திருமலை இரண்டாவது மலைப்பாதை தயார்

45.jpg


திருமலை இரண்டாவது மலைப்பாதை போக்குவரத்துக்குத்
தயாராகி விட்டது.

கடந்த 15 நாள்களாக திருமலையில் பெய்த பலத்த மழையால்
திருமலை இரண்டாவது மலைப்பாதையில் பல இடங்களில்
மண் சரிவு ஏற்பட்டது. எனவே திருமலைக்குச் செல்லும்
இரண்டாவது மலைப்பாதை மூடப்பட்டு, இரண்டு மலைப்
பாதைகளுக்கு இடையில் உள்ள இணைப்புச் சாலை வழியாக
வாகனங்கள் திருமலைக்கு அனுப்பப்பட்டன.

இதனால் திருமலைக்குச் செல்ல ஒன்றரை மணிநேரம் ஆனது.

இந்நிலையில் கடந்த 3 நாள்களாக மழை நின்றுவிட்டதால்
போர்க்கால அடிப்படையில் மலைப்பாதை சீர்படுத்தப்படுகிறது.
வியாழக்கிழமை முதல் இரண்டாவது மலைப்பாதை திறக்கப்படும்
என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இரண்டொரு நாளில் இரு சக்கர வாகனங்கள் மலைக்குச் செல்ல
அனுமதிக்கப்படும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

————————-

 

சுற்றுச் சூழலை பாதிக்காத அரிசிக்கு இந்த ஆண்டுக்கான பாப்புலர் சயன்ஸ் மாத இதழின் விருது

சுற்றுச் சூழலை பாதிக்காத அரிசிக்கு இந்த ஆண்டுக்கான பாப்புலர் சயன்ஸ் மாத இதழின் விருது

நியூயார்க், நவ. 25-

காலநிலை மாற்றம் வேகமாக ஏற்படுவதற்கு அரிசி பயிர் செய்வதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. நெற்பயிர் வளரும்போது வெளியிடும் மீத்தேன் காலநிலை மாற்றத்துக்கு அடிப்படை காரணமாக விளங்குகின்றது. இந்நிலையில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் காலநிலை மாற்றத்துக்கு வித்திடாத புதிய அரிசி வகையை தயாரிக்கும் வேலையில் இறங்கினர்.

சீனா மற்றும் ஸ்வீடன் நாடுகளில் இந்த ஆய்வை நடத்தி, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத அரிசியை உருவாக்கிய கிறிஸ்டர் ஜான்சன் என்ற ஆராய்ச்சியாளரின் குழுவுக்கு பொறியியல் பிரிவுக்கான ‘புதியதில் சிறந்தது – 2015’ என்ற விருதை ‘பாப்புலர் சயன்ஸ்’ மாத இதழ் வழங்கியுள்ளது.

பார்லியில் உள்ள ஒரு ஜீன் தனது தாவரத்தின் கார்பன் பயன்பாட்டைக் குறைப்பதாகத் தெரியவந்தது. இதனைப் பயன்படுத்தி அரிசிப் பயிரில் மீத்தேன் உமிழ்வை இந்த ஆராய்ச்சிக் குழுவினர் குறைத்துள்ளனர்.

ஆண்டுக்கு 8 முதல் 15 சதவிகித மீத்தேன் உமிழ்வு நெற்பயிரால் ஏற்பட்டுவருவது, காலநிலை மாற்றம் விரைவடைய முக்கிய காரணமாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகின்றது.

மாலைமலர்

’’​வை-பை’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”லை-பை”

-தொலைக்காட்சி இல்லாத வீடே இல்லை என்பது போல், தற்போது இணையம் இல்லாத வீடு இல்லை என்றாகிவிட்டது. இந்த மாற்றத்திற்கு வலு சேர்க்கும் வகையில் லை-பை என்னும் புதிய சேவையை விங்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

2011ஆம் ஆண்டு பேராசிரியர் ஹரால்ட் ஹாஸ்-ஆல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த லை-பை தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் அதிவேக டேட்டா சேவை இன்னும் சில மாதங்களில் பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

ஒரு நொடிக்கு 224 gigabits வேகம் கொண்ட லை-பை இதுவரை ஆய்வுக்கூடத்தில் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, இந்த தொழில்நுட்பம் முதன்முறையாக அலுவலகம் மற்றும் தொழிற்கூடங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு நொடிக்கு 1 GB வேகத்தில் டேட்டா உபயோகிக்கும் அளவிற்கு முன்னேற்ற இயலும் என்று அறிவியலாள்ர்கள் கூறுகின்றனர். இது, சாதாரண வை-பை வேகத்தை விட 100 மடங்கு அதிகமானது.

லை-பை இயங்கும் முறை:

ஒரு சிறிய மைக்ரோ சிப்-ஐ மின்சார ஒளி விளக்கில் பொருத்தி லை-பை சேவையை பெறலாம். லை-பையில் உபயோகித்திருக்கும் தொழில்நுட்பம்- புலப்படும் ஒளி தொடர்பாடல் (”Visible Light Communication)”. மோர்ஸ் கோட் என்னும் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்விளக்கை போல் எளிதாக பயன்படுத்தலாம். ஒளியின் வேகம் அதிகமாக உள்ளதால் இதில் டேட்டா பரிமாற்றம் அதிவேகமாக இருக்கும்.
லை-பை பயன்கள்:

லை-பை விட நூறு மடங்கு வேகமானது. ஒளி சுவற்றில் ஊடுருவாது என்பதால் இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்தவும் லை-பை உதவும். மேலும் ஒரு நொடியில் 18 திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

தற்போது, எஸ்டோனியாவில் பரிசோதனை செய்யப்படும் இந்த தொழில்நுட்பம் வெற்றியடைந்தால், அனைத்து இல்லங்களிலும் LED மின் விளக்குகளில் இருந்து அதிவேக இண்டர்னெட் என்ற பேராசிரியர் ஹாஸின் கனவு நிஜமாகும். மேலும், இது இண்டர்னெட் சேவையில் புரட்சியை உருவாக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நன்றி

http://ns7.tv/ta/li-fi-enables-100-times-faster-speed-wi-fi.html

 

 

சென்னை வெள்ளத்தையும் கவனியுங்கள்: தேசிய ஊடகங்கள் மீது நடிகர் சித்தார்த் ஆவேசம்

சென்னையின் வெள்ள பாதிப்பு குறித்த செய்திகளுக்கு தேசிய ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று நடிகர் சித்தார்த் கடுமையாக சாடியுள்ளார்.

கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, ” தேசிய ஊடங்களே.. தமிழ்நாட்டில் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையும் இந்தியாவைச் சேர்ந்தது தான்.

அமீர்கான், ஷீனா போரா விஷயங்களை விட இது முக்கியம். எங்களையும் பாருங்கள், எங்களைப் பற்றியும் பேசுங்கள், இப்போதாவது!” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த்தின் இந்தக் கருத்தை ஆதரிக்கும் விதமாக, ட்விட்டரில் அந்தமிதக் குறிப்பிட்ட பதிவுக்கு லைக்குகளும் ரீட்வீட்களும் பறந்தவண்ணம் இருந்தன.

-தமிழ் தி இந்து காம்

 

பூமியில் விழுந்த தேவதை!

சில வாரங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் நெல்லூரில் பறக்கும் மனிதர்கள் வானத்துல வட்டம் இடுறதா வெளியான பரபரப்பு வீடியோ, வைரல் ஆனது தெரிஞ்ச விஷயம்தான். அதே மாதிரி லண்டனில் நடந்திருக்கு ஒரு சம்பவம்.

-வெள்ளை வெளேர் உடையும், சுருக்கம் விழுந்த முகமும் கொண்ட வயதான (?!) ஒரு பறக்கும் தேவதை பொத்துனு லண்டன் தெருவுல இருந்த ஒரு கூண்டுக்குள்ள விழுந்திருக்கு. அவ்வளவுதான். பதறியடிச்சுப் பல பேர் ஓட, ‘என்னம்மா அங்க சத்தம்?’னு கெத்தா சில பேர் பக்கத்துல போய்ப் பார்த்திருக்காங்க. அட, நிஜமாவே ஒரு பறக்கும் தேவதை ஸாரி… மூத்த தேவதை. அவ்ளோதான். ஆளாளுக்குப் போட்டி போட்டு போட்டோ எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், லண்டனில் இருக்கும் சில பூம் பூம் பூச்சாண்டிகள், ‘போச்சு போச்சு… மனித இனம் பூமியில் வாழும் தகுதியை இழந்துவிட்டது. அதுக்கான அறிகுறிதான் இது’ என கேப்பில் கிடா வெட்டியிருக்கிறார்கள்

-கடைசியில்தான் தெரிந்தது சீனாவைச் சேர்ந்த சன் யுவாங், பெங் யூ என்ற இருவர் சேர்ந்து வடிவமைத்த செயற்கையான உருவம்தான் அது என்று. ‘கலைக்கும் இயற்கைக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை’ என்பதை உணர்த்த பல ஆண்டுகளாக இவர்கள் உழைத்து உருவாக்கியது தான் இந்த வயதான தேவதையாம். எலும்பு, தசை, ரத்தத்துக்குப் பதில் சிலிக்கான் பசை, ஃபைபர் கண்ணாடி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கி யிருப்பது மட்டும்தான் இந்த தேவதைக்கும், சாதாரண மனுஷிக்குமான வித்தியாசம்.

மற்றபடி, உடலமைப்பு, தத்ரூபமான முடிகள், அத்தனை கச்சிதமாகக் காணப்படும் இறக்கைகள் என எல்லாமே ஆஸம். தங்கள் திறமையைக் காட்ட, அடிக்கடி பல நாடுகளுக்கு டிரிப் அடிக்கும் சன் யுவாங்கிற்கும், பெங் யூவிற்கும் புராணங் களில் கேள்விப்பட்ட வித்தி யாசமான உருவங்களை, அச்சு அசலாக செயற்கையில் கொண்டுவருவதுதான் ஹாபியாம்!

கே.ஜி.மணிகண்டன்
விகடன்.காம்

 

செல்ஃபோன் டேட்டா கட்டணங்கள் குறையும்: ஃபிட்ச் தகவல்

இந்தியாவில் செல்ஃபோன் data கட்டணங்கள் 15 முதல் 20 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக பிரபல மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

இந்திய செல்ஃபோன் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கால் பதிக்க உள்ளதன் விளைவாக நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி உருவாகும் என்றும் இதன் மூலம் கட்டணம் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் ஃபிட்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னணி 4 தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் கடும் போட்டியால் அவற்றின் லாப விகிதங்கள் குறையும் என்றும் ஃபிட்ச் கூறியுள்ளது.

2015ம் ஆண்டில் ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்து சராசரியாக 170 ரூபாய் வருமானம் கிடைத்து வருவதாகவும் வரும் ஆண்டில் இது 160 ஆக குறையும் என்றும் அதன் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அகல் விளக்குகள் விற்பனைக்கு…

agal_vilaku.jpg

-கார்த்திகை தீபத்திருநாள் நெருங்கிவரும் நிலையில்
அதை தீபம் ஏற்றிக் கொண்டாடும் வகையில்
புதுக்கோட்டையிலுள்ள கோயில் சன்னதியில் அனைவரையும்
கவரும் வகையில் பல்வேறு ரகங்களிலும், மாதிரிகளிலும்
களி மண்ணில் தயாரான வண்ணமயமான அகல் விளக்குகள்
விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளன.

————————–

 

ஊதிய கமிஷன் பரிந்துரையின் 10 முக்கிய அம்சங்கள்

நீதிபதி மாத்தூர் தலைமையிலான 7-வது ஊதிய கமிஷனின் பரிந் துரை அறிக்கை மத்திய அரசிடம் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப் பட்டது. அதன் முக்கிய பரிந் துரைகள் வருமாறு:

* ஒட்டுமொத்தமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55% ஊதிய உயர்வு. அடிப்படை ஊதியத்தில் 16% உயர்வு.

* படிகளில் 63% உயர்வு. ஆண்டுக்கு 3% ஊதிய உயர்வு. 52 படிகள் ரத்து, 36 படிகள் இதர படிகளோடு இணைப்பு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக நிர்ணயம்.

* அதிகபட்ச ஊதியம் ரூ.2.5 லட்ச மாக நிர்ணயம், குரூப் இன்சூரன்ஸ் தொகை ரூ.50 லட்சமாக உயர்வு. இதனால் பிரிமியம் பிடித்தம் உயரும், ஓய்வூதியதாரர்களுக்கு 24 சதவீத உயர்வு.

* ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் ராணுவத்தை போன்று துணை ராணுவ படைகளிலும் அமல்.

* தொலைத்தொடர்பு, இன்சூரன்ஸ், மின்வாரியம், விமான நிலையங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு ரூ.4.50 லட்சம் ஊதியம்.

* ராணுவ பணிக்கு இளைஞர்களை ஈர்க்க ஐஐடி மற்றும் ஐஐஎம்களில் ஓராண்டு மானியக் கல்வி.

* ராணுவ குறுகிய கால சேவைகளில் பணியாற்றும் அதிகாரிகள் 7 முதல் 10 ஆண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் ஓய்வுபெற சிறப்பு சலுகை.

* தனியார் நிறுவனங்கள் போன்று பணித் திறன் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வட்டியில்லா கடன்கள் ரத்து.

* மனைவி துணையில்லாத ஆண்களின் நலன் கருதி குழந்தை பராமரிப்புக்காக முழு ஊதியத்துடன் ஓராண்டு விடுமுறை.

* பணிக்கொடை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு.

=

தமிழ் தி இந்து காம்

 

கோவா சர்வதேச படவிழாவில் இளையராஜாவுக்கு விருது!

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச படவிழாவில்
இளையராஜாவுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டுக்கான இந்திய திரையுலக ஆளுமை நூற்றாண்டு
விருது இளையராஜாவுக்கு இன்று வழங்கப்பட்டது.
கோவாவில் நடக்கும் சர்வதேசப் படவிழாவில் இந்த விருதை மத்திய
நிதியமைச்சர் அருண் ஜேட்லி இளையராஜாவுக்கு வழங்கினார்

————————————–
தினமணி

 

அஞ்சலக சேமிப்பு -வட்டி விகிதங்கள்

அஞ்சலக் முதலீடுகளுக்கான வட்டி விகிதங்கள் என்ன?

சேமிப்பு கணக்குகளுக்கு – 4%,
ஆர்டி கணக்குகளுக்கு – 8.4%,
டைம் டெப்பாசிட்களுக்கு (TD)
1 வருடம் – 8.4%, 2 வருடம் – 8.4%, 3 வருடம் 8.4%, 5 வருடம் 8.5%
மந்த்லி இன்கம் ஸ்கீம் (Monthly income scheme) – 8.4%
பிபிஎஃப் – 8.7%
செல்வமகள் சேமிப்பு கணக்கு – 9.2%
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கு  – 9.3%
கிஷான் விகாஸ் பத்திரம் – 8.7%
நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட்
(8ஆவது வெளியீடு, 5 வருடங்கள்) – 8.5%, (9ஆவது வெளியீடு, 10 வருடங்களுக்கு ) – 8.8%

————————

வரிச் சேமிப்புக்கு திட்டமிடுபவர்கள் கீழ்க்காணும் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
5 வருட டைம் டெபாசிட், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், பிபிஎஃப், என்எஸ்சி, அஞ்சலக, ஆயுள் காப்பீடு, செல்வ மகள் சேமிப்புத் திட்டம், ஊரக அஞ்சல் காப்பீடு ஆகிய திட்டங்களின் கீழ் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரி பிரிவு 80சியின் கீழ் வருமான வரி விலக்கு பெற முடியும்.

————————————-

ட்விட்டர் கேள்வி -பதில்

http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10022

 

 

« Older entries Newer entries »