விடுமொழி

மங்கையர் மலர்

வாழ்கைக்கான நற்சிந்தனைகள்

மாணவர் ஸ்பெஷல்- தினத்தந்தி

துன்பம் இல்லாத இன்பம்…

1. துன்பத்திற்குக் காரணமான தீய ஆசை ஒழிந்தால்,
வாழ்வு பலாச்சுளையாக இனிக்கும்.

2. பொருளை இழப்பது மட்டும் தியாகம் அல்ல.
ஆசைகளை அழிப்பதே தியாகம்.

3. இன்பமும் துன்பமும் ஒவ்வொரு செயலிலும் இணைந்தே
இருக்கிறது. ஆனால் அதன் விகிதாச்சாரம் மட்டும் மாறுபடும்.

4. துன்பத்தைக் கண்டு சோர்வடைய வேண்டாம். நெருப்பில்
இட்ட தங்கமே அணிகலனாக ஒளி வீசும்.

5. வாழ்வில் குறுக்கிடும் சிரமத்தை கண்டு கலங்குவதால்
பயனில்லை. அது தரும் பாடங்களை மறப்பது கூடாது.

6. போலி ஒருநாளும் உண்மையாகாது. வேடம் கலைந்தால்
உண்மை உலகிற்கு தெரியவரும்.

7. எடுத்துச் சொல்வதைவிட எடுத்துக்காட்டாக இருப்பது சிறப்பு.
ராமன் என்று பெயர் இருப்பதை விட ராமனாக வாழ்வது சிறந்தது.

8. உழைத்து உண்பவனுக்கு மட்டுமே உணவு உடம்பில் ஒட்டும்.
உழைக்காமல் ஒருவேளை கூட உண்ணக் கூடாது.

9. உண்மையை விட மதிப்பு மிக்க விஷயம் வேறில்லை.
அது ஒன்றே என்றும் நிலைத்திருக்கும்.

முதலில் குடும்பத்திற்கு சேவை செய்யுங்கள்

பிரான்சு கம்பன் மகளிரணி: இலக்கியம் காட்டும் காதல்

உலகத்தில் அழகற்றது என்பது எதுவும் இல்லை!

வீட்டுக்குள் செடி வளர்ப்போம் | வீட்டுக்குள் செடி வளர்ப்போம் - hindutamil.in

1. துன்பம் நம்மைத் தகுதி உடையவராக மாற்றுகிறது. வேதனையே வலிமையின் கதவுகளைத் திறக்கும் திறவுகோல்.

2. தீயவர்களிடமும் நல்லது இருக்கிறது. ஒழுக்க சீலரிடமும் தவறு இருக்கிறது. இதில் வியப்பதற்கோ, திகைப்பதற்கோ ஏதுமில்லை.

3. அன்பும், சக்தியும் இணைந்தால் தான் உலகைக் காப்பாற்ற முடியும். அவை தனித்தனியே இருந்தால் உலகைக் காப்பாற்ற முடியாது.

4. புண்படுத்தியவர்களையும் மன்னிப்பதே பெருந்தன்மை. ஆனால், அது அவ்வளவு எளிதில் யாருக்கும் வந்து விடுவதில்லை.

5. மனிதனுக்கு வேண்டிய முதலாவது குணம் தைரியம் தான். அதுவே மற்ற குணங்களுக்கெல்லாம் உத்தரவாதம் அளிக்கக் கூடியவை.

6. உலகத்தில் அழகற்றது என்பது எதுவும் இல்லை, எல்லாமே அழகானதுதான். அதைப்பார்ப்பவர்களின் மனநிலையை பொறுத்தது.

நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே!

சிந்தனைக்கு…

கீழ் மக்களுக்குச் செய்த உதவி

ஈசலடிச்சா மழை

குப்பு தாத்தா (தினகரன்-வசந்தம்)

இரவு உண்ணாதவன் பருத்திருப்பான்

குப்பு தாத்தா (தினகரன்-வசந்தம்)

« Older entries