சங்கீதம் பாடும் சல்லாபம் செய்யும்

  • 01. காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான். அவன் யார்?

    புல்லாங்குழல்
  • 02. ஓட்டம் நின்றால் போதும் ஆட்டம் நின்று போகும். அது என்ன?

    ரத்தம்
  • 03. தணித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை அது என்ன?

    உப்பு
  • 04. வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?

    கத்தரிக்கோல்
  • 05. ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?

    துடைப்பம் (தும்புத்தடி)
  • 06. ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன?

    ஊதுபத்தி
  • 07. மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?

    பஞ்சு
  • 08. தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும். அது என்ன?

    எழுமிச்சம்பழம் (தேசிக்காய்)
  • 09. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?

    விக்கல்
  • 10. காலையிலே கூவும் பட்சி, கந்தன் கொடியில் காணும் பட்சி, குப்பையைக் கிளறும் பட்சி, கொண்டையுடைய பட்சி – அது என்ன?

    சேவல்
  • 11. சங்கீதம் பாடும் சல்லாபம் செய்யும் சமயத்தில் ரத்தம் குடிக்கும் – அது என்ன?

    கொசு
  • 12. சட்டையைக் கழற்றியதும் சடக்கென்று உள்ளே விழும் – அது என்ன?

    வாழைப்பழம்
  • 13. சங்கரன் கோவில் டப்பா தாயும் மகளும் தேய்ப்பா – அவை என்ன?

    அம்மி குழவி
  • 14. கோட்டையயைச் சுற்றி மதில் சுவர் உள்ளே மறைந்திருக்கிறான் வேட்டைக்காரன் – அது என்ன?

    நாக்கு
  • 15. கோடையிலே ஆடி வரும் வாடையில முடங்கி விடும் – அது என்ன?

    மின்விசிறி
  • 16. கோணல் எத்தனை இருந்தாலும் குணமும் குறியும் மாறாது – அது என்ன?

    கரும்பு
  • 17. கோவில் குளம் இல்லாமல் கொட்டி திரிகிறான் ஒருவன் – அவன் யார்?

    குயவர்
  • 18. கோவிலைச் சுற்றி கறுப்பு கோவிலுக்குள்ளே வெளுப்பு – அது என்ன?

    சோற்றுப்பானை
  • 19. கோயிலுக்குப் போனானாம் எங்க தம்பி தீர்த்தம் விட்டானாம் தங்கத் தம்பி – அது என்ன?

    தேங்காய்
  • 20. கோழிக் குஞ்சு பொரிப்பது எப்படி? தாழி நெய்யை எடுப்பது எப்படி?

    முட்டையிட்டு

மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன ?

  • 01. தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன ?

    முதுகு
  • 02. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன ?

    சிலந்தி வலை
  • 03. முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார் ?

    மின்சாரம்
  • 04. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன ?

    சிலந்தி வலை
  • 05. நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார் ?

    மணிக்கூடு
  • 06. பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து. அது என்ன ?

    தேன்
  • 07. உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான். அது என்ன ?

    ஊசி
  • 08. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன ?

    மத்து
  • 09. என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன். நான் யார் ?

    துவாரம்
  • 10. நான்தான் சகலமும். என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது. எனக்கு வாயில்லை, ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார் ?

    காற்று
  • 11. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான். அவன் யார் ?

    வானொலிப் பெட்டி
  • 12. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன். அவன் யார் ?

    தலையணை
  • 13. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார் ?

    மெட்டி
  • 14. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை மடக்கித் தாக்கும். அது என்ன ?

    தேனீ
  • 15. அடி மலர்ந்து நுனி மலராத பூ – அது என்ன ?

    வாழைப்பூ
  • 16. அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை – அது என்ன ?

    தலை வகிடு
  • 17. அத்தையில்லா அத்தை என்ன அத்தை ?

    சித்தரத்தை
  • 18. அத்தானில்லா அத்தான் என்ன அத்தான் ?

    மொடக்கத்தான்
  • 19. அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும் – அது என்ன?

    இளநீர்
  • 20. அத்துவான காட்டிலே பச்சைப்பாம்பு தொங்குது – அது என்ன?

    புடலங்காய்

விடுமுறை இல்லாத கடை எது?-விடுகதைகள்

  • 01. மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன?

    தீபம்
  • 02. அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன?

    நிலா
  • 03. மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன?

    மஞ்சள்
  • 04. இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?

    இதயம்
  • 05. உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?

    தக்காளி
  • 06. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?

    கடல்
  • 07. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?

    கண்
  • 08. மழை காலத்தில் பிடிப்பான் அவன் யார்?

    காளான்
  • 09. காய்க்கும் பூக்கும் கலகலக்கும் காகம் இருக்கக் கொப்பில்லை அது என்ன?

    நெல்லு
  • 10. கத்தி போல் இலை இருக்கும் கவரிமான் பூ பூக்கும் தின்ன பழம் கொடுக்கும் தின்னாத காய் கொடுக்கும் அது என்ன?

    வேம்பு
  • 11. ராஜா, ராணி உண்டு நாடு அல்ல. இலைகள் பல உண்டு, தாவரம் இல்லை! அது என்ன?

    காட்ஸ்
  • 12. கடலில் கலக்காத நீர், யாரும் குடிக்காத நீர் – அது என்ன?

    கண்ணீர்
  • 13. ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் – அது என்ன?

    வாய்
  • 14. விடுமுறை இல்லாத கடை எது?

    சாக்கடை
  • 15. சின்னப்பயல் உரசினால் சீறிப் பாய்வான் – அது என்ன?

    தீக்குச்சி
  • 16. வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார் அவர் யார்?

    பாம்பு
  • 17. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும் அது என்ன?

    கண் இமை
  • 18. வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார்?

    ஆறு அல்லது அருவி
  • 19. அடிக்காமல், திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்?

    வெங்காயம்
  • 20. வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன?

    நெருப்பு

முழு உலகமும் சுற்றி வரும், – விடுகதைகள்

1. முழு உலகமும் சுற்றி வரும்,
ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன?

2. ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன்,
ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன்,
நான் யார்?

3. கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை,
வாங்கியவனும் உபயோகிக்கவில்லை,
உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது
அது என்ன?

4. ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை
உண்டு, ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க
முடியாது, அக் குற்றம் என்ன?

5. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது.
கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது.
குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது அது என்ன?

6. வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை
சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு
உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?

7. மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும்
துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம்
வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து
வைப்பேன், நான் யார்?

8. சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள். அது என்ன?

9. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே.
அது என்ன?

10. கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன்,
பள்ளநீரைக் கண்டு பதைபதைக்கிறான். அது என்ன?

—————————–
விடைகள்

1.முத்திரை
2. நெருப்பு
3. சவப்பெட்டி
4. தற்கொலை
5.குயில்
6. சோளம்
7. பஞ்சு
8. மின்விசிறி
9. தொலைபேசி
10. நெருப்பு

——————

11. கலர்ப்பூ கொண்டைக்காரி, காலையில் எழுப்பிவிடுவாள். அது என்ன?
சேவல்
12. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?
சோளக்கதிர்
13. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது?
உப்பு
14. கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளைக் காகம் நிற்குது. அது என்ன?
உளுந்து
15. காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை. அது என்ன?

16. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன?
ஈசல்
17. . உருவத்தில் சிறியவன். உழைப்பில் பெரியவன். அவன் யார்?
எறும்பு
18. எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன?
மெழுகுவர்த்தி
19. வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும். அது என்ன?
வாழை
20. அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு. அது என்ன?
இடியாப்பம்

ஆரவாரம் இல்லாத கூட்டணி – விடுகதைகள்

eyes.jpg

  • 01.கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்?

    புகை
  • 02. வெயிலில் மலரும், காற்றில் உலரும். அது என்ன?

    வியர்வை
  • 03. வேகாத வெயிலில் வெள்ளையப்பன் விளைகிறான். அது என்ன?

    உப்பு
  • 04. கழுத்து உண்டு, தலையில்லை; உடல் உண்டு, உயிர் இல்லை, கையுண்டு, விரல் இல்லை. அது என்ன?

    சட்டை
  • 05. ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவை யாவை?

    எறும்புகள்
  • 06. ஆகாயத்தில் பறக்கும். அக்கம் பக்கம் போகாது. அது என்ன?

    கொடி
  • 07. ஆறு எழுத்துள்ள ஓர் உலோகப் பெயர். அதன் கடை மூன்று எழுத்துகள் சேர்ந்தால் ஒரு கொடிய பிராணி. அது என்ன?

    துத்தநாகம்
  • 08. அண்டமென்ற பெயரும் உண்டு, அடைகாத்தால் குஞ்சுமுண்டு. அது என்ன?

    முட்டை
  • 09. வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும். அது என்ன?

    மழை
  • 10. பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும். அது என்ன?

    பெட்ரோல்
  • 11. தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார்?

    இள‌நீ‌ர்
  • 12. ஆயிரம் பேர் வந்து சென்றாலும் வந்த சுவடு தெரியாது? அது என்ன?

    எறு‌ம்பு
  • 13. வினா இல்லாத ஒரு விடை அது என்ன விடை?

    ப‌ணி‌விடை
  • 14. உரசினால் உயிரே மாய்த்துக் கொள்ளும் அது என்ன?

    தீ‌க்கு‌ச்‌சி
  • 15. கை பட்டால் சிணுங்கும் கன்னிப் பெண், கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பவள் அவள் யார்?

    கா‌லி‌ங்பெ‌ல்
  • 16. தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடி திறக்கும் கதவு அது என்ன?

    க‌ண் இமை
  • 17. பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்துவிடுவேன். நான் யார்?

    அமைதி
  • 18. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்?

    தென்றல்
  • 19. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

    பட்டாசு
  • 20. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?

    எறும்புக் கூட்டம்

குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் – அவன் யார்?

கத்தரிக்காய் க்கான பட முடிவு

1. ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர்,
தண்ணீர் அல்ல அது என்ன?

2. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள்
அவள் யார்?

3. தலைக்குள் கண் வைத்திருப்பவன்
இவன் மட்டும்தான் அவன் யார்?

4. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான்
அவன் யார்?

5. ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள்
அவை எவை?

6. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன்.
அது என்ன?

7. வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது.
கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது.
அது என்ன?

8. பொட்டுப்போல் இலை இருக்கும்,
பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும்,
தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?

9. தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான்.
அவன் யார்?

10. குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும்
அவன் யார்?


—————————-
விடைகள்
—-
1.கண்ணீர்
2. மெழுகுதிரி
3.நுங்கு
4. அகப்பை
5. முட்டை
6. கடிதம்
7.கல்வி
8. முருங்கைமரம்
9. உப்பு
10. கத்திரிக்காய்

——————————–

 

 

மழை காலத்தில் பிறக்கும் குடை. அது என்ன?


1. அந்தி சாயும் நேரம், அவள் வரும் நேரம். அது என்ன?

2. மண்ணுக்குள் இருக்கும். மங்கைக்கு அழகு தரும்.
அது என்ன?

3. இரவு பகல் பாராமல் உழைக்கும்.
படுத்தால் எழுப்ப ஆள் இல்லை. அது என்ன?

4. உடம்பெல்லாம் சிவப்பு. குடுமி மட்டும் பச்சை.
அது என்ன?

5. ஓயாமல் இரையும், உருண்டோடிவரும்.
சில சமயம் சீறவும் செய்யும். அது என்ன?

6. சிறு தூசி விழுந்தால் குளமே கலங்கிவிடும்.
அது என்ன?

7. வேகமாகச் சுற்றினாலும் தலை சுற்றாது.
அது என்ன?

8. கடலில் கலக்காத நீர். யாரும் குடிக்காத நீர்.
அது என்ன?

9. அடிமேல் அடி வாங்குவான். ஆனால்,
அனைவரையும் சொக்க வைப்பான். அவன் யார்?

10. கோட்டைக்குள் 32 காவலர்கள்.
அது என்ன?

11. மழை காலத்தில் பிறக்கும் குடை.
அது என்ன?

————————
தொகுத்தவர்:
– ஆர். பிரசன்ன குமார், 9-ம் வகுப்பு,
ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி.
-====
விடைகள்

விடைகள்:

1. நிலா
2. மஞ்சள்
3. இதயம்
4. தக்காளி
5. கடல்
6. கண்
7. மின்விசிறி
8. கண்ணீர்
9. மேளம்
10. வாய், பற்கள்
11. காளான்

சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன?

01. நன்றிக்கு வால் கோபத்துக்கு வாய் அது என்ன?

02. உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம்
அது என்ன?

03. தலையில் கீரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?

04. எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க
வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?

05. படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும்
அது என்ன?

06. சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம்
அது என்ன?

07. கந்தல் துணிக்காறி முத்துப் பிள்ளைகள் பெற்றாள்
அவள் யார்?

08. மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம்
அது என்ன?

09. ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்?
அது என்ன?

10. நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது
அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம் அது என்ன?

———————–
விடைகள்

1. நாய்
2. இளநீர்
3. அன்னாசிப்பழம்
4. நண்டு
5. பட்டாசு
6. நுளம்பு (கொசு)
7 .சோளப்பொதி
8. அன்னாசிப்பழம்
9. தேங்காய்
10. நத்தை

————-

ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை. அது என்ன?

1. ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை. அது என்ன?

2. ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு;
இவனுக்கு மட்டும் ஓய்வில்லை; இரவும் பகலும்
ஓட்டந்தான். அது என்ன?

3. ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால்
படுப்பான். அவன் யார்?

4. பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு.
அது என்ன?

15. அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது.
அது என்ன?

16. அனைவரையும் நடுங்க வைப்பான்,
ஆதவனுக்கே அடங்குவான். அது என்ன?

7. உணவு கொடுத்தால் வளரும்;
நீர் கொடுத்தால் அழியும். அது என்ன?

8. ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான்.
அது என்ன?

19. தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும்.
அது என்ன?

10. இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும்.
அது என்ன?

———————————
விடைகள்

1. குடை
2. மூச்சு
3. பம்பரம்
4. வானம்
5.தண்ணீர்
6. குளிர்
7.நெருப்பு
8. தீக்குச்சி
9.உரோமம்
10. கடிகாரம்

———-

கடிகாரம்

அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?

1. அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும்.
அது என்ன?

02. அடித்து நொறுக்கி அணலில் போட்டால் ஆவியாகத்
தோன்றி அழகாய் மணக்கும். அது என்ன?

03. அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம்.
அது என்ன?

04. அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?

05. பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது. அது என்ன?

06. ஆயிரம் தச்சர் கூடி கட்டிய அந்த அழகான மண்டபம் ,
ஒருவர் கண்பட்டு உடைந்ததாம் அந்த மண்டபம்.
அது என்ன?

07. எட்டாத ராணியாம் இரவில் வருவாள்,
பகலில் மறைவாள். அது யார்?

08. ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல; சூடு கொடுக்கும்,
தீ அல்ல; பளபளக்கும், தங்கம் அல்ல. அது என்ன?

09. அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன?

10. ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன?


——————————-

விடைகள்
————
1.மிருதங்கம்
2.சாம்பிராணி
3வளையல்
4மதி
5பாம்பு
6.தேன் கூடு
7.நிலா
8.சூரியன்
9.காற்று
10.மரம்

« Older entries Newer entries »