விரிந்து கிடக்கிறது கேள்வி


பறவையை விட்டு
ஏன் பிரிந்தாய்
சிறகிடம் கேட்டேன்
நீந்திப் பழக என
பதில் வந்தது.

கால்களின் கீழே
விரிந்து கிடக்கிறது கேள்வி
கடந்து போனால்
கண்டடையலாம்
பதிலையும் என்னையும்

இந்தப் பூச்செடி
தலையசைத்து
ஏதோ சொல்கிறது
என்ன என்றுதான்
தெரியவில்லை

உன்னைப் பார்க்க
விரும்பவில்லை
உணர விரும்புகிறேன்

——————————–
ராஜா சந்திரசேகர்
குங்குமம்

வனமே உன்னைப்பாட ஒரு புல்லாங்குழல் கொடு…!

-ராஜா சந்திரசேகர்
குங்குமம்

உங்கள் வாழ்க்கையில்…


உங்கள்
கைகளில் ஒன்றுமில்லையா?
தேய்த்துப் பாருங்கள்
நம்பிக்கை தெரியும்!

உங்கள்
கால்களில் ஒன்றுமில்லையா?
ஓடியாடிப் பாருங்கள்
உழைப்பு தெரியும்!

உங்கள்
கண்களில் ஒன்றுமில்லையா?
விழித்துப் பாருங்கள்
வெளிச்சம் தெரியும்!

உங்கள்
விரல்களில் ஒன்றுமில்லையா?
எண்ணிப் பாருங்கள்
பலம் தெரியும்!

உங்கள்
நெஞ்சினில் ஒன்றுமில்லையா?
போராடிப் பாருங்கள்
உறுதி தெரியும்!

உங்கள்
வாழ்க்கையில்
ஒன்றுமே இல்லையா?
உழைத்துப் பாருங்கள்
உயர்வு தெரியும்!

—————————–
— வீ.சிவசங்கர், கள்ளக்குறிச்சி.
வாரமலர்

ஒரு நிமிடக் கதை – சுதந்திரம்

போஸ் ஓய்வு பெற்ற அரசு அலு வலர்.
வீட்டில் கண்டிப் புக்கு பெயர் போனவர். இன்ஜினீயரிங்
படித்து முடித்த ஒரே மகன் வாசுவுக்கு தனது சிபாரிசில்
வேலை வாங்கித் தர மறுத்துவிட்டார்.

“அவனுக்கு திறமை இருந்தால் அவனே வேலை வாங்கி
கொள்ளட் டும்” என்று பிடிவாதமாக இருந்து விட்டார்.

வாசுவும் வேலைக்கு முயற்சி செய்து எதுவும் நடக்க
வில்லை. தினமும் நண்பர்களோடு வெளியே கிளம்பி
விடுவான். தெருவின் எல்லையில் உள்ள ஒரு
சிதிலமடைந்த சுவரில் அமர்ந்து இரவு வரை அரட்டை
அடித்துவிட்டு வீட்டுக்கு வருவான்.

“தண்டச்சோறு … இந்த காலத்து பசங்களுக்கு பொறுப்பே
இல்லை. எல்லாம் உங்களுக்கு பெத்தவங்க கொடுக்குற
சுதந்திரம்” என்று திட்டினாலும் வாசு மவுனமாகிவிடுவான்.

அன்று மதியம். சாப்பிட்டுக் கொண் டிருந்த வாசுவிடம்
ஒரு அழைப்பிதழை காட்டி, “பாருடா, இந்த வருஷம்
சுதந்திர தினத்துக்கு நம்ம காலனியில கொடி ஏத்துறதுக்கு
என்னை விருந்தினரா அழைச்சிருக்காங்க… எல்லாம் நான்
கட்டி காப்பாத்துன மரியாதை… நீ என்னத்தை சாதிச்சு
கிழிச்ச?” என்றார்.

மௌனமாக கேட்டுக்கொண்டான் வாசு.

அன்று இரவு தாமதமாக வீட்டுக்குள் வந்த வாசுவின் கையில்
ஒரு காகித பார்சல். பிரித்தவன் ஒரு பத்திரிக் கையை
தந்தையின் கையில் நீட்டினான்.

ஒன்றும் புரியாமல் பார்த்த போஸிடம், “அப்பா, நானும் என்
நண்பர்களும் சேர்ந்து மனித நேய கழகம் ஒன்றை சுதந்திர
தினத்துக்கு ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். நாங்க வழக்கமா
சந்திச்சு பேசுற அந்த குட்டி சுவருதான் எங்க சங்க அலுவலகம்.
எல்லோரும் அவங்க கையில இருக்குற சேமிப்பை போட்டு,
படிக்க முடியாத குழந்தைகளுக்கு பண உதவி, கஷ்டப்படுற
மகளிருக்கு பொருள் உதவின்னு செய்யலாம்னு இருக்கோம்”
என்றான் அமைதியாக.

கோபமான போஸ், “உனக்கு பெருசா சாதிசுட்டோம்னு
நெனப்போ?” என்றார்.

“பெருசா எதுவும் பண்ணிடலை தான். இருந்தாலும் நமக்கு
கிடைச்ச சுதந்திரத்த நமக்கு மட்டும் வச்சு அழகு பார்க்காம,
அடுத்தவங்களுக்கும் உப யோகமா செய்யணும்ல.
வெறுமனே கொடி ஏத்துறது மட்டும் சுதந்திரம் இல்லைப்பா.
அடுத்தவங்களையும் வாழ வைக்கணும்” என்று கூறியவாறு
உள்ளே சென்று விட்டான்.

அன்று இரவு தூக்கம் வராமல் சிந்தித்துக் கொண்டிருந்தார்
போஸ். “என் பெயரை மட்டுமே நிலை நாட்டிக் கொள்ள,
சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கு பெருமைபட்டேன்.
ஆனால், இந்த கால தலைமுறை நாட்டின் பெயரை நிலை
நாட்ட தங்களை வருத்திக் கொள்ளத்தான் செய்கிறார்கள்.

இளைஞர்கள் நாட்டின் தூண் என்பது சரிதான். நாளை
விடிந்தவுடன் என் பங்களிப்பாக ஏதேனும் நன்கொடை தர
வேண்டும்” என்று நினைத்துக் கொண்டார்.

————————————————–
எம்.விக்னேஷ்

தமிழ் தி இந்து காம்

சுதந்திர தின சிறப்பு கவிதை: யாசகர்கள்….

வறுமை,
அம்மா…
தாயே….
என்ற
அடுக்குமொழிகளின்
ஆசிரியன்…..இந்தியாவை
இன்னும் ஏழையாக
காண்பிக்கும் ஒரு
பிரகஸ்பதி……

ஆதி அந்தமில்லாது
அடக்குமுறைக்குட்படாத
ஓர் அவதிக்குழு…

நம் இந்திய தேசத்
திக்குகளின்
திருஷ்டிபொட்டு ….

வானில் ஒரு
நிலாவென்றால்
வையத்தில் உள்ளது
பலரிடமும்,
பிச்சைத்தட்டு

வேகமாய் முன்னேறும்
இந்தியாவின் தோல்விக்கு
வித்திட்ட வேகத்தடை…..

வறுமை கோட்டிற்குக்கீழ்
வாழும் அம்மக்களின்
வயிற்றிலும்
வறுமைக்கோடு….

நம் நாட்டின்
பேருந்து நிலையங்கள்தான்
அவர்களைப் பெற்று வளர்த்து
வழிநடத்தும்
தலைமை செயலகங்கள்…..

இப்பூலோகத்தில்
வறுமைக்கும் வறுமை
புகட்டும் ஏகாதிபத்தியம்
தலைஎடுக்கப்படும்
தருணம் என்று வரப்போகிறதோ?
தெரியவில்லை……

இனிவரும் காலங்களில்
அணு ஆயுதங்கள் எல்லாம்
அவசியமற்று,
பிச்சக்கலங்களுக்கே
முதலிடம்…
இந்தியாவை
சீர்குலைக்க…….

தயவுசெய்து
இந்தியாவின்
அடையாளச்சொல்லை
மாற்றுங்கள்…
‘யாசகமற்ற தேசகம்’ என்று……!

==========
வனிதா தேவி
நன்றி- கூடல்.காம்

வறுமையில்லா வல்லரசு இவ்வரசாக முரசறைவோம்….

வெண்பனி கூட்டம் இயற்கையின் நாட்டம்
அருமையான காற்று அளவில்லா நீர் ஊற்று
பலவகை மக்கள் அவர்களைப் புரந்த மாக்கள்
உலகளாவிய புகழ் பல்தொழில் தேர்ச்சி
இவ்வனைத்து வளமும் குன்றா நாடு நமது பாரதம்

புகழும் பெருமையும் வளமும் கொண்டு
வறுமையும் எளிமையும் ஏழ்மையும் இணையாக கொண்டு
விளங்கும் பாரதம் என்று கூறுவதே உண்மை

உள்ளன உளபோல் இல்லாது உள்ளன
எல்லாம் வல்லன வாவது முன்னேற்றம்.

தாயின் பிள்ளைகள் பலவெனினும்
காட்டும் அன்பும் உரிமையும் ஒன்றே

அதேபோல்

பாரத மக்கள் பலரெனினும்
முன்னேற்றம் இவர்களுக்கு பொதுவானது

அவ்வாறெனில்

தொன்றுதொட்டு வழங்கி வரும் பழக்கம் போல
விடா பீடையாய்வரும் வறுமையும் பொது.

ஆனால்

அனைவரும் வறுமையில் வாடுவதில்லை
பாவத்திற்குரிய பாவிகளே வறுமையின் உரிமையாளர்களாகின்றனர்.
அவ்வாறு இராது
மிகையென உள்ள தொகையில் சிறிதை
ஈகையென கருதாது வழங்கி வறுமை
என்னும் சிறுமையை தகர்ப்போம்.

வறுமையில்லா வல்லரசு இவ்வரசாக முரசறைவோம்……………..

====

சடையப்பர்

-நன்றி- கூடல்.காம்

மழை கவிதை

இல்லாதவன்..

இலக்கு நெருங்கியதென
நினைத்த நொடியில்
ஒரு சம்மட்டி அடி பிடரியில்
உற்றுப்பார்
இலக்கு எங்கே என்றது
காலம்
கண்ணுக்கெட்டிய தொலைவில்
எட்டிப்பிடிக்க முடியா தூரத்தில்
எக்காளமிட்டது இலக்கு
இப்படியாவது
மீண்டுமொரு முறையில்
மற்றுமொரு முறை
முன்னெப்போதும் இல்லா சவால்கள்
புதிய முட்பாதைகள்
ஓடிக்கொண்டே இருப்பதன் தாகம்
இருப்பதாய் நம்பப்படும் திறமை
அதிகமாய் சோதிக்கப்படுகிறது
சோதிக்கப்பட இருக்கிறது
கடைசி நாளில்
கடைவழிதான் என்றபோதினும்
கடைசி வரைக்கும் இந்தவழி மட்டுமே
ஓடத்துணிந்து விட்டேன்
இலக்கை அடையும் வரையல்ல
இல்லாததையெல்லாம் அடையும் வரை
========================================
– முத்துசாமிப் பேரன்

மாறு வேடத்தில் கிளம்பி விட்ட மர்மப்படை…!

இந்தக் கோலம்
மாறுவேடப்போட்டிக்காக அல்ல!
தீவிரவாத வேட்டைக்காக!
பொறுத்தது போதும் எனப்
பொங்கி எழுந்துவிட்ட
அரிதாரம் பூசிய அவதாரங்கள் – நாங்கள்!
இது எங்களின்
என் கவுண்டர் அல்ல – கவுண்ட்டர்!

வெ.பாண்டுரங்கள்

———————————

குடிகார அப்பன்களை
திருத்திடவே
மாறு வேடத்தில்
கிளம்பி விட்டதோ
மர்மப்படை
வெப்பன்களோடு…!

ரிசிவந்தியா

———————–

என்ன ஆச்சரியமாய்
வாய் பிளந்து பார்க்கிறான்
சிறுவன்…
ஒரு வேளை எதிரே
கடவுள் மண்டியிட்டு
கிடக்கிறாரோ..?

பெ.பாண்டியன்

—————————-

-குமுதம்

என் உயிர் பிச்சுத் தின்பவளே.. (கவிதை) வித்யாசாகர்

.
 
சிட்டுக்குருவியின் கால்களைப்போல்தான்
நெஞ்சில் பாதம் பதிப்பாய்..
மீசைப் பிடித்திழுத்து – எனக்கு
வலிக்க வலிக்க நீ-சிரிப்பாய்..
எச்சில்’ வேண்டாமென்பேன்
வேண்டுமென்று அழுது
வாயிலிருந்துப் பிடுங்கித் தின்பாய்,
வளர்ந்ததும் ச்சீ எச்சிலென்று செல்லமாய் சிணுங்குவாய்..
கிட்டவந்து கட்டிப்பிடித்து முத்தமிடுவாய்
முத்தத்தில் முழு கோபத்தையும்
தின்றுவிடுவாய்.., முத்தத்தைக்கூட
எனக்கொரு மொழியாக்கித் தந்தவள் நீ தான்..
புதுத்துணி வாங்கிவந்தால் படுக்குமுன் உடுத்திப்பார்ப்பாய்
கொடுக்காமல் எடுத்துவைத்தால் பீஜ் பீஜ்பா என்பாய்
ஆங்கிலம்கூட உன் பேச்சில் பிசுபிசுக்கும், திகட்டாதத்
தேனிற்குள் உன்பேச்சு எப்போதுமே யினிக்கும்..
கோபம் வந்தால் அடித்துவிடுவேன்
நீயா அடித்தாய் என்னை என்றுப் பார்ப்பாயா
அல்லது நீயே அடிதுவிட்டாயே என்றுப் பார்ப்பாயா
தெரியாது,

ஆனால் உன் பார்வையின் வலியினால்
எனக்குள் இரத்தம் சொட்டும்..,
அடித்ததை எண்ணி எண்ணி
ஆயுளில் அந்தநாள் இல்லாமலே குறைந்துபோகும்..
நான் தூங்கும் நல்லிரவுவரை நீயும் விழித்திருப்பாய்
தூக்கம் வரவில்லையென்பாய்
பொம்மை பேசுகிறது பேசுகிறேன் என்பாய்
தண்ணீர் வேண்டும் என்பாய்
பாதிக் கண்ணில் என்னையே பார்த்திருப்பாய்
எனக்குத் தெரியும், நீ தூக்கத்தை
என் கண்களில் வைத்திருக்கிறாயென்று தெரியும்,
விளக்கை அணைத்துவிட்டு வந்து படுப்பேன்
நீயும் உன் விளையாட்டைப் போட்டுவிட்டு வந்து
என் கைமீது படுத்துக் கொள்வாய்,
உனக்குத் தலையணை வைத்ததில்லை நான் – என்
உயிரெல்லாம் திரண்டு நீ படுத்திருக்கும்
ஒரு கையில் உசந்துகிடக்கும்..

« Older entries Newer entries »