குட்டிக்கதை சொன்னது தப்பா போச்சு…!

‘‘அண்ணே.. தலைவர் உங்களை எதுக்காக
கட்சியை விட்டு நீக்கினார்?’’

‘‘மேடையில அவர் சொல்லலாம்னு நினைச்சிருந்த
குட்டிக்கதையை தெரியாத்தனமா நான் ஒரு
மேடையில சொல்லிட்டேன்!’’

——————————————

‘‘தலைவரே! மேடையில இனிமே கதையெல்லாம்
சொல்லாதீங்க…’’

‘‘ஏன்யா..?’’

‘‘இங்க பாருங்க… போஸ்டர்ல ‘சிறப்புரை’னு போடாம,
‘சிறப்புக் கதை’ன்னு உங்க பேரை போட்டிருக்காங்க!’’

——————————————-

‘‘தலைவரே! கதை தன்னோடதுன்னு ஒருத்தர் உங்க
மேல கேஸ் போட்டிருக்கார்…’’

‘‘நான் சினிமா எதுவும் எடுக்கலையே… பின்னே எப்படி?’’

‘‘மேடையில நீங்க சொன்ன கதையாம் தலைவரே!’’

——————————————-

‘‘என்னது… இதுதான் உங்க கட்சியோட கு.க. அலுவலகமா?’’

‘‘ஆமா… தலைவருக்கு ‘குட்டிக் கதைகள்’ தயாரிச்சுக்
கொடுக்கற அலுவலகம்!’’

—————————————–
– கோவி.கோவன்,
குங்குமம்

கனிந்த தேசபக்தி

Swami Rama Tirtha.jpg


சுவாமி ராமதீர்த்தர் ஜப்பானுக்குச் சென்றிருந்தார்.
அங்கு ஒருநாள் நீண்ட தூரம் ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தது.
ஒரு நிலையத்தில் ரயில் நின்றது. அங்கே பழம் வாங்க
முயற்சித்தார். பழம் கிடைக்கவில்லை. அடுத்த நிலையத்திலும்
இதுபோலவே ஆயிற்று. எனவே அவர் ஜப்பானில் பழமே
கிடைக்காது என்று சொல்லிக் கொண்டார்.

அவர் குரலைக் கேட்ட ஒரு ஜப்பானிய இளைஞன் அமைதியாக
ரயிலிலிருந்து இறங்கி ஒரே ஓட்டமாக ஓடி எங்கோ போய் ஒரு
கூடையில் பழங்களை நிரப்பிக் கொண்டு வந்து சுவாமியிடம்
கொடுத்தான்.

ஒரு கணம் சுவாமி வியப்பால் சிலையானார். அந்த இளைஞனையே
பார்த்தபடி நின்றார். பணம் கொடுப்பதற்காகப் பழத்தின்
விலையைக் கேட்டார். இளஞ்சிரிப்புடன் இளைஞன் கூறினான்,
“விலையா? உங்கள் நாட்டுக்குப் போய் ஜப்பானில் பழமே கிடைக்காது
என்று சொல்லாமலிருந்தால் போதும்; அதுவே விலை!” என்றான்.

அந்த இளைஞனின் தேச பக்தியைக் கண்டு சுவாமி ராமதீர்த்தர்
பிரமித்துவிட்டார்.

——————————————–
தினமணி – (கொண்டாட்டம் -பகுதியிலிருந்து)

நாட்டு நடப்பு!

நவம்பர் 25,2009,00:00   IST
Hilarious political cartoon images
நன்றி; தினமலர்

சாக்ரடீஸ்

”The unexamined life is not worth living” – Socrates (470-399 BCE)

பெரிய பெரிய கடைகள் ,நகைகடை ,துணிகடை , டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ,வித விதமான பொருட்கள் நிரம்பிய கடைகள் பார்க்கும் போது ‘ அடடா கையில் காசு இல்லையே . இந்த பொருளை எப்ப வாங்க போறோம் , பாப்போம் போனஸ் வந்தால் ..’இப்படி பலருக்கு மனசு கிடந்தது அடித்துகொள்ளும் !

Sophie’s worldஎன்று ஒரு நாவல் . அதில் ஒரு காட்சி

சாக்ரடீஸ் அப்படி ஒரு கடை முன் நிற்கிறார் .புராதன காலத்து டிபார்ட்மெண்டல் ஸ்டோர் முன் : ஒரு பார்வை பார்க்கிறார் .முடிவாக சொல்கிறார் .

“What a lot of things I don’t need!”

……

இடாலோ கால்வினோ தன் Why read the Classics? கட்டுரையில் ஒரு சம்பவம் பற்றி குறிப்பிடுகிறார் .

ஹெம்லாக் தயாராகிகொண்டிருக்கிறது .

சாக்ரடீஸ் விஷம் குடிப்பதற்கு முன் புல்லாங்குழல் வாசித்து ஒரு மெட்டு கற்றுகொண்டிருந்தாராம் .

‘இதனால் உமக்கு என்ன பிரயோஜனம் ?’ -கேட்கிறார்கள்

“நான் சாகும்போது அதற்கு முன் புதிதாய் ஒரு புதிய மெட்டு அறிந்து கொண்டு விடுவது சந்தோசம் தானே

————————–

நன்றி

http://rprajanayahem.blogspot.com/2008/11/blog-post_9863.html

photo: from net

கோபத்தை எப்படி அடக்குவது?

கோபத்தை எப்படி அடக்குவது?

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் இரயில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.

அவர் ஏறியிருந்த பெட்டியில் இரண்டு ஆங்கிலேயரும் ஏறியிருந்தனர்.

இரண்டு பேரும் விவேகானந்தரை வெறுப்போடு பார்த்தார்கள். இந்தியர்கள் என்றாலே அவர்களுக்கு இளக்காரம், ஏளனம்தான். அதுவும் துறவி என்றால் கேட்கவா வேண்டும். விவேகானந்தருக்கு ஆங்கிலம் தெரியாது என நினைத்து அவரைக்குறித்து அவர் காதுபடவே இழிவாகப் பேசினர்.

விவேகானந்தர் ஒரு வார்த்தையும் பதில் பேசவில்லை. சண்டையிடவில்லை. மௌனமாக அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தார்.

அடுத்த ஸ்டேஷனில் வண்டி நின்றது. விவேகானந்தர் ஸ்டேஷன் மாஸ்டரை அருகில் அழைத்து “குடிப்பதற்கு நல்ல நீர் கிடைக்குமா? என்ற ஆங்கிலத்தில் அழகாகக் கேட்டார்.

அவர் ஆங்கிலம் பேசியதைக் கேட்ட, இரண்டு ஆங்கிலேயர்களும் திடுக்கிட்டனர்.

“உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?” ஒருவர் வேகமாக விவேகானந்தரிடம் கேட்டார்.

“நன்கு எழுதவும் பேசவும் தெரியம்” ஆங்கிலத்திலேயே பதில் கூறினார் விவேகானந்தர்.

“அப்படியானால் நாங்கள் கடந்த அரைமணி நேரமாக உங்களைத் திட்டிக் கொண்டிருந்தோமே.. நீங்கள் ஏன் எங்களோடு சண்டையிடவில்லை?” என்றனர்.

அதற்கு விவேகானந்தர் பொறுமையாக விடை கூறினார். “நான் முட்டாள்களைச் சந்திப்பது இது முதல்முறையல்ல”

புத்திசாலித்தனமான பேச்சு சுவையாக இருக்கும்.

***************************************

கனவில் தோன்றும் காட்சிகள் புகைப்படங்களாக…

கனவில் தோன்றிய காட்சிகளை புகைப்படமாக பதிவுசெய்யும் தொழில்நுட்பம் – ஜப்பானிய விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு

https://i0.wp.com/www.virakesari.lk/news/admin/images/think-200.jpg

ஒருவர் உறக்கத்தில் காணும் கனவுகளை விழித்தெழுந்ததும் புகைப்படங்களாக கண்டுகளிப்பதற்கு வழிவகை செய்யும் மென்பொருள் ஒன்றை ஜப்பானிய கயோடோ நகரிலுள்ள நரம்பு விஞ்ஞான கணிப்பு ஆய்வு கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மூளையின் சிந்தனைகளிலிருந்து பிரதி பிம்பங்களை உருவாக்கும் “மனதை வாசித்தல் தொழில்நுட்பம்’ உருவாக்கப்பட்டுள்ளமை உலகில் இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன் இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்க கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மனதை ஊடுகாட்டும் சாத்தியம் குறித்த எண்ணக்கருவை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்தப் புதிய மென்பொருளானது மூளையிலிருந்தான சமிக்ஞைகளைப் பெற்று, அவற்றைத் தனது நிகழ்ச்சித் திட்ட ஒழுங்கமைப்புக்கு ஏற்ப ஒப்பீடு செய்து புகைப்படமாக மாற்றும் வல்லமை கொண்டதாகும்.

எனினும், தற்போது கறுப்புவெள்ளை புகைப்பட பிரதிமையாக காட்சிப்படுத்தப்படும் இந்தப் புகைப்படங்கள் தொடர்பான துல்லியத் தன்மையை மேம்படுத்த, மேலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
*********

Thanks:mrishan.blogspot.com

Watermiilion Art

 

 

 

 


Thanks
smilejokes.blogspot.com

Dubai by night

சக்தியைச்சேமிப்போம்

டிசம்பர் 14  சக்தியைச் சேமிக்கும் நாள் energy conservation day
இந்த நாளை நாம் மிக முக்கியமான நாளாகக்கொண்டு நம்மால் முடியும் வரை
சக்தியைச் சேமிக்க வேண்டும் இந்த பூமியிலேயே நமக்குத் தேவையான சக்திகள்
அனைத்தும் உள்ளன. நீர்மின்சக்தி ,,அணுமின்சக்தி என அனைத்தையும்
உருவாக்கியது  மனித ஆற்றல் என்ற சக்திதான்.
இல்லத்தரசிகள்  கேஸ் அடுப்பை தேவைக்கு அதிகமாக உபயோகிக்காமல்
சேமிக்கலாம் .சிலர் தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டு டிவி கீழ் அமர்ந்து
விடுவார்கள், அது கொதித்து பாதி ஆனவுடன்  பின் வந்து அணைப்பார்கள். சிலர்
தோசை வார்க்கும்
தவாவை பெரிய அளவில் வைத்து அதில் சிறிய தோசை வார்ப்பார்கள் ,சின்ன தவா
வைத்தாலே தேவையான சூடு பரவும் ,
பர்னரின் அளவு இருந்தால் நன்றாக இந்தச் சக்தியைச் சேமிக்கலாம்,
சில ஆண்கள் ஷேவிங் செய்து கொள்ள  குழாயைத் திறந்து விட்டபடி
தொடருவார்கள் ,அத்துடன்  செல்லிலும் பேசுவார்கள்
தண்ணீர் போனபடி இருக்கும் ,,,,,,,இதே போல் பலதடவைகள் குழாய் திறந்து
விட்டபடி வந்து  பக்கெட் ரொம்பி வழிந்துக்கொண்டிருக்கும் போது ஞாபகம்
வந்து மூடுவார்கள்.

 சிலர் மேலே தண்ணீர்  ஏற மோட்டார் போட்டு விட்டு
பின் அந்த டேங்க் ரொம்பி வழிந்து கீழே கொட்ட, பின் முழித்துக்கொள்வார்கள்.
சில தெருவில் பகலிலும் விளக்கு எரியும் ,அதை அணைக்க மறந்து இருக்கலாம்
இதே போல் மனிதர்கள் இல்லாத  அறையிலும் சுழல் காற்றாடி
சுழன்றுக்கொண்டிருக்கும் ,கணினியோ கேட்கவே வேண்டாம் அதை சிலர் அணைப்பதே
இல்லை.

 

மைக்ரோஅவனில்  தேவையான
அளவுடன்  கண்ணாடி பாத்திரம் வைக்க நிறைய சக்தி சேமிக்கலாம் ,
வீட்டு வாசலில் மரங்கள் இருந்தால் நல்ல காற்று வருவதால்  மினசாரச் சக்தி
சேமிக்கலாம்.
தில்லியில் பஹுவாய் மந்திர்  கட்டியிருக்கும் விதம் மிக வியப்பைத்
தருகிறது. தாமரை மலர் போன்று  அமைப்பு  ஒரு இடத்திலும்
மின்சாரம் இல்லை  சுற்றி வாய்க்கால் போன்று நீரோடடம் ,,,,,
உள்ளே தியானம் செய்ய ஏற்ற இடம்  உள்ளே மிகவும்  சில்லென்று ஏசி
போட்டாற்போல் இருக்கிறது இது நல்ல வெயில்
காலத்திலும் தான் ,,,,,,,,,,எங்கும் பச்சைப்பசேர் என்ற புல் வெளி

இந்தச் சக்தியைச் சேமிக்கும் போது நம்மிடம் இருக்கும் சக்தியையும்
சேமிக்கலாமே  படபடவென்று பேசி சக்தியை இழக்கிறோம்  கோபத்தில் சக்தியை
இழக்கிறோம் ,காமத்தில் சக்தி
அதிகமாக போகிறது  ,அதிக மௌனமாக இருந்தால் அதில் சக்தி சேமிக்கப்பட்டு பல
நல்ல விஷயங்களுக்கு வழி உண்டாகிறது.

 
ஜே.வி செர்னே சொல்கிறார்
“ஆற்றல் சக்தியை நாம் பயன்படுத்தி வெற்றிபெற  வார்த்தைகள்
வாகனங்களாக உள்ளன . “செய்து முடிப்பேன்” என்ற வாகனத்தில்
ஏறிக்கொண்டால்  அடக்கமுடியாத ஆர்வத்துடன்  கூர்ந்து செயல்
வடிவில் ஒவ்வொரு நாளும் இலட்சியத்தை நோக்கிச் செல்லலாம்

 வானத்தைத் தொட்டுவிடலாம்  ”

சக்தியைச்சேமிப்போம் ,,,,,,,,,

அன்புடன் விசாலம்

–~–~———~–~—-~————~——-~–~—-~

நன்றி;
  “தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

Piravakam@googlegroups.com

 

 
படம்
ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய மிருகம் கங்காரு, அதை அந்நாட்டுக் காடுகளில் அதிகமாகக் காணலாம். சுமார் 120 வகையான கங்காருகள் இருக்கின்றன. மிகச் சிறியது முயல் அளவாகவும் மிகப் பெரியது இரண்டு மீட்டர் உயரமாகவும் இருக்கும். கங்காரு குட்டிப் போட்டுப் பால் கொடுக்கும். குட்டி பிறக்கும்போது மூன்று சென்டிமீட்டர் நீளமே இருக்கும் ! குட்டி பிறந்தவுடன் தன் தாயின் வயிற்றில் உள்ள பைக்குள் ஊர்ந்துசென்று தங்கிவிடும். அது அங்கு ஆறு மாத காலம் தாய்ப்பாலை உண்டு வளரும்.

படம்
வளர்ந்த குட்டி தாயின் வயிற்றுப் பையிலிருந்து தலையை மட்டும் நீட்டிப் பார்ப்பதைக் காண விந்தையாக இருக்கும். தாய் மேயும் போது குட்டியும் பையிலிருந்து தலையை நீட்டிப் புல்லைக் கடித்துத் தின்னும். ஒரு நாய்க்குட்டி அளவு வளர்ந்தபின் கங்காரு குட்டி , தாய்ப் பையை விட்டு இறங்கிவிடும்.

கங்காருவின் வால் மிகுந்த வலிமையுள்ளது. கங்காரு தன் பின்னங்கால்களையும் வாலையும் மடித்துவைத்து அவற்றின்மேல் முக்காலியில் அமர்வதுபோல் உட்கார்ந்துகொள்ளும். இது மிகவும் பயந்த இயல்புள்ள விலங்கு, ஆனால், பகை – விலங்குகள் தன்னைத் தாக்கும்போது அவற்றுடன் இது கடுமையாகப் போரிடும். இதோ அடுத்த பக்கத்தில் ஒரு தாய் கங்காருவின் தியாகத்தைப் படித்துப் பாருங்கள்.

உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டும் ஒரு காலத்தில் ஆஸ்திரேலிய நாட்டின் பல பகுதிகளில் பல மாதங்களாக மழை பெய்யவில்லை, கடும் வறட்சியினால் ஆஸ்திரேலியாவில் உள்ள எல்லா நீர்நிலைகளும் வற்றிவிட்டன. அதன் விளைவால் வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி நகரங்களை முற்றுகையிட ஆரம்பித்தன.
வறட்சியின் காரணமாக நகர் வாழ் மக்களுக்கும் அவர்கள் வீட்டு மிருகங்களுக்குமே போதிய தண்ணீர் வசதியில்லை. இந்நிலையில் வனவிலங்குகளிடமிருந்து இரவு வேளைகளில் தண்ணீர்த் தொட்டிகளைப் பாதுகாப்பது நகரவாசிகளுக்குப் பெரிய தலைவலியாகிவிட்டது. இரவு முழுவதும் ஒருவர் மாற்றி ஒருவர் துப்பாக்கியும் கையுமாகத் தண்ணீர்த் தொட்டிகளைப் பாதுகாத்து வந்தார்கள்.

நகரின் வெளிப்புறத்தில் இருந்த ஒரு வீட்டில் ஒருவர் தனியே வசித்து வந்தார். ஒரு நாள் மாலை மங்கும் வேளையில், தொலைவில் ஒரு மரத்தின் மறைவிலிருந்து ஏதோ ஒரு மிருகம் தன் வீட்டைக் கண்காணிப்பதைக் கண்டார். உடனே அவர் தம் வீட்டின் உள்ளே சென்று துப்பாக்கியை எடுத்து வந்தார். ஒரு செடியின் மறைவில் ஒளிந்துகொண்டு அந்த மிருகத்தை கண்காணிக்கலானார். கொஞ்ச நேரம் கழித்து, அந்த மிருகம் தயங்கித் தயங்கி மறைவிலிருந்து வெளியாகி அவர் வீட்டை நோக்கி வர ஆரம்பித்தது. வீட்டுக்காரர் அதைச் சுட்டு வீழ்த்த ஆயத்தமானார்.

அந்த மிருகம் அருகில் வந்ததும் அது ஒரு கங்காரு என்பதையும் அதன் வயிற்றுப் பையில் ஒரு குட்டி இருப்பதையும் அறிந்தார். குட்டியோடு தாயை எப்படிச் சுடுவது- தாயைச் சுட்டால் குட்டியும் கட்டாயம் சாக நேரிடும்.இந்த எண்ணங்கள் அவரைக் கலங்கச் செய்தன. அருகில் வந்தபோது கங்காரு அவரைப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் , அது கொஞ்சமும் தயங்காமல் வீட்டுத் தோட்டத்திற்குள் நுழைந்து தண்ணீர்த் தொட்டியை நோக்கிச் சென்றது. தொட்டியின் அருகில் போனவுடன் அது தன் உடலை வளைத்துக்கொண்டு நின்றது. அதனால், குட்டி நீரை பருக முடிந்தது. குட்டி தண்ணீர் குடித்து முடித்தபோது, தான் ஒரு வாய்த் தண்ணீர்கூடப் பருகாமல் அந்த வீட்டுக்காரரைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே காட்டுக்குள் சென்று மறைந்தது. அந்தக் கங்காருவின் தாய் அன்பைக் கண்ட அந்த மனிதனின் கண்கள் குளமாயின.

கோலம்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே!
நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!!

–~–~———~–~—-~————~——-~–~—-~

Thanks:
  “தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

Piravakam@googlegroups.com
-~———-~—-~—-~—-~——~—-~——~–~—

Show Previous Message Prev  |  Next Show Next Message

 

 

« Older entries