தேன்சிட்டுகள்

 

 

 

 

IMG_20180614_103827839~2.jpg

IMG_20180614_103742383~2.jpg

Advertisements

மகப்பேறு தரும் மகரந்தம்

 


வெயில் காலம் பூக்கள் அதிகம் மலர்வதால், தேன் அதிகம்
சேகரமாகும். தேன் தவிர, மகரந்தமும் தேனீக்களின்
மூலமாக சேகரிக்கப்படுகிறது.

இந்த மகரந்தத்தை பழங்குடியினர் உணவாக பயன்
படுத்துகின்றனர். பூக்கும் தாவரங்கள், கூம்பு வடிவில்
காய்க்கிற தாவரங்கள் ஆகியவற்றின் ஆண் உறுப்புகளில்
உற்பத்தியாகும் நுண்ணிய துகள்களே மகரந்தம்.

இதில் புரதம், வைட்டமின்கள், இரும்பு, மக்னீசியம், கால்சியம்
போன்ற உலோக சத்துக்கள் உள்ளன. பூவில் இருந்து
நேரடியாக கிடைக்கும் மகரந்தத்தை விட, தேனீ சேகரித்த
மகரந்தத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. மகரந்தம்,
ஆண்மை ஊக்கியாக செயல்படுகிறது.

———————————–
அறிவியல் ஆயிரம் – தினமலர்

அரவிந்தரின் சாவித்திரி

 

சாவித்திரி என்பது அரவிந்தர் எழுதிய நுால். 1910 முதல் 1950 வரை
அரவிந்தர் இதனை எழுதினார். இந்நுாலில், 24 ஆயிரம் வரிகளை
கொண்ட பாடல் தொகுப்பு உள்ளது.

மகாபாரதத்தில் உள்ள சத்தியவான் சாவித்திரி கதையை தழுவி,
தத்துவ ரீதியாக இது எழுதப்பட்டது. இது 1950, 1951ம் ஆண்டுகளில்
இரண்டு பாகங்களாக வெளியானது.

பதினெட்டு முறை இதனை மறுபதிப்பு செய்துள்ளனர்.
சாவித்திரியின் தந்தை அஸ்வபதி, சத்தியவானின் அப்பா
துாமத்சேனா ஆகியோரும் இதில் கதாபாத்திரங்களாக
வருகின்றனர்.

சாவித்திரியின் தமிழ் மொழிபெயர்ப்பு, சாகித்ய அகாடமியின்
மொழிபெயர்ப்பு விருதினை பெற்றுள்ளது.

—————————————–

தகவல் சுரங்கம்-தினமலர்

அறிவியல் கேள்வி – பதில்கள்

இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்… பார்த்து ரசிக்கலாம் வாங்க!

சுராகவ் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் பறவையின் விலை 25 லட்சங்களாம். இந்தப் பறவையில் அப்படி என்ன ஸ்பெஷல் என்றால் நிமிடத்திற்கு நிமிடம் இது தனது நிறத்தை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது. நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருக்கும் இந்த வண்ணங்களை கேமிராவில் சிறை பிடிக்க சுமார் 19 புகைப்படக்காரர்கள் தொடர்ச்சியாக 62 நாட்கள் காத்திருந்து மிகப் பொறுமையாக இதன் உடலில் நிகழ்ந்த வண்ண மாற்றங்களை படம் பிடித்திருக்கிறார்கள். மனித யத்தனங்கள் இன்றி இயற்கை தானாகவே சில அற்புதமான விஷயங்களைத் தன்னகத்தே ஒளித்து வைத்திருப்பதற்கு இந்தப் பறவையின் உடலில் நிகழும் தன்னிச்சையான வர்ணஜாலமும் கூட ஒரு உதாரணமே!சுராகவ்வின் உடலில் நிகழும் வர்ண ஜாலத்தை காணொளியாகக் காண…- நன்றி-தினமணி

தெரியுமா? – விந்தைப் பூக்கள்

# பிளாக் டியுலிங் என்றழைக்கப்படும் கறுப்பு ரோஜாவின்
நிறம் கறுப்பு. இது அல்லி வகையைச் சேர்ந்தது.

# பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது
குறிஞ்சி மலர் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா?
ஆனால், 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய
மலர் ஒன்று இருக்கிறது.
அதன் பெயர் காக்டஸ். இது இந்தியப் பெருங்கடலில்
ரீயூனியன் தீவில் காணப்படுகின்றன.

# ‘பீ ஆர்கிட்’ என்றழைக்கப்படும் பூச்செடியில் பூக்கும்
மலர்கள் அனைத்தும் தேனீக்களைப் போல் தோற்றமளிக்கும்.

# சோவியத் ரஷ்யாவில் காபர்வோஸ்க் என்ற இடத்திலுள்ள
குகைகளில் வித்தியாசமான தாமரை மலர்கள் பூத்து
குலுங்குகின்றன.
காற்றடிக்கும்போது இந்த மலர்கள் வண்ணம் மாறுகின்றன.
முதலில் நீல வண்ணமாகி, சிவப்பாக மாறிவிடுகின்றன.
மாலையில் இவை கறுப்பு வண்ணத்தில் காட்சி அளிக்கும்.

# அசெளரா ரூப்ரா என்ற நாய்க்குடை பூ ஆம்பல் மலர்
போலவே சிரிக்கும். அதுமட்டுமல்ல, ஆம்பலைப் போலவே
தோற்றமளிக்கும்.

# ஜோபி வீட் என்ற ஒரு சிவப்பிந்திய மந்திரவாதியின்
பெயரைத் தாங்கியுள்ள இச்செடி பார்ப்பதற்கு
அச்சமூட்டுவதாக காணப்படும்.

# நைகிரிட்டல்லா ரூப்ரா என்ற பெயருடைய செடி
ஐரோப்பாவில் உள்ளது. இதன் பூக்கள் சாக்லேட்டின்
மணத்தையும் நிறத்தையும் கொண்டவை.

# வாகை ஒரு விந்தையான மலர். மாலையில் மலரும்
இந்தப் பூ நள்ளிரவில் பிஞ்சாகி சில விநாடிகளில் வளர்ந்து
காலையிலேயே அது காயாகிவிடும்.

# ஜாவா மலைப்பகுதியில் காணப்படும் ராயல் கெளஸ்லிப்
என்ற பூச்செடி தோன்றினால் அது எரிமலை வெடிப்பதைக்
குறிக்கும் அறிகுறியாம்.

———————————
தி இந்து
– நன்றி: அதிசய மலர்கள் 1000,
ஆசிரியர் : கடல் நாகராசன், பாரதி பதிப்பகம்

குறுந்தகவல்கள்

k5

• டி.கே. பட்டம்மாள்தான் மிகச் சிறிய வயதில் மேடைக்
கச்சேரி செய்த இசைக் கலைஞர்.

விலங்குகளின் பேரில் நிறைய ஆசை கொண்ட அவர்
பத்து பசு மாடுகளும், பத்து நாய்களும் வளர்த்து வந்தார்.

———————————————

• பகத்சிங் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தபோது
56 புத்தகங்கள் படித்திருக்கிறார். 404 பக்கங்களில்
அவற்றைப்பற்றிய குறிப்புகளை எழுதி வைத்துள்ளார்.

——————————————-

• ஜெமினி ஸ்டூடியோவில் நடிகர்களை தேர்ந்தெடுக்கும்
வேலையில் ஜெமினி கணேசன் இருந்தபோது அவரிடம்
வந்த ஒரு நடிகரை டெஸ்ட் எடுத்துவிட்டு அவரைப் பற்றி
ஒரு குறிப்பை எழுதியிருந்தார்.

இந்த மனிதரிடம் சிறந்த நடிப்பு இருக்கிறது. எதிர்காலத்தில்
சிறந்த நடிகராக வருவார். அப்படி அவர் குறிப்பிட்ட
நடிகர்தான் – சிவாஜி கணேசன்.

———————————————–
– வி.ந.ஸ்ரீதரன்
தினமணிகதிர்

 

மிகப் பெரிய விக்டோரியா நீர்வீழ்ச்சி – இது எந்த நாடு?

கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன.
அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதியில் உள்ள நாடு.

2. இங்கு 16 அதிகாரபூர்வ மொழிகள் உண்டு. அவற்றில்
ஆங்கிலம், ஷோனா, டெபெலே மொழிகள் அதிகம்
பயன்படுத்தப்படுகின்றன.

3. ’ஒற்றுமை, சுதந்திரம், உழைப்பு’ என்பது இந்த நாட்டின்
குறிக்கோள்.

4. இந்த நாட்டு கிரிக்கெட் வீரர் கிராண்ட் ஃப்ளவர் மிகவும்
புகழ்பெற்றவர்.

5. ராபர்ட் முகபே இதன் ஜனாதிபதியாக நீண்ட காலம்
இருந்தார்.

6. பருத்தி, தங்கம், துணிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

7. சுதந்திரத்துக்கு முன்பாக தெற்கு ரொடீஷியா என்று
அறியப்பட்ட பிரிட்டிஷ் காலனியாக இது இருந்தது.

8. ஏழு ஒலிம்பிக் பதக்கங்களை நீச்சல் பிரிவில் பெற்று,
இந்த நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் கிறிஸ்டி கோவென்ட்ரி.

9. இந்த நாட்டின் கொடியில் பச்சை, பொன் மஞ்சள், சிவப்பு,
கறுப்பு நிறப் பட்டைகள் உண்டு.

10. உலகின் பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான விக்டோரியா
இங்கே இருக்கிறது.

————–

விடை: ஜிம்பாப்வே

———————————————
ஜி.எஸ்.எஸ்.
தி இந்து

 

யார் இந்த கோயபெல்ஸ்..?

மதன் பதில்
நன்றி-விகடன்

ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம்: ஏப்ரல் ஃபூல் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது

ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம்:  ஏப்ரல் ஃபூல்  தினம் ஏன் கொண்டாடப்படுகிறது

புதுடெல்லி,

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல்
மற்றவரை ஏமாற்றியும், முட்டாளாக்கியும் கொண்டாடும் நாள்
தான் ‘ஏப்ரல் முதல் நாள்’. ஏ

ப்ரல் 1-ம் தேதியை நண்பர்கள், குடும்பத்தினர் போன்றோரிடம்
வேடிக்கை செய்வதும், அவர்களை முட்டாளாக்கி மகிழ்வதையும்
உலகம் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆங்கில மோகம்…
இதிலும் நம்மை விட்டுவைக்கவில்லை.

உறுதியான காரணம்

கனடா, நியூசிலாந்து, லண்டன், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா
போன்ற நாடுகளில் பாரம்பரிய விழாக்கள் போல் இந்த தினத்தை
கொண்டாடி மகிழ்கிறார்கள்.

முட்டாள்கள்தினம் ஐரோப்பிய நாடுகளில் எதற்காக ஆரம்பிக்கப்
பட்டது என்பதற்கு வரலாற்று காரணங்களும், நகைச்சுவை
காரணங்களும் பல கூறப்படுகின்றன.
உறுதியான காரணம் இதுவரை சரியாக தெரியவில்லை.

முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம்

சர்வதேசரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர்
தினம், மகளிர் தினம், தொழிளாலர்கள் தினம் என்று
மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே
முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதன் முதலில் பிரான்சில் ஏப்ரல் ஃபூல் தினம்

பிரான்சில் முதன் முதலில் இத்தினம் கொண்டாடப்பட்டது.
16ம் நுாற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில்
ஏப். 1 தான், புத்தாண்டு தினமாக கடைபிடிக்கப்பட்டது.

அப்போதைய ஜூலியன் காலண்டரிலும் இவ்வாறு தான் இருந்தது.
பின், 13ம் கிரிகோரி என்ற போப் ஆண்டவர், 1582 பிப்., 29ல்,
புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார்.

இதில் ஜன. 1, புத்தாண்டாக மாற்றப்பட்டது. இதனை ஜெர்மனி
உள்ளிட்ட பல நாடுகள் உடனடியாக ஏற்கவில்லை. ஸ்பெயின்,
போர்ச்சுக்கல், இத்தாலி போன்றவை இந்த காலண்டரை
1582 அக்., முதல் பயன்படுத்த துவங்கின.

1752ல் இங்கிலாந்து, அமெரிக்காவிலும் மற்றும் ஆங்கிலேயர்
ஆட்சியின் போது இந்தியாவிலும் இக்காலண்டர் புழக்கத்திற்கு
வந்தது. புதிய காலண்டரை ஏற்காத நாடுகளை, கிண்டல்
செய்வதற்காக, ‘முட்டாள்கள் தினம்’ என அழைத்தனர்.

கட்டுக் கதைகள்

பின் நாளடைவில் அனைத்து நாடுகளும் இத்தினத்தை
முட்டாள்கள் தினமாக கொண்டாடின. கட்டுக் கதைகள் கடந்த
1508ம் ஆண்டு முதலே பிரான்சில் முட்டாள்கள் தினம்
கொண்டாடப்பட்டு வந்ததாகவும், 1539ல் டச்சு மொழியில்
இத்தினம் பற்றி குறிப்பிடப்பட்டு இருந்ததென்றும், சில
குறிப்புகள் தெரிவிக்கின்றன.

1466ம் ஆண்டு, பிலிப்பைன்சை சேர்ந்த மன்னனை, அவரது
அவைக் கவிஞர் முட்டாளாக்கிய தினம் இது என்றும் ஒரு
கருத்து உண்டு.

ஏப்ரல் முதல் நாளை முட்டாள் தினமாகக் கொண்டாடுவது
மட்டும் இன்னும் மறையவில்லை.

————————————-
தினத்தந்தி

 

 

 

« Older entries