11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…!

இன்றைய தமிழ் கவிதைகளின் முன்னோடி, விடுதலை போராட்ட வீரர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட மகாகவி 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் நாள் சின்னசாமி, இலக்குமி அம்மாள் என்பாருக்கு தூத்துக்குடியில் உள்ள எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார்.

சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887ம் ஆண்டுத் தன் தாயின் மறைவுக்குப் பின் தன் பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தார். தனது 11வது வயதிலேயே கல்வியுடன் கவிபுனையும் ஆற்றலையும் வெளிப்படுத்தினார் சுப்பிரமணியர். 1897ம் ஆண்டு செல்லம்மாள் என்பவரை மணந்தார்.

இவரது கவியாற்றலைப் பாராட்டி எட்டயபுரம் மன்னர் இவருக்கு பாரதியார் என்று பட்டமளித்தார்.
ஆரம்ப காலத்தில் வறுமையில் வாழ்ந்த இவர், எட்டயபுரம் மன்னருக்கு கடிதமெழுதி உதவி செய்ய கேட்டுக் கொண்டார். இதற்கினங்க இவர் எட்டயபுரம் அரண்மனையில் பணியில் அமர்த்தப்பட்டார்.

இடையில் பணியை விடுத்து காசி சென்ற பாரதியை எட்டயபுரம் மன்னர் திரும்ப அழைத்து பணியில் அமர்த்தினார். பாரதியார், இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.

இவர் தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார்.

இதன் பின் செப்டம்பர் 11, 1921ல் பாரதியார் மரணமடைந்தார். தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும் கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

நெட் இல் இருந்து தொகுத்தது புன்னகை

–கிருஷ்ணம்மா – ஈகரை களஞ்சியம்

தமிழ் இனிமை

ஒருமுறை சென்னை கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டத்தில்
இரண்டு மணி நேரம் அண்ணல் காந்தியடிகள் பேசினார்.
அவரைக் கண்டித்து பாரதியார் ஒரு கடிதம் எழுதினார்.

“Mr. Gandhi’ என்று அந்தக் கடிதத்தைத் தொடங்கி,
“நேற்று சென்னை கடற்கரை கூட்டத்தில் நன்றாகப் பேசினீர்கள்.
ஆனால் உங்கள் தாய்மொழியில் பேசியிருக்கலாம். அதை
விடுத்து ஆங்கிலேயர்களை விரட்ட வேண்டும் என்ற எண்ணம்
கொண்ட தாங்கள் ஆங்கிலத்தில் பேசியது மன வருத்தமாக
உள்ளது.’ என்று கடிதத்தை முடித்திருந்தார்.

அதற்கு காந்தியடிகளின் பதில்…

“வணக்கம். உங்கள் கடிதத்தைப் பார்த்து சிந்தித்துப் பார்த்தேன்.
ஆங்கிலேயரை எதிர்க்கும் நான் ஆங்கிலத்தில் பேசியது தவறுதான்
என்பதை ஒப்புக்கொள்கிறேன். மன்னிப்புக் கேட்கவும் தயார்.
ஆனால் நீங்கள் என்னைக் கண்டித்து எழுதியுள்ள கடிதத்தை
ஆங்கிலத்தில் எழுதியிருப்பது வியப்பாக உள்ளது’ என்று கடிதம்
எழுதினார்.

“நான் யாரையும் கண்டித்துக் கேட்கும்போது எழுதுகின்ற
கடினமான வார்த்தைகளை தமிழில் எழுத விரும்பவில்லை.
அதனால்தான் ஆங்கிலத்தில் எழுதினேன்’ என்று
மகாத்மா காந்திக்கு பதில் கடிதம் எழுதியிருந்தார் பாரதியார்.

==================================
நன்றி: ஞாயிறு கொண்டாட்டம் – தினமணி

வினா-விடை ! -பாரதியார்

இன்றைய பத்திரிக்கைகளின் வினா-விடைப் பகுதிகளுக்கு முன்னோடி, இலக்கிய உலகில் பல புதுமைகளுக்கு வித்திட்ட மகாகவி பாரதி என்றுதான் சொல்லவேண்டும். தன்னுடைய பத்திரிக்கையிலே, கட்டுரைகளின் மூலம் பலரின் வினாக்களுக்கு விடையளித்து வந்திருக்கிறார் பாரதி.

எடுத்துக்காட்டாக, ஒரு கேள்வியும் அதற்கு பாரதி அளித்த பதிலும்: ‘எல்லா சான்றோர்களும் சினத்தை கைவிடச் சொன்னால், நீங்கள் ‘ரெளத்திரம் பழகு’ என்று எழுதியிருக்கிறீர்களே ஸ்வாமி?’ இது கேள்வி.

பாரதி தன் பதிலை ஒரு கதை மூலம் தருகிறார்.  ஒரு ஊரில் ஒரு பாம்பு எல்லோரையும் கடித்துத் துன்புறுத்தி வந்தது. ஊரார் அந்தப் பாம்பிற்கு பால், முட்டை என்று தாரளமாகத் தந்து, அதை யாரையும் கடிக்காமல் இருக்கும்படி வேண்டி, விண்ணப்பித்தினர்.   இருந்தும், தொடர்ந்து பாம்பு தொல்லை தந்து வந்தது. அப்போது, அந்த ஊருக்கு ஒரு மகரிஷி வந்தார். ஊராரின் வேண்டுதலுக்கிணங்க அவர் பாம்பிடம், ‘யாரையும் இனிமேல் கடிக்கக்கூடாது, கடித்தால் நீ இறந்துவிடுவாய்!’ என்று கட்டளையிட்டுவிட்டு, வேறோர் ஊருக்குச் சென்றுவிட்டார்.   ஒரு வாரம் கழித்து, அந்த மகரிஷி அதே ஊருக்குத் திரும்பி வந்தபோது, அதே பாம்பு வாடி, வதங்கி, சோம்பிக் கிடந்தது. மகரிஷியைக் கண்டதும், ‘ஸ்வாமி, முன்பெல்லாம் நான் நன்றாய் இருந்தேன். கடிக்கக் கூடாதென்று கட்டளையிட்டீர்கள். இப்போதெல்லாம் ஒருவரும் என்னைக் கண்டுகொள்வதில்லை. பாலில்லை, முட்டையில்லை. என் அவல நிலையைப் பார்த்தீர்களா?’ என்று புலம்பியது.  மகரிஷி சொன்னார்: ‘நான் உன்னை மனிதர்களைக் கடித்து, அவர்களைப் பிணமாக்க வேண்டாமென்றுதான் சொன்னேன். அவர்களைப் பார்த்து சீற வேண்டாமென்று சொன்னேனா? நீ கடிப்பதுபோல் அச்சுறுத்தி, சீறியிருக்க வேண்டியதுதானே? அப்படிச் செய்திருந்தால், உனக்கும் கொண்டாட்டம். உயிர்களும் பிழைக்கும்.’

“அதுபோல், நான் ‘ரெளத்திரப்படு’ என்று சொல்லவில்லை. ‘ரெளத்திரம் பழகு’ என்றுதான் சொன்னேன். சிறுமைகளைக் கண்டு சீறச் சொன்னேன். ரோஷத்துடன் இரு என்றேன். இதில், என்ன தவறு?” என்று பாரதி ஒரு counter-question கேட்டு முடித்திருக்கிறார்.

**********************

நன்றி; http://www.ilakkyavattam.com/talks-05

நின்னையே ரதியென்று. . .

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் ஆ ஆ ஆ ஆ..

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்.

தத்தத்தோம் தரிகிடதோம் தளாங்குதோம்.
தகதிமிதோம் தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தோம் தத்தத்
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தோம் தத்தத்.

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்… ஆஆ…

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்… ஆஆ…

பொன்னையே நிகர்த்த மேனி, மின்னையே நிகர்த்த சாயல்
பொன்னையே நிகர்த்த மேனி, மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே.. கண்ணம்மா
பின்னையே நித்ய கன்னியே..

மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீசடி
மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீசடி

கண்பாரயோ.. வந்து சேராயோ.. கண்ணம்மா.

யாவுமே சுக முனிபோல் ஈசனாம் எனக்கும் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா,

கண்ணம்மா கண்ணம்மா

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்.

**********************************

பாடல் வரிகள் : பாரதியார்
இசை : இளையராஜா

http://ganakandharvan.blogspot.com/2008/07/blog-post_22.html

நின்னையே ரதியென்று

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடிகண்ணம்மா
தன்னையே சசியென்று சரணம் எய்தினேன்
(
நின்னையே)

பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே
கண்ணம்மா

மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீசநீ
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
(
நின்னையே)

வரிகள்: சுப்ரமணிய பாரதியார்
படம்: கண்ணே கனியமுதே

காற்று வெளியிடைக் கண்ணம்மா

காற்று வெளியிடைக் கண்ணம்மாநின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் -அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும்நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும்பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும்இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்எனை
வேற்று நினைவின்றித் தேற்றியேஇங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
(
காற்று)

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன்துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலேஎன்றன்

வாயினிலே அமு தூறுதேகண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா ம்ம்ம்
கண்ணம்மா ம்ம்ம்கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலேஉயிர்த்
தீயினிலே வளர் சோதியேஎன்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக்
(
காற்று)

படம்: கப்பலோட்டிய தமிழன்
வரிகள்: பாரதியார்

 

காதல்

மகாகவி பாரதியார் காதலைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.
காதலினாலுயிர் வாழும் – இங்கு
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவுண்டாகும் – இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்
ஆதலினால் அவள் கையைப் – பற்றி
அற்புதம் என்றிரு கண்ணிடை ஒற்றி
வேதனை இன்றி இருந்தேன்……..


(காதற்பாட்டு, அந்திப்பொழுது –
பாரதியார் பாடல்கள்
)