எச்சரிக்கை! பாடி ஸ்பிரேயினால் ஆபத்தா?

By  – மாலதி சந்திரசேகரன்  |

bs

பெண்களுக்கு இயற்கையாகவே, தான் தனியாகத் தெரிய வேண்டும் என்கிற எண்ணம் உண்டு. அதனால், அவர்கள் உடுத்தும் உடையிலிருந்து பயன்படுத்தும் உதட்டு சாயம் வரை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களின் அலங்கார வஸ்துக்களைத் தவிர இன்றைய நாட்களில் அதிமாக பெண்களால் உபயோகப் படுத்தப்படும் இன்னுமொரு வஸ்து பாடி ஸ்பிரே.

நம் உடலில் இருந்து கழிவுகள் வியர்வை மூலமாகவும் வெளியேறுகிறது என்பதை நாம் எல்லோருமே அறிவோம். இது இயற்கை நமக்குத் தந்த ஒரு வரப்பிரசாதம். பொது இடங்களுக்குப் போகும் போது சுற்றி இருப்பவர்களுக்கு முகச் சுளிப்பை ஏற்படுத்தும் படி வியர்வை துர்நாற்றம் வீசுமோ என பயந்து பலரும், அக்குள் பகுதிகளில், டியோடரண்ட் மற்றும் பாடி ஸ்பிரேயைப் பயன்படுத்துகிறார்கள்.

வியர்வையைக் கட்டுப்படுத்த டியோடரண்டும், மேனியிலிருந்து நறுமணம் வீசுவதற்காக பாடி ஸ்பிரேயையும் உபயோகப் படுத்துகிறார்கள். ஒரு பெண்ணானவள் சராசரியாக ஒரு நாளைக்கு நூற்று அறுபத்து எட்டு வஸ்துக்களை மேனியில் உபயோகப் படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன (சோப்பு முதல் தலை டை வரை).

ஆண்கள், டியோடரண்ட் மற்றும் பாடி ஸ்பிரே உபயோகப் படுத்துவதால் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது இல்லை. ஆனால் அவற்றையே பெண்கள் உபயோகப்படுத்தும் போது, அவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

பெண்கள் பாடி ஸ்பிரேயை அக்குள் பகுதிகளில் பாய்ச்சிக் கொள்ளும் போது, அதில் இருக்கும் நஞ்சுப் பொருளான அலுமினியம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவை, அக்குள் மூலமாக மார்பகங்களை எளிதில் அடைந்து விடுகின்றன. அலுமினியமானது மார்பகத் திசுக்களுடன் வினை புரிந்து சிஸ்டிக் என்னும் திரவத்தினை அதிகமாக்குகிறது. டியோடரண்ட்டில் உள்ள ட்ரிக்ளோசன் என்னும் பொருளும் நச்சுத்தன்மையை கூட்டுகிறது. ரசாயனங்களில் இருக்கும் ‘பாரபின்’ என்னும் பொருளும் பெண்களின் ஈஸ்ட்ரோஜென்னில் சேர்ந்து மார்பகங்களில் கட்டியை உண்டாக்குகிறது.

இவைகளைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால், பெண்களுக்கு, மார்பகப் புற்று நோய் விரைவில் வந்து விடும் என்று மருத்துவ ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. நம் உடலில் இருக்கும் உறுப்புகளிலேயே மிகப் பெரிய உறுப்பு தோல்தான். தோலில் தங்கும் நச்சுத் தன்மை வியர்வைத் துவாரங்கள் வழியே இருபத்தாறு செகண்டுகளில் நம்முடைய ரத்த ஓட்டத்தில் கலந்து விடுகிறது.

சமீபமாக, டியோடரண்ட் உபயோகப் படுத்திக் கொண்டிருந்த பெண்கள், உபயோகித்து நிறுத்திய பெண்கள் இருவரிடமும் அக்குளில் ஆராய்ச்சி செய்யப்பட்டதாம். உபயோகப்படுத்திக் கொண்டிருந்த பெண்களிடம் மிகக் குறைந்த அளவே பாக்டீரியா காணப்பட்டதாம். உபயோகித்து நிறுத்திய பெண்களிடம் அதிக அளவு பாக்டீரியா காணப்பட்டதாம். சரி, குறைவாக இருந்தால் நல்லதா? அதிமாக இருந்தால் நல்லதா? என்று யோசனை செய்ய வேண்டாம்.

நம் உடலுக்கு நன்மை செய்யும் அதாவது நச்சுத் தன்மையை தோலுக்கு உள்ளே விடாமல் அரணாக இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருப்பதே உடலுக்கு ஆரோக்கியம். ஆகையால், பெண்களே! இயற்கையாக வெளியேறும் வியர்வையை தடை செய்யாதீர்கள். வம்பை விலை கொடுத்து வாங்கி ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். ஒரு வருடத்தில் சுமார் நாற்பத்து இரண்டாயிரம் பெண்கள் மார்பகப் புற்று நோயினால் தாக்கப்படுகிறார்களாம் எனவே உஷாராக இருங்கள்.

நன்றி
லைஃப்ஸ்டைல் – தினமணி

Advertisements

பருக்கள் மறைய எளிய வழிகள்!

MILK_FACE
ஹார்மோன் சுரப்பு, எண்ணெய்ப் பசை அதிகரிப்பு,
கிருமி தொற்று போன்றவையே முகப்பருக்கள் ஏற்பட
முக்கிய காரணமாகின்றன.

எனவே முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதிக எண்ணெய்ப் பசை உள்ள சருமம் கொண்டவர்கள்
அவ்வப்போது முகத்தை சோப்பு மற்றும் நீரால் கழுவி
சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

முகப்பருக்களை அடிக்கடி கையால் தொட்டுப் பார்க்க
கூடாது. நகத்தால் கிள்ளவும் கூடாது. இதனால் கிருமித்தொற்று
பரவி புதிய முகப்பருக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

• துத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவிவரப்
பருக்கள் மறையும்.

• நன்னாரி வேர் கஷாயத்தால் பருக்கள் தீரும்.

• வெட்டி வேர் நூறு கிராம், சந்தனத் தூள் 25 கிராம்
ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து
கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள் மாறும்.

• பாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள்
கலந்து சோப்புக்குப் பதில், தினசரிக் குளிக்கப் பயன்
படுத்தினால் பருக்கள் விரைவில் மறைந்து விடும்.

• ஜாதிக்காய், சந்தனம், மிளகு ஆகிய மூன்றையும்
அரைத்துப் பற்று போட, பரு மறையும்.

• வேப்பிலை பருக்களுக்கு சிறந்த கிருமி நாசினியாக
செயல்படுகிறது. வேப்பம் கொழுந்தை அரைத்து
முகப்பருக்களில் பூசி 15 நிமிடங்கள் ஊறவிட்டு
வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

• கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள் தூள், சோற்றுக்கற்றாழை
மூன்றையும் கலந்து பருக்கள் மீது தடவி வர பருக்கள்
குணமாகும்.

• படிகாரம் கலந்த நீரில் அடிக்கடி முகத்தை கழுவலாம்
இது கிருமி தொற்றை கட்டுப்படுத்தி முகப்பருக்கள்
வருவதை தவிர்க்கும்.

————————————-
-என். சண்முகம்
நன்றி- மகளிர்மணி

சில அழகு டிப்ஸ்

 

 

ஹெல்த் அண்ட் பியூட்டி

tamanna.jpg

நன்றி குங்குமம் டாக்டர்

தமன்னா ஃபிட்னெஸ்

‘கேடி’ படத்தின் மூலம் 2005ல் தமிழ் சினிமாவுக்கு வந்த
தமன்னா, ‘தேவி’ ரிலீஸ் நேரத்திலும் கிட்டத்தட்ட அதே
லுக்கிலேயே இருப்பது மகா மெகா ஆச்சரியம்.

டென்ஷன், பார்ட்டி கலாசாரம், ஈகோ என ஹெல்த்தைப் பாதிக்க
சினிமாவில் ஆயிரம் காரணங்கள்.

அத்தனையையும் தாண்டி தமன்னா ஃபிட்டாக இருக்கும் ரகசியம்
என்ன ?

*சைவ உணவுகளையே விரும்பக்கூடியவர். பொரித்த, கார
உணவுகளைக் கண்டால் அலறியடித்து ஓடிவிடுவார். சர்க்கரை
கலந்த உணவுகளுக்கு கட்டாயம் ‘நோ’.

*தயிருக்கு தமன்னா மிகப் பெரிய விசிறி.

தமன்னாவின் டயட்டில் தினமும் தயிர் நிச்சயம் இடம்
பிடித்திருக்கும்.

*ஷூட்டிங் சமயங்களில் நாட்கணக்காக வெயிலிலும், ஸ்டூடியோ
லைட்டிங்கிலும் நடிக்கும்போது உடலில் ஏற்படும் உஷ்ணத்தை
சரிக்கட்ட குளிர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறார்.

*உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக தினமும்
தவறாமல் ஜிம்முக்குச் சென்றுவிடுவார்.

*சருமத்தின் மினுமினுப்பு குறையாமல் இருப்பதன் ரகசியம்
கொஞ்சம் வெஜிடபிள் சூப், கொஞ்சம் ஜூஸ், நிறைய தண்ணீர்.

*உடற்பயிற்சிகள் ஒருமணி நேரம் செய்தாலும் யோகாசனப்
பயிற்சிகளையும் மிஸ் பண்ணுவது இல்லை. ‘மனதை
சமநிலையோடு வைத்துக் கொள்ள யோகா ஒவ்வொருவருக்கும்
தேவை’ என்பது தமன்னா மொழி.

———————————————-

நடைப்பயிற்சியால் விளையும் நன்மைகள்!

இயந்திர வாழ்க்கைக்கு பழகிக் கொண்டிருக்கும்
பல பெண்களுக்கு நடப்பதற்கான வாய்ப்புகளே
கிடைக்காமல் போகிறது.

அமர்ந்த நிலையில் வேலைகளை தொடர்ந்து செய்வதால்
உடலில் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. மேலும், அவர்கள்
சிறிது தூரம் கூட நடப்பதில்லை. குறிப்பாக இரத்த ஓட்டம்
சீராக இல்லாமை, உடல் பருமன் அதிகரிப்பது, தொப்பை
விழுதல் போன்ற பல பிரச்னைகளுக்கு பெண்கள் ஆளாகி
வருகின்றனர்.

இதற்கான ஆராய்ச்சியை நியூயார்க் ஆய்வாளர்கள்
மேற்கொண்டுள்ளனர்.

நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலமாக இதயத்தை
ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும் என ஆய்வின்
மூலமாக இவர்கள் கண்டறிந்துள்ளனர். தினமும் சிறிது
தூரம் வரையாவது நடப்பதன் வாயிலாக இதயத்துடிப்பு
சீராகிறது.

மேலும், இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் சரியாகவும்
இருக்கும். நடைப்பயிற்சியில் கலந்து கொண்ட 70 குழுக்களைச்
சேர்ந்த பெண்களை 10 வாரங்களுக்குப் பிறகு பரிசோதனை
செய்ததில் அவர்களுடைய உடல் எடை, உடல் பருமன், இரத்த
அழுத்தம், உடலின் செயல்பாடுகள் போன்றவை சீராக
இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு வாரத்துக்கு 150 நிமிடங்களாவது நடைப் பயிற்சி
மேற்கொள்வதால் பெண்களுக்கு பல உடல் பிரச்னைகள்
சரியாவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

————————————–
-நன்றி- விகடன்

சின்னஞ்சிறு கிளியே…

தன் பதினொரு வயதுப் பெண்ணின் உடல் மாற்றங்கள்
குறித்த சில சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெறுவதற்காக
வந்திருந்தாள் விஜி.

என் பெண்ணுக்குப் பத்து வயது முடிந்து இப்பதான் பதினொண்ணு
ஆரம்பமாகிறது டாக்டர். அதற்குள் மார்புப் பக்கம் லேசாக
பெரிதாகிறது. கூச்சப்பட்டு கூன் போட ஆரம்பிக்கிறாள்.

சீக்கிரமே பெரியவளாகிடுவா போல இருக்கே. இந்த வயசிலேயேவா
ப்யூபெர்ட்டி வந்துடும்? நான் பதிமூணு முடிஞ்ச பிறகுதான்
பெரியவளானேன். என்னை கொள்ளலையே டாக்டர்? படபடவெனக்
கேட்டாள்.

அவள் மட்டுமல்ல, நிறைய பெண்களுக்கு, பூப்பெய்தல் என்னும்
பெரியவளாதல் பற்றி ஆழமாகத் தெரியவில்லை. ப்யூபர்ட்டி என்பது
பெண்மையின் ஆரம்பக் கட்டம் துவங்கி முதல் பீரியட் வரும்
வரைக்குமான காலகட்டம்தானே தவிர முதல் பீரியட் அல்ல.

பொதுவா இதில் நான்கு நிலைகள் இருக்கு.
தெலார்க்கி (Thelarche), ப்யூபர்க்கி (Pubarche), அட்ரினார்க்கி
(Adrenarche), மெனார்க்கி (Menarche) என்று இவற்றுக்குப் பெயர்.
இதில் தெலார்க்கி பருவம்தான் பெண்மை மலர்ச்சியின் ஆரம்பம்.
மொட்டின் இதழ்கள் விரிய நினைக்கும் நேரம்.

இப்போதுதான் மார்பக வளர்ச்சி ஆரம்பமாகிறது. பத்து வயது
சமயத்திலேயே மார்பகம் வளரத் துவங்கும் நிலைதான் மிக முதல்
பருவம்.

அப்ப என் பெண் சரியாகத்தான் இருக்கிறாள்.
இதெல்லாம் இயல்புதான் என்று சொல்ல கூன் போடாமல் நிமிர்ந்து
நடக்கச் சொல்லு

சரி, மார்பக வளர்ச்சிக்கும் ஐந்து நிலைகள் உண்டு. டேனர்ஸ் ஸ்டேஜ்
என்று சொல்வோம். இந்தப் பருவத்தில் அந்தப் பெண் சரியானபடி
ப்யூபர்ட்டி அடைகிறாளா என்று மருத்துவச் சோதனைகள் மூலம்
எங்களால் சொல்ல முடியும்.

தெலார்க்கிக்கு அடுத்து, மார்பக வளர்ச்சியின் இரண்டாவது கட்டம்
இருக்கும்போதே அக்குள் மற்றும் பெண் உறுப்பைச் சுற்றி முடி வளர
ஆரம்பிக்கும். இந்தப் பருவம்தான் ப்யூபர்க்கி.

விஜி குறுக்கிட்டாள்.
இதற்கெல்லாம் காரணம் ஹார்மோன்கள் என்று படித்திருக்கிறேனே.

ஆமாம், மூளையில் இருக்கும் பியூட்டரி க்ளாண்ட்தான் உடல்
இயக்கங்கள் என்னும் ஆர்கெஸ்ட்ராவின் இயக்குனர். பலவிதமான
இயக்கங்களைத் தூண்டும் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன்களைச் சுரந்து
அனுப்புகிறது. அதையும் கன்ட்ரோல் செய்வது ஹைபோதலாமஸ்
என்னும் க்ளாண்ட் தான்.

பத்து வயதான பின், நம் சிறு மலர் விரியத் தேவையான
கொனடோட்ராபின் அதாவது ஃபாலிக்கிள் ரிலீசிங் ஹார்மோன்களை
நேராக ஓவரி என்ற சினைப்பைக்கு அனுப்புகிறது.

பெண்மையைத் தீர்மானிக்கும் இரண்டு ஹார்மோன்கள்
ஓவரியிலிருந்து வெளிப்படுகின்றன. ஈஸ்ட்ரோஜென், ப்ரொஜெஸ்ட்ரோன்
என்பவைதான் அவை.

பெண் குழந்தை பிறக்கும்போதே சினைப் பையில் முட்டைகள் இருக்கும்
என்று முதலில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதே போல் இந்த ஹார்மோன்களும்
முதலிலேயே இருக்குமா அல்லது பருவமடையும் சமயத்தில்தான் சுரக்குமா?

ஏற்கெனவே உடலில் இருக்கும் விஜி. ஆனால் ஒரு அடிப்படையான பேஸ்
நிலையில் அவ்வளவாக ஆக்டிவ்வாக இல்லாமல் இருக்கும். சரியான
வயது வந்தவுடன் பிட்யூட்டரி அனுப்ப, ஓவரியில் அவை வேலை செய்ய
ஆரம்பிக்கும். மெல்ல மெல்ல வரும் ஹார்மோன் சுரப்பு, மார்பக
வளர்ச்சியில் துவங்கி, முழு வீச்சில் இயங்க ஆரம்பிக்கும்போது, சினைப்
பையில் முதல் முட்டை வெளிப்பட்டு, பெண்ணின் முதல் பீரியட் வருகிறது.

இதெல்லாம் இயற்கையின் என்ன அழகான நியதி? வியந்தாள் விஜி.

மார்பகம், ப்யூபிக் ஹேர் என்னும் பெண் உறுப்பைச் சுற்றி வளரும் முடி,
மென்மையான சருமம், கொழுப்பு செல்கள், இப்படிக் குறிப்பிட்ட டார்கெட்
அங்கங்களின் வளர்ச்சிக்குக் காரணமே ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்தான்.

அதே சமயத்தில் யூட்ரஸ் என்ற கருப்பையும் வளர்ச்சி அடைய வேண்டும்.
அது தயாரானால் தான் பெண்ணின் சினைப் பையில் இருக்கும் முட்டை,
கருவானால் அதை வைத்து வளர்க்கும் சக்தி வேண்டுமல்லவா?
ஆக கருப்பை தயாராகி, சரியான சமயத்தில் முட்டையைச் சுற்றி உள்ள
ஃபாலிக்கிள் விரிந்து, அதுவும் வெளிவரும் நேரம் தான் நம் சின்னச்சிறு
கிளி பூப்பெய்தும் நாள். பெண்ணாகும் நாள்.

அட்ரினார்க்கி என்று ஏதோ சொன்னீர்களே டாக்டர்?

பத்து பதினொரு வயதில் ஒர திடீர் வளர்ச்சி ஏற்படும் பாரு,
அதற்குதான் அட்ரினார்க்கி என்று பெயர். அதை க்ரோத் ஸ்பர்ட் என்போம்.
அது வந்த கொஞ்ச நாளில் முதல் பீரியட் வந்து விடும்.

ஆமாமா எங்க பாட்டி கூட சொல்லுவாங்க, பெண் வளர்த்தியோ
பீர்க்கங்கா வளர்த்தியோன்னு. என்ன பெண் கூட திடீர்னு
உசரமாயிட்டா, போன மாசம் தைத்த சூடிதார் இப்ப ஏறிக் கிடக்கு.
பீரியட்ஸ் வர்றதுக்கு முன்னாடி ஏற்படுகிற வளர்ச்சி இது.

அப்புறம் இருக்காதா?
அதற்கு ஒர காரணம் இருக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்,
எலும்புகளிலும், குறிப்பாக லாங் போன்ஸ் என்கிற தொடை, கால்
எலும்புகளின் வளர்ச்சியிலும் முக்கிய பங்குவகிக்கிறது.

பொதுவாக இந்த எலும்புகளில் இரண்டு பகுதி இருக்கும். தலைப்பகுதி
போல ஒன்று, சற்றே நீளமான உடல் பகுதி என ஒன்று. இதற்கு நடுவில்
ஒரு லேயர் இருக்கும் அதுதான் கார்டிலேஜ் நார்மலாக இந்த கார்டிலேஜ்
பகுதி, ஓப்பனாக இருக்கும். அதாவது எலும்பு இல்லாமல் இருக்கும். பெண்
குழந்தை வளருகிறது. ஈஸ்ட்ரோஜென் வர வர, கார்டிலேஜ் பகுதி ஃப்யூஸ்
ஆகிவிடும்.

அதாவது எலும்போடு இணைந்துவிடும். பெண்ணுக்க முதல் பீரியட்
வந்த உடன் அதற்கு மேல் அவ்வளவாக உயரம் வருவது இல்லை.

பெரியவளாகி விட்டால் அப்புறம் உயரமே வராதா?
அதற்க முன்பே பெண்ணுக்குத் தக்க உயரம் வந்துவிடும்.
அதாவது அவளது பாரம்பரியத்தைப் பொறுத்தது. மற்றபடி பீரியட்ஸ் வந்த
பின் உயர வளர்ச்சி என்பது ஓரிரு அங்குலங்கள் அளவே இருக்கும்.

————————————–

– பத்மினி பட்டாபிராமன்.
மங்கையர் மலர்

‘டயட்டுடன் உடற்பயிற்சியும் அவசியம்!’’

பார்ட்டி, ஃபங்ஷனுக்கு முன்…

‘‘ஏதாவது விசேஷங்கள், பார்ட்டிகளில் கலந்துகொள்ள
வேண்டும் என்றால்… அதற்கு முந்தைய இரண்டு, மூன்று
நாட்களுக்கு வழக்கமான இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம்,
குழம்பு, பொரியல் என்ற உணவுகளைத் தவிர்த்து,
முழுக்கப் பழங்கள் மற்றும் காய்கறிகளை வயிறு நிரம்ப
சாப்பிடவும்.

குறிப்பாக வெள்ளரி, ஸ்பினாச், தக்காளி, மின்ட், லெமன்,
மாதுளை, கேரட் ஜூஸ்களை அதிகமாக எடுத்துக்கலாம்
(சர்க்கரை நோயாளிகள் மற்றும் மாதவிடாய், கர்ப்பப்பைக்
கோளாறு உள்ள பெண்கள் தவிர்க்கவும்).

கார்போஹைட்ரேட் உணவுகள் எடுத்துக்கொள்ளாததால் உடல்
எடை அதிகமாகத் தெரியாது என்பதுடன் சருமமும் பளபளப்பாகும்’’
என்று பரிந்துரைக்கிறார், சைனி.

‘‘டயட்டுடன் உடற்பயிற்சியும் அவசியம்!’’

சென்னை, பிங்க் ஃபிட்னஸ் சென்டரின் ஃபிஸியோ டிரெய்னர் மைதிலி,

‘‘ஒபீஸ், வாட்டர் பாடினு ஒவ்வொருத்தரும் அவங்களோட உடல்
பிரச்னைக்கு ஏற்ற பயிற்சிகளைச் செய்யணும். பொதுவா டயட்டில்
இருக்கும்போது உடலில் உள்ள கொழுப்பு குறையும்; உடலில் உள்ள
வாயு வெளியேறும். இதனால வெயிட் குறைஞ்சிருந்தாலும்,
சதை எல்லாம் தொளதொளப்பா இருக்கிறதால பார்க்க நல்ல ரிசல்ட்
கிடைக்காது.

அதனால, டயட்டுடன் உடற்பயிற்சியும் இணையும்போதுதான்
லூஸாகும் சதையெல்லாம் டைட் ஆகி, ஃபிட்டா தெரியும்.

வீட்டிலேயே வொர்க்அவுட் செய்ய நினைக்கிறவங் களுக்கு வாக்கிங்
நல்ல சாய்ஸ். அரை மணிநேர வொர்க் அவுட்டுக்கு அப்புறம்தான்
வெயிட் குறைய ஆரம்பிக்கும் என்பதால, ஒரு மணி நேரமாவது
நடக்கணும்.

———————————–
அவள் விகடன்

ஜிம்முக்கு போகாமலே ‘ஜம்’ முனு ஆகலாம்!

ஃபிட்னஸ்

டல் எடை, தொப்பை பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படுபவர்களும், அதைக் குறைக்க அதிகம் மெனக்கெடுபவர்களும் பெண்களே. ‘‘உண்மையில், எடையைக் குறைக்க ஜிம்தான் வழி என்பதில்லை. உணவுப் பழக்கமும், வீட்டில் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளுமே உங்கள் உடலின் தேவையில்லாத கொழுப்பைக் கரைத்து, கண்ணாடி முன் ‘சிக்’கென நிறுத்தும்!’’ என்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் சைனி…

சாப்பிடக் கூடாதவை!

‘‘சாப்பாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் வொர்க் அவுட் செய்து பயனில்லை. எனவே, உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுப் பட்டியல் இது…. இனிப்புகள், ஜூஸ் வகைகள், மைதாவில் செய்த உணவுகள், டீப் ஃப்ரை உணவுகள், கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகள் மற்றும் கோதுமை, பார்லி, சாதம் என குளுட்டன் புரதம் அதிகம் உள்ள உணவுகள். இந்த புரதம், நிறைய பேருக்கு ஃபுட் இன்ஃபெக் ஷனை உண்டு பண்ணும். இதனால ஸ்கின் பிரச்னைகள் நிறையவே வரும். ஆகவே, இதை தவிர்க்கலாம். மேலும் அசைவ உணவுகள், தேவைக்கும் அதிகமான பால், அப்பளம், ஊறுகாய், சிப்ஸ், வாரத்தில் ஒரு நாள் இட்லி, தோசை தவிர்க்கவும்.

சாப்பிட வேண்டியவை!

காலை வேளையில் பழங்கள் சாப்பிட லாம். அக்ரூட், பாதாம் போன்றவற்றை ஒரு நாளைக்கு ரெண்டு அல்லது மூன்று என்ற அளவில் சாப்பிடலாம். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். தயிர் தவிர்த்து, மோர் நிறைய குடிக்கலாம். மதியம் சாதத்தைக் குறைத்து 300 கிராம் அளவில் காய்கறிகள் எடுத்துக்கொள்ளவும். தினமும் வேறு வேறு வகையான காய்கறிகள், பழங்கள் என எடுத்துக்கொள்வது நல்லது. அதாவது, ஒருநாள் பச்சைக் கீரை சாப்பிட்டால், மறுநாள் பர்பிள் முட்டைகோஸ் சாப்பிடலாம். முதல் நாள் ஆரஞ்சு சாப்பிட்டால், மறுநாள் மாதுளை சாப்பிடலாம். பயறு வகைகளைத் தவிர்த்து, பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

மாலை நேரம் லெமன், கிரீன் டீ குடிக்கலாம். இரவு வேளையில் வேகவைத்த காய்கறிகள் எடுத்துக் கொள்ளலாம். அசைவ உணவை குழம்பு மற்றும் கிரேவியாக இல்லா மல், கபாப் போன்று டிரையாகச் செய்து சாப்பிடலாம். எண்ணெய் உணவுகளைக் குறைக்க வேண்டுமே தவிர, முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. அது சரும வறட்சியை உண்டாக்கும் என்பதால், ஒரு நாளைக்கு 4 டீஸ்பூன்வரை எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம்.

தூக்கமின்மையும் காரணம்… குண்டாக!

சரியாகத் தூங்கவில்லை என்றால், அதிகமாக எடைபோடும் என்பதை அறிவீர்களா?! ஆம்… சரியான தூக்கம் இல்லை என்றால் ஹார்மோனல் இம்பேலன்ஸ் உண்டாகும். இதனால் அதிக இனிப்புகள் எடுத்துக்கொள்ளத் தோன்றுவதுடன், சாப்பாட்டின் அளவையும் அதிகரிக்கத் தோன்றும். எனவே, அதிகபட்சம் இரவு 10 மணிக்குள் உறங்கி, காலை 6 மணிக்கு விழிப்பது நல்லது. தினமும் உடலுக்கு குறைந்தது 8 மணி நேரத் தூக்கமாவது அவசியம்.

உடல் எடை அதிகரிக்க..!

எடையைக் குறைக்கப் போராடுபவர்கள் போலவே, எடையை அதிகரிக்கும் முயற்சியில் இருப்பவர்களும் இங்கு அதிகம். அவர்களுக்கான உணவுப் பரிந்துரையையும் பார்க்கலாம். சீத்தாப்பழம், சப்போட்டா, ஆப்பிள், வாழைப்

பழம், மில்க்‌ஷேக், தினமும் 15 பாதாம், சோயா மில்க், லஸ்ஸி, கடலைமிட்டாய், எள்ளு உருண்டை,

டிரை ஃப்ரூட்ஸ், அசைவ உணவு… இவற்றை எல்லாம் சந்தோஷமாகச் சாப்பிடலாம்.

சிப்ஸ், சமோசா, பாப்கார்ன் போன்றவற்

றில் தேவையில்லாத கொழுப்புகள் இருக்கும் என்பதால், அந்த வகை ஸ்நாக் அயிட்டங்களைத் தவிர்க்கலாம். வாரத்துக்கு மூன்று நாட்கள் மீன் சாப்பிடுவது, தேங்காய் எண்ணெயில் சமைத்த உணவுகளை உண்பது, தேங்காய்த் துருவலை உணவில் அதிகம் பயன்படுத்துவது… இவை எல்லாம் சருமத்துக்கு மினுமினுப்பு கொடுக்கும். ரெண்டு டீஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் தினமும் சாப்பிடலாம்.

மொத்தத்தில், உடல் எடை கூடுவதும் குறைவதும் உணவுக் கட்டுப்பாட்டிலும், உங்கள் ஈடுபாட்டிலும்தான் இருக்கிறது!’’ – வலியுறுத்தி முடித்தார் சைனி.

கே.அபிநயா, படங்கள்:அ.பார்த்திபன்

அவள் விகடன்


கண்ணாடியில் அதிகநேரம் அழகு பார்ப்பது ஆணா? பெண்ணா?

கண்ணாடி முன் நின்று தன்னை அலங்கரித்து அழகு பார்த்துக் கொள்வதில் முதல் இடம் பெண்ணுக்கா, ஆணுக்கா என ஒரு ஆய்வு உலகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெண்களுக்குதான்! இவர்கள் ஒரு வாரத்தில் குறைந்தது 5 மணி நேரமாவது கண்ணாடி முன் நின்று அலங்கரித்து அழகு பார்த்து மகிழ்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. ஆண்கள் சராசரியாக வாரத்திற்கு 3 மணி நேரம் செலவழிக்கிறார்களாம். ஆண்களைவிட பெண்கள் அதிக நேரம் கண்ணாடி முன் நிற்க காரணம். தன்னைப் பார்த்து மற்றவர்கள் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என எதிர்பார்ப்பதுதான். ஆண்கள் இந்த விஷயத்தில் பெரியதாக அலட்டிக் கொள்வதில்லை.

உலகம் முழுவதுமுள்ள பெண்கள், ஆண்கள் கண்ணாடி முன், ஒரு வாரத்தில் எவ்வளவு மணி நேரம் சராசரியாக செலவழிக்கிறார்கள் என பார்ப்போமா:

தினமணி

 

குடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்!

புகுந்த வீட்டுக்கு ‘ஸ்லிம்’ தமன்னாவா போகிற எல்லோரும் கொஞ்சநாளில் ‘புஷ்டி’ குஷ்புவா மாறிடுறீங்களே அது ஏன்னு யோசிச்சிருக்கீங்களா? அட, கல்யாணத்துக்கு அதுக்கப்புறம் வெயிட் போடறது சகஜம்தானேன்னு சமாதானம் சொல்றீங்களா….இப்படி காரணங்களை சொல்றதை விட்டுட்டு, தினசரி வாழ்க்கையில நீங்க செய்யும் சிறுசிறு தவறுகளை உடனடியாக நிறுத்தினாலே போதும். தமனாவாகவே கன்டினியு பண்ணலாம் வாழ்க்கையை!

குடும்பத் தலைவியா நீங்கள் செய்யக்கூடாத 8 தவறுகள் இதோ…செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா….

1. சமைக்கும் போது, டேஸ்ட் பாக்குறேன், லைட்டா பசிக்குது இப்படி பலவித காரணங்களை சொல்லி இன்ஸ்டண்ட் பிரேக் ஃபாஸ்ட்ல ஆரம்பிச்சு மினி மீல்ஸ், ஈவ்னிங் குட்டியா ஸ்நாக்ஸ்னு கிச்சன்ல சாப்டுட்டே சமைக்கறீங்களா…?

ஃபேமிலியில எல்லாரும் சாப்பிட்டதுக்கு அப்புறம் மிச்சமாகுற உணவை குப்பையில கொட்ட மனசில்லாம, நீங்களே சாப்பிடறீங்களா ? உடனே நிறுத்துங்க, இந்த பழக்கங்களை இப்படியே தொடரும் பட்சத்தில், உங்கள் நாற்பது பிளஸ் வயதில் மெடிக்கல் பில்லுக்கு தனி பட்ஜெட் போடவேண்டிவரும் குடும்பத்தலைவிகளே!

2. வீட்டில் அம்மி, உரல்னு எல்லாம் இருந்தாலும் அதை பயன்படுத்தாம எல்லா விஷயங்களுக்கும் மிக்ஸி, கிரைண்டர்தான் உபயோகப்படுத்துகிறீர்களா ? இனிமே செய்யாதீங்க – இல்லைன்னா சில வருடங்கள்ல வெயிட்டை குறைக்க ‘ஜிம்’மே கதின்னு கிடக்க வேண்டியிருக்கும். ஜாக்கிரதை!

3. காலையில் ஆரம்பிச்சு வீட்டு வேலைகள் எல்லாத்தையும் மதியமே முடிச்சிட்டு, லஞ்ச்,டின்னர்னு எல்லாமே டி.வி முன்னாடி உக்கார்ந்த இடத்துலயே பண்றது, மதிய சாப்பாட்டுக்கு பின்னாடி தூக்கத்தை வழக்கமாக வைச்சிருக்குற ஆளா நீங்க ? உடனே நிறுத்துங்க இந்த பழக்கத்தை!

அதற்கு பதிலாக ஹோம் க்ளீனிங், கார்டனிங்னு சின்ன சின்ன வேலை பாத்தீங்கன்னா உங்கள் ஃபிட்னஸ் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும்.

4. தினமும் காலை, மாலை மட்டும் இல்லாம, நினைச்ச நேரத்துக்கெல்லாம்னு குறைந்தபட்சம் மூன்று முறைக்குமேல் டீ, காபி குடிக்கறீங்களா ? அதனை குறைத்துக் கொள்ளுங்கள். அதற்கு பதில் சமையலுக்கு காய்கறி வேக வைக்கும்போது, எக்ஸ்ட்ராவா ஒரு கப் தண்ணீர் சேர்த்து காய்கறி சூப் ரெடி செய்து குடித்தால் ஆரோக்கியம் பிளஸ் அழகும் நிரந்தரம்.

5. அலுப்பு காரணமாக மொட்டை மாடியில் துணி காயப்போடுவதை தவிர்த்து, கீழேயே கொடி கட்டி துணி காயவைக்கறது, அலுவலகம், ஷாப்பிங், வீடு என எங்குமே படிக்கட்டுகளை உபயோகிக்காமல், லிஃப்டை உபயோகப் படுத்தறதுன்னு, நம்ம வாழ்க்கையில் இயல்பா இருக்குற உடற்பயிற்சிகளை வெறுக்குறீங்களா ? உடனடியாக கைவிடுங்க – இல்லையென்றால் நாளடைவில் நிறைய உடல் சம்பந்தமான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


6. வேலைக்கு போகாம வீட்லயே இருந்தாலும், வீடு பெருக்க, துடைக்க, துணி துவைக்கன்னு எல்லாத்தையும் செய்ய எங்க வீட்ல ஆள் இருக்காங்கன்னு பெருமை பேசிட்டிருக்கீங்களா ? இனி அப்படி பண்ணாதீங்க – உடல் உழைப்பே இல்லாம இருந்தா, நாளடைவில் எடை அதிகரிப்பதுடன், சோம்பேறியாகிடுவீங்க. உங்களை ஃபிட்டாக வைத்திருக்க சின்ன வேலைகளை எடுத்து செய்யுங்கள்.

7. குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் சிப்ஸ், சாக்லெட் போன்ற தின்பண்டங்களை வீணாகிவிடக் கூடாது என்பதற்காக மிச்ச சொச்சத்தை வாங்கி நீங்கள் சாப்பிடறீங்களா? திரும்பவும் செய்யாதீங்க… வயசுக்கு ஏத்த உடை மட்டுமல்ல, உணவு விஷயத்திலும் கவனம் தேவை. நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் உங்கள் குழந்தைகளை நீங்கள் ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள முடியும்.

8. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது துவங்கி அருகிலிருக்கும் கடைக்குகூட டூ வீலரில் அழைத்துச் செல்லும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா ? உடனே மாத்திக்கோங்க – ஒரு நாளைக்கு இது போன்ற சிறு விஷயங்களுக்காக குறைந்த பட்சம் ஒரு நாளில் 2-3 கி.மீ தூரம் நடக்க பழகிக் கொள்ளுங்கள். அது உங்களை செம ஃபிட்டாக வைத்திருக்கும்.

நன்றி : விகடன்

« Older entries