எது பலம்? – பக்திக் கதை

சிங்கப்பூர் சிவ கிருஷ்ணா ஆலயம்…

சிங்கப்பூர் சிவ கிருஷ்ணா ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி
விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது…

ஆலயத்தில் எடுத்த சில புகைப்படங்கள் (பகிர்வுக்காக)மனம் குளிரட்டும்!


மார்ச் 4 – மாசி மகம்

இறந்தன பிறப்பதும், பிறந்தன இறப்பதும்,
இருப்பது மறைவதும், மறைவது தோன்றுவதும்
பரம்பொருளான சிவபெருமானின் படைப்பு
ரகசியம்.

அந்த படைப்பு ரகசியத்தை இறைவன்,
தன் சக்திகளில் ஒன்றான பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.
உலகில், தர்மம் குறைந்து அதர்மங்கள் தலை தூக்கும்
போது, எம்பெருமான் சிவபெருமான், உயிர்களின்
நிலையற்ற தன்மையை உணர்த்தவும், தர்மத்தை நிலை
நாட்டவும் உயிர்களை அழிக்கிறார்.

அவ்வாறு இறைவன் உலகை அழிக்கும் போது, உயிர்களை
படைப்பதற்கான மூல வித்துகளான படைப்பு கருவிகளை
ஒரு கும்பத்தில் வைத்து, அதில் அமுதத்தை ஊற்றி,
தண்ணீரில் மிதக்க விடுவார் பிரம்மா.

அமுதத்திற்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இதைக்
குடித்தவர்களுக்கு மரணமில்லை; இது, ஒரு பொருளின் மீது
பட்டால், அந்தப் பொருளுக்கும் அழிவில்லை.

ஒரு முறை, உலகில் அதர்மங்கள் எல்லை மீறியதால்,
இறைவன் கோபம் கொண்டு, உலகை அழித்த போது,
பிரம்மா படைப்பு கருவிகளை அமுதம் நிரப்பப்பட்ட
கும்பத்தில் வைத்து தண்ணீரில் மிதக்க விட்டார்.

அக்கும்பம் பூமியின் பல்வேறு பகுதிகளிலும் அலைந்து
திரிந்து, கடைசியாக ஓரிடத்தில் ஒதுங்கியது. அந்த
இடத்துக்கு ஒரு விசேஷம் உண்டு. உலகம் அழிந்த போது
எல்லா ஊர்களும் அழிந்தாலும், அந்த ஒரு ஊர் மட்டும்
அழியவில்லை. அந்த புனிதமான ஊர் தான், கும்பகோணம்.

கும்பம் அவ்விடத்தில் ஒதுங்கிய போது, சிவன் ஒரு
பாணத்தை எடுத்து அக்கும்பத்தின் மீது எய்தார்.
கும்பத்திலிருந்த அமுதம் சிதறி நான்கு புறமும் பரவியது.
அந்த அமுதம் மணலுடன் கலந்து ஒரு லிங்கமாக உருவானது.
அந்த லிங்கம், ‘கும்பேஸ்வரர்’ எனப் பெயர் பெற்றது. சிதறிய
அமுதத்தின் ஒரு பகுதி, குளம் போல் தேங்கியது. அதுவே,
மகாமகக்குளம்.

அதன் கரையில், 16 லிங்கங்கள் தோன்றின.
இந்த மகாமக குளத்திற்கு கங்கை உள்ளிட்ட ஒன்பது புனித
நதிகளும் மாசிமகத்தன்று வந்து நீராடுவதாக ஐதீகம்.
இதனால், இந்நாளில் இக்குளத்தில் நீராடுவதை மக்கள்
பாக்கியமாகக் கருதுகின்றனர்.

அதிலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம்,
இன்னும் விசேஷம். அடுத்த ஆண்டு மகாமகம் கொண்டாடப்
படுகிறது. மகாமகக்குளத்தில் நீராடுவோர் பிறவாநிலை பெறுவர்.

இம்மாசிமகத்தை, உலகம் தோன்றிய நாள் என்று சொல்லலாம்.
கடவுள் நம்மைப் படைத்தது ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு
நன்மை செய்து வாழ்வதற்காக! அதை மீறும்போது அவரது
கோபத்திற்கு ஆளாகிறோம்.

அவர் சாந்தமாக இருக்க வேண்டுமென்றால்,
அவரது படைப்புகளை பாதுகாக்க வேண்டும். இயற்கையை
அழிக்கக்கூடாது. மனிதாபிமானத்துடன் வாழ வேண்டும்.
மாசிமகத்தன்று, இப்படியெல்லாம் வாழ உறுதியெடுத்தால்,
எந்நாட்டவருக்கும் இறைவனான சிவபெருமானின் மனம்
மட்டுமல்ல, நெற்றிக்கண் கூட குளிர்ந்து, நம் சந்ததியினரின்
சந்தோஷம் தழைத்தோங்கும்.

————————————————-

தி.செல்லப்பா- வாரமலர்

கண்டெடுத்தவர்கள்…


அழகில் சிறந்தவள் சகுந்தலை. அவளைக்
குழந்தைப் பருவத்தில் சகுந்த பட்சிகளுக்கிடையே
கண்வ மகரிஷி கண்டெடுக்கிறார். ஏக சக்ராதிபதியான
துஷ்யந்தன், சகுந்தலையைக் கண்டதும், காதல்
கொள்கிறான்.

இவர்களின் குழந்தை பரதினின் பெயராலேயே இன்று
பரத கண்டம் அழைக்கப்படுகிறது

———————————————————————————

பாடின வாய் தேனூறும் வண்ணம் காதல் காவியம்
பாடிய பக்தை ஆண்டாள். பூவெடுக்கப்போன
பெரியாழ்வார் இந்தப் புதையலை எடுத்து வருகிறார்.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள்,
பரந்தாமனையே பதியாக எண்ணி மெய்மறக்கிறாள்

-==========

ஞாலம் வலம் வரத் துணிந்தவனே…


தோகை விரித்துக் களிநடம் புரியும்
கான மயிலினைக் கண்டதுண்டு.
செறுக்குடன் சிறு நடை பயிலும்
மயிலினைக் கண்டதுண்டு.
கர்ண கொடூரமாய் அகவும்
மயிலினைக் கண்டதுண்டு.
பறவை எனப் பெயர் இருப்பினும்
அதிகம் பறக்காத மயிலே
உன் மீதேறியா ஞாலம் வலம் வந்தான் கந்தன்,
ஏதும் அறியாப் பையன். !

மரமாய் மாறி அலைக்கழித்தவனை
சக்திவேலால் இரு கூறாய்ப்
பிளந்து சூரா உன்னை
ஆட்கொளவேண்டி பாலகன் மாயன் மருகன்
உன்னை ஒரு பாதி சேவலாக்கி
தன் கொடியில் அமர்த்தினான்
மறுபாதியுனை வாகனமாக்கி
மயில்வாகனன் ஆனான்.

முருகன் என்றால் அழகன் என்பர்
அதற்கொப்ப அவன்
வாகனமாய் நீயும் அழகு மயிலாய் நின்றாய்.. .

முருகனை அன்றொருநாள் அப்பாவியா
எனக் கேட்டேன்.
என் எண்ணம் வலுக்கிறது.
பறக்காத பறவையாகிய உன்னை வாகனமாக்கி
ஞாலம் வலம் வரத் துணிந்தவனை
நேரம் பார்த்துத்
தோற்கடிக்கத் துணிந்தாயோ சூரா
பறந்து தூரம் கடக்க
இயலாதவன்,நீ சற்றே பறந்து காட்டி
அவனை ஏமாற்றிக்
காலை வாரி கனி இழக்கச் செய்தது என்ன நியாயம். ? .

————————————–
>Balasubramaniam G.M
சுப்புத்தாத்தா வலையில் படித்து ரசித்தது

.

டிசம்பர் 5-இல் கார்த்திகை தீபத் திருவிழா

டிசம்பர் 5-இல் கார்த்திகை தீபத் திருவிழா:
அருணாசலேஸ்வரர் கோயிலில் பூர்வாங்கப் பணிகள் தொடக்கம்கோயில் ராஜகோபுரம் எதிரே நடப்பட்ட
பந்தக்காலுக்கு சிறப்பு தீபாராதனை காட்டும் சிவாச்சாரியார்கள்.

==================

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை
அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, கோயிலில் பூர்வாங்கப் பணிகள் மேற்
கொள்வதற்கான பந்தக்கால் முகூர்த்த விழா திங்கள்கிழமை
நடைபெற்றது. அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை
திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர்,
உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள்
நடத்தப்பட்டன.

அதிகாலை 5.40 மணிக்கு கோயில் மூன்றாம் பிரகாரத்தில்
உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகர் சன்னிதி எதிரே பந்தக்கால்
வைக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் செய்யப்பட்டன.
தீபாராதனைக்குப் பிறகு, கோயில் ராஜகோபுரம் எதிரே
பந்தக்கால் கொண்டு செல்லப்பட்டது.

பஞ்ச ரதங்களுக்கு தீபாராதனை: பின்னர், ராஜ கோபுரம்
எதிரே தேரடித் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
மகா ரதம் உள்ளிட்ட பஞ்ச ரதங்களுக்கு காலை 6.04
மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றன.

சரியாக காலை 6.16 மணிக்கு ஆலாசநாத குருக்கள்
தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள்
முழங்க, பந்தக்கால் நடப்பட்டது.

பூர்வாங்கப் பணிகள் தொடங்கின: இதையடுத்து, தீபத்
திருவிழாவுக்குத் தேவையான பூர்வாங்கப் பணிகள் திங்கள்
கிழமை காலை முதலே தொடங்கப்பட்டன.

சுவாமி புறப்பாட்டுக்கான வாகனங்கள், தேர்களை பழுது பார்த்து
வர்ணம் அடித்தல், கோயிலில் மராமத்துப் பணிகள் மேற்
கொள்ளுதல் ஆகியவை கோயில் இணை ஆணையர் மேற்
பார்வையில் நடைபெற்று வருகின்றன.

—————————————-

–தினமணி

காத்தவராயன் கதை


தேவலோகத்தில் நந்தவனத்தைக் காவல் காக்கும்
பொருட்டு சிவபெருமானால் உருவாக்கப்பட்டவர்
காத்தவராயன்

அங்கு சப்த கன்னிகள் நீராட வருகிறார்கள்.
அப்போது சப்த கன்னிகளில் ஒருத்தியான ஆரியமாலா
மீது மையல் கொள்கிறார் இவர்.
சப்த கன்னிகள் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர்.

“ பெண்ணாசையினால் நீ இந்தத் தவறினைச் செய்து
விட்டாய். பூவுலகில் மானிடனாகப் பிறந்து
பெண்ணாசையினால் தண்டனை பெற்று கழுவேற்றம்
ஆகி தேவலோகம் திரும்பு” எனச் சாபமிடுகிறார்
சிவபெருமான் என்பது புராணக்கதை.

அதன்படியே பூமியில் பிறந்த மன்னன் மகளான
ஆரியமாலாவின் மீது மையல் கொண்டு பிடிபட்டு
கழுவேற்றப்படுகிறான் காத்தவராயன்.

கருணை உள்ளம் கொண்டவன் இறைவன்.
அவனே ஈர நெஞ்சினன். கழுவேற்ற மரத்தின் உச்சியில்
நின்றிருந்த காத்தவராயனையும் ஆரியமாலா நல்லதங்கை
உட்பட சப்தகன்னிகளையும் அவன் தேவலோகத்துக்கு
அழைத்துக் கொள்கிறான்

மகாளய அமாவாசை – 23.09.2014

பெற்றோர்கள் வாழும் காலத்தில், அவர்களுக்கு
தேவையான எல்லா உதவிகளையும் செய்வது
எவ்வளவு அவசியமோ, அதுபோல அவர்களின்
வாழ்க்கைக்குப் பிறகும் இந்த நன்றிக்கடனைத்
தொடரவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

அதற்காக தர்ப்பணம், பிதுர்காரியம், முன்னோர்
கடன் என்று பல பெயர்களில் இதைக் குறிப்பிடுவர்.
நன்றியுணர்வோடு, அவர்கள் மறைந்த மாதத்தின்
திதியன்று மறக்காமல் கவனமுடன் செய்தல்
அவசியம் என்பதால் இதனை ‘சிரார்த்தம் என்றும்
சொல்வார்கள்.

தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை
குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும்
அமாவாசையிலாவது தர்ப்பணம் செய்வது அவசியம்.
சிலர் தை, ஆடி அமாவாசைகளில் மட்டும்
கொடுக்கிறார்கள். ஒருவேளை, இதுவரை பிதுர்
தர்ப்பணமே செய்யாமல் இருந்தால், மகாளாய
அமாவாசையன்று அதைத் தொடங்கினால் மிகவும்
சிறப்பு. இந்த தருணத்தில் தான் நமது முன்னோர்
ஒட்டு மொத்தமாக பூமிக்கு வருவதாக ஐதீகம்.
தர்ப்பணத்தின் போது எள், ஜலம், பிண்டம், அரிசி,
வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றை பயன்படுத்துவர்.

இவற்றை பிதுர் தேவதைகள் முன்னோர்களுக்குக்
கொண்டு சேர்த்துவிடுவர் என்கிறது சாஸ்திரம்.
பூலோகத்திற்கு தங்கள் பிள்ளைகளை பார்க்க வந்த
முன்னோர் மீண்டும் பிதுர்லோகத்திற்கு இன்று
திரும்புவதாக ஐதீகம்.

———————————-
நன்றி: தினகரன்

கரியவனைக் காணாத. . .

 

கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே

 . மஞ்சுளா என்ற ஒரு பெண் தன் வாழ்ககையில் தலையாகிய கடமையாக தினமும் கண்ணனுக்கு மலர்மாலை கட்டி கொண்டு போய் அர்ச்சகரிடம் கொடுத்து அணிவித்து அழகுபார்க்கும் வேலை செய்து வந்தாள். அதற்கு அப்புறம்தான் சாப்பாடு மற்றவை எல்லாம். ஒரு நாள் மலர்களை பறித்து கட்டி மாலை செய்வதற்கு சிறிது நேரமாகிவிட்டது.
 
கொண்டுபோய் அர்ச்சகரிடம் கொடுத்தால் நடை சாத்தும் நேரமாகி விட்டது இன்று சாத்தமுடியாது என்று கூறி கோயிலை பூட்டிவிட்டார்கள். மனமுடைந்த மஞ்சுளாவும் மிகவும் வருத்தத்துடன் மாலையை எடுத்துக்கொண்டுகண்ணனின் நாமத்தை உச்சரித்துக்கொண்டே மாலையை என்ன செய்வது என்று யோஜித்துக்கொண்டே வந்தாள்.
வழியில் இருந்த ஆலமரத்தின் இருந்த கிருஷ்ணன் படத்தை பார்த்து கண்ணனாக பாவித்து மாலையை அதற்கு சாத்திவிட்டு கண்ணனை நினைத்த வண்ணம் உருகி கண்ணீர்மல்க மரத்தடியிலேயே உறங்கிவிட்டாள்.

மறுநாள் காலை3.00 மணிக்கு நிர்மால்ய தரிசனம் காண கூட்டம் வாயிலில
காத்து நின்றது. மஞ்சுளாவும் கண்ணனைப் பார்ப்பதற்கு வந்து காத்து நின்றாள்.
 
 மேல்சாந்தியும் பழைய மலர்களை களைவதற்கு கதவைத் திறந்தார். அவர் கண்ட காட்சி அவரை வியப்பில் ஆழ்த்தியது. ஆமாம் முதல்நாள்அவரால் நிராகரிக்கப்பட்ட மஞ்சுளாவின் மலர்மாலை கண்ணனின் கழுத்தில் கம்பீரமாக காட்சி அளித்தது. ஆமாம் உண்மையான் பக்திக்கு கட்டுப் பட்ட கண்ணன் ஆலமரத்தடியில் தனக்கு  மஞ்சுளா சாத்தியமாலையை அங்கிகரித்துக் கொண்டுவிட்டான். அதன் நினைவாக இன்றும் ஆலமரத்தினடியிலுள்ள கண்ணனுக்கு மல்ர் மலை சாத்துகிறர்கள்