அழகிய புருவங்கள்! – ஹைகூ

குளிர்சாதனப் பெட்டி
வெப்பமூட்டுகிறது
மின்சாரக்கட்டணம்!

மதுபாட்டில்
நிரம்பி வழிகிறது
விதவையின் கண்ணீர்!

இந்திய ஏவுகணை
விண்ணில் பறக்கிறது
கலாமின் புகழ்!

ஆழ்துளைக் கிணறு
அதிகரிக்கிறது
குழந்தைகளின் மரணம்!

பெண்கள் அழகு நிலையம்
சற்று குறைகிறது
அழகிய புருவங்கள்!

————————–

கவிஞர் தயாநிதி-யின் ஊர் சுற்றும் மனசு! – நூலிலிருந்து
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 

 

Advertisements

விலைவாசி உயர்வு – ஹைகூ

விலைவாசி உயர்வு க்கான பட முடிவு

ரேசன் அரிசி
பெரிதாய் இருக்கிறது
ஊழல்!

எனக்கும் சேர்த்தே
அவளே சுவாசிக்கிறாள்
கருவை சுமக்கும் தாய்!

ஆலய வழிபாடு
அடித்து அனுப்புகிறது
அடியவர்களுக்கு மொட்டை

என்னவோ தெரியவில்லை
எப்போதும் சண்டையில்
எதிர் வீடு!

சம்பள உயர்வு
மகிழ்ச்சி இல்லை
விலைவாசி உயர்வு

—————————

கவிஞர் தயாநிதி-யின் ஊர் சுற்றும் மனசு! – நூலிலிருந்து
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்


நியூசிலாந்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து –
பாகிஸ்தானிடையே நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டியில்
முதல் இரண்டு போட்டியில் நியூசிலாந்து வென்றது.

இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி டுனேடனில் நடந்தது.
இப்போட்டியில் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் அடித்த
சிக்சரை மைதானத்தில் அமர்ந்து போட்டியை பார்த்துக்
கொண்டிருந்த டோகர்த்தி என்ற ரசிகர் ஒத்தகையால் பிடித்தார்.

இத்தொடருக்கு முன்னதாக மைதானத்திற்கு வரும் ரசிகர்கள்
தனியார் நிறுவனம் சார்பில் கொடுக்கும் டீ சர்ட்டை அணிந்து
ஒத்த கையால் கேட்ச் பிடித்தால் பரிசுத்தொகையாக
ரூ. 23 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தது.

இதை இன்று நியூசிலாந்தை சேர்ந்த டோகர்த்தி என்ற ரசிகர்
பிடித்து பரிசுத்தொகை பெற்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் கேட்ச் வாய்ப்பை
தவறவிட்ட டோகர்த்தியை அவரது நண்பர்கள் கேலி செய்ததாக
தெரிவித்த அவர், தற்போது அவரது நண்பர்களிடம் இந்த
நிகழ்வை பெருமையாக கூறிக் கொள்ள முடியும் என்றார்.

———————
வெப்துனியா

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?

கிரிக்கெட் வீரர்களை பொதுவாக 3 முக்கிய கிரேடிங்கில்
வகைப்படுத்துவர். அவை எ, பி, சி. இதில் கிரேங்கிற்கு
ஏற்ப சலுகைகளும், சம்பளமும் வீரர்களுக்கு வழங்கப்படும்.

ஏ கிரேடில் உள்ள வீரர்களின் சம்பளம் ரூ.12 கோடி.
ஏ கிரேடில் விராட் கோலி, தோனி, அஸ்வின், ஜடேஜா, ரகானே,
புஜாரா, முரளி விஜய் ஆகிய 7 வீரர்கள் உள்ளனர்.

பி கிரேடு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8 கோடி வழங்கப்படுகிறது.
பி கிரேடில் ரோகித் சர்மா, ராகுல், முகமது ‌ஷமி உள்ளிட்ட
9 வீரர்கள் உள்ளனர்.

சி கிரேடு வீரர்களுக்கு ரூ.4 கோடி வழங்கப்படுகிறது.
சி கிரேடில் தவான், மனிஷ் பாண்டே உள்ளிட்ட 16 வீரர்களும்
உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தோனியை ஏ+ வீரர்கள் பட்டியலில் இணைக்க
பிசிசிஐ மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக, தோனியின் சலுகைகள், சம்பளம், ஐசிசி
ரேட்டிங் ஆகியவை பாதிக்கக்கூடும் என தெரிகிறது.

கிரிக்கெட் வீரர்களுக்கு ஏ+ கிரேட் கொடுப்பதற்கு அனைத்து
விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வேண்டும்.
தோனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத காரணத்தினால்,
அவருக்கு எதற்கு உயர்ந்த கிரேட் என பல கேள்வி எழுப்பிவரும்
நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அஸ்வின், ஜடேஜா போன்ற வீரர்கள் இந்திய அணியில்
ரொட்டேஷன் பாலிசி காரணமாகவே விளையாடாமல்
இருக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு ஏ+ கிரேட்
கொடுக்கப்படும் என தெரிகிறது.

————————-
வெப்துனியா

பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்

பவுர்ணமி என்பது விஸ்வரூப வடிவத்தில் உள்ள
தெய்வ மூர்த்தங்களின் விரதம் இருந்து தரிசனம் பெற
வேண்டிய நாளாக குறிப்பிடப்படுகிறது.

அதாவது, பூமியிலிருந்து வானளாவ எழுந்து நின்ற
தெய்வ வடிவங்களின் தரிசனத்தை பவுர்ணமி நாளன்று
பெறுவதன் காரணமாக, ஒருவரது உள்ளுணர்வு ரீதியான
ஆன்மிக தன்மைகள் மேம்படுத்தப்படும் என்று
சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கோவில் கோபுரம் மூலமாகவும் விஸ்வரூப தரிசனத்தை
பெறலாம் என்ற காரணத்தை வைத்து
‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்ற வழக்கும்
இருக்கிறது.

மேலும், மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெய்வ
விக்கிரகங்களுக்கு பிரபஞ்ச சக்திகளை கிரகித்து,
அந்த ஆற்றலை தன்னை தரிசிப்பவர்களுக்கு பல
மடங்குகளாக திருப்பித்தரும் தன்மை உண்டு என்றும்
ஆன்றோர்கள் மறைபொருளாக தெரிவித்துள்ளார்கள்.

அர்த்த பூர்ணிமம் என்பது பவுர்ணமி திதி, பகலிலும்
இரவிலும் சரியாக அமைந்திருப்பதாகும்.

பூர்வ பூர்ணிமம் என்பது பவுர்ணமி திதி இரவில்
தொடங்கி இரவு முழுவதும் நிறைந்து பகலில் முடிவதாகும்.
உத்தர பூர்ணிமம் என்பது பகலில் தொடங்கி இரவில்
முடிவதாகும். பாச பூர்ணிமம் என்பது பெரும்பாலான
நேரம் பகல் பொழுதில் அமைந்து, இரவில் சிறிது நேரம்
இருப்பதாகும்.

—————————–
வெப்துனியா

ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா…

கல்யாணம் பண்ணின ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*

ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி *”வரமா”* இருக்கனும் சிரி சிரி

இல்ல ஊருக்கு போன மனைவி *”வராம”*  இருக்கனும் சிரி சிரி சிரி


 

ரூபாயின் மதிப்பு உயர்வு – ரூ.63.40

மும்பை :
இந்திய பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும்
அதிக உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர
துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி
சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்
மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.63.40-ஆக வர்த்தகமானது.

முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு
ரூ.63.63-ஆக இருந்தது.

——————————————–
தினமலர்

சாதனையாளர் முத்துக்கள்

சாதனையாளர் முத்துக்கள்

அறிவியலால் வாழ்க்கைக்கு ஒழுங்கை கொண்டு
வர முடியாது என்பது தெளிவாகி விட்டது.
மனித மதிப்பீடுகளால் மட்டுமே அது சாத்தியம்.

——————————–
ஜவகர்லால் நேரு, இந்திய முன்னாள் பிரதமர்

 

சபலம் தந்த சங்கடம்…!

வெண்ணிற ஆடை சூரியன்!

சூரியனின் நிறம் சிவப்பு; நவக்கிரக மண்டபத்தில்,
சூரியனுக்கு சிவப்பு நிற ஆடை அணிவிப்பர்.

வெண்ணிற ஆடை உடுத்தும் சூரியனைக் காண வேண்டுமானால்,
நாகப்பட்டினம் மாவட்டம், திருமணஞ்சேரி உத்வாகநாதர்
கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

குழந்தை பாக்கியத்திற்காக, சிவனை வேண்டி, புத்திர காமேஷ்டி
யாகம் நடத்தினார், பரத்வாஜ மகரிஷி. யாககுண்டத்தில்
குழந்தையாக தோன்றினாள், அம்பிகை.

மணப்பருவம் எய்திய அவளை, மணந்து கொள்ளும்படி சிவனை
வேண்டினார், பரத்வாஜர். இத்தலத்தில் வந்து, அம்பிகையை மணந்து
கொண்டார்,

சிவபெருமான். சுவாமிக்கு, உத்வாகநாதர் என்றும், தலத்திற்கு
திருமணஞ்சேரி என்றும் பெயர் ஏற்பட்டது. ‘உத்வாகம்’ என்றால்
திருமணம்; இங்குள்ள மூர்த்தியை, கல்யாண சுந்தரர் என்றும்
அழைப்பர்.

சூரியன், மும்மூர்த்தி விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத
வரதராஜப்பெருமாள், பச்சையப்பர், முருகன், பைரவர், சனீஸ்வரர்
ஆகிய தெய்வங்களுக்கு, வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது.

வெள்ளை நிறம் களங்கமற்ற தன்மையைக் குறிக்கும். கடவுளை
வணங்குவோர், களங்கமற்ற மனதுடன் நடந்து கொள்ள வேண்டும்
என்பதைக் குறிக்க, இவ்வாறு அலங்காரம் செய்கின்றனர்.

தை மாதம் சூரியனுக்குரியது; இம்மாதத்தில், அவர் தன் வடதிசை
பயணத்தை துவங்குகிறார். இச்சமயத்தில் வெண்ணிற ஆடை
சூரியனை வணங்கினால் மனபலத்தையும், மண வாழ்க்கையும்
அருளுவார்.

இது ஒரு திருமணத்தலம்.

பல காரணங்களால் திருமணம் தடைபடுவோர்,
ல்யாண சுந்தரருக்கும் – கோகிலாம்பாளுக்கும் இரண்டு மாலை
அணிவித்து வணங்கி, அதில், ஒன்றை பிரசாதமாகப் பெற்று,
வீட்டிற்கு கொண்டு செல்வர். திருமணமானதும், அந்த மாலையுடன்,
மேலும் இரண்டு மாலையை கல்யாண சுந்தரருக்கு அணிவித்து,
நேர்த்திக்கடன் நிறைவேற்றுவர்.

திருமணஞ்சேரிக்கு சென்றும், திருமணம் நடக்கவில்லையே என்று
வருத்தப்படுவோரும் உண்டு. இதற்கு காரணம், அவர்கள்
ஒரு உறுதிமொழியை இங்குள்ள பரிவார மூர்த்திகளிடம்
வைக்காதது தான்.

‘பரிவார தேவதைகளே… எனக்கு திருமணமானதும் என்
மனைவி – கணவரிடம் எதையும் மறைக்க மாட்டேன்;
அத்தகையை வெள்ளை மனதை எனக்கு தந்தருள வேண்டும்.
அது, உங்களது வெள்ளை ஆடையின் நிறம் போல் பிரகாசிக்க
வேண்டும்…’ என வேண்டுங்கள்;
திருமணம் விரைவில் நடக்கும்.

திருமணத்துக்குப் பின், அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற
வேண்டும் என்பது முக்கியம்.

மேலும், இது, ஒரு கல்வித்தலமும் கூட. புதன் கிரகத்தின்
பலமிருந்தால், கணிதம், ஜோதிடம் ஆகிய துறைகளில் சிறப்பிடம்
பெற முடியும். இந்த பலனைப் பெற விரும்புவோர்,
புதன்கிழமைகளில் இங்குள்ள பச்சையப்பநாதர் – பச்சையப்ப
நாயகிக்கு பச்சைப் பயறு படைத்து, வழிபடலாம்.

பாவம் தீரவும் இங்கு பிரார்த்தனை செய்யலாம்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற
தலம் இது.

சம்பந்தர் தன் பதிகத்தில், இத்தலத்து சிவனை வணங்க, பாவம்
சேராது என்றும், துன்பம், இடையூறு நீங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில்,
27 கி.மீ., துாரத்தில் உள்ளது, திருமணஞ்சேரி!

———————————————

தி.செல்லப்பா
வாரமலர்

« Older entries Newer entries »