துறைவாரியாக கடவுள்கள்

கவிஞர் இரா.இரவி
ஆயிரம் ஹைகூ – தொகுப்பிலிருந்து

 

Advertisements

இலவச இணைப்பாய் வண்டுகள்

கவிஞர் இரா.இரவி
ஆயிரம் ஹைகூ – தொகுப்பிலிருந்து

 

நள்ளிரவு தழுவல்…

விஞ்ஞான வளர்ச்சி
மங்கியது
மனிதம்

———————-பூனையின் குறுக்கே நான்
சகுனம் சரியில்லை
விபத்தில் இறந்தது பூனை

———————-

மறுப்பு தெரிவித்தும்
தொடுகிறாய்
மழையிடம் குடை

——————

நள்ளிரவு தழுவல்
மனதிற்கு இன்பம்
கவிதையுடன் நான்

——————

சீறிவரும் சிங்கம்
அலறியது குழந்தை
பேருந்தில் வரைபடம்

———————

பிழைக்கத் தெரிந்த கடவுள்
நூறு ரூபாய்த்தாள்
சிறப்பு தரிசனம்

———————-

கரசூர் பத்மபாரதி

கிரீடம் சூடியும் தலை குனிவு

Post

கிரீடம் சூடியும்
தலை குனிவு
இரைக்கொத்தும் சேவல்

———————

பிறந்தகம் மறந்து
புகுந்த வீட்டிலும் மகிழ்வாய்
கொய்யப்பட்ட பூக்கள்

———————–
ஒத்தைக்கு ஒத்தை
மல்லுக்கட்டும்
காதுக்குள் எறும்பு

———————

தெருவுக்குத் தெரு
திருப்பதிகள்
கல்வி நிறுவனங்கள்

——————-

பசுமை வயலின் நடுவே
இலையில்லா ஒற்றை மரம்
மின்கம்பம்

———————-

வெளிச்சத்தின்
தழும்பு
அட! நிழல்

———————–
கரசூர் பத்மபாரதி

மெல்ல புரிந்தது வாழ்க்கை

உயிரையும் கொடுப்போம்
பிரசாரத்தில் தலைவர்
வெயிலுக்குப் பயந்து ஏ.சி காரினுள்

————————

படித்தோர் அடிக்கும்
நாகரிகக் கொள்ளை
சுயநிதிக் கல்லூரி

——————–

தொடர் தோல்விகள்
மெல்ல புரிந்தது
வாழ்க்கை

——————–
கரசூர் பத்மபாரதி

இறக்கை முளைத்த குட்டி நிலாக்கள்

இறக்கை முளைத்த
குட்டி நிலாக்கள்
மின்மினிகள்

———————–

காக்கை கரைய கரைய விருந்தாளி
மகிழ்ந்த உள்ளம்
ஆ! கடன்காரன்!

——————————-

நியாயம் தொலைந்தது
கருப்பு அங்கியில்
ஆறுதலாய் காக்கை

————————-

பூனைக்குட்டிகளுக்கு
தாய்மடி
ஏழையின் அடுப்பு

——————–

பாராளுமன்ற அடுப்பில்
பழைய சோறு
மகளிர் இட ஒதுக்கீடு

—————–

கரசூர் பத்மபாரதி
_________________

தலைகீழாய் சாராயக்கடை பெயர்..! –


எச்சமிட்டது காக்கை
தடியிருந்தும் அடிக்கவில்லை
தேசப்பிதா

———————–

குடிக்காததால்
தலைக்கீழாய்
தெரிந்தது சாராயக் கடைபெயர்

————————-


உரிமம் காட்டினேன்
ஏமாந்தார் காவல்ர்
பாவம் மாதக்கடைசி

————————-

கூட்டணிக்காட்சி
வலுத்துவிட்டது
மொய்க்கும் கொசுக்கள்

—————————

கிச்சு கிச்சு மூட்டாதே
குலுங்கி குலுங்கி சிரிக்கிறேன்
மத்துடன் மோர்

—————————
கரசூர் பத்மபாரதி

_________________

ஆயுட்கால ஏமாளி

பட்டை நாமத்துடன்
ஆயுட்கால ஏமாளி
அணில்

———————

உம் கொட்டி
கதை கேட்கிறது
ஒழுகும் வீட்டில் மழைத்துளி

—————————-

தாய்ப்பால் பற்றாக்குறை
யாரிடம் சொல்வது
அம்மா என்றது கன்று

————————

தெருமுனைப் பிச்சைக்காரன்
பசித்த வயிறு
புண்ணியம் தேடும் உண்டியல்

—————————–

தூக்கில் இருந்து
காப்பாற்றினேன்
ஆ! கம்பளிப்பூச்சி

———————-

கரசூர் பத்மபாரதி

பால் குடித்த கட்அவுட்

நடிகனின் பிறந்த நாள்
பசியாறியது
பால் குடித்த கட்அவுட்

———————–

ஆதாம் ஏவாளின்
எச்சங்கள்
நரிக்குறவர்கள்

————————

நிறங்கள் போதவில்லை
புலம்புகின்றன
கட்சிக் கொடிகள்

————————

விபத்தாக்கிய
வெட்கங்கெட்ட நடை
எருமையைத் திட்டும் காவலர்

————————–

இருவண்ணக்கொடி
மெல்ல மெல்ல நகருகிறது
மரவட்டை

————————
-கரசூர் பத்மபாரதி

சிதறிக் கிடந்தாலும் அழகுதான்…!சிதறிக் கிடந்தாலும்
அழகுதான்
பூக்கள்

———————

வன்முறை மட்டுமே
வாழ்க்கையோ
துப்பாக்கி

———————

தனக்குள்ளேயே
ஆபத்தை உருவாக்கும்
பயம்

——————-

பழகி
பழி வாஙுகுமோ
மது

—————–

உடைந்து சிதறினாலும்
மீண்டும் ஒட்டிக்கொள்ளுமோ
கல் எறிந்த குளத்து நிலா

———————
-முத்து ஆனந்த்

« Older entries