தேசிய பூனைகள் தினம் – அக்டோபர் 29:

இந்தப் பூனையும் பால்குடிக்குமா?”
”பண்றதெல்லாம் பண்ணிட்டு பூனை மாதிரி உட்கார்ந்துட்டு இருக்குற”

பூனைகள் பண்டைய எகிப்தியர்கள் வழிபாட்டு விலங்காக ஏற்றுக்கொண்டு, அதை வழிபட்டு வந்தனர். பூனைகள் மனிதனால் 10,000 ஆண்டுகள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆரம்பத்தில் எலிகளை உண்பதற்காகவே பூனைகள் வளர்க்கப்பட்டன. பிறகு பூனைகள் மனிதனுடன் பழகும் விதத்தினால் ஈர்க்கப்பட்டு பூனைகளை வளர்க்க தொடங்கினர்.

பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஊனுண்ணி. வீடுகளில் வளர்க்கப்படுவதால் சைவ உணவை உண்ணும். மிதக்கும் விலா எலும்புகளால் பூனையின் முன்னங்கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் தன் தலை நுழையும் எந்த சிறிய இடத்திலும் பூனைகள் நுழைந்துவிடும். பூனைகளுக்கு சிறந்த இரவுப் பார்வை, கேட்கும் திறன் உண்டு. எனவே, இரவில் சிறு சத்தம் கேட்டாலும் இரையை வேட்டையாடி உண்டுவிடும். சத்தமின்றி வேட்டையாடி முடிக்கும் திறமை பூனைக்கு உண்டு.

பூனைகள் பெரும்பாலும் 4-5 கிலோ எடை கொண்டவை. பூனைகளின் சராசரி உயரம் 23-25 செ.மீ மற்றும் உடல் நீளம் 46 செ.மீ, பூனையின் வால் சராசரியாக 30 செ.மீ நீளமுடையதாக இருக்கும். பூனைகளின் காதுகளில் 32 தசைநார்கள் உண்டு. அவற்றின் உடல் வெப்பநிலை 38-39° (101-102.2°F) தாடையிலுள்ள 35 பற்களும் இரையைக் கொல்லும் வகையிலும், மாமிசத்தை கிழிக்கும் வகையிலும் அமைந்துள்ளன. பூனைகள் குறைந்த அளவிலான ஒளியை (டபீட்டம் லூசிடம்) கண்ணின் விழித்திரைக்குப் பின்னால் குவிப்பதால் குறைந்த அல்லது மங்கலான ஒளியிலும் துல்லியமான பார்வை திறன் கொண்டுள்ளது.

1. பூனை சுத்தமான விலங்கு. தன் நேரத்தின் பெரும்பகுதியை சுத்தம் செய்வதிலேயே கழித்துவிடும்.
2. பூனைகள் 13-14 மணி நேரம் தூங்குவதிலேயே கழித்துவிடுகின்றன.
3. மனிதனுக்கு பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலிலேயே பார்க்கக்கூடிய திறன் படைத்தவை.
4. பூனைகள் தமது காதை 180° வரை அசைக்கக்கூடியதுடன் அவை தனது இரண்டு காதுகளையும் தனித்தனியாக அசைக்கக்கூடிய ஆற்றலினையும் கொண்டது.
5. பூனைகளின் மோப்ப சக்தி மனிதர்களை விடவும் 14 மடங்குகள் அதிகம்.
6. பூனைகளால் இனிப்புச் சுவையை உணர முடியாது. இதற்கு காரணம் பூனைகளுக்கு சுவை அரும்புகள் கிடையாது.
7. பூனைகள் 100க்கும் மேற்பட்ட வித்தியாசமான சத்தங்களை எழுப்பக்ககூடியது.
8. மனிதர்களின் கைரேகையினை போன்றே பூனைகளின் மூக்கு ரேகைகள் தனித்துவமானவை.
9. பூனைகள் உள்ளங்கால்கள் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன.
10. பூனைகளின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது.
11. பெண் பூனைகள் வலது கால் பழக்கமுடையது, ஆண் பூனைகள் இடது கால் பழக்கமுடையது.
12. 32 மாடிகள் உயரத்திலிருந்து விழந்தாலும் பூனைகள் உயிர்பிழைத்து விடும்.
13.பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும். அதன் சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் அளவுக்கு திறன் உடையவை.
14. பூனைகளின் ஆயுட்காலம் சராசரியாக 12-15 ஆண்டுகள்.

எவ்வளவு குறும்புத்தனம் செய்தாலும், தன் எஜமானரை கண்டதும் வாலை ஆட்டி, அவர்களை உரசி, விளையாடி, அவர்களோடு படுத்து உறங்கி தன் அன்பினை தெரிவித்துவிடும். நன்றியுணர்வுமிக்க விலங்குகளின் பட்டியலில் பூனை இடம்பெறாவிட்டாலும், பூனை எப்போதும் செல்லப்பிராணியாகவே வளர்க்கப்படும்.

வாட்ஸ் அப் பகிர்வு

42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு … !!!

தெரிந்து கொள்வோம்👍🙌🙏

தமிழில் 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு … !!!

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன … அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.
அவற்றைத் தெரிந்து கொள்வோம்…
இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம் …
அ __எட்டு
ஆ —–> பசு
ஈ —–> கொடு, பறக்கும் பூச்சி
உ —–> சிவன்
ஊ —–> தசை, இறைச்சி
ஏ —–> அம்பு
ஐ —–> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ —–> வினா, மதகு – நீர் தாங்கும் பலகை
கா —–> சோலை, காத்தல்
கூ —–> பூமி, கூவுதல்
கை —–> கரம், உறுப்பு
கோ —–> அரசன், தலைவன், இறைவன்
சா —–> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ —–> இகழ்ச்சி, திருமகள்
சே —–> எருது, அழிஞ்சில் மரம்
சோ —–> மதில்
தா —–> கொடு, கேட்பது
தீ —–> நெருப்பு
து —–> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ —–> வெண்மை, தூய்மை
தே —–> நாயகன், தெய்வம்
தை —–> மாதம்
நா —–> நாக்கு
நீ —–> நின்னை
நே —–> அன்பு, நேயம்
நை —–> வருந்து, நைதல்
நொ —–> நொண்டி, துன்பம்
நோ —–> நோவு, வருத்தம்
நௌ —–> மரக்கலம்
பா —–> பாட்டு, நிழல், அழகு
பூ —–> மலர்
பே —–> மேகம், நுரை, அழகு
பை —–> பாம்புப் படம், பசுமை, உறை
போ —–> செல்
மா —–> மாமரம், பெரிய, விலங்கு
மீ —–> ஆகாயம், மேலே, உயரம்
மு —–> மூப்பு
மூ —–> மூன்று
மே —–> மேன்மை, மேல்
மை —–> அஞ்சனம், கண்மை, இருள்
மோ —–> முகர்தல், மோதல்
யா —–> அகலம், மரம்
வா —–> அழைத்தல்
வீ —–> பறவை, பூ, அழகு
வை —–> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ —–> கௌவுதல், கொள்ளை அடித்தல்

இப்படி இந்த 42 எழுத்துக்களும் தனியாக பொருள் தருகின்றன …

#வாழ்க_தமிழ் … 😊😊😊

வரலாற்றில் இன்று- நவம்பர் 7

பிறப்புகள்
——————-
1867 – மேரி க்யூரி போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர்,
நோபல் பரிசு பெற்றவர், (இ. 1934)

🖋
————–

1888 – சி. வி. இராமன், இந்திய இயற்பியலாளர்,
நோபல் பரிசு பெற்றவர், (இ. 1970).

————————————-

1954 – கமல்ஹாசன், தமிழ் நடிகர்.

🖋1

1959 – சிறிநிவாசு, பாடகர்

🖋

1969 – நந்திதா தாஸ், இந்திய நடிகர்.

🖋

1975 – வெங்கட் பிரபு, இந்தியத் திரைப்பட இயக்குநர்

🖋

1980 – கார்த்திக், பாடகர்

இறப்புகள்

—————————

1951 – என். சி. வசந்தகோகிலம், கருநாடக இசைக் கலைஞர்.

1993 – திருமுருக கிருபானந்த வாரியார், ஆன்மீகவாதி, (பி. 1906).

🖋2000 – சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி, (பி. 1910).

துபாஷி – ஸ்மார்ட் ட்ரான்ஸ்லேட்டர்

IMG_2009.jpg

ஹேண்ட்ஸ் ஃப்ரீ குடை!

IMG_2007.jpg

ஆப்பிள் மேல் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கர் தரும் தகவல்

zzz.jpg

பொது அறிவு – வினா விடை

gk 1-12.jpg

வாழைநாரின் பயன்கள்

IMG_1972.jpg

உன்னை சுற்றி ஓர் உலகம் – தெரிந்து கொள்வோம்

IMG_1933.jpg

மூவேந்தர்களின் மலர்கள்

அன்றைய தமிழகத்தை, சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டு
வந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள்
ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாள மலர் இருந்தது தெரியுமா?

இதைத் தெரிந்துகொள்ள, நாம் புறநானூறில் உள்ள
ஒரு பாடலைப் பார்க்கவேண்டும். அதை எழுதியவர்,
கோவூர்கிழார்.

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்று இரண்டு மன்னர்கள்.
இருவருமே சோழர்கள்தான். ஆனால், அவர்களுக்குள்
ஏதோ ஒரு பகை. இருவரும் ஒருவரோடு ஒருவர்
மோதுவதற்குத் தயாராக நின்றார்கள்.

அந்த நேரத்தில், கோவூர்கிழார் அவர்களைச் சந்திக்கச்
சென்றார். இருவரிடமும் சமாதானம் பேசி, போரை நிறுத்த
முயன்றார். அப்போது அவர் பாடிய பாடல் இப்படித்
தொடங்குகிறது:

‘இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன்,
கருஞ் சினை வேம்பின் தெரியலோன் அல்லன்,
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்துஅன்றே, நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்துஅன்றே,
ஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியே.’

‘மன்னா, எதிரே நிற்பது யார் என்று பார். அவன் கழுத்தில்
என்ன மாலை இருக்கிறது என்று கவனி.’

‘அவன் கழுத்தில் பனம்பூ மாலை இருக்கிறதா?
இல்லை!’

‘அப்படியானால், உன்னை எதிர்த்து நிற்பவன் பனம்பூ
அணிந்த சேரன் இல்லை!’

‘அவன் கழுத்தில் வேப்பம்பூ மாலை இருக்கிறதா?
இல்லை!’

‘அப்படியானால், உன்னை எதிர்த்து நிற்பவன் வேப்பம்பூ
அணிந்த பாண்டியன் இல்லை!’

‘அவன் கழுத்தில் உள்ளது, ஆத்திப்பூ.’

‘இப்போது, உன் கழுத்தைப் பார். அங்கேயும் ஆத்திப்பூ.’

‘ஆக, நீயும் சோழன், அவனும் சோழன். ஆத்திப்பூ அணிந்த
ஒரு சோழனும் இன்னொரு சோழனும் மோதுகிறீர்கள்.’

‘இந்தப் போரில் நீங்கள் இருவரும் வெல்லமுடியுமா?’

‘வாய்ப்பில்லை. இருவரில் ஒருவர்தான் வெல்லமுடியும்.’

‘அப்படியானால், தோற்கப்போவது ஒரு சோழன், இல்லையா?’

‘நீயும் சோழன், அவனும் சோழன், ஒரு சோழன் தோற்பதற்கு
இன்னொரு சோழன் காரணமாகலாமா? இந்தப் போரை
விட்டுவிடுங்களேன். இருவரும் நண்பர்களாகி விடுங்களேன்!’

இப்படிச் சிறப்பாகப் பேசி, ஒரு போரையே நிறுத்திவிட்டார்
கோவூர்கிழார். அதன்மூலம் பல உயிர்கள் காக்கப்பட்டன!

இதை வாசிக்கும்போது, அன்றைக்குத் தமிழ்ப் புலவர்கள் மீது,
அரசர்கள் எவ்வளவு மரியாதை வைத்திருந்தார்கள் என்பதை
நாம் புரிந்துகொள்கிறோம்.

மன்னர்களாகவே இருந்தாலும், அவர்கள் செய்த பிழையைச்
சுட்டிக்காட்டும் துணிவு புலவர்களுக்கு இருந்தது என்பதை
உணர்கிறோம்.

இதே மூன்று மலர்களைத் தொல்காப்பியமும் குறிப்பிடுகிறது:

வேந்து இடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்ப்
போந்தை, வேம்பே ஆர் என வரூஉம்
மாபெரும் தானையர் மலைந்த பூவும்…’

அதாவது, மூவேந்தர்களும் தங்களுக்கிடையே வேறுபாடு
தெரிவதற்காக, இந்த மலர்களைச் சூடிக்கொண்டார்கள்:

சேரர்கள்: பனம்பூ (போந்தை)
பாண்டியர்கள்: வேப்பம்பூ (வேம்பு)
சோழர்கள்: ஆத்திப்பூ (ஆர்)

——————————————-

– நாகா
தினமலர்

 

« Older entries Newer entries »