விடுகதைகள்

IMG_2048.jpg

விடுகதை..

zx.jpg

அள்ளலாம் கிள்ள முடியாது – விடுகதைகள்

 

1. அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை

2. அடி மலர்ந்து நுனி மலராத பூ

3. அத்தானில்லா அத்தான் என்ன அத்தான்?

4. அத்தையில்லா அத்தை என்ன அத்தை?

5. அந்தரத்தில் தொங்குவது செம்பும் தண்ணீரும்

6. அரையடிப் புல்லில் ஏறுவான் இறங்குவான்

7. அள்ளலாம் கிள்ள முடியாது

8. அறுக்க உதவாத கருக்கு அரிவாள்

9. அள்ளவும் முடியாது கிள்ளவும் முடியாயாது

விடைகள்
————
1. வகிடு
2. வாழைப்பூ
3. மொடக்கத்தான்
4. சித்தரத்தை
5. இளநீர்
6. பேன்
7.தண்ணீர்
8. பிறைச்சந்திரன்
9 காற்று

——————————-

வெளியில் விரியும், வீட்டில் சுருங்கும்!- விடுகதைகள்

IMG_1921.jpg

மூன்று பெண்களுக்கும் ஒரே முகம்.-விடுகதை

கோயிலுக்குப் போனேன்; கும்பிடு போட்டேன்.
பூவில்லாத இலையைப் போற்றி வைத்தேன்.
பழுக்காத காயைப் பணிந்து வைத்தேன்.
விதையில்லாக் கனியை வேண்டி வைத்தேன்.
– அது என்ன?

விடை:
———–
பூ இல்லாத இலை……வெற்றிலை

பழுக்காத காய்…….தேங்காய்

விதையில்லாத கனி…..வாழைப்பழம்
———————————

தலை போனால் மறைக்கும்;
இடை போனால் குரைக்கும்;
கால் போனால் குதிக்கும்;
மூன்றும் ஒன்று சேர்ந்தால்
முந்தி ஓட்டம் பிடிக்கும்.
– அது என்ன?

விடை:
குதிரை……..
———————————

மூன்று பெண்களுக்கும் ஒரே முகம்.
மூத்த பெண் ஆற்றிலே;
நடுப்பெண் காட்டிலே;
கடைசிப்பெண் வீட்டிலே.
_ அவைகள் என்ன?

விடை:

ஆற்றில் – முதலை

காட்டில் – உடும்பு

வீட்டில் – பல்லி

———————————-

ஊருக்கு அழகு எது என்றேன்… விடுகதைகள்

1. சின்னப் பெட்டிக்குள் சிறை இருப்பான்,
வெளியே வந்தால் பளிச்சிடுவான்…

2. ஒரு கரண்டி மாவில் ஊருக்கே தோசை…

3. குண்டுக் குள்ளனுக்குக் குடுமி நிமிர்ந்து நிற்குது…

4. தரையில் இருப்பான், தண்ணீரில் படுப்பான்…

5. வம்புச் சண்டைக்கு இழுத்தாலும் வாசல் தாண்ட
மாட்டான்…

6. நீல நிற மேடையிலே கோடி மலர் கிடக்குது.
எடுப்பாரும் இல்லை, தொடுப்பாரும் இல்லை…

7. எட்டாத தூரத்திலே எவரும் இல்லாத காட்டிலே
எழிலான பெண் ஒருத்தி இரவெல்லாம் சிரிக்கிறாள்…

8. ஊருக்கு அழகு எது என்றேன்…
ஒன்றுடன் சேர்ந்து ஐந்து என்றார்…

9. சித்திரையில் சிறு பிள்ளை, வைகாசியில் வளரும்
பிள்ளை…

———————————–
விடைகள்:
1. முத்து, 2. நிலா, 3. தேங்காய், 4. படகு,
5. நாக்கு, 6. விண்மீன்கள், 7. நிலவு,
8. ஆறு, 9. பனம்பழம்
தொகுத்தவர்-ரொசிட்டா
———-
நன்றி
-சிறுவர்மணி

IMG_1889.jpg 1.jpg

IMG_1889 (1).jpgIMG_1889 (1).jpg 2.jpg


தொகுப்பு- பத்கினி
நன்றி
பொம்மி

 

கடைத்தெருவில் காத்திருப்பாள் கண் மயக்கும் ராணி – விடுகதைகள்

IMG_1661.jpgவிடைகள்

—————
1. கண்கள், விரல்கள், பற்கள், நாக்கு
2. கொசு
3. வானம்
4. சப்பாத்திக்கள்ளி
5. நகங்கள்
6. இடி மின்னல் மழை
7. மாம்பழம்

——————–

 

 

வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல்…விடுகதைகள்

1. மீன் பிடிக்கத் தெரியாதாம்,
ஆனால் வலை மட்டும் பின்னுவானாம்…

2. சலசலவென சத்தம் போடுவான்,
சமயத்தில் தாகம் தீர்ப்பான்…

3. காக்கை போல கருப்பானது…
கையால் தொட்டால் ஊதா நிறம்…
வாயால் மென்றால் நீல நிறம்…

4. ஒரு கிணற்றில் ஒரே தவளை….

5. வால் உள்ள பையன் காற்றில் பறக்கிறான்…

6. ஆனை விரும்பும் சேனை விரும்பும்,
அடித்தால் வலிக்கும் கடித்தால் சுவைக்கும்…

7. கண்ணுக்குத் தெரியாதவன், உயிருக்கு
உகந்தவன்…

8. சுற்றுவது தெரியாது
ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான்…

9. வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல்…

—————————-
விடைகள்:
1. சிலந்தி, 2. அருவி, 3. நாவல் பழம்,
4. நாக்கு, 5. பட்டம், 6. கரும்பு7. காற்று,
8. பூமி, 9. முட்டை

ஆக்கம்-ரொசிட்டா
நன்றி- சிறுவர்மணி

காவி உடையணியாத கள்ளத்தவசி

 • 01. காவி உடையணியாத கள்ளத்தவசி கரையோரம் கடுந்தவம் செய்கிறான் அவன் யார்?

  கொக்கு
 • 02. காளைக்குக் கழுத்து மட்டும் தண்ணீர் அது என்ன?

  தவளை
 • 03. காற்று இல்லாத கண்ணாடிக் கூண்டில் மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது அது என்ன?

  முட்டை
 • 04. காலில்லாதவன் வளைவான், நெளிவான் காடு மேடெல்லாம் அலைவான் அவன் யார்?

  பாம்பு
 • 05. காலைக்கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும் நாயல்ல அது என்ன?

  முள்
 • 06. காலையில் ஊதும் சங்கு, கறி சமைக்க உதவும் சங்கு அது என்ன?

  சேவல்
 • 07. காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோஷம் அது என்ன?

  வானம்
 • 08. கையுண்டு, கழுத்துண்டு, தலையுண்டு உயிரில்லை அது என்ன?

  சட்டை
 • 09. வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக் காரி அது என்ன?

  மயில்
 • 10. சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு, பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன?

  கிளி
 • 11. தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் -அது என்ன?

  கப்பல்கள்
 • 12. மணல் வெளியில் ஓடுது தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன?

  ஒட்டகம்
 • 13. தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்ன?

  தொட்டா சுருங்கிச் செடி
 • 14. வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது அது என்ன?

  விமானம்
 • 15. சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன?

  பப்பாளி விதைகள்
 • 16. நடக்கத் தெரியாதவன், நட்டுவனுக்கு வழி காட்டுகிறான் அவன் யார்?

  கைகாட்டி
 • 17. நடலாம், பிடுங்க முடியாது அது என்ன?

  பச்சை குத்துதல்
 • 18. நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன் நான் யார்?

  வெங்காயம்
 • 19. நடைக்கு உவமை, நளனக்கு தூதுவன் அவன் யார்?

  அன்னம்
 • 20. நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத தண்ணீர் இல்லை அது என்ன?

  அச்சு வெல்லம்

« Older entries