காயப்படுத்தும் மௌனம்…!

மௌனங்கள்
காயப்படுத்தின
திரும்பும் கடிதம்

————————-

அலசி அலசி
பார்க்கப்பட்டது
ஊர் ஞாயம்

—————————–

கவிதைகள்
நுகர்வு
வண்ணத்துப்பூச்சி ஓவியம்

—————————–

கையெழுத்திட கொஞ்சம்கூட
யோசிப்பதில்லை
கடன் பத்திரம்

—————————-

பரிவாரத்துடன் அரசன்
பசியோடுபோர்த்
தொண்டர்கள்

————————–
-பொள்ளாச்சி குமாரராஜா

யுத்தம் தவிர், உலகை ஆள்…!

யுத்தம் தவிர்,
உலகை ஆள்…!
சமாதானம்

—————-

சோறு தின்ன
அழும் மழலை
சிரிக்கும் நிலாக்கள்

——————–
காலக் கண்ணாடிகள்
மீண்டும் மீண்டும் உடையும்
கனவுகள் உராய்வதால்

———————–

கரணம் போட்டால்
பிழைப்பு
அரசியல்வாதி

———————-

உருண்டு ஓடும்
வாழ்க்கையில்
மனம் சுழல் கவிதைகள்

————————
பொள்ளாச்சி குமாரராஜன்

இலைகளில் பனித்துளி

இலைகளில் பனித்துளி - க்கான பட முடிவுசெடிகளில்
கூடு கட்டுகிறது
மார்கழிப்பனி

தூர்வார முடியாமல்
ஏரியில் நிரம்பி இருக்கிறது
பாலித்தீன் குப்பை

நேற்று பெய்த மழை
இன்று முளைத்த காளான்
புல்லுக்குப் பிடிக்கும் குடை

மரம் தாங்காதோ
உதிர்ந்து விழும்
பிஞ்சுகள்

நள்ளிரவில்
யாருக்காகக் காத்திருக்கிறது
சிமெண்ட் பலகைகள

உழவன்
விழிகள் ததும்புகின்றன
வறண்ட கிணறு

தொடர் வண்டி தாலாட்டினாலும்
தூங்க முடியவில்லை
பயணச் சீட்டில்லாப் பயணம்

தொலைக்காடசி பார்க்காமல்
விரைவாக உறங்குகிறது
தெரு விளக்கு

முன்னோக்கிய பயணத்தில்
பின் நழுவிச் செல்லும
மரங்கள் ஞாபகங்கள

அதிகாலை
குத்திய முள்ளால் ஒழுகும்
பனி ரத்தம்

============================
சோலை இசைக்குயில்
படம் – இணையம்

 

புதுப்பொலிவுடன் முதியோர் இல்லம் – ஹைகூ

இனிப்புகள் விநியோகித்து
புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது
முதியோர் இல்லம்

காற்றுக்கு அசையும் சன்னல்
ஏக்கமாய்ப் பார்த்தது
மரம் இருந்த இடத்தை

தேரோடும் தெருவில்
ஆளரவமற்றுப் போகிறது
ரோடு இஞ்சின்

அறை வாங்கும் சோம்பேறித்தனம்
காகிதப்பூவில் ஒட்டடை
சிரிக்கும் நிஜப்பூ!

எபோதோ நடந்தது
சுவாரசியம் ததும்ப
வரலாற்று ஆசிரியர்

மூழ்கியே கிடந்தாலும்
ஒரு நாளும் அகப்பை அறியாது
அவியல் ருசி

முகம் மூடிய குற்றவாளியின்
குலுங்கும் தோள்கள் சொல்லும்
அவன் அழுததை

மௌன அஞ்சலிக் கூட்டத்தில்
கவனத்தை திசை திருப்பும்
செல்ஃபோன் தகவல்

திருவோடு பிடித்தவனிடம்
கையேந்தி யாசிக்கும்
வேட்பாளர்

வேப்ப மரத்தில்
அழகான பிஞ்சு
தூளிக் குழந்தை

—————————
ஸ்ரீநிவாஸ் பிரபு

முதல் மழை

விதையின் உறக்கத்தை
தட்டி எழுப்பியது
முதல் மழை

———————–

படியளக்கும் பரமசிவன்
கோயிலின் படியெல்லாம்
அம்மா…தாயே!

—————————

எலி வளையில்
பெயர்ப்பலகை
நர்சரி ஸ்கூல்

——————–
புதுவை தமிழ்நெஞ்சன்

சகுனம் சொல்லிய பல்லி

சகுனம் சொல்லிய பல்லி க்கான பட முடிவு

மனித நேயம்
விருட்சமாய் விரிந்தது
பெருமை சுனாமிக்கு

———————-
நெருப்பின்றியே
திரவம் கொதித்தது
இரத்தம்

———————

நசுங்கிச் செத்தது
சகுனம் சொல்லிய பல்லி
கதவிடுக்கில்

——————–

தள்ளிப் போட்டான்
வெள்ளை அடிப்பதை
தேர்தல் அறிவுப்பு

————————

எரிபொருள் சிக்கனம்
வாகனமின்றி
உலாவரும் மேகங்கள்

——————–

கையடக்கப் பதிப்பில்
உலகச் சந்தை
செல்போன்

——————-

நட்சத்திரங்களுடன்
களியாட்டம்
இரவில் நிலா

———————

பல்முனை வரிகள்
வாழ்க்கை வியாபாரம்
சீர் வரிசை

—————–
-மலர்மகள்

ஹைகூ – ரசித்தவை

rang_p10.jpg

கயிறு இல்லாமல் பெண்களைக் கட்டிப்போடலாம்…!!


கயிறு இல்லாமல்
பெண்களைக் கட்டிப்போடும்
தொலைக்காட்சித் தொடர்கள்

—————————

மகிழ்ச்சியாய்
முடிந்த பண்டிகை
விட்டுச்சென்ற கடன்

————————

சுகாதார அதிகாரியால்
விடமுடியவில்லை
நகம் கடிக்கும் பழக்கம்

————————

தீப ஒளியன்றும்
ஏழைகளின் வாழ்க்கை
இருள் சூழ்ந்தது

———————-

எந்த ஊருக்குச் செல்கிறது
இந்த ரயில்
எறும்புக் கூட்டம்

————————

அழகாய் சட்டை தைக்கும்
தையல்காரனின்
சட்டையில் கிழிசல்

———————

இரவு முழுவதும் மழை
சாலைகளில் உருவாயின
குளங்கள்

———————

பார்த்து நட
வாழ்க்கை ரோஜாவில்
வழியெங்கும் முட்கள்

———————

கண்ணாடித் தொட்டிக்குள்
வண்ண வண்ண மீன்கள்
விசாலமற்ற மனித மனங்கள்

————————–
கூர்க்காவையும்
கண்காணிக்கிறது
நள்ளிரவு நிலா

———————-

இரா.ஆதிநாராயணன்

பெருமலையைத் தகர்க்கும் சிறு உளி

சிறுவனென்று ஏளனம் வேண்டாம்
பெருமலையைத் தகர்க்கும்
சிறு உளி

வண்ணை சிவா

—————————-

ஐம்பதும் வளைந்த்து
தெருவில் அனாதையாய்
ஐம்பது ரூயாய்

—————————-

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளைந்தது…!

ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளைந்தது
முதுகெலும்பு

————————–

கேட்போரின் மதி
கேழ்வரகில் நெய்
தேர்தல் அறிக்கை

———————

அவசரம் வேண்டாம்
ஆயிரம் காலத்துப் பயிர்
அவளைத்நேடுகிறேன்

————————–

மடியில் கனமில்லை
வழியில் பயம்
போக்குவரத்து காவலர்

———————————

அடக்கம்
ஆயிரம் பொன்
அவருக்குப் பொன் வேண்டாம்

————————-
இரா.இரவி

« Older entries Newer entries »