பொது அறிவு வினாவிடைகள் – 1

1) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ? டி பி ராய்.
2) உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
ஜான் சுல்லிவன்.

3) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
தமிழ்நாடு.
4) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
சென்னை.
5) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
வித்யா சாகர்.
6) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
7) மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
8) இந்திய புரட்ச்யின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
மாடம் பிகாஜி காமா.
9) கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
10) தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ?
மகாத்மா காந்தி.

சிறையில் செத்துமடி…

unnamed (18)1.jpg

இத்தனை கோயில்கள் எதற்கு..

unnamed (13).jpg

இயற்கை..

unnamed (23).jpg

unnamed (22).jpgunnamed (4).jpg

unnamed (5).jpg

ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!

இந்திய இதழியல் வரலாற்றிலும், தமிழக அரசியல்
வரலாற்றிலும் பண்டிதர் அயோத்தி தாசரின் ‘தமிழன்’
இதழுக்குத் தனித்த இடமுண்டு.

இம்மண்ணுக்குப் பூர்வீக பவுத்தத்தையும், இம்மக்களுக்கு
‘தமிழன்’ எனும் அடையாளத்தையும், சாதிபேதமற்ற
திராவிட அரசியல் கோட்பாட்டைக் கொடுத்ததில் ‘தமிழன்’
இதழுக்கு முக்கியப் பங்குண்டு.

சென்னை ராயப்பேட்டையில் 19.6.1907 அன்று
‘ஒரு பைசாத் தமிழன்’ எனும் வார இதழைத் தொடங்கினார்
அயோத்தி தாசர். டேப்லாய்டு அளவில் 4 பக்கங்களில் அச்சான
இவ்விதழ், அன்றைக்குக் காலணாவுக்கு விற்கப்பட்டது.

‘ஒடுக்கப்பட்டோரை ஒரு பைசாவுக்குப் பெறாதவர் என
இளக்காரமாகப் பேசுவோர், ஒரு பைசாத் தமிழனை முழுமையாக
அறிந்தால், ஒரு கோடி பொன் என்று பேசுவார்’ எனத் தன்
இதழுக்குப் பெயர்க் காரணம் கொடுத்தார் அயோத்தி தாசர்.

ஓராண்டுக்குப் பின் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க,
இதழின் பெயரில் இருந்த ‘ஒரு பைசா’ நீக்கப்பட்டு, ‘தமிழன்’
ஆனது. இதழ் அச்சடிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், கோலார்
தங்கவயல் வாசகர்கள் அயோத்தி தாசருக்குப் புதியதாக அச்சு
இயந்திரம் வாங்கிக்கொடுத்தனர்.

இதையடுத்து, சொந்தமாக ‘கவுதம சித்தார்த்தா’ அச்சகத்தை
நிறுவி, ‘தமிழ’னை இறுதிவரை புதன்கிழமை தவறாமல்
வெளியிட்டார்.

பவுத்தத்தின் குறியீடான தாமரையை முகப்பாகக் கொண்ட
‘தமிழன்’ இதழில் நவீன அரசியல், ஆய்வுக் கட்டுரை, பகுத்தறிவு,
சாதி ஒழிப்பு, பிராமணிய ஆதிக்க எதிர்ப்பு, வகுப்புவாரிப் பிரதி
நிதித்துவம், முற்போக்கு, பவுத்தம் போன்றவை குறித்த தீவிர
கருத்துகள் இடம்பெற்றன.

இலக்கியம், அறிவியல், மருத்துவம், விவசாயம், வானியல் அறிக்கை,
வாசகர் கேள்வி – பதில் உள்ளிட்டவையும் மூன்று பத்திகளில்
நெருக்கமான எழுத்தில், நேர்த்தியான வடிவமைப்புடன் பிரசுரமாகின.

சமகால அரசியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிய அயோத்தி தாசர்,
‘புத்தரது ஆதி வேதம், இந்திர தேச சரித்திரம், திருவள்ளுவர் சரித்திரம்’
உள்ளிட்ட தொடர்களையும் மரபான ஆய்வு முறையோடு
‘தமிழ’னில் எழுதினார்.

இதில் ஏ.பி.பெரியசாமிப் புலவர், தங்கவயல் ஜி.அப்பாதுரையார்
போன்ற தலித் பெரியார்களும், பேரா.லட்சுமி நரசு, எம்.சிங்காரவேலு
என பல தலித் அல்லாத அறிவுஜீவிகளும் தொடர்ந்து எழுதினர்.
இந்திய அளவில் ஒடுக்கப்பட்டோரிடம் இருந்து எழுந்த, முதல்
காத்திரமான உரிமைக் குரல் தமிழனுடையது.

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு கடந்தும் ‘தமிழ’னுக்கு வாசகர்கள்
பெருகினர். ‘தமிழன்’ மூலமாகவே அவர் அனைத்து பவுத்த
சங்கங்களையும் ஒருங்கிணைத்து பவுத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்.
ஒருவேளை ‘தமிழன்’ ஆங்கிலத்தில் முழங்கியிருந்தால்,
தேசிய அளவில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்!

5.5.1914 அன்று அயோத்தி தாசர் மரணிக்கும் தறுவாயில் தன் மகன்
பட்டாபிராமனை அழைத்து, ‘தமிழன்’ இதழைத் தொடர்ந்து
நடத்துமாறு பணித்தார். பட்டாபிராமனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த
‘தமிழன்’ மாதமிரு முறையாக மாறி, இடையில் நின்றது.

பின்னர், கோலார் தங்கவயலுக்கு இடம்பெயர்ந்த ‘தமிழன்’ இதழ்
ஜி.அப்பாத்துரையார், இ.என்.அய்யாக்கண்ணு புலவர், பி.எம்.ராஜரத்தினம்
ஆகியோரை ஆசிரியர் களாகக் கொண்டு சிறுசிறு இடை வேளைக்கு
நடுவே வெளிவந்தது. 1933-ல் ‘தமிழன்’ முற்றிலுமாக நின்றுபோனது.

நூற்றாண்டை நெருங்கும் தறுவாயில் மீண்டும் கண்டெடுக்கப்பட்ட
‘தமிழன்’ தற்போது தொகுப்புகளாகப் புத்துயிர் பெற்றுள்ளது.
எந்தெந்த நோக்கங்களுக்காக அயோத்தி தாசர் ‘தமிழன்’ இதழைத்
தொடங்கினாரோ, அந்தந்த நோக்கங்களை அடைய இன்றும் வழி
காட்டுகிறது!

(ஜூன்.19-ல் ‘தமிழன்’ இதழ் தொடங்கப்பட்டு 110 ஆண்டுகள் ஆ
கின்றன.)

————————-

– இரா.வினோத், தி இந்து

இளவயதிலேயே பூப்படைவது ஏன்…?

unnamed (4).jpg

காரணம் ஆயிரம்: மரம் வளர்க்கும் அதிசயப் பறவை!

சேகரித்த விதையைச் சாப்பிடுகிறது

சேகரித்த விதையைச் சாப்பிடுகிறது

படித்த ஒரு விஷயத்தை, பார்த்த ஒரு புதிய இடத்தை உங்களால் எத்தனை நாட்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியும்? எபிங்காஸ் என்ற ஓர் உளவியல் அறிஞர் இது பற்றி ஒரு சோதனையை நடத்தினார். இந்தச் சோதனைப்படி படித்து முடித்தபின் முதல் ஒரு மணி நேரத்தில் படித்ததில் பாதி மறந்து போய்விடுகிறது, ஒரு வாரத்தில் படித்ததில் ஐந்தில் நான்கு பங்கு மறந்து போய்விடுகிறது, ஒரு மாதத்துக்குப் பிறகு முழுவதுமாக மறந்து போய்விடுகிறது என்று கூறினார். ஆனால், ஒரு பறவை தான் சேகரித்த ஆயிரக்கணக்கான விதைகள் எங்கெல்லாம் பாதுகாப்பாக இருக்கின்றன என்று ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறது. அந்தப் பறவையின் பெயர் ‘கிளார்க் நட்கிரேக்கர்’ (Clark’s Nutcracker).

வட அமெரிக்காவின் மேற்குப் பகுதி மலைச் சரிவுகளிலும், மெக்சிகோ நாட்டின் சில பகுதிகளிலும் வாழக்கூடிய பறவை இது. கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான பகுதிகளில் கிளைகளில் கூடு கட்டி வாழும் பறவை. வில்லியம் கிளார்க் என்ற பறவை ஆராய்ச்சியாளரின் பெயரில் இதனை ‘கிளார்க் நட்கிரேக்கர்’ என்று அழைக்கிறார்கள். சில நாடுகளில் கிளார்க் காகம் என்றும், கிளார்க் மரங்கொத்தி என்றும் அழைக்கிறார்கள்.

பொதுவாக 3 ஆயிரம் அடி உயரத்திலிருந்து 12 ஆயிரம் அடி உயரம் வரை ஊசியிலைக் காடுகளில் வசதியாக இருப்பிடத்தை ஏற்படுத்திக்கொண்டு சிறகடிக்கும் பறவை இது. இதன் வாழ்க்கையில் நடப்பதெல்லாம் அதிசயமும் ஆச்சரியங்களும்தான். இனப்பெருக்கக் காலம் தவிர மற்றக் காலங்களில் நட்கிரேக்கர் இரை தேடித் தாழ்வான பகுதிகளை நோக்கிப் பறந்துகொண்டேயிருக்கும். இதற்காக நீண்ட தூரப் பயணம் செய்யும் இது, மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணம் வரையிலும்கூட கீழிறங்கிப் பறந்து வரும்.

பைன் மரத்திலிருந்து கிடைக்கும் விதைகள்தான் இப்பறவையின் முக்கிய உணவு.இதைச் சேகரிப்பதில் இப்பறவை அழகிய அசாத்தியமான முறையைக் கையாள்கிறது. கோடைக் காலம் தொடங்கியவுடன் இரை தேடிப் புறப்படும் நட்கிரேக்கர், பைன் மரத்தின் பழங்களைத் தன் அலகால் சிதைத்தும், உடைத்தும் அதன் விதைகளைச் சேகரித்துக்கொள்கிறது. ஏதோ கொஞ்சம் விதைகளை மட்டும் சேகரித்துக்கொள்ளும் என்று நினைக்காதீர்கள்.


பைன் மரத்திலிருந்து விதை சேகரிப்பு

குளிர் காலம் முழுமைக்கும் தேவையான விதைகளைச் சேகரித்துக்கொண்டு போய், தன் வசிப்பிடத்தின் அருகே சேமித்து வைக்கும். ஓரிடத்தில் 1 முதல் 15 விதைகள் வீதம் கிட்டத்தட்ட 30 ஆயிரம் இடங்களில் ஒரு லட்சம் வரையிலான விதைகளைச் சேமித்து வைத்துவிடும். பைன் மரங்களிலிருந்து விதைகளைப் பிரித்துத் தன் வாயாலேயே, தன் இருப்பிடத்துக்குச் சுமந்து செல்கிறது. இதற்காக இதன் வாயில், நாக்கின் கீழே ஒரு ‘பை’ போன்ற அமைப்பு உள்ளது. இந்தப் பையில் விதைகளின் அளவை பொருத்து 50 முதல் 150 விதைகளைச் சேகரித்துக்கொண்டு பறக்கும். அதைக் கொண்டு போய்த் தன் இருப்பிடம் அருகே பூமிக்கடியில் குழிகளில் பதுக்கி வைக்கும்.

இவ்வளவு விதைகளையா இப்பறவை சாப்பிடும்?

ஆமாம், குளிர்காலம் முழுக்க உட்கார்ந்து ஆற அமர சாப்பிட இவ்வளவு விதைகளைச் சேகரித்து வைத்துக்கொள்கிறது. ஒரு லட்சம் விதைகள் என்பது தேவைக்கு அதிகமான விதைகள்தான். ஆனால், இவ்வளவு விதைகளைச் சேமித்து வைப்பதற்குச் சில காரணங்களும் உள்ளன. பைன் மர விதைகளை விட்டுவிட்டால் வேறு மாற்று உணவுக்கு வழியில்லை. சில சமயங்களில் சிறு பூச்சிகளையும், பழங்களையும் உணவாக உட்கொள்கிறது என்றாலும் பைன் விதைகள் போன்று அவை தாராளமாகக் கிடைப்பதில்லை.

நட்கிரேக்கர் பறவை சேமித்து வைக்கும் விதைகளை மற்ற சில உயிரினங்களும் சாப்பிட்டுவிடும். அதனால் கொஞ்சம் கூடுதலாக விதைகளைச் சேமித்து வைப்பதாகப் பறவை ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இவை குளிர்காலத்தில் சாப்பிட்டது போக மீதியிருக்கும் விதைகள் பூமிக்கு உள்ளேயே புதைந்து கிடக்கும். நல்ல ஈரப்பதமும் வெப்பமும் இருக்குமிடங்களில் இவை முளைத்துப் பெரிய மரங்களாகவும் வளர்ந்துவிடுகின்றன.

அதெல்லாம் சரி, இப்படி எங்கெங்கோ சேகரித்து வைக்கும் விதைகளை இப்பறவை எப்படித் திரும்பவும் கண்டுபிடிக்கிறது?

விதைகளைச் சேகரிப்பதும், சேமிப்பதும்தான் இப்பறவையின் வாழ்க்கை. ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்வதில் அதன் பயணமும் பாதையும் நன்றாகப் பழகி விடுகிறது. அதனால்தான் 9 மாதங்களுக்குப் பிறகுகூட, மூன்று அடி ஆழத்தில் பனியால் மூடி கிடக்கும் விதைகளை இந்த நட்கிரேக்கர் பறவையால் சுலபமாகக் கண்டுபிடிக்க முடிகிறது. தன் குஞ்சுகளுக்கு முதல் வேலையாக விதை சேகரிக்கும் கலையைத்தான் தாய்ப் பறவை கற்றுத் தருகிறது.

அதோடு நட்கிரேக்கர் பறவை இயற்கைக்கு மிகப் பெரிய தொண்டையும் செய்கிறது. தீயினாலும், இயற்கைச் சீற்றத்தாலும் அழியும் பைன் மரங்களைப் பாதுகாப்பவை நட்கிரேக்கர் பறவைகள் தான். இவை புதைத்து வைக்கிற விதைகள் முளைத்துத்தான் பைன் மரம் மீண்டும், மீண்டும் முளைத்து வளர்கிறது. பைன் மரம் இல்லையென்றால் நட்கிரேக்கர் இல்லை. நட்கிரேக்கர் இல்லையென்றால் பைன் மரம் இல்லை.

-ஞாபக சக்திமிக்க நட்கிரேக்கர் பறவையை இனிமேல் நம்மால் மறக்க முடியுமா ?

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

நன்றி-
ஆதலையூர் சூரியகுமார்
தி இந்து

 

 

மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்…

unnamed (24).jpg

புத்திசாலிக் குருட்டுத்தனம் நல்லது…!

unnamed (1).jpg

குச்சி ஐஸ் வேணுமா…

கும்பகோணத்திலுள்ள, செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளியில்,
எட்டாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு…

வகுப்பில் நாங்கள் எதாவது தப்பு செய்துவிட்டால், எங்கள்
வகுப்பாசிரியை, வித்தியாசமாக தண்டனை தருவார்.

அதாவது, ‘நிமிட்டாம் பழம் வேண்டுமா, குச்சி ஐஸ் வேண்டுமா’
என கேட்பார். நிமிட்டாம் பழம் என்றால், நறுக்கென்று
கன்னத்தில் கிள்ளுவார். குச்சி ஐஸ் என்றால், பிரம்பால், அடி
நொறுக்கி விடுவார்.

ஆரம்பத்தில், இவற்றை வாங்கி தடுமாறினாலும், போக போக,
சுதாரித்து, தப்பித்து விடுவோம்.

அன்று வகுப்பில், புதிதாக ஒரு மாணவி சேர்ந்தாள்.

முதல் நாளே வகுப்புக்கு தாமதமாக வந்ததால், ஆசிரியை
கடுப்பாகி, ‘ஏய்… உனக்கு குச்சி ஐஸ் வேண்டுமா… நிமிட்டாம் பழம்
வேண்டுமா… ‘டக்’குன்னு சொல்லு…’ என்றார்.

அவளோ, ‘டீச்சர்… எங்க அப்பா, ஐஸ் தொழிற்சாலை
வெச்சிருக்காங்க… அம்மா, பழமண்டி வெச்சிருக்காங்க…
உங்களுக்கு வேணும்னா எடுத்துட்டு வரவா…’ என்று வெகுளியாக
கூறினாள்.

நாங்கள் அனைவரும் சிரித்துவிட்டோம். அவளோ, ஒன்றும்
புரியாமல் எங்களை பார்த்தாள். ஆசிரியருக்கும் சிரிப்பு வந்து
, ‘சரி போ! வேண்டுமெனில், சொல்லி அனுப்புகிறேன்’ என
கூறினார். பின், மெதுவாக அவளிடம், விஷயத்தை கூறி
, ‘ஏய், நீ ஆசிரியருக்கே பாடம் எடுத்து புரிய வைத்து விட்டாயே’ எ
ன கிண்டலடித்தோம்.

அதன்பின், அப்படி கூறுவதையே நிறுத்திவிட்டார் ஆசிரியை.

—————————-
– செ.சுதா, சென்னை.
சிறுவர் மலர்

« Older entries