தொடர் இருமலா? இதை செய்து பாருங்கள்!

omam
சமையல் வகைகளுக்கு மணம், சுவையூட்டும் ஓமம்,
பல மருத்துவ குணங்கள் கொண்டது. இந்தியாவில்
ஓமம் 2000 ஆண்டுகளாக இயற்கை மருந்தாக பயன்
படுத்தப்பட்டு வருகிறது.

ஓமத்தில் புரதம், கொழுப்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ்,
இரும்புசத்து, வைட்டமின் ஏ, பி முதலியன அடங்கியுள்ளன.

மருத்துவ குணங்கள்

ஒரு மெல்லிய துணியில் கொஞ்சம் ஓமத்தை முடித்து,
நுகர்ந்து வர சளித்தொல்லை குணமாகும். இது ஓர்
இயற்கை இன்ஹேலர் ஆகும்.

ஓமத்திலுள்ள தைமால் என்ற வேதிப்பொருள், இருமலை
ஏற்படுத்தும் தொற்று கிருமிகளைக் கொல்லும் ஆற்றல்
உடையது. இது இருமல், மூக்கடைப்பை நன்கு
குணப்படுத்தும்.

ஓமத்துடன் வெல்லம் வைத்து பொடித்து தின்றால்
செரிமானக் கோளாறுகள் சீராகும். பசி ருசி ஏற்படும்.

வாயுத் தொல்லையைப் போக்கும் தன்மையுடைது ஓமம்.
சிறிது ஓமத்தை மென்று தின்றால் நல்லபலன் கிடைக்கும்.

ஓமம், சுக்கு, கருப்பட்டி சேர்த்து கஷாயம் செய்து குடித்து
வர சாதாரண காய்ச்சல் குணமாகும்.

சிறிது ஓமத்தை மென்று தின்று, ஒரு தம்ளர் சூடான வெந்நீர்
குடித்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

ஓமத் தண்ணீர் குழந்தைகளுக்கு ஏற்படும் கோலிக் என்னும்
கடும் வயிற்று வலியைக் குணமாக்கும்.

ஆரம்பநிலை ஆஸ்துமாவை ஓமம் குணமாக்கும் ஆற்றல்
உள்ளது. மத்திமநிலை ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்கும்.

ஓமத்துடன் தேங்காய்த் துருவல் சேர்த்து லேசாக வறுத்து
பின்னர் மைய அரைத்து குழம்பு தயாரித்து சாதத்தில் ஊற்றி
சாப்பிட்டுவர, தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

ஓமத்துடன் சின்ன வெங்காயம் வைத்து விழுதாக அரைத்து
பற்றிட, ஒற்றைத் தலைவலி ஓடிவிடும்.

———————–
By – உ.ராமநாதன்.
தினமணி

Advertisements

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!

m

சிறுதானியங்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்ப‍து
இந்த‌ வரகு என்றால் அது மிகையாகாது.

இதனை நம் முன்னோர்கள் அடிக்கடி சமைத்து
சாப்பிட்டதால் தான், நோய்நொடி இன்றி நீண்ட ஆயுளுடன்
திடகாத் திரமான உடல் ஆரோக்கியத்துடன் இருந்தனர்.

ஆனால் இன்று, நிலைமை தலைகீழ், நாகரீக உணவின் மீதும்
நாட்ட‍ம்கொண்டு, கலப்ப‍ட மற்றும் செயற்கை நிறப் பொடிகள்,
மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த, கெட்டுப்போன,
ஆரோக்கியமற்ற‍ உணவுகளைத்தான் நாம் சாப்பிட்டு
வருகிறோம்.

நமது வாரிசுகள் நல்ல ஆரோக்கியமான திடகாத்திரமான
உடலை பெற வேண்டாமா? அதற்கு நாம் செய்யவேண்டிய
முதல்படி, நமது பாரம்பரிய உணவு முறையை குழந்தைகள்
சாப்பிட பழக்க‍ வேண்டும்.

நமது பாரம்பரிய உணவுவகைகளில் தானிய வகைகள்
சிறப்புக் குரியதாகும்.

வரகு தானியத்தை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால்
உண்டாகும் நன்மைகள்:

1. அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து
மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால்,
ஆரோக்கியத்துக்கு நல்லது. கோடைக்காலத்தில் நல்ல
குளிர்ச்சியாக இருக்கும்.

2. வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன
இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன.
மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத்
தேவையான சக்தியையும் கொடுக்கும்.

3. ரத்தத்தில் அதிகளவு சேர்ந்துள்ள‍ ச‌ர்க்கரையின் அளவை
கட்டுப்படுத்தி, மிதமான அளவுடன் பராமரிக்கிறது.

4. நடுவயது, முதிர்ந்த வயதினருக்கும்வரும் மூட்டு
வலியைக் கட்டுப்படுத்தி , அவர்கள் ஓரளவு சுகத்தை தருகிறது.

5. கண்களில் ஏற்படவிருகும் நரம்புநோய்களைத் முற்றிலும்
தடுக்கும் கேடயமாக செயல்பட்டு கண்களை காக்கிறது.

6. கல்லீரலின் செயல்பாடுகளைத்தூண்டிவிடுவதால்,
ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும். மேலும் நமது உடலில்
சுரக்கும் நிணநீர் சுரப்பிகளைச் சீராக்குகிறது.

7. மாதவிடாய்கோளாறுகளால் அதிகளவு பாதிப்பைச்
சந்திக்கும் பெண்கள் இந்த வரகைச் சமைத்து சாப்பிடுவது
நல்லது.

இரத்த‍ போக்கு சீரடையும், வயிற்று வலியும் குறையும்
என்கிறார்கள் சித்த‍ மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள்.

———————————–
வெப்துனியா

மருத்துவ குறிப்புகள் –

கர்ப்பமான பெண்களுக்கு வாந்தியும் குமட்டலும்
ஏற்படுவது சகஜம்.

இது அதிகமாக இருந்தால், புதினாக் கீரையில் சிறிது
புளி வைத்து மசித்து உணவோடு உண்டு வந்தால்
வாந்தி நிற்கும்

எஸ்.விஜயா சீனிவாசன்

————————————

 

அடிபட்டதில் நீலமாகி விட்டதா..?

குழந்தைக்கு சூடு படும்படி….

கூல்… கூல்…

கோடைக் காலத்தில், உடலில், வறட்சி ஏற்படுவதால்,
அடிக்கடி தாகம் எடுக்கும். உடலில் உள்ள நீர் வியர்வையாக
வெளியேறி விடுவதே காரணம்.

வெள்ளரிக்காயும், மோரும், உடலில் நீண்ட நேரத்துக்கு,
வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கும். எனவே, வீட்டிலிருந்து
புறப்படும் போது, இவற்றில் ஏதேனும் ஒன்றை சாப்பிட்டு
புறப்படுங்கள்.

கோடை காலத்துக்கு ஏற்ற அடுத்த உணவு, தர்ப்பூசணி.
இதில், 90 சதவீதம் தண்ணீரும், எட்டு சதவீதம் சர்க்கரையும்
இருப்பதால், உடலில், வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது.

இளநீர் என்பது, 7 முதல் 8 மாதம் வரை உள்ள தேங்காய்.
உடல் சூட்டை தணிக்க இளநீர் அருந்தலாம். வயிற்றுப்
போக்கு, வாந்தி, மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அதிகமாக
உட்கொள்ள வேண்டும்.

ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த, நோயாளிகளுக்கு,
‘குளுகோஸ்’ ஏற்றுவதற்கு பதிலாக, நரம்பு மூலம், இளநீரை
செலுத்துவர்; அவ்வளவு சிறப்பானது.

இளநீரில், புரதம், 0.1 சதவிதம், கொழுப்பு, 0.1 சதவிதம்,
மாவு சத்து, 4 சதவிதமும் உள்ளன. இதன் புரதத்தில்,
அலனின், ஆர்ஜினைன், சிஸ்டைன் போன்ற அமினோ
அமிலங்களின் அளவு, பசும்பாலில் உள்ளதை விட அதிகம்
உள்ளன.

எனவே, இவற்றை சாப்பிட்டு உடம்பை, ‘கூல் கூல்’ஆ
வச்சிக்கோங்க!

————————————–
சிறுவர் மலர்

சம்மர் டிப்ஸ்…வெட்டி வேரை நீரில் ஊற வைத்து, வடிகட்டி எடுத்து,
தர்பூசணி பழத்தை துண்டாக நறுக்கிப் போட்டு,
ஒரு முழு எலுமிச்சம் பழத்தை அதில் பிழிந்து,
அவற்றை அருந்தினால், கோடையின் எரிமலை உஷ்ணமும்,
பனிமலையாகும்

* கோடையில் ஏற்படும் நீர்கடுப்பு நீங்க, எலுமிச்சை சாற்றில்,
சம அளவு நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டு வந்தால்
குணமாகும்

* பித்தம் அதிகமாக உள்ளோர், நிறைய எலுமிச்சை சாறு பருக
வேண்டும்

* எலுமிச்சை பழச்சாறு, சிறந்த காலரா தடுப்பு மருந்து;
அதனால், அடிக்கடி எலுமிச்சை சாறு குடிக்கலாம்

* தினமும் இரண்டு வேளை, லெமன் டீ குடித்தால், ஆரோக்கியம்
நிச்சயம்; பால் சேர்க்காமல் வெறும் பிளாக் டீயில், சிறிது
எலுமிச்சை சாறு கலந்தால், அதுவே, லெமன் டீ. தேவைப்பட்டால்,
சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்; இல்லையெனில், அப்படியே
பருகலாம். உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு ஏற்படும்

* வெல்லம் கரைத்த நீரில் சுக்கை தட்டிப்போட்டு, எலுமிச்சை
சாறு பிழிந்து அருந்துவது, கோடை வெயிலுக்கு மிகவும் நல்லது!

—————————————
தினமலர்

ஆஸ்துமாவும் பெண்களும்

 

அலர்ஜிதான் ஆஸ்துமா நோய்க்கு அடிப்படை என்கிறார்கள்
டாக்டர்கள். அதனால் அலர்ஜி ஏற்படாமல் தவிர்த்துவிட்டால்
ஆஸ்துமா வராது.

நோய்க் காரணியை இனம் கண்டுபிடித்து விட்டால்,
நோயைத் தடுத்து விடலாம் அல்லவா?

சரி… இந்த அலர்ஜி ஏற்படக் காரணம் என்ன? குறிப்பாக எந்த
வயதினருக்கு இதனால் அதிகம் பாதிப்பு உண்டாகும்?
அதிலும் பெண்கள், இந்த அலர்ஜியினால் எந்தளவுக்குப்
பாதிக்கப்படுகிறார்கள்..? என்ற கேள்விகளுடன் அலர்ஜி
நிபுணர்களை அணுகினோம்..

‘‘அலர்ஜி ஏற்பட நிறையக் காரணங்கள். ஒரேயரு காரணத்தை
மட்டும் சொல்லிவிட முடியாது. இருப்பினும் முடிந்தவரை
அலர்ஜி ஏற்படாமல் தவிர்த்து விடுவது நல்லது!’’ என்கிறார்
பிரபல ஆஸ்துமா நோய் நிபுணர் டாக்டர் ஆர். நரசிம்மன்.

‘‘நல்லவேளையாக ஆண்களோடு ஒப்பிட்டால் பெண்களுக்கு
ஆஸ்துமா வருவது குறைவுதான். இரண்டு ஆண்களுக்கு
ஒரு பெண் என்ற விகிதத்தில்தான் ஆஸ்துமா வருகிறதாம்.’’

‘‘ஆஸ்துமா எந்த வயதினருக்கும் வரலாம். முன்பெல்லாம்
பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார்கள். வெயிலும்,
தூசுயும் அதிகமில்லாத சூழல்… ஆனால் இப்போது அப்படி
இல்லையே!… பெண்கள், வெளியே எல்லா வேலைகளுக்கும்
போகிறார்கள். ஆண்களின் வேலைகளைப் பங்கு போட்டுக்
கொள்கிறார்கள்.

அதனால் ‘எக்ஸ்போஷர்’ அதிகமாகிறது. தூசும் மாசும்
அதிகமான சூழல், டென்ஷன், வெளியுலக வேலை அழுத்தம்,
உடல் ரீதியிலான பல அசௌகர்யங்கள் என்று பல விஷயங்கள்
இதற்குக் காரணமாக அமைகின்றன.

சீயக்காயும் அலர்ஜியாகலாம்!

பெண்களுக்குத் தலை முடி அதிகம் என்பதால், அழுக்கும்
தூசும் போகத் தலைக்குச் சீயக்காய் பவுடர் பயன்படுத்தி
தேய்த்துக் குளிப்பார்கள். அந்த சீயக்காய் பல பெண்களுக்கு
அலர்ஜிக்கு வழிவகுப்பதைப் பார்த்திருக்கிறேன்.
அதிலும் எளிதில் அலர்ஜிக்கு ஆளாகிறவர்களாக இருந்தால்
வேறு பிரச்னையே வேண்டாம்!…

தூசும் முக்கிய காரணம்

சிலருக்கு சாதாரணமாக தினமும் வீட்டைப் பெருக்கி சுத்தம்
செய்யும் போது கூட அந்த தூசுவினால் அலர்ஜி ஏற்படும்.
தூசு மூக்கினுள் சென்றவுடன் தும்மல் வரும். சிலருக்கு ஒரு
தும்மலோடு நின்று விடும்.

சிலர் தொடர்ந்து தும்மல் போடுவார்கள். மூக்கிலிருந்து
தண்ணீர் வழிய ஆரம்பிக்கும். அந்த அறிகுறிகளைத்
தொடர்ந்து இருமல், வீஸிங் போன்ற தொல்லைகள் இருந்தால்
நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

————————————-

சமையல் நெடியும் கூட!

அதேபோல், சமையல் செய்யும்போது வாணலியிலிருந்து
கிளம்பும் நெடி கூட சிலருக்கு அலர்ஜி ஏற்படக் காரணமாகிறது!…
நீண்ட நேரம் அடுப்படியில் நிற்பது, தாளிக்கும் போது உடனே
மேலெழும்பும் வாசனை கலந்த புகை இவையும் மூக்கில்
ஒருவித எரிச்சலை உண்டாக்கும். இதுவும் கூட அலர்ஜிக்கான
காரணம்தான்.

மண்ணெண்ணெய் அடுப்பு உபயோகிப்பவர்களுக்கும் புகை
மூலம் பிசச்னை வரும். வாணலியிலிருந்து கிளம்பும் நெடியை
விட ஆபத்தானது இந்தப் புகை மண்டலம். அப்படியே,
நுரையீரலில் போய்த் தேங்கிவிடும். இது கூட ஆஸ்துமா
ஏற்படக் காரணம்தான்.

ஒரு விஷயத் தைப் புரிந்து கொள்ளுங்கள்! ஆஸ்துமாவை
குணமாக்க முடியாது!.. ஆனால் அந்த நோய் நம்மை
பாதிக்காதபடி கட்டுப்படுத்த முடியும்.

அதனால் முடிந்தவரை இந்த நோய் வருமுன்பே காப்பதுதான்
நல்லது.’’ என்கிறார் டாக்டர் நரசிம்மன்.

பெண்களுக்கு ஒரு வித்தியாசமான காரணம்….

‘‘பெண்களுக்கு ஆஸ்துமா ஏற்பட அவர்களின் உடல்சார்ந்த
காரணமும் ஒன்று. அதில் முக்கியமானது Atopy எனப்படும்
ஒவ்வாமை இயல்பு!’’ என்கிறார் அலர்ஜி_ஆஸ்துமா நிபுணர்
டாக்டர் கே.ஏ. மோகனதாஸ்.

‘‘இந்த ஒவ்வாமை இயல்புடைய பெண்களுக்கு மகப்பேறு
காலத்தில் ஆஸ்துமா ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.
இவர்களில்கூட மூன்றில் ஒரு சதவீத பெண்களுக்குத்தான்
குழந்தை பிறந்த பின்பு ஆஸ்துமாவின் கடுமை குறையலாம்.

ஆனால் கர்ப்பம் தரிக்கும்போது முதல் முறையாக உண்டாகும்
ஆஸ்துமா மறுமுறையும் வரத்தான் வாய்ப்புகள் அதிகம்!

பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் நவீன கஷ்டங்களான பரபரப்பு,
வேலைப்பளு போன்றவற்றாலும், மன அழுத்தம், உணர்ச்சி
வசப்படுதல் போன்ற காரணங்களாலும் பல பெண்கள்
மறுபடியும் இந்த அலர்ஜி ஆஸ்துமா தாக்குதலுக்கு
உள்ளாகின்றனர்! ’’ என்கிறார் டாக்டர் மோகனதாஸ்.

‘‘ஆஸ்துமா நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அதை
வெளியில் சொல்வதில்லை. இது தவறு. சிலர் தங்களுக்கு
வந்திருப்பது ஆஸ்துமாவே அல்ல என்று ‘அண்டர் எஸ்டிமேட்’
பண்ணியிருப்பார்கள்.

இதுவும் தவறு. நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால்
தாமதிக்காமல், உடனே டாக்டரிடம் போய்விட வேண்டும்.

——————————————

(உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறதா என்று எப்படி தெரிந்து
கொள்வது? விவரங்கள், பாக்ஸ் மேட்டரில்)

எப்படி டெஸ்ட் செய்து கொள்வது?

உங்களுக்கு ஆஸ்துமா இருக்கும் அறிகுறிகளை நீங்கள்
உணரும் பட்சத்தில் அதை முறைப்படி டெஸ்ட் செய்துகொள்ள
நவீன பரிசோதனைகள் நிறைய வந்துவிட்டன. ‘இன்ஜெக்ஷன்
இம்யூனோதெரபி!’ என்ற டெஸ்ட் எந்த வயதினருக்கும்
செய்யலாம்.

‘பல்மோனரி ஃபங்ஷன் டெஸ்ட்’ என்ற பரிசோதனையின்
மூலமும் ஆஸ்துமாவைக் கண்டறியலாம்.

என்ன சிகிச்சை எடுத்துக் கொள்வது?

மருந்துகள் உபயோகிப்பதை விட கருவிகள் பயன்படுத்தி
‘ஆஸ்துமா’வை சுலபமாக கட்டுக்குள் கொண்டு வரலாம்.
முடிந்தவரை எந்தவிதமான இன்ஃபெக்ஷனும் ஏற்படாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும். அநாவசிய மனபயம்,
பரபரப்பு போன்றவை அலர்ஜிக்குக் காரணமாகிவிடும்.
அதனால் தவிர்க்கலாம்.

ஸ்டீராய்டு இன்ஹேலர்கள் நல்ல பயன் தருபவை. மாத்திரைகள்,
கேப்ஸ்யூல் என்று நேரடியாக உட்கொள்வதை விட, இந்த
இன்ஹேலர்கள் நல்லது.

இன்ஹேலர்களில் பல வகை… ரோட்டோஹேலர், அக்யூஹேலர்,
டயோஹேலர், நெபுலைஸர் என்று இருக்கின்றன. இவற்றில்
ரோட்டோஹேலரில் உலர்ந்த நிலையிலேயே மருந்தை
(DRY POWDER) வைத்துப் பயன்படுத்த முடியும்.

மாத்திரைகள் உடனடியாக பலனைத் தராது என்பதால்,
இந்த இன்ஹேலர் முறையே சிறந்தது.

கவனியுங்கள்… அலர்ஜிக்கான பரிசோதனை என்பது ஆஸ்துமா
தடுப்பு முறைகளில் முக்கியமானது! எந்த வகையான அலர்ஜி
என்பதை வைத்தே நோயின் தீவிரத்தை அறியலாம்.

தக்காளி, எலுமிச்சை, வேர்க்கடலை, பச்சைப் பயிறு உள்ளிட்ட
உணவு வகைகளால் கூட அலர்ஜி ஏற்படலாம். இதனால்
ஆஸ்துமா ஏற்பட்டிருக்கிறதா என்பதை இந்தச் சோதனை
மூலம் கண்டுபிடித்து விட முடியும்.

ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்.
அதற்கு தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும் நல்ல பலன் தரும்.
கடுமையான பயிற்சிகள் அவசியமில்லை. யோகாவுடன் கூடிய
பயிற்சி நல்லது.

முடிந்தவரை தூசிக் காரணிகளிடமிருந்து விலகியே இருங்கள்.

எங்கெங்கே தூசுகள் இருந்து பாதிப்பை ஏற்படுத்தலாம்?

டி.வி.யிலும், அதன் ஸ்டாண்டுகளிலும் அடிக்கடி தூசு பரவி
நிற்கும். ஏ.சி. ஃபில்டர்களில் தூசுப் படலங்கள் படிந்திருக்கலாம்.
தலையணைகளில் கூட தூசுப் பூச்சிகள் (DUST MITES)
இருக்கும். இவை கண்களுக்குத் தெரியாது. தூங்கும் போது
மூக்கின் வழியே உள்ளே சென்று அலர்ஜியை ஏற்படுத்தும்.
அதனால் அவ்வப்போது தலையணை உறையை சுத்தம் செய்வது
அவசியம்.!

முக்கியமாக…

எக்காரணம் கொண்டும் டாக்டரின் அட்வைஸ் இல்லாமல்
நீங்களாகவே மருந்து எடுத்துக் கொள்ளாதீர்கள். காரணம்…
மாத்திரையின் அளவும், வீரியமும் உங்களுக்குத் தெரியாது
என்பதுதான்.

உங்கள் வீட்டிலுள்ளவர்கள் யாருக்கேனும் ஆஸ்துமா இருந்தால்,
முதலிலேயே நீங்களும் ‘செக்அப்’ செய்து, உங்களுக்கு அலர்ஜி
ஆஸ்துமா இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

—————————
_ எஸ். அன்வர்
நன்றி – குமுதம் சிநேகிதி
mahalir.blogspot.in/2005_04_23_archive.html

முலாம்பழம் – மருத்துவ பயன்கள்

சர்க்கரையின் அளவை சீராக்க உதவும் கிராம்பு…!

மசாலா பொருட்கள் அனைத்துமே மருத்துவ குணங்களைக்
கொண்டுள்ளது என அனைவருக்குமே தெரியும்.

அதிலும் கிராம்பில் ஏராளமான நன்மைகள் நிறைந்திருப்பது
சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

பல் வலி என்றால் உடனே ஒரு கிராம்பை வாயில் போட்டு
கடித்துக் கொண்டால், பல் வலி போய்விடும் என்று சொல்வார்கள்.

கிராம்புவில்உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உள்ள
பல பிரச்சனைகளைத் தீர்க்கலாம். கிராம்புகளில் ஆன்டி-
ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், கால்சியம்,
இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், நியாசின், ஃபோலேட்,
வைட்டமின் சி, பி, ஈ, கே மற்றும் டி போன்றவை நிறைந்துள்ளது.

கிராம்பு செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரித்து
செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.

மேலும் இது வாய்வு தொல்லை, வயிற்று எரிச்சல் மற்றும்
குமட்டல் போன்றவற்றையும் சரிசெய்யும்.

எனவே உங்களுக்கு வயிறு சரியில்லாதது போல் இருந்தால்,
கிராம்பை பொடி செய்தோ அல்லது வறுத்தோ  தேனுடன்
கலந்து உட்கொள்ள உடனே சரியாகும்.

கிராம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. சர்க்கரை
நோயாளிகள் கிராம்பை தினமும் உட்கொண்டு வந்தால்,
இரத்த சர்க்கரை அளவு சீராக்கப்பட்டு, இன்சுலின் அளவும்
சீராக இருக்கும்.

எனவே உங்களுக்கு நீரிழிவு வராமல் இருக்க
வேண்டுமெனில், கிராம்பை உட்கொண்டு வாருங்கள்.

————————————-
வெப்துனியா

_________________

« Older entries