டெங்கு காய்ச்சல் குணமாக…

IMG_20181026_214630-1.jpg

IMG_20181026_214746-1.jpg

IMG_20181026_214422-1.jpg

தொண்டையை பாதுகாக்க 10 வழிமுறைகள்

IMG_1885.jpg 1.jpg

IMG_1885.jpg

மருந்தாகும் மிளகு

IMG_1880.jpg

கீழாநெல்லி

IMG_1879.jpg

நோய்கள் உருவாகும் இடங்கள் ! &நோய்கள் குணமாகும் இடங்கள்

நோய்கள் உருவாகும் இடங்கள் !
——————————————-
நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.

இதோ

1 – இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்

2 – டீ

3 – காபி

4 – வெள்ளை சர்க்கரை

5 – வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.

6 – பாக்கெட் பால்.

7 – பாக்கெட் தயிர்

8 – பாட்டில் நெய்

9 – சீமை மாட்டு பால்

10 – சீமை மாட்டு பால் பொருட்கள்.

11 – பொடி உப்பு

12 – ஐயோடின் உப்பு

13 – அனைத்து ரீபையின்டு ஆயில்

14 – பிராய்லர் கோழி

15 – பிராய்லர் கோழி முட்டை

16 – பட்டை தீட்டிய அரிசி

17 – குக்கர் சோறு

18 – பில்டர் தண்ணீர்

19 – கொதிக்க வைத்த தண்ணீர்

20 – மினரல் வாட்டர்

21 – RO தண்ணீர்

22 – சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்

23 – Non Stick பாத்திரங்கள்

24 – மைக்ரோ ஓவன் அடுப்பு

25 – மின் அடுப்பு

26 – சத்துபானம் என்னும் சாக்கடைகள்

27 – சோப்பு

28 – ஷாம்பு

29 – பற்பசை

30 – Foam படுக்கை மற்றும் இருக்கை

31 – குளிர்பானங்கள்

32 – ஜஸ் கீரீம்கள்

33 – அனைத்து மைதா பொருட்கள்

34 – பேக்கரி பொருட்கள்

35 – சாக்லேட்

36 – Branded மசாலா பொருட்கள்

37 – இரசாயன கொசு விரட்டி

38 – Ac

39 – காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.

40 – பிஸ்கட்டுகள்

41 – பன்னாட்டு சிப்ஸ்

42 – புகைப்பழக்கம்

43 – மதுப்பழக்கம்

44 – சுடு நீரில் குளிப்பது

45 – தலைக்கு டை

46 – துரித உணவுகள்

47 – குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்

48 – சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.

49 – ஆங்கில மருந்துகள்

50 – அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்

51 – உடல் உழைப்பு இல்லாமை

52 – பசிக்காமல் உண்பது

53 – அவசரமாக உண்பது

54 – மெல்லாமல் உண்பது

55 – இடையில் தண்ணீர் குடிப்பது

56 – எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.

57 – 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்

58 – அறியாமை

59 – சுற்றுச்சூழல் மாசுபாடு

60 – அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்

அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது

மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.

உயிர் பிழைக்க ஒரே வழி

இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.

குணமாகும் இடங்கள் !
———————————————
நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.

இதோ

1 – இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.

2 – மூலிகை தேனீர்

3 – சுக்கு மல்லி காபி

4 – பனங்கருப்பட்டி

5 – பனங்கற்கண்டு

6 – வெல்லம்

7 – கரும்பு சர்க்கரை

8 – இதில் செய்த இனிப்புகள்

9 – நாட்டு பசும் பால்

10 – நாட்டு பசு தயிர்

11 – நாட்டு பசு நெய்

12 – நாட்டு பசும்பால் பொருட்கள்

13 – இந்துப்பு

14 – கல் உப்பு

15 – மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்

16 – நாட்டு கோழி

17 – நாட்டு கோழி முட்டை

18 – பட்டை தீட்டப்படாத அரிசி

19 – வடித்த சோறு

20 – மண் பானையில் ஊற்றி வைத்த நீர்

21 – பச்சை தண்ணீர்

22 – மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்

23 – மழை நீர்

24 – சமையலுக்கு மண் பாண்டங்கள்

25 – இரும்பு பாத்திரங்கள்

26 – விறகு அடுப்பு

27 – பயோ கேஸ் அடுப்பு

28 – சத்துமாவு கலவை

29 – குளியல் பொடி

30 – சிகைக்காய் பொடி

31 – இயற்கை பற்பொடி

32 – இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை

33 – கோரைப்பாய்

34 – பழச்சாறுகள்

35 – நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்

36 – சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்

37 – கருப்பட்டியில் செய்த சாக்லேட்

38 – வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்

39 – இயற்கை கொசு விரட்டி

40 – வீட்டில் மரம், செடி, கொடிகள்

41 – காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு

42 – நம் நாட்டு சிப்ஸ்கள்

43 – பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்

44 – குளிர்ந்த நீரில் குளிப்பது

45 – இயற்கை ஹேர் டை

46 – நம் நாட்டு சிற்றுண்டிகள்

47 – மண் பானை குளிரூட்டி

48 – பச்சை கொட்டை பாக்கு

49 – மரபு மருத்துவங்கள்

50 – உடல் உழைப்பு

51 – பசித்து உண்பது

52 – மெதுவாக சுவைத்து உண்பது

53 – மென்று உமிழ்நீர் கலந்து உண்பது

54 – ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்

55 – இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது

56 – எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்

57 – உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்

58 – புத்திகூர்மை

59 – சுற்றுச்சூழல் தூய்மை

60 – அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி

நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது

*உங்களின் உணவுமுறைகளும் வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
– மிக்ஸி வந்தது;

ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
– கிரைண்டர் வந்தது;

உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
– குக்கர் வந்தது;

விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
– கேஸ் அடுப்பு வந்தது;

வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
– மசாலா பொடி வந்தது;

பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
– பிரிட்ஜ் வந்தது;

மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
– வீடியோ கேம் வந்தது;

பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
– டி.வி. வந்தது;

இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

ஓட்டுக்கு 2000 ரூபாய்? வீட்டுக்கு வந்தது.

கெட்டவர்களின் ஆட்சி நாட்டுக்கு வந்தது .

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா???

படித்து பகிர வேண்டிய தகவல்…

சிறுநீரகம் – பயன்கள்

இந்த 6 தவறுகள் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கிறது

மனித உடலில் முக்கியமான உள்ளுறுப்புகளில் சிறுநீரகமும்
ஒன்றாகும்.

சிறுநீரகம் என்பது கழிவுகளை மட்டுமே வெளியேற்றுகிறது
என்று பலர் கருதுகின்றனர் அதுதான் தவறு சிறுநீரகம் நமது
உடலில் பல வேலைகளை செய்கிறது.

சில ஹார்மோன்களையும் உடலுக்கு தேவையான சக்தியையும்
உருவாக்குகிறது. இந்த சிறுநீரகத்தில் எந்த பாதிப்பும் வரும்
வரை அதை பற்றி யாரும் கவனம் கொள்வதில்லை.

அந்த சிறுநீரகத்தில் பாதிப்பு வரும் போதுதான் அதனை பற்றி
கவலை கொள்கிறோம். ஆனால் வருமுன் காப்பதே சிறந்தது.
இந்த ஆறு பழக்கங்கள் சிறுநீரகங்களை பாதிக்கிறது.

1.பட்டினி கிடப்பது

நீங்கள் உணவு உண்ணாமல் இருக்கும்
போது சிறுநீரகங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை பெற்று
தருகிறது. இதே போன்று தொடர்ச்சியாக உணவு உண்ணாமல்

பட்டினி கிடப்பது ஒரு கட்டத்தில் சிறுநீரங்களை பாதிக்கும்.
காலை உணவினை தவிர்க்க கூடாது

———————————

.
2
.அளவுக்கு அதிகமான வலி நிவாரண மருந்துகள் பயன்
படுத்துவது

வலி நிவாரண மருந்துகளை அளவுக்கு அதிகமாக
ஒருவர் பயன்படுத்தும் போது அது சிறுநீரகத்தை பாதிக்கிறது.

3. அளவுக்கு அதிகமான மது அருந்துதல்

மது அருந்துவது
சிறுநீரகங்களை பாதிக்கிறது. எந்த உணவும் அருந்தாமல்
வெறும் வயிற்றில் மது அருந்துவது சிறுநீரகங்களை நேரடியாக
பாதிக்கிறது.

4. உணவில் அதிகமான உப்பு சேர்த்தால்

உணவில் சமையல்
உப்பு என்பது அளவுடன் இருக்க வேண்டும். அந்த உப்பு
அதிகமாக இருக்கும் போது சிறுநீரகத்துக்கு அதிக வேலை
ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தும்.
5.போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது
சிறுநீரகத்துக்கு தண்ணீர் என்பது மிக முக்கியமான ஓன்று.
உடலில் ஏற்படும் கழிவுகளை வெளியேற்ற தண்ணீர் மிக
முக்கியமானது. இன்றய காலதில் படிக்கும் இளைஞர்கள்
முதல் பலரும் வேலை பளு காரணமாக போதிய அளவு
தண்ணீரை அருந்துவது இல்லை

இதனால் சிறுநீரதுக்கு பாதிப்பு ஏற்படும். சிலர் தாகம் ஏற்படும்
போது மட்டும் தண்ணீர் அருந்துகின்றனர். உப்புகள். நிறைத்த
தண்ணீரை குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்

.

6.சிறுநீரை நீண்ட நேரமாக அடக்கி வைத்திருப்பது
இவ்வாறு செய்வது மிகவும் தவறு. இவ்வாறு செய்வதால்
சிறுநீரகத்தில் அழுத்தம் அதிகரிக்கும். சிறுநீரக கல்லை
ஏற்படுத்தும். காலப்போக்கில் சிறுநீரகத்திழும் சிறுநீரக
பையிலும் கிருமி தொற்றை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள்
உள்ளன.

சிறுநீரகத்தில் செயல்பாட்டை பாதிக்கும். இந்த தவறை
நிச்சயமாக யாரும் செய்ய கூடாது.

இந்த ஆறு பழக்கங்கள்
மட்டுமல்லாமல் அதிகமான இனிப்பு சேர்க்கப்பட்ட உணவு,
எண்ணெயில் பொறித்த உணவுகள், அளவுக்கு அதிகமான
இறைச்சி போன்ற உணவுகளும், புகைபிடித்தல், சரியான
தூக்கமின்மை, நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பது போன்ற
செயல்களும் சிறுநீரகததை பாதிக்கிறது.

ஒருவேளை சிறுநீரக மண்டலம் சம்பந்தமான பாதிப்பு
ஏற்படும் போது அதனை சரிசெய்வது சற்று சிரமமான
காரியம். வருமுன் காப்பதே சிறந்தது

————————–
வாட்ஸ் அப் பகிர்வு

அச்சுறுத்தும் டெங்கு – பாதுகாத்துக்கொள்வது எப்படி?

wzzz.jpg

ஆண்களுக்கு பல பலன்கள் அளிக்கும் ஓரிதழ் தாமரை..!

ஓரிதழ் தாமரை

ஓரிதழ் தாமரை… பெயரைக்கேட்டதும் இது தாமரையில் ஒரு வகையா? அப்படியானால் ஏன் தாமரையைப்போல தண்ணீரில் வளரவில்லை என்பார்கள். இது நிலத்தில் வளரக்கூடிய சிறு செடியினத்தைச் சேர்ந்த இதன் பூ சிவந்த நிறமும் நடுவில் நாமம் போன்றும் காணப்படும். இதன் காய் ஒற்றைக்கல் மூக்குத்தி போலிருக்கும். வயல்வெளி மற்றும் சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய இந்த மூலிகைக்கு `ரத்தின புருஷ்’ என்ற வேறு பெயரும் உள்ளது. ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, பூ, வேர், காய் மட்டுமன்றி முழுச் செடியுமே மருத்துவக்குணம் வாய்ந்தது.

 

இரவு பகல் பாராமலும் தூக்கத்தைத் தொலைத்து உழைப்பவர்களும், சரியாக உணவு உண்ணாமை போன்ற காரணங்களால் பலரது உடல்நிலை பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் இளம் வயதில் கட்டுக்கடங்காத பருவ உணர்ச்சி வெளிப்பாடுகளால் உடல்ரீதியாக அவர்கள் செய்யும் சில செயல்களால் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும். இதனால் உடல் மெலிந்து காணப்படுவார்கள். இப்படிப்பட்டவர்களில் சிலர் திருமண வயதை எட்டும்போது அவர்களால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாத ஒரு நிலை ஏற்படும். இப்படிப்பட்டவர்களுக்கு ஓரிதழ் தாமரை மூலிகை நல்ல பலன் தரும்.

* ஓரிதழ்தாமரையின் இலையை அதிகாலையில் மென்று சாப்பிட்டு, பால் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதேபோல், ஓரிதழ் தாமரையின் சமூலத்தையும் (வேர் முதல் பூ வரை) உண்டு வரலாம்.

* ஏதாவது நோய்களால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட்டவர்கள், உடலைத் தேற்ற ஓரிதழ்தாமரை சமூலத்தை உண்பதன்மூலம் நிவாரணம் பெறலாம். இதே சமூலத்தை கஷாயம் செய்து குடித்து வந்தால் விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறலாம்.

*ஆஸ்துமா நோயாளிகளுக்கும் இந்த கஷாயம் நல்லதொரு மருந்தாகும். உடல் எடையை குறைக்க சிகிச்சை எடுப்பவர்கள் இதே கஷாயத்தை அருந்தி கைமேல் பலன் பெறலாம்.

* ஓரிதழ்தாமரையுடன் சமஅளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து சிறு உருண்டையாக்கி தினமும் அதிகாலை சாப்பிட்டு வந்தாலும் மேலே சொன்ன பிரச்னைகள் தீரும்.

* உணவு, சூழல், பொருளாதாரம் காரணமாக சில இளைஞர்கள் இளம்வயதிலேயே முதியவர்கள்போல காணப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் இதே ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி உருண்டைகளைச் சாப்பிட்டு வந்தால் பலன் பெறலாம்.

* பாதுகாப்பற்ற உறவு கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களை பாடாய்ப்படுத்தும் நோய்களில் ஒன்று மேகவெட்டை (பாலியல் நோய்). பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய்ப் பகுதிகளில் வரக்கூடிய இந்த மேகவெட்டை நோய்க்கு ஓரிதழ்தாமரை சமூலம் பலன் தரும்.

ஓரிதழ்தாமரை

* ஓரிதழ்தாமரை சமூலத்துடன் பச்சைக் கற்பூரம், கோரோஜனை (நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்) சம அளவு எடுத்து அரைத்து அதனுடன் பசு நெய் சேர்த்து பாதிக்கப்பட்ட பகுதியில் பூசி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

* ஆண்மைக்குறைபாடு, குழந்தையின்மை பிரச்னை, தாம்பத்யத்தில் ஈடுபட இயலாமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இந்த ஓரிதழ்தாமரை பலனளிக்கும்.

* இலை, தண்டு, வேர், பூ, காய் என ஓரிதழ் தாமரையின் முழு சமூலத்தை நிழலில் உலர்த்திப் பொடி செய்து இரவு தூங்கச்செல்வதற்குமுன் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். இதைத் தொடர்ந்து ஒரு மண்டலம் செய்து வந்தால் உடனடி பலன் கிடைக்கும்.

இதே சமூலத்தை (வேர் முதல் பூ வரை) அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளை ஒழுக்கு, அடி வயிறு வலி போன்றவை சரியாகும். சமூலத்தை 21 நாட்கள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு 50 மில்லி ஆட்டுப்பால் குடித்து வருவதன்மூலம் இழந்தை ஆண்மை சக்தி திரும்பக் கிடைக்கும்.

– எம்.மரிய பெல்சின்

vikatan

கறிவேப்பிலை – தினமும் தரும் பலன்!

உணவு வகைகளில், ருசிக்காகவும், மணத்துக்காகவும்
சேர்க்கப்படும் கறிவேப்பிலையை, பலர், சாப்பாட்டு
தட்டில் ஓரங்கட்டுகின்றனர்.

ஆனால், உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள்,
ஏராளமான அடங்கியுள்ளன. கறிவேப்பிலையில்,
கார்போஹைட்ரேட்டுகள், பைபர், கால்சியம், பாஸ்பரஸ்,
இரும்பு, மெக்னீசியம், விட்டமின்கள் அமினோ அமிலங்கள்,
கிளைக்கோசைடுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள்
போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு,
அவை நாட்டு கறிவேப்பிலை, காட்டு கறிவேப்பிலை.

நாட்டு கறிவேப்பிலை உணவாகவும், காட்டு கறிவேப்பிலை
மருந்தாகவும் பயன்படுகிறது. காட்டு கறிவேப்பிலையின்
இலை சற்றுப் பெரிதாகவும், கசப்பு அதிகம் உள்ளதாகவும்
இருக்கும்.

நாட்டுக் கறிவேப்பிலை இலை, இதை விட சிறியதாகவும்,
இனிப்பும், துவர்ப்பும் நறுமணமும் உள்ளதாகவும் இருக்கும்.

வயிற்றுக்கு இதம்:

கறிவேப்பிலையில், நீர்ச்சத்து, 0.66, புரதம், 6.1, கொழுப்பு, 0.1,
மாவுச்சத்து, 0.16, நார்ப்பொருள், 6.4, தாது உப்புக்கள்,
4.2 சதவீதம் உள்ளன. வைட்டமின் “சி’ “ஏ’ ஆகியவையும்
உள்ளன.

ஒரு டம்ளர் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி,
அதில், ஒரு கட்டு இலைகளை சேர்த்து,
2 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி, அதனுடன் எலுமிச்சை
சாறு மற்றும் தேன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க
வேண்டும்.

கறிவேப்பிலையை அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி,
அதை ஒரு டம்ளர் மோருடன் கலந்து, ஒரு நாளைக்கு,
2 முறை குடிக்க வேண்டும். ஒரு டம்ளர் நீரில்
கறிவேப்பிலையை போட்டு நன்கு கொதிக்க வைத்து
வடிகட்டி, அந்த நீரை தினமும் பலமுறைகள் குடிக்க வேண்டும்.

சிறிதளவு கறிவேப்பிலை பொடி, 10 கிராம் சீரகத்தை
ஒன்றாக கலந்து சாப்பிட்டவுடன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான
நீரை குடிக்க வேண்டும். சிறிதளவு நீரில் கறிவேப்பிலை,
சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து அதை
வடிகட்டி, அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து
குடிக்க வேண்டும்.

இப்படி குடித்து வந்தால், வயிற்றில் உள்ள, தேவையில்லாத
கிருமிகள் அழிவதோடு, உடலுக்கும் பல்வேறு நன்மைகளை
ஏற்படுத்தி தருகிறது.

பார்வைக்கு நல்லது:

கறிவேப்பிலையில் உள்ள ஆல்கலாய்டுகள் மற்றும்
ஆன்டிஆக்ஸிடன்டுகள், புற்றுநோய் வராமல் தடுக்க
உதவுகிறது. முடியின் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.

எனவே, இளநரை, முடி உதிர்வு மற்றும் கண் தொடர்பான
பிரச்னைகளை வராமல் தடுக்கிறது. ஆன்டிபாக்டீரியல்,
வாய்வு தொல்லை, பித்தம் மற்றும் வயிற்றுப்போக்கு
போன்ற பிரச்னைகளை சரிசெய்து, வயிற்றில் நோய்த்
தொற்றுக்கள் ஏற்படாமல் தடுத்து, வயிற்றை சுத்தமாக்க
உதவுகிறது.

கருவேப்பிலை இலைச் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை
சாறும் தேவையான அளவு சர்க்கரையும் கலந்து அருந்தி வர,
அஜீரண வாந்தி முதலியவைகளுக்கு நல்ல குணம் தரும்.

பரம்பரை நீரழிவுக்கும், உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட
நீரழிவுக்கும், தினமும் பத்து கருவேப்பிலை இலைகளை
காலையில் மட்டும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து
அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி
ஊட்டி, கண்புரை ஏற்படாமல் தடுக்கிறது.
இதன் இலை, பட்டை, வேர் இவைகளை கஷாயம் செய்து
குடித்தால், பித்தம், வாந்தி நீங்கும்.

நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையுடன், மிளகு, உப்பு,
சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி சோற்றுடன்
நெய் கலந்து சாப்பிட, மந்த பேதி, மலதோஷம், மலக்கட்டு
போன்ற நோய்கள் குணமாகும்.

——————————
தினமலர்

 

கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்!

குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம்
நல்ல நிவாரணியாகும். ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள்
செய்து, 50 மி.லி., தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து,
வடிகட்டி, இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.

கருஞ்சீரக பொடியை, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில்
தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும், பித்தப்பை
கற்களும் கரையும்.

இதை காலை, மாலை இருவேளை சாப்பிடலாம்.
தொடர் இருமலால் பாதிக்கப்படுவோர், 1 தேக்கரண்டி கருஞ்சீரக
பொடியை தேன், அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன்
கலந்து சாப்பிட்டால் குணமாகும்;

நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.

கருஞ்சீரகத்தில் உள்ள ‘தைமோகியோனின்’ என்ற வேதிப்பொருள்,
சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. உடலுக்கு நன்மை
செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால், கெட்ட கொழுப்பு குறையும்.

தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. இதை பொடி
செய்து கரப்பான் மற்றும் சொரியாஸிஸ் நோய் இருப்பவர்கள்
தேய்த்து குளித்து வரலாம்.

புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும். குளியலுக்கு
பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து
பயன்படுத்துவது சிறந்தது.

கணையப் புற்று நோயை கட்டுப்படுத்துவதில், இது பெரும் பங்கு
வகிக்கிறது. கருஞ்சீரகத்தில் ‘இன்டெர்பிதான்’ என்ற இயற்கை
வேதிப்பொருள் உள்ளது. அது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை
சீராக்கி, புற்றுநோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது.

சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த
நாட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம்
ஏற்படும். இதற்கு கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது.

அதை வறுத்து லேசாக வெடிக்க விட்டு தூள் செய்து வைத்துக்
கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு, பத்து நாட்கள்
முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, தினமும், இருவேளை
தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிட வேண்டும்.

இது மாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு கனம் குறைந்து,
சிறுநீர் நன்றாக பிரியும்.

பிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை
பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக
பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை,
மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

கருஞ்சீரகம் பல முக்கியமான சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம்
இதை தனித்தனியாக சுத்தம் செய்து, ஒரு வாணலியில் இட்டு
கருகாமல் வறுத்து தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில்
போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

இதை ஒரு ஸ்பூன் அளவுக்கு, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான
நீரில் கலந்து குடித்து வர வேண்டும். இதை சாப்பிட்ட பின்,
எந்த உணவும் உட்கொள்ளக் கூடாது.

தினமும் இப்படி செய்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும்
அனைத்து நச்சு கழிவுகளும், மலம், சிறுநீர் மற்றும் வியர்வை
மூலம் வெளியேறி விடும். இதனால் தேவையற்ற கொழுப்பு
நீங்குகிறது.

ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

கர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும்
கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.

கருஞ்சீரகம், சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, வாரத்தில் சில நாட்கள் எடுத்துக் கொண்டால், உடல்
நலனுக்கு சிறந்தது.

————————————
தினமலர்

« Older entries Newer entries »