கடலூர் மாவட்ட வரலாறு – தொட்ச்சி 1

அணைக்கட்டுகள்


திருவதிகை அணை, வானமாதேவி அணை மற்றும்
திருவஹீந்திரபுரம் அணை ஆகிய அணைகள்
அமைந்துள்ளன. வீரணாம் ஏரி சோழர்களால்
கட்டப்பட்ட ஏரியாகும்

.

அலையாத்திக் காடுகள்

பிச்சாவரம், கெடிலம் ஆகிய கடலோரப்பகுதிகளில்
அலையாத்திக் காடுகள் உள்ளன.

தொழில் வளம்
நெய்வேலி நகரியமும் இம்மாவட்டத்தில் உள்ளது.

என்.எல்.சி. என்றழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி
நிறுவனம் இந்தியாவிற்கான மின்சாரத்தேவையை
நிறைவேற்றுவதில் முதன்மையானது.

சுற்றுலாத் தலங்கள்

மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்

கி.பி.1110 ல் முதலாம் குலோத்துங்கன் (சோழர்களால்
கட்டபட்டது )
பிச்சாவரம், கெடிலத்தின் கழிமுகம், கடலூர்தீவு,
வெள்ளி கடற்கரை, புனித டேவிட் கோட்டை,
கடலூர் துறைமுகம், சிதம்பரம் நடராசர் கோயில்,
வடலூரில் வள்ளலார் அமைத்த சத்ய ஞான சபை,
விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் கோயில்,
திருமுட்டம் ஆதிவராக சுவாமி கோயில்

மேல்பட்டாம்பாக்கம் 400 வருட சிவன் கோவில்
சரபேசுவரர்,
பள்ளிவாசல் மசூதி போன்றவை கடலூர் மாவட்ட
சுற்றுலாத் தலங்கள் ஆகும்.

மேலும் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள
மேலக்கடம்பூர் சிவன் கோயில் மிக பிரசித்தி பெற்ற
தலம், கரக்கோயில் எனப்படும் தேர் வடிவ கோயில்
இங்கு மட்டுமே உள்ளது.

சிதம்பரம்
சிதம்பரத்தை தில்லை என்று அழைப்பார்கள் அதற்குக்
காரணம் தில்லை மரங்கள் அதிகமாயிருந்தது என்று
சொல்லப்படுகிறது. சிற்றம்பலத்தின் கூரை 21,600 தங்க
ஓடுகளால் ஆனது.

படியின் இருபுறமும் யானை உருவங்கள் உள்ளன.
வானளாவ நிற்கும் நான்கு கோபுரங்களும் காண்பவரை
ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

பல மன்னர்களின் திருப்பணியைக் கண்ட கோயிலாதலால்
இங்கு அவரவர் கால கலை நுட்பங்களைக் காணலாம்.

நடனக் கலையில் அடவுகள் இங்குள்ளது போல அவ்வளவு
அழகாக வேறு எங்கும் காண முடியாது. பிரகார
மண்டபங்களில் நாயக்கர் கால ஓலியங்களைக் காணலாம்.

இங்குச் சிவனையும்-திருமாலையும் ஒருங்கே ஓரிடத்தில்
நின்று காணலாம்.

பிச்சாவரம்

சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் பிச்சாவரம்
அமைந்துள்ளது. காடுகள் சூழ்ந்த பிச்சாவரம்,
இம்மாவட்டத்தின் ஓர் அழகு மிக்க சுற்றுலாதுளமாகும்.

கல்கத்தாவிலிருக்கும் சுந்தரவனக் காடுகளுக்கு அடுத்த
படியாகச் சுர புன்னை மரங்கள் மண்டிக் கிடக்கும் இடம்.
சுரபுன்னை போன்ற அரிய மரங்களையும், ஏராளமான
மூலிகைகளையும் கொண்ட தீவாக காட்சியளிக்கிறது.

இயற்கையழகு உள்ள இடமாதலால் வெளிநாட்டினரை
வெகுவாக கவர்கிறது. படகில் ஏறி

சுற்றிப்பார்க்கத்
தொடங்கினால் இரண்டு பக்கங்களிலும் சுரபுன்னை
மரங்கள் மண்டிக்கிடக்கும் இயற்கை அழகை காணலாம்.

காடு முழுவதும் சுற்றிப் பார்க்க கால்வாய் வசதியாக
இருக்கிறது. அரசுபடகுகளும், தனியார் படகுகளும்
உள்ளன.

இவ்விடம் தனித்தனி தீவுப் பிரதேசம் ஆகையால்
பயணிகளுக்குப் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
தங்குவதற்கு ஏற்ற பயணியர் விடுதிகள் உண்டு.

இதன் அருகில் போர்ச்சுக்கீசியர்களால் உண்டாக்கப்பட்ட
போர்டோ நோவா கடல் துறைமுகம் அருகில் கடல் ஆய்வு
மையம் ஒன்று உள்ளது. 

பாடலீஸ்வரர் கோயில்
கடலூர் புது நகரத்தின் ஓர் அங்கமாகத் திருப்பாதிரிப்
புலியூர் உள்ளது. திருப்பாதிரிப் புலியூரில் அமைந்துள்ள
தொன்மையான சிவத்தலமிது.

இங்குள்ள பிடாரியம்மன் சன்னதியும் பிரபலமானது.
பிரம்மோத்ஸவம் சிறப்பாக கொண்டாடபடுகிறது.
அப்பரை கற்றுணில் கட்டிக் கடலில் எறிந்த போது,
‘சொற்றுணை வேதியன்’ என்னும் பதிகம்பாடி,
அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறியவூர்
கரையேறவிட்ட குப்பம் என்னும் பெயரில் உள்ளது.

வைகாசி மாதத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

———————————
வாட்ஸ் அப் பகிர்வு

கடலூர் மாவட்ட வரலாறு

முற்காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கபட்டது.
பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள்
கடலில் கலக்கும் இடம் ஆதலால் இப்பெயர் பெற்றது.
பிரித்தானிய ஆட்சி காலத்திலிருந்து இது கடலூர் என்று
அழைக்கபட்டது, கி.பி. 1746ஆம் ஆண்டில் பிரித்தானியரின்
தென்னிந்தியாவுக்கான் தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்
பட்டது.

எல்லைகள்
கடலூர் மாவட்டம், 3,564 சதுர.கி.மீ. பரவியுள்ளது.
வடக்கில் விழுப்புரம் மாவட்டமும், கிழக்கில் வங்காள
விரிகுடாவும், தெற்கே நாகப்பட்டினம், அரியலூர்,மாவட்டமும்,
மேற்கே பெரம்பலூர் மாவட்டமும் உள்ளது.

வரலாறு
இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள்
செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த
புனித டேவிட் கோட்டையைக் வாங்கினார்கள்.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள்
கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள்
மாகாணத் தலைநகரை மாற்றி இந்தியாவின் தென்
பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு
வந்தார்கள்.

ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத்
தொடர்புகளுக்கு, கடலு}ர் துறைமுகத்தை அதிக அளவில்
பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன,

கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என
இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. 1866 வரை நகராட்சி
அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முதுநகர்
பகுதியிலேயே இருந்தன.

1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சகுப்பம்
எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

சரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் சோழர் , பல்லவர் ,
முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி
செய்யப்படுள்ளது. பாரம்பரியப்படி சைவ சமயக்
கோட்பாடுகள் இங்கு பின்பற்றப்படுவதன் மூலம்
சோழர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளது புலனாகிறது.

ஆங்கிலேய ஆட்சி

ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர்
இந்நகரம் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்
பாட்டில் இருந்தது (1780). அவர்கள் கட்டுப்பாட்டில்
இந்நகரம் இஸ்லாமாபாத் என வழங்கப்பட்டது.

அவரது மறைவிற்கு பிறகு (1782) ஆங்கிலேயர் இந்நகரை
தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டனர்.
இதன் விளைவாக கடலூர் போர் (1783) மூண்டது.

இப்போருக்குப் பின்னர் கடலூர் நகரை ஆங்கிலேயர்
தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர்
இந்நகரை ஒரு பெரிய துறைமுகமாக மாற்றினர்.

சரக்கு கப்பல் போக்குவரத்திற்கு இந்நகரை பெரிதும்
பயன்படுத்தினர். குறிப்பாக நெல்லிக்குப்பத்தில்
தாங்கள் துவங்கிய சர்க்கரை ஆலையின் சரக்குகள் கடலு}ர்
துறைமுகத்தில் கையாளப்பட்டது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இவ்வூர் ஒரு முக்கிய பங்கு
வகித்ததனால் இங்கு சில தெரு மற்றும் ஊர் பெயர்களில்
ஆங்கிலப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

பெயர்க்காரணங்கள்

புரூக்கீச் பேட்டை :
1767 முதல் 1769 வரை இவ்வூரை ஆட்சி செய்த
ஹென்ரி ப்ரூக்கர் எனும் ஆங்கிலேயர் பெயர்
வைக்கப்பட்டுள்ளது
கமியம் பேட்டை :
1778 களில் இவ்வூரை ஆட்சி செய்த வில்லியம் கம்மிங்
என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கேப்பர் மலை :
1796 களில் ஆங்கில படைத்தளபதியாக விளங்கிய
ப்ரான்சீச் கேப்பர் அவர்களை முன்னிட்டு பெயர் என்பவர்
பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வெலிங்டன் தெரு :
ஆங்கில ஆட்சியாளராக விளங்கிய வெலிங்டன் துரை
என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கிளைவ் தெரு :
ஆங்கில ஆட்சியை பாரத தேசத்தில் நிருவிய
ராபர்ட் கிளைவ் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆறுகள்

கெடிலநதி, பெண்ணையாறு, பரவனாறு,
கொள்ளிடம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய ஆறுகள்
பாய்கின்றன.

————————-
வாட்ஸ் அபு பகிர்வு

அணைக்கட்டுகள்

கொடிகாத்த குமரன்

 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 10

kavimani.jpg

தமிழக மறுமலர்ச்சிக் கவிஞர்

—————————

தமிழ்நாட்டின் 20-ம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக்
கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவரான
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
(Kavimani Desika Vinayagam Pillai) பிறந்த
தினம் இன்று (ஜூலை 27).

அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

——–

குமரி மாவட்டம், தேரூரில் பிறந்தார் (1876). ஐந்து வயதில்
தேரூர் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஒன்பதாவது
வயதில் தந்தையை இழந்தார்.
திருவாவடுதுறை மடத் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம்
தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
எம்.ஏ. பட்டம் பெற்றார்.

—————-

திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் பயின்றார்.
கோட்டாறு, நாகர்கோவில் பாடசாலைகளில் ஆசிரியர்,
திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் பேராசிரியர் என
36 ஆண்டுகள் கல்விப் பணியாற்றினார்.

———————-

இவரது இலக்கிய வெளிப்பாட்டில் ஒரு அறிவியல்
கண்ணோட்டம் பிரதிபலித்தது. நாட்டின் பண்டைய
வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக
கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

சுதந்திர போராட்டத்தில் காந்தியத்துக்கு ஆதரவாகக்
கவிதைகளை எழுதியதால் ‘விடுதலைக் கவிஞர்’
எனவும் போற்றப்பட்டார்.

————————-

‘ஆங்கிலத்தில் உள்ளதுபோல தமிழில் குழந்தைப் பாடல்கள்
இல்லையே என்றுதான் நான் பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய
நடையில் பாடல்கள் எழுதினேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

——————————-

‘மலரும் மாலையும்’, ‘ஆசிய ஜோதி’,
‘உமர்கய்யாம் பாடல்கள்’,
‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’,
‘அழகம்மை ஆசிரிய விருத்தம்’,
‘கதர் பிறந்த கதை’,
‘குழந்தைச் செல்வம்’ உள்ளிட்ட இவரது படைப்புகள்
குறிப்பிடத்தக்கவை.

இவரது ‘தேவியின் கீர்த்தனங்கள்’ என்ற இசைப்பாடல்
தொகுப்பில் இடம் பெற்ற பல பாடல்களை,
இசைக் கலைஞர்கள் மேடைகளில் விரும்பிப் பாடினார்கள்.

———————————

இவரது சொற்பொழிவுகள் ‘கவிமணியின் உரை மணிகள்’
என்ற நூலாக வெளிவந்தது. சிறந்த மொழிபெயர்ப்பாளரான
இவர் எட்வின் ஆர்னால்டின் ‘தி லைட் ஆஃப் ஏஷியா’
என்ற படைப்பைத் தழுவி ‘ஆசிய ஜோதி’ என தமிழில்
எழுதினார்.

பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமின் ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப்பட்ட பாடல்களைத் தழுவி தமிழில்
எழுதினார்.‘மனோன்மணியம் மறுபிறப்பு’ என்ற
திறனாய்வுக் கட்டுரை எழுதியுள்ளார்.

——————————-

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி
உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராகப்
பணியாற்றினார். ‘கம்பராமாயணம் திவாகரம்’,
‘நவநீதப் பாட்டியல்’ உள்ளிட்ட பல நூல்களின் ஏட்டுப்
பிரதிகளைத் தொகுத்துள்ளார்.

‘தேசியக் கவிஞர்’, ‘குழந்தைக் கவிஞர்’,
‘சமுதாயக் கவிஞர்’, ‘விடுதலைக் கவிஞர்’,
‘உணர்ச்சிக் கவிஞர்’ என்றெல்லாம் போற்றப்பட்டார்.

——————————-

‘பைத்தியக்காரன்’, ‘மணமகள்’, ‘தாயுள்ளம்’,
‘வேலைக்காரன்’, ‘கள்வனின் காதலி’,
‘கண்ணின் மணிகள்’, ‘நன் நம்பிக்கை’ ஆகிய
திரைப்படங்களில் இவர் எழுதிய பாடல்கள் பயன்படுத்திக்
கொள்ளப்பட்டன.

———————————-

‘தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை தினமும்
கேட்பது என் செவிப்பெருமை’ என நாமக்கல் கவிஞர்
பாராட்டியுள்ளார். 1940-ல் சென்னை பச்சையப்பன்
கல்லூரியில் உமாமகேஸ்வரம் பிள்ளை இவருக்கு
‘கவிமணி’ பட்டம் வழங்கினார்.

———————————-

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞர்களுள்
ஒருவருமான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
1954-ம் ஆண்டு, 78-வது வயதில் மறைந்தார்.

இவர் பிறந்த ஊரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு இவர் நினைவாக 2005-ல் தபால் தலை
வெளியிட்டது.

————————————

– ராஜலட்சுமி சிவலிங்கம்
நன்றி- தி இந்து

பாரதியின் புதிய முகம்

எழுதாத ஓவியமாகத் தமிழ் மக்கள் உள்ளங்களில்
மகாகவி பாரதியாரின் படம் நன்றாக இன்று பதிந்து
விட்டது. அப்படிப் பதிவாவதற்கு அடிப்படையாக
நமக்குக் கிடைத்துள்ள புகைப்படங்கள் வெறும் ஐந்து
மட்டும்தான்.

புகைப்படம் எடுத்துக்கொள்வதில் விருப்பம் மிகுந்தவர்
என்று சொல்லப்படும் பாரதியார் எடுத்துக்கொண்ட
படங்கள் சிலவே; அவற்றுள் கிடைத்தவையோ மிகச்
சில. பாரதி 35, 38, 39 வயதுகளில் எடுத்துக்கொண்ட
படங்கள் மட்டுமே நமக்கு இன்று கிடைத்துள்ளன.

1917-ல் புதுவையில் அவர் வசித்தபோது அவரோடு
நெருங்கிப் பழகிய விஜயன் என்னும்
விஜயராகவாச்சாரியார் ஊரிலிருந்து வந்திருந்த தன்
நண்பனின் விருப்பத்தின் காரணமாகப் பாரதியார்
குடும்பத்தோடு சேர்ந்து ஒரு படம் எடுத்துக்கொண்டார்.

அந்தப் படத்தில் பாரதி, மனைவி செல்லம்மாள்,
மகள்கள் தங்கம்மாள், சகுந்தலா, டி. விஜயராகவன்,
அவர் நண்பர் ராமு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்தப் படம் எடுக்கப்பட்ட அதே நேரத்தில் எடுக்கப்பட்ட
இன்னொரு படம்தான் புகழ்பெற்ற பாரதியும்
செல்லம்மாவும் தம்பதியராகக் காட்சி தரும் படம்.

இந்த இரு படங்களையும் எடுக்கக் காரணமாக இருந்த
டி.விஜயராகவன் பிற்காலத்தில் புகைப்படம் எடுத்த
நிகழ்ச்சியைப் பின்வருமாறு விவரித்திருந்தார்

: “என் நண்பர் கணபதி ஐயர் என்பவரின் உறவினரான
ராமு என்பவர் திருச்சியில் ஒரு கல்லூரியில் படித்து
வந்தார். ஒருமுறை புதுவை வந்திருந்தபொழுது
பாரதியாருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள
ஆசைப்பட்டார்.

கணபதி ஐயர் இதை என்னிடம் தெரிவித்து, பாரதியாரின்
சம்மதத்தைப் பெறும்படி கேட்டுக்கொண்டார். நானும்
பாரதியாரிடம் கேட்டேன்.

பாரதியார் உடனே ஒப்புக்கொண்டார். திருநீற்றை நெற்றி
முழுவதும் பரவலாகத் தரித்துக்கொண்டு நடுவில்
குங்குமத்தை உயரவாக்கில் இட்டுக்கொண்டார்.

தலைப்பாகை, கறுப்புக் கோட்டு இவைகளை அணிந்தார்.
என்னையும் போட்டோவில் நிற்கும்படி வற்புறுத் தினார்.
அதேபோல் நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

பாரதியார், மனைவி செல்லம்மாள், மூத்த பெண்
தங்கம்மாள், இளைய பெண் சகுந்தலா, நண்பர் ராமு,
நான் ஆகிய ஆறு பேரும் இப்படத்தில் இருக்கிறோம்.

இதே தினம் பாரதியாரும் செல்லம்மாவும் தனியே நிற்க
வேறு ஒரு படமும் எடுத்துக்கொண்டனர்.”
—-
(டி. விஜயராக வாச்சாரியார், ரா. அ. பத்மநாபன்,
‘பாரதியைப் பற்றி நண்பர்கள்’, ப. 108, காலச்சுவடு, 2016.).

————————
பாரதியின் விருப்பமே பிரதானம்

பின்னர் ஒருமுறை செட்டிநாட்டுக்குச் சென்றிருந்த
போது, கானாடுகாத்தானில் வை.சு. சண்முகம்
செட்டியாரின் விருந்தினராகத் தங்கியிருந்தார். பிறகு
காரைக்குடி வந்தபோது அங்குள்ள இந்து மதாபிமான
சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்களான சொ.முருகப்பா,
ராய.சொ. முதலியவர்களின் விருப்பத்திற்கிணங்க
அவர்களோடு சேர்ந்தும் தனியாகவும்
இரு புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.

இந்த இரு படங்களிலும் அவர் தாடியில்லாமலும் கையில்
கோலோடும் காட்சி தருகின்றார். இந்தப் படம்
எடுக்கப்பட்ட நிகழ்ச்சியும் சுவையானதாக
இருந்திருக்கிறது.

இதுபற்றி அந்தப் படத்தில் இடம்பெற்ற
ராய. சொக்கலிங்கம் பின்வருமாறு விவரித்திருந்தார்:

“பாரதியைப் படம்பிடிக்க விரும்பினோம். எதற்கும்
அவரை இணக்குவது முடியாத காரியம். அவருக்கே
மனம் வந்ததால்தான் படம்பிடிக்க ஒப்புக்கொண்டார்.
வேண்டிய எல்லாம் தயார்செய்யப் பெற்றன.

பாரதியாரை உட்கார வைத்தோம். ஒரு தடிக்கம்பைத்
தூக்கிக் கையிலே தலைக்கு மேலே கம்பு தோன்றும்படி
நிறுத்திக்கொண்டார். அம்மாதிரிப் படம் பிடிக்கப் படம்
பிடிப்போருக்குச் சம்மதமில்லை. அவர் எவ்வளவோ
சொன்னார்.

‘முடியாது; நீர் சொல்வதை நான் என்ன கேட்பது?’
என்று சொல்லிவிட்டார் பாரதியார். பிறகு, அப்படியே
எடுக்கச் செய்தோம்.”

(காரைக்குடியில் பாரதியார், ராய.சொ. பாரதசக்தி,
ஆண்டுமலர், 1947, ப.7).

———————-

இதற்குப் பின்னர் 1921-ல் புதுவை அன்பர் பாரதிதாசனின்
வேண்டுகோளுக்கிணங்க எடுத்துக் கொள்ளப்பட்டதே
இப்போது புகழ்பெற்று விளங்கும் ஓவல் வடிவப் படத்தின்
அடிப்படையாக அமைந்த படமாகும்.
இந்த ஐந்து படங்களே இப்போது நமக்குக் கிடைத்துள்ள
படங்களாகும்.

பாரதி விரும்பிய படம்

விடுதலையான பாரதி 1919 பிப்ரவரியில் முதன்முறையாகச்
சென்னை சென்றபோது ஆங்கிலத்திலும் தமிழிலும் பல
சொற்பொழிவுகளை ஆற்றினார்.

மார்ச் 2, மார்ச் 17, மார்ச் 21, ஏப்ரல் 3 ஆகிய தேதிகளில்
நீதிபதி மணி ஐயர், மாங்கொட்டைச் சாமியார் என்னும்
குள்ளச்சாமி, சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ. ரங்கசாமி
ஐயங்கார் தலைமையில் அவரது சொற்பொழிவுகள்
நிகழ்ந்தன.

பெரும்பாலான கூட்டங்கள் நுழைவுக் கட்டணம் வைக்கப்
பட்டே நடந்திருக்கின்றன. அந்தக் காலகட்டத்தில்தான்
‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ஆசிரியர்
கஸ்தூரி ரங்க ஐயங்காருக்குச் சொந்தமான இடத்தில்
குடியிருந்த ராஜாஜியின் வீட்டில் காந்தியடிகள் தங்கினார்.

அங்குதான் பாரதி காந்தியைச் சந்தித்தார். இந்தக்
காலகட்டத்தில் பாரதியின் தோற்றம் புதுவையில்
காட்சியளித்த தோற்றத்தை ஒட்டியதாகவே தாடியோடு
பெரிதும் இருந்திருக்கிறது.

இந்தக் காலத்தில் நீதிபதி மணி ஐயர் தலைமையில்
1919 மார்ச் 2 தாம் ஆற்றவிருந்த நித்திய வாழ்வு
(The Cult Of Eternal) சொற்பொழிவுக்கான
துண்டுப் பிரசுரத்தில் இடம்பெறுவதற்காகச் சென்னை
பிராட்வேயிலிருந்த ரத்னா கம்பெனி என்னும் போட்டோ
ஸ்டுடியோவில் பாரதியார் படம் எடுத்துக்கொண்டார்.

அந்தப் புகைப்படம் அவருக்கு மிகவும் திருப்தியாக
இருந்ததாம். “ஆனால் பாரதியால் புகழப்பெற்ற
இந்தப் படம் இப்போது எங்கும் கிடைக்கவில்லை”
என்று பாரதியியல் முன்னோடி ஆராய்ச்சியாளர்
ரா.அ.பத்மநாபன் குறிப்பிட்டிருந்தார்
(சித்திர பாரதி, காலச்சுவடு வெளியீடு).

————-

பாரதியின் பொதுவாழ்வில், அவரே விரும்பித் துண்டுப்
பிரசுரத்தில் வெளியிட என எடுத்துக்கொண்ட இந்தப்
படத்தை இதுவரை தமிழகம் கண்டதில்லை. இந்தப்
படத்தைத் தாங்கிய சொற்பொழிவுக் கூட்டம் பற்றிய
அறிவிப்பு அன்னிபெசன்ட் நடத்திய ஆங்கில நாளிதழான
‘நியூ இந்தியா’வில் 1919 மார்ச் முதல் தேதி வெளிவந்துள்ளது.

மார்ச் முதல் தேதியிலேயே பத்திரிகையில் வெளி
வந்துள்ளதால் இந்தப் படம் சென்னையில் அதற்குச்
சிலநாள் முன் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனவே, பாரதியின் விடுதலைக்குப் பிந்தைய முதல்
சென்னைப் பயணம் பிப்ரவரி இறுதியில் நடந்திருக்க
வேண்டும் எனத் தெரிகிறது.

————

பாரதியின் ஆறாவது படம்
—————-

புதுவையில் வாழ்ந்தபோது எடுக்கப்பட்ட தாடியோடு
கூடிய படங்களில் உள்ள தோற்றங்களில் இருந்து, இந்தப்
படத்தில் உள்ள பாரதியின் தோற்றம் சற்றே மாறு
பட்டுள்ளது. தன் வீட்டில் காந்தியின் முன்னிலையில்

பாரதியைக் கண்ட ராஜாஜியின் ”பித்த சந்நியாசிபோல்
இருந்தார்” என்ற சித்திரிப்பை உறுதி செய்வதாகவே
இந்தப் படத்தின் தோற்றம் உள்ளது.

எந்தச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்காக இந்தப் படம் எ
டுக்கப்பட்டதோ அந்தச் சொற்பொழிவு அன்னிபெசன்ட்
நடத்திய நியூ இந்தியா பத்திரிகையிலும் ‘தி இந்து’
ஆங்கில நாளிதழிலும் முழுமையாக வெளிவந்திருந்தது.

‘தி இந்து’வில் வெளிவந்திருந்த சொற்பொழிவுப்
பதிவை முதன்முறையாக ஆ.இரா.வேங்கடாசலபதி
கண்டுபிடித்து வெளியிட்டிருந்தார் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

தமிழகம் இதுவரை அறியாத பாரதியின் முக்கியமான
இந்தப் படத்தினை உள்ளடக்கிய அறிவிப்பை முதலில்
கண்ட சீனி. விசுவநாதன் இதன் முக்கியத்துவத்தையோ
முந்தைய இரு தாடி வைத்த பாரதியின் படங்களில்
இருந்து வேறுபட்ட புதிய படம் இது என்பதையோ
அறியவோ அறிவிக்கவோ எந்தக் குறிப்பையும்
வழங்கவோ செய்யவில்லை.

முதல் முறையாக பாரதியின் அறியப்படாத படம் அதன்
பின்னணி குறித்த விளக்கத்தோடு, ‘தி இந்து லிட் ஃபார்
லைஃப்’ நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தோடு சேர்த்து பாரதியின் அறியப்பட்ட
படங்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.
இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி.

26 வயது பாரதியின் படம் பற்றிய புதிய செய்தியும்
‘சுதேசமித்திரன்’ இதழின் வாயிலாக இப்போது
கண்டறியப்பட்டுள்ளது. 1908 ஜூலை 5 அன்று பாரதி,
எத்திராஜ சுரேந்திரநாத் ஆர்யா, ஒரு சாமியார், இரு
சுதேசிய பிரசங்கிகள், வெங்கட்ரமணராவ்
ஆகியோரைப் புகைப்படமாகத் திலகர் அனுதாபக்
கூட்டத்தின் தொடக்கத்தில் எடுத்திருக்கின்றனர்.

அந்தப் படமும் பின்னர் சி.ஐ.டி. அறிக்கையோடு
இணைத்து அரசுக்குக் காவல் துறையால் அனுப்பப்
பட்டிருக்கிறது. விரைவில் 26 வயது பாரதியின்
புகைப்படத்தையும் கண்டுபிடிக்க முடியும் என்பது
நம்பிக்கை!

——————————–

மணிகண்டன்,
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்,
நன்றி- தி இந்து

 

தாய் கேட்ட பரிசு

unnamed.jpg

நினைவுத்திறனை அதிகப்படுத்தும் ஹாகினி முத்திரை

நினைவுத்திறனை அதிகப்படுத்தும் ஹாகினி முத்திரை
நினைவுத்திறனை அதிகப்படுத்தும் மிக இலகுவான யோக
முத்திரை இது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

செய்முறை :

விரிப்பில் அமர்ந்து கொண்டோ அல்லது சேரில் உட்கார்ந்து
கொண்டோ இந்த முத்திரையை செய்யலாம்.
இரண்டு கைகளின் விரல் நுனியும் தொட்டபடி இருக்கும்படி
செய்ய வேண்டும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த முத்திரையை செய்யலாம்.
இந்த ஹாகினி முத்திரையை செய்வதன் மூலம் பல ஆண்டுகளுக்கு
முன்பு நடந்த சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவர முடியும்.

நினைவுத்திறனை மேம்படுத்தப் பயிற்சி தரும் அமைப்புகள் இந்த
முத்திரையை பயன்படுத்துகிறார்கள். மாணவர்களுக்கு இது வரப்
பிரசாதம்.

மாலைமலர்

ஆர்.கே.லக்ஷ்மண் நினைவு தின சிறப்பு பகிர்வு

ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மண் ஆறு பிள்ளைகள் கொண்ட வீட்டில் கடைக்குட்டி. கண்ணில் படுவதை எல்லாம் வரைவது மட்டுமே அவரின் வேலையாக இருந்தது. பள்ளியில் மரத்தின் இலை, வீட்டில் சாக்பீஸில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அப்பா, இலைகள், பல்லிகள், எங்கெங்கும் அமர்ந்திருக்கும் காகங்கள் என்று வரைந்து அனைவரும் அதிரவைத்துக் கொண்டிருந்தார்.

பையன் பெரிய ஓவியக்காரனாக வருவான் என்று அனைவரும் நம்ப ஆரம்பித்து இருந்தார்கள். உயர்கல்வியை முடித்த பின்னர் ஜே.ஜே. கலைப் பள்ளியில் சேர விண்ணப்பித்தார் லக்ஷ்மண். அந்தக் கல்லூரியின் முதல்வர் கடுகடுப்பான முகத்தோடு “எங்கள் பள்ளியில் சேர வேண்டிய தகுதி உனக்கில்லை தம்பி.” என்று அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு திரும்பி நிறைய வருத்தத்தோடு மைசூர் பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்றார். அதனோடு ப்ளிட்ஸ், சுயராஜ்யா இதழ்களுக்கு ஓவியங்கள் வரைந்து அனுப்பினார். தன்னுடைய அண்ணன் ஆர்.கே.நாராயண் ‘தி இந்து’வில் எழுதிய கதைகளுக்கும் படங்கள் வரைந்து தள்ளினார்.

பால் தாக்கரே வேலை பார்த்த ப்ரீ பிரஸ் ஜர்னலில் இவரும் கார்ட்டூனிஸ்டாக இணைந்தார். அங்கே எக்கச்சக்க வேலை வாங்கப்பட்டாலும் முகம் சுளிக்காமல் வேலை பார்த்த லக்ஷ்மண் கருத்து மோதல்களால் அந்த இதழை விட்டு வெளியேறினார்.

பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் இணைந்தார். முதலில் அவரைச் செய்தித்தாளின் மாலை இணைப்பிதழில் வரைய வைத்தார்கள்.
இவரின் பேனாவின் பெருமை புரிந்து சீக்கிரமே தினமும் அரசியல் கார்ட்டூன் வரையும் பொறுப்பை ஒப்படைத்தார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ,’you said it’ என்கிற பெயரில் ஐம்பது வருடங்களுக்கு இடைவிடாமல் காமன்மேன் மூலம் மக்களின் வலிகளை, ஏமாற்றங்களை, எதிர்பார்ப்புகளை அவர் கொண்டு சேர்த்தார்.

காலையில் எழுந்ததும் செய்தித்தாள்களில் மதியம் வரை முழுமையாகத் தன்னைப் பல்வேறு செய்திகளுக்குள் ஈடுபடுத்திக்கொள்வார். பல்வேறு அரசியல் பார்வைகளை உள்வாங்கிக் கொண்ட பின்னர், மக்களின் வலியை எப்படி அங்கதத்தோடு சொல்வது என்று மதிய உணவுக்குப் பின்னர் யோசித்துவிட்டு அவர் கேலிச்சித்திரத்தை தீட்டி முடிக்கையில் சாதாரண மனிதனின் அழுகுரல் நகைச்சுவையோடு கொண்டு சேர்க்கப்பட்டு இருக்கும்.

எந்த அளவுக்கு அவர் அரசியல்வாதிகளை கவனித்தார் என்றால் தேவகவுடா, வி.சி.சுக்லா ஆகியோர் எந்த பாணியில் பேசுவார்களோ அதை அப்படியே மிமிக்ரி செய்கிற அளவுக்கு ஆழமாக அரசியல்வாதிகளை தொடர்ந்து கவனித்து வந்தார். அரசியல், தத்துவம், வரலாறு ஆகியவற்றை கல்லூரியில் பயின்றது அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது.

“நீங்கள் ஓய்வே எடுத்துக்கொள்ள மாட்டீர்களா?” என்று கேட்கப்பட்ட பொழுது, “அரசியல்வாதிகள் எல்லாரும் நல்லவர்களாக ஆகிவிடுகிற நாளோடு நான் ஓய்வு பெற்றுவிடுவேன். அது எப்பொழுதும் நடக்காது இல்லையா?” என்று கண்சிமிட்டிய அவர் அரசியல்வாதிகள் ஒரே மாதிரி செயல்பட்டுத் தன்னைச் சலிப்புக் கொள்ளச் செய்வதாகப் புலம்பினார். அவருக்கு ஆறுதலாக அவ்வப்பொழுது வித்தியாசமாக எதையாவது செய்து கொண்டிருந்த இருவர் லாலுவும், ஜெயலலிதாவும் தான்!

90 ப்ளஸ் வயதில் பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் அவரின் உடல் பெரும்பாலும் செயலிழந்தது. அந்தச் சூழலில் கூட ஒரே ஒரு கையால் அவர் வீட்டில் இருந்தபடியே கேலிச்சித்திரங்கள் வரைந்தார். அதை எடுத்துக்கொண்டு போகப் புனாவில் இருந்து வீட்டுக்கு ஒருவர் அனுதினமும் வந்து சென்றார். ராமன் மகசேசே, பத்ம பூஷண் விருதுகளைப் பெற்றிருக்கும் அவரின் ஒரு கார்டூன் பற்றிய விவரிப்போடு முடிப்பது சரியாக இருக்கும்.

விவாசய நிலங்கள் மீதான உச்சவரம்பை அரசு நீக்கியது என்கிற செய்தி மேலே எழுதப்பட்டு இருக்கும். விவசாயியின் தலை மீது பெரிய கல் ஸ்லாப் இறக்கப்படும். அதன் மீது அரசியல்வாதி வெற்றி பெருமிதத்தோடு அமர்ந்து இருப்பார். இப்படி மக்களின் வலிகளை உணராதவர்களைப் பேனா முனை கொண்டு குத்தி கிழித்தவர் அவர். மென்மையாக, சிரிக்கவைத்தபடியே அந்த அறுவை சிகிச்சை ஐம்பது வருடங்கள் நடந்தது. சாதாரண மனிதனை கவனப்படுத்திக் கொண்டே இருந்த அவரின் நினைவு தினம் இன்று.

நன்றி விகடன்

சோதனையைச் சாதனை ஆக்கியவர்!

இயல்பிலேயே துணிச்சலானவர் அந்த எழுத்தாளர்.
தமது சிறுவயதிலும்… கடும் உழைப்பால் தனது தேவைகளை
தானே பூர்த்தி செய்து கொண்டவர்.

தினக்கூலியாகவும் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு உண்டு.
தனது வாழ்வில் இவர் சந்தித்த சோதனைகளும் சாதனைகளும்
ஏராளம்.

ஒருமுறை, பள்ளியில் கால்பந்து ஆடிக் கொண்டிருந்த போது,
பந்து தாக்கியதால் கண் பழுதானது.
பிறகு, ஒரு யுத்தத்தின் போது பெரிய காயம் ஏற்பட்டது.
மற்றொரு முறை, ஆப்பிரிக்கப் பயணத்தின் போது இவர் சென்ற
விமானம் விபத்துக்குள்ளானது.
உறவினர்கள் இவர் இறந்துவிட்டதாகவே எண்ணினர்.
ஆனால் எல்லாரும் ஆச்சரியப்படும் வகைகளில் உயிர் பிழைத்தார்.

இப்படி வாழ்க்கை முழுவதும் எண்ணற்ற இன்னல்கள் பட்டாலும்
இறுதியில், தான் எழுதிய நாவலுக்காக நோபல் பரிசு பெற்றார்.
சரி, புகழ் பெற்ற இந்த எழுத்தாளர் யார்?

அவர்தான் எர்னஸ்ட் ஹெமிங்வே.
இவருக்கு நோபல் பரிசு பெற்றுத் தந்த நாவலின் பெயர்.

“கடலும் கிழவனும்’

———————————
தேனி பொன் கணேஷ்
தினமணி கதிர்

ஆபிரகாம் லிங்கன்


அமெரிக்காவில் ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில்
பிறந்த லிங்கன், செல்லப்பிள்ளையாகவே வளர்ந்தார்.
தொழிலில் தோல்வி, தேர்தலில் தோல்வி, இல்லற
வாழ்வில் தோல்வி,

விடா முயற்சியால் தலைவருக்கான தகுதியை
வளர்த்துக் கொண்டு முடிவில் அமெரிக்காவின்
அதிபரானார்.

தனது உயிர் கொள்கையான அடிமைத்தனத்தை
அகற்றினார்.

அவர் தாங்கிய மந்திரச்சொல்:

”நீ எதுவாக மாற விரும்புகிறாயோ
அதுவாகவே மாறுவாய்”

என்பதாகும்

—————————————

« Older entries