி கடந்து போனார்கள்.
ஒரு சந்தில் அந்தப் பெண் திரும்பியவுடன்.
ஆஜானுபாகுவான ஒருவன் சடாரென்று பாய்ந்து
வந்து எதிரில் நின்றான்.

அவன் கையில் கத்தி. ‘‘சத்தம் போடாம
நகைகளைக் கழட்டிக் கொடு… இல்லே
குத்திடுவேன்…’’ என்றான்.அவள் ‘வீல்’
அலறினாள்.

அவ்வளவுதான் ஏபிசி சேனலின் பாதுகாப்புப்படை
மின்னலாய்ப் பாய்ந்து அவனை அமுக்கியது.

‘‘அவரை அடிக்காதீங்க! தனியா போற
பொண்ணுகிட்ட கத்தியைக் காட்டி மிரட்டினா
என்ன நடக்கும்னு பார்க்கறதுக்காக எக்ஸ்ஒய்இஸட்
சேனல் தயாரிக்கிற நிகழ்ச்சி இது…’’ எனக்
கத்தியபடி நான்கு பேர் பக்கத்து சந்திலிருந்து

ஓடி வந்தார்கள் கேமராவோடு!


சுபாகர்
குங்குமம்

காரணம்- ஒரு பக்க கதை

டிபன் யாரு செஞ்சது? அதுலயும் அந்தக் கேசரி
அபாரம் போங்க’’ – மாப்பிள்ளையின் தந்தை
சிலாகித்தார்.

‘‘என்ன இப்படி கேட்டுட்டீங்க? எல்லாம் எங்க
பொண்ணு செஞ்சதுதான்’’ என்றாள் பெண்ணின்
தாய் மங்களம்.

‘‘இந்த கைப் பக்குவத்துக்காகவே உங்க பொண்ணை
மருமகளா ஏத்துக்கறோம். நல்ல நாளா பாருங்க’’

  • திருப்தியுடன் கிளம்பியது பெண் பார்க்க வந்த
    கூட்டம்.

அனைவரும் சென்ற பின், சமையற்கட்டுக்கு ஓடி
வேலைக்காரி சாரதாவின் கையை நன்றியோடு
பிடித்துக்கொண்டாள் மங்களம்.

‘‘நீ செஞ்ச டிபனை என் பொண்ணு செஞ்சதா
சொன்னதாலதான் கல்யாணமே நிச்சயமாகியிருக்கு.
எப்படியாவது கல்யாணத்துக்குள்ள அவளுக்கு உன்
கைப்பக்குவத்தை சொல்லிக் கொடுத்துடும்மா…
கல்யாணத்துக்கு உனக்குப் பட்டுப்புடவை எடுத்துத்
தர்றேன்’’ என்றாள் அவள் கெஞ்சலாக.

சாரதா மனதுக்குள் ஓடியது… ‘என் வீட்டில் இதே
டிபனை எத்தனை மாப்பிள்ளை வீட்டாருக்கு நான்
செய்து கொடுத்திருப்பேன். கறுப்பா, பணமில்லாத
குடும்பத்தில் பிறந்த என்னை, சமையல் ருசிக்காக
யாரும் மணந்து கொள்ளவில்லையே!

அழகும், பணமும்தான் இந்த பெண்ணைப் பிடித்துப்
போக காரணம். அது எங்கே இவர்களுக்குத் தெரியப்
போகிறது?’
நினைத்ததை சற்றும் வெளிக்காட்டாமல் சரியென்று

தலையசைத்தாள் முதிர்கன்னி சாரதா.


வி.சகிதாமுருகன்
குங்குமம்

ஜொலிப்பு – ஒரு பக்க கதை

வெற்றியாளர்களின் சிறந்த ஒரு குணம்

ஏமாற்றம் – ஒரு பக்க கதை

வலி – ஒரு பக்க கதை

வலி - ஒரு பக்க கதை TfpT68QkRCmD8kvM0iNJ+IMG_2393

திருத்தம் – ஒரு பக்க கதை

குட்டிக்கதை- ஆன்மீகம்

மினி ஸ்டோரி! எலும்பு!

ஓநாயொன்று இறைச்சி சாப்பிடும்போது
அதன் தொண்டையில் ஒரு எலும்பு சிக்கிக்கொண்டது.
எத்தனையோ மிருகங்களிடம் அதை எடுத்து விடும்படி
கெஞ்சியும் எந்த விலங்கும் அதற்கு உதவ முன்வரவில்லை.

நீண்ட கால்களும், கூரிய அலகும் கொண்ட நாரை,
இரக்கப்பட்டு ஓநாயின் தொண்டையில் சிக்கிய எலும்பை
எடுத்துவிட்டது.

ஓநாய் கோபத்துடன்,
“உனக்கு என்மேல் எத்தனை நாளாய் ஆத்திரம் இருந்ததோ?
இப்போது தீர்த்துக் கொண்டாய். உன்னுடைய அலகு என்
குரல் வளையை எப்படிக் கிழித்திருக்கிறது பார்! உன்னை
நான் சும்மா விடப்போவதில்லை!” என்று அதன் மீது பாய்ந்து
அதைக் கொன்று தின்றது.

துஷ்டர்களோடு சகவாசம் வைத்துக்கொள்வதும்,
உதவிசெய்வதும் உயிருக்கே அபாயம் விளைவிக்கும்.
***
சிறுவர் மலர்

அப்ளிகேஷன்- ஒரு பக்க கதை

« Older entries